ருத்ரனின் பனித்தீ 💖
அழகில் ஆண்மையும், பார்வையில் அதிகாரமும், அமைதியில் கண்டிப்பும், அவனைக் கண்டாலே தன்னையறியாமல் நடுங்கச் செய்யும் ஆளுமையும், தன் மன காயங்களை தகர்க்க தனக்குள் வடிவமைத்துக் கொண்ட இறுக்கமும் உடைய பேராசிரியர் அவன் ருத்ரவர்மன்.
தன் சுட்டித் தனத்தாலேயே அனைவரையும் கட்டிப்போடும் சுட்டி மாணவி பனிவிழி.
பனிவிழி அடிக்கடி அவனிடம் சுட்டித்தனம் செய்து மாட்டிக்கொள்கிறாள்.
அவளின் அந்த சுட்டித் தனம் அவனின் இரும்பாய் இறுகி இருக்கும் இதயத்தையே ஆட்டம் காணச் செய்கிறது.
அவனின் இரும்பு இதயத்துக்குள் இருக்கும் ரகசியங்களையும், அதனுள் மறைத்த வலி வேதனைகளையும் கண்டறிந்து, அவனின் காயங்களுக்கு இவள் மருந்தாக மாறுவாளா…?
இல்லையென்றால் அவளின் சுட்டித்தனத்திற்கு நடுவே அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு இவன் அரணாக நிற்பானா?
மென்தூறலாய் சாரல் வீசும் இளம்பனி, ருத்ரன் எனும் தகிக்கும் தணலைத் தன் குளிர் ஸ்பரிசத்தால் அணைத்திடுமா…?
அல்லது
அவன் சுமக்கும் அனல்வெம்மையில் தன் பனிமென்மையைக் கரைத்து, அவனுள் தன்னையே தொலைத்திடுமா…?
என்பதை அறிய சிறகுகள் நாவல்ஸில் என்னுடன் சேர்ந்து இணைந்திருங்கள் 💖