சிறகை விரி… பற…
அத்தியாயம்: 5- போலி திருமணப் பத்திரிக்கை… !?
புதுக் கவிதை…
வாழ்க்கையை
மிகவும் கஷ்டம்
என்று சொல்லாதே
மனிதனே…
காலை கூடு விட்டு…
இரை தேட, பறந்து
செல்லும் அந்தப்
பறவைக்குத் தான்
தெரியுமா… ?
தன், இரை எங்கே
இருக்குமென்று?
அந்த பறவையே…
இவ்வுலகில்
வாழும் போது ?
உன்னால் வாழ
முடியாதா? சொல்.
(V R K)

காசை ஒளித்து வைத்து விளையாடும் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த மித்ரன், ” பாப்பாத்தி, இப்ப நான் ஒளித்து வைப்பேனாம்; நீங்க , அதை கண்டுபிடிக்க வேண்டும். சரியா ?” என்று சொன்னான்.
மேலும், அவர்களை அங்கிருந்த , அந்த உள் ரூமில் போய் ஒளிந்து கொள்ளச் சொன்னான்.
உடனே பாப்பாத்தியும், மித்ராவும் அந்த உள் ரூமில் போய் ஒளிந்து கொண்டார்கள்.
அதன் பிறகு அவன், அந்த மேஜை டிராயரைத் திறந்து அதில் ஒளித்து வைக்க, அந்த டியாரிலிருந்து சிலவற்றை, பொருட்களை எடுத்து, கீழே தூக்கி ப் போட்டான் .
அதிலிருந்த பழைய கவர் ஒன்றை வேகமாக தூக்கி, வெளியில் போட , அந்த பழையக் கவர், கீழே உட்கார்ந்திருந்த சிநேகா மடியில் போய் விழுந்து, அவளுடைய கவனத்தை ஈர்த்தது.
அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, அவள் அதை , அந்த பழைய கவரை பிரித்துப் பார்க்க, அதில் ஒரு பழைய கல்யாண பத்திரிகை இருந்தது.
அதில், ‘ராம் ஆகிய நான், சிநேகா ஆகிய இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்கிற மாதிரி எழுதப் பட்டிருந்தது.
சிநேகா வின் நினைவுகள், பழைய காலத்திற்கு அவளை அழைத்துச் கொண்டு சென்றது.
அன்று ராம் அவசரமாக, அந்த ‘மேபிளவர் ஃபேஷன் டிரெண்ட் ஸ்’ வாய்ப்புக்கு, (துணி கடைக்கு) வந்து, சிநேகா வை வெளியே வரச் சொன்னான், அவளிடம் அவசரமாகப் பேச வேண்டும் என்று.
அதன் பிறகு அவன் கடைக்கு வெளியே சென்று விட்டான்.
அவனிடம் அத்தனை நாட்கள் பேசி, பழகியிருந்த பழக்கத்தில், சினேகாவுக்கு அவனைப் பற்றி, அவனுடைய அவசரத்தை பற்றி யெல்லாம் நன்றாகத் தெரியும்.
இருந்தாலும், ஏன் என்னை வெளியே வரச் சொல்கிறான் ?.
அது அப்படி அவ்வளவு என்ன, தலைபோகிற விஷயமாக இருக்கும் ? என்று அவளுக்குத் தெரியவில்லை.
அதனால் அவள், அந்த செக்க்ஷன் சூப்பர்வைசர் எங்கே இருக்கிறார் என்று பார்க்க, அவர் அங்கு இல்லை.
அவள் தன் செக்க்ஷனில் இருக்கும் அஞ்சலி யிடம், தன் செக்க்ஷனை சிறிது நேரம் பார்த்து கொள்ளச் சொல்லிவிட்டு, விரைவில் வந்துவிடுகிறேன் என்று அவளிடம் மேலும் சொல்லி, கடைக்கு வெளியே போனாள்.
ராம் அந்த கடைக்கு வெளியே நின்று கொண்டிருத்தான், அவளுக்காக. சிநேகா வெளியில் வந்தாள்.
அந்த ரோட்டில் அவசரமாக போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம், அவர்களுடைய அவ்வளவு அவசரத்திலும், அவளையும் , அவனையும் உற்று பார்த்துக் கொண்டே சென்றார்கள்.
சிநேகா அவனிடம், ” என்ன அவசரம் என்னை வெளியே வரச் சொன்னீங்க?
சீக்கிரமா சொல்லுங்க; சூப்பர்வைசர் நான் செக்க்ஷனில் இல்லாததைப் பார்த்தால் வேறு திட்டுவார் ” என்றாள்.
அதற்கு அவன், ” நான் உன்னை சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள லாம் என்று இருக்கிறேன். அதற்கு நீயென்ன சொல்கிறாய் ? ” என்று திடீரென்று கேள்வி கேட்டான்.
அதைக் கேட்ட அவள் , ” கல்யாணமா? ” இப்படி திடீரு ன்னு சொன்னால் என்ன செய்வது என்ற கேள்வி வந்தது, அவளுள் .
அவளுக்கு அவளுடைய அண்ணியை நினைத்தாலே மிகவும் பயமாக இருந்தது.
நல்ல நாளிலேயே அவளை அதிகமாகத் திட்டுவாள்.
இதில், திடீரென்று ராம் வேறு வந்து, அவளுடன் கல்யாணம் என்று சொன்னால், அவள் என்ன சொல்வாளே?
அவளை என்ன செய்வாளோ ? என்ற பயம் உடனே வந்தது.
அந்த பயத்தில் அவளுக்கு, உடனே பேச்சே வரவில்லை.
அவள் பதில் எதுவும் சொல்லாததால், ராம், ” நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று தானே சொல்கிறேன். நான் உன்னை கொலை செய்வதாக, எதுவும் சொல்லவில்லையே ?
நீ இப்படி பதில் எதுவும் சொல்லாமல், இருந்தால் என்ன அர்த்தம் சிநேகா ?.
எதாவது பதில் சொல் . உன் கிட்ட தான், நான் பேசிட்டு இருக்கேன் ” என்றான் சத்தமாக .
அதற்கு அவள், அவளுடைய அண்ணி யை நினைத்து, ” கல்யாண மா… ? என் அண்ணி கல்யாணத்துக்கு எல்லாம் ஒத்துக் க மாட்டாங்க ” என்றாள் பயந்து கொண்டே.
அதற்கு அவன், ” உன் அண்ணியை யா நான் கல்யாணம் செய்து க்கப் போறேன்?.
உன்னைத் தானே நான் கல்யாணம் செய்து க்கப் போறேன்?
அவங்க ஒத்துக் கிட்டா என்ன? இல்லை ஒத்துக்கலைன்னா என்ன ? ஐ டோண்ட் கேர். (I don’t care) ” என்றான், சற்று கோபமாக .
அதைக் கேட்ட அவள் உடனே சிரித்துக்கொண்டே, ” போங்க… உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்; அவசரம் தான் ” என்றாள்.
அதற்கு அவன் சிரித்துக் கொண்டே, ” இருக்கிற வரைக்கும் சந்தோஷமாக, சிரிச்சு கிட்டு , நம் மனம் போனபடி வாழணும், சிநேகா.
இப்படித்தான் வாழணும் ன்னு, ன ஒரு கட்டம் கட்டிக்கிட்டு, அதுக்குள்ள வாழறது எல்லாம் , எனக்குப் பிடிக்காது ன்னு உனக்குத் தெரியாதா ?. ” என்றான், சிரித்துக் கொண்டே.
அதற்கு அவள், ” உங்களுக்கு என்ன ஏதாவது சொல்லிட்டு போயிடுவீங்க.
என் அண்ணியை பத்தி, அவங்க கோபத்தைப் பத்தி எனக்குத் தானே தெரியும் ?.
உங்களுக்கு என்னத் தெரியும் ?.
எப்படி யெல்லாம், என்னைத் திட்டு வாங்கன்னு ?
அவங்க கிட்ட, நீங்களா இருந்தால் , ஒரு நாள் கூட குப்பை கொட்ட மாட்டீங்க .” என்றாள்.
” ஒரு வாரம் கழித்து நான், உன் வீட்டுக்கு வரேன், நம்ம கல்யாண பத்திரிக்கை யோட.
அதுக்குள்ள, நீ இந்த வேலையை விட்டு விட்டு, வீட்டிலேயே இரு.
நான் வந்து உன் அண்ணி கிட்ட பேசிக்கறேன் ” என்று சொல்லி விட்டு, அவள் யோசித்து பதில் எதுவும் சொல்வதற்கு முன்பே, அவளுடைய பதிலைக் கூட எதிர் பார்க்காமல், வேகமாக புறப்பட்டுப் போயே விட்டான்.
ராம் சொன்னதை கேட்டு, அவளுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், அவளுக்கு, அவளுடைய அண்ணியை பற்றி நினைக்க, மிகவும் பயமாகவும் , கலக்கமாகவும் இருந்தது.
எதுவும் பேசாமல் மெளனமாக தன்னுடைய துணி செக்க்ஷனுக்கு திரும்பி வந்தாள்.
வந்ததிலிருந்தே, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக ஏதோ யோசனை யில் இருந்த அவளையேப் பார்த்தாள், அவளுடைய தோழி யான , அஞ்சலி.
அவளாக ஏதாவது சொல்வாள் என்று நினைத்தாள். அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததால், மனசு பொறுக்க முடியலை அவளால்.
” என்ன சிநேகா, உன் ஆளைப் பார்த்தால், எப்பவும், மிகவும் குதூகலமாவும் , சந்தோஷமாகவும் இருக்கும் நீ , இன்று அமைதியாக, கவலையாக இருக்கக் காரணம் என்ன? ” என்று கேள்வி கேட்டாள்.
அதற்கு அவள், ” ராம் திடீரென்று வந்து நாங்க இரண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு சொல்ரார்.
இப்ப எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியலை அஞ்சலி. ”
அதுவும் இல்லாமல், நான் பதில் சொல்லதுக்கு முன்னேயே, ராம் போயிட்டார். அதான் எனக்கு ஒரே யோசனை யா இருக்கு.
மேலும், என் அண்ணியைப் பத்தி நினைச்சாலே, எனக்கு ஒரே பயமா, யோசனை யா இருக்கு” என்று தன் கவலையை, பயத்தை அவளிடம் சொன்னாள்.
இல்லை, இல்லை தன் கவலையைப் பகிர்ந்து கொண்டாள்.
அதற்கு அவள், அஞ்சலி ” இவ்வளவு நல்ல விஷயதை ராம் சொன்னதுக்கு, நீ மொதல்ல , சந்தோஷம் தானே படவேண்டும் ?.
நீ என்னடா ன்னா பயந்துகிட்டு இருக்க ?
உன் அண்ணியை நினைச்சு கவலைப் படாதே. ராம் நல்லவர். படித்தவர் . நாகரீகமா வேற இருக்கார்.
பணக்கார வீட்டுப் பையன்; பார்க்க அழகாகவும் இருக்கார். வேலையில் இருப்பதாக வேற சொன்னார்.
அவரே உன் அழகில் மயங்கிய, ஆசைப் பட்டுத் தானே உன்னை கல்யாணம் பண்ணிக்கறதா வேற சொன்னார் ன்னு, தானே என்னிடம் நீ சொன்னாய்?.
இதைவிட உனக்கு வேறென்ன வேணும்?. உன் அண்ணி நடவடிக்கையே வேறு சரியில்லை என்றாய் .
உன் அழகைப் பார்த்து தானே, உனக்கு இங்கு, இந்த சேல்ஸ் கேர்ள் வேலையை, இந்தக் கடை முதலாளியே, போட்டுக் கொடுத்தார்? .
அதனால் தானே உனக்கு சம்பளம் கூட 500 ரூபாய் தராங்க? காலையில் 9 மணிக்கு வேலைக்கு வந்தா, நீ இராத்திரி 7 மணிக்குத் தானே வீட்டுக்குப் போறே ?.
மாடு மாதிரி உழைக்கறே ?. உன் அண்ணி உனக்கு நல்லது எதுவும் பண்ணமாட்டா.
அதுவும் கல்யாணம் எதுவும் செய்ய மாட்டா, அந்த பணப் பேய்.
என் பேச்சை கேளு சிநேகா. நீ குனிய, குனியத் தான் உன்னை, உன் அண்ணி குட்டிக்கிட்டே இருக்காங்க .
உன் சம்பள பணத்தை யெல்லாம் வாங்கிக் கிட்டு, உனக்கு செலவுக்கு கூட காசு அதிகமாக கொடுக்க மாட்டேங்கிறாங்க.
உங்கிட்ட ஒரு பத்து ரூபாய் காசு கூட அதிகமாக, உன் கையில் இல்லையே, ஏதாவது ஒரு அவசர செலவு வந்தால் செய்யக் கூட ?.
உன் சம்பள பணத்தை யும் வாங்கிக் கிட்டு, உன் பஸ் செலவுக்குக் கூட தேவையான பணம் தறதில்லையே, உன் அண்ணி. அந்த இராச்சஷி?.
மேலும், உனக்கு பசிச்சா வயிறுக்கு, சரியா, சாப்பாடு கூட போடதறது இல்லைன்னு நீயே, நிறைய நாட்கள் என் கிட்ட , சொல்லி அழுது, வருத்தப் பட்டு இருக்கே.
அதனால், நீ இனிமே உன் அண்ணிக்கு எல்லாம் பயந்து கொண்டு, குனிந்து கொண்டு நிற்காதே, சரியா ?.
பயப்படாதே !. நீ தலை நிமிர்ந்து நில். உனக்கு வந்த இந்த வாய்ப்பை, சரியா பயன்படுத்தி க்கோ, சிநேகா .
இந்த ராமை, துணிந்து கல்யாணம் பண்ணிட்டுப் போயிடு .
ராம் பார்க்க, இளமையா நல்லவர் மாதிரி தான் இருக்கார். தெரிகிறார்.
மேலும் உன்னை காதலிக்கிறேன்னு , வேற சொல்றார் .
நான் உன் நல்லதுக்கு தான், இதையெல்லாம் சொல்லறேன், சிநேகா .
‘கடவுள் சந்தர்பத்தை ஒருவருக்கு ஒருமுறை மட்டும்தான் கொடுப்பார்’ என்று சொல்வார் கள். அப்புறம் உன்னிஷ்டம் ” என்றாள்.
அதைக் கேட்ட சிநேகா, ” நான் என் அண்ணிக்காகத் தான், இதுவரை பயந்து கொண்டு இருந்தேன், அஞ்சலி.
அது உனக்கேத் தெரியும் தானே ?.
என் அண்ணியை பற்றி நிறைய முறை சொல்லி இருக்கிறேன், உன்கிட்ட.
என் அண்ணன் மிகவும் நல்லவர் தான்.
அவர் கூட அடிக்கடி சொல்வார், ” இவள் வயதுக்கு மீறிய வளர்ச்சி யை பார்க்கும் போது எனக்குப் பயமாக இருக்கு.
இவளை உடனே யாருக்காவது, நல்ல ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டுமென்று…
இல்லை என்றால், இந்த ஊரிலிருள்ள நாலு பேர் , நாளு விதமாக நம்மைப் பேசுவார்கள் ” என்று.
அதற்கு என் அண்ணி, ” இவளுக்கு அப்படி என்ன வயதுஆகிவிட்டது,’கல்யாணம் செய்ய ? 20 வயது தானே ஆகிறது?
எங்காவது ஒரு வேலைக்குப் போய், இரண்டு வருடமாவது வேலை செய்து, ஒரு இரண்டு காசு சம்பாதித்து, கொண்டு வந்து கொடுக்கட்டும் , இந்த குடும்பத்துக்கு என்று. ”
அதன் பிறகு அவளுக்குத் திருமணம் செய்வதைப் பற்றி, யோசனை செய்யலாம் என்று ” சொல்லி விட்டாள் கறாராக.
” அரசாங்கம் கூட பெண்ணுக்கு திருமண வயது 21 என்று தான், சட்டம் கூடச் சொல்கிறது,
சட்டம் என்ன சொன்னாலும், நாம் தானே செலவு செய்து, திருமணம் செய்து வைக்க வேண்டும், இவளுக்கு?
மேலும், பணம் என்ன கொட்டியா கிடக்கு இங்க ?,
இல்லை பணம் மரத்தில ஏதாவது காய்க் குதா ? இவளுக்கு உடனே திருமணம் செய்ய ?.
சட்டம் போட்ட , அந்த அரசாங்கமா வந்து , திருமணம் செய்யப் போகிறது இவளுக்கு ? ” என்று சொன்னாள் மேலும்.
” என் அண்ணன் தன் பெண்டாட்டி க்கு அடங்கினவன்.
அவள் சொல்வதே அவனுக்கு வேத வாக்கு. அவளை மீறி எதுவும் பேசமாட்டார் அவர்.
மேலும், எனக்கு பெற்றோர்கள் உயிருடன் இல்லை என்று உனக்கேத் தெரியும்.
அவர்கள் இருந்தால் என் கதையே வேற. என்ன செய்வது என் தலையெழுத்து? என்று தான் சொல்ல வேண்டும் “.
மேலும், ” உன்னிடம் சொல்வதற்கு முன், நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று நினைத்து, உள்ளுக்குளே பயந்து கொண்டு இருந்தேன் அஞ்சலி.
நீ சொன்னதற்கு அப்புறம் தான் எனக்குப் புரியுது, நான் அப்படி எதுவும் பெரிய தப்பு பண்ணலை ன்னு . “
” அவ்வளவு தூரம் என் அண்ணிக்கு, நான் பயப் பட்டிருக்க கூடாது என்றும். இனிமேல் நான் அவளுக்கு, என் அண்ணிக்கு பயப்படவே மாட்டேன்.
குட்டக், குட்ட இனிக் குனியவும் மாட்டேன் நான் .
நான் இனி துணிந்து விட்டேன் . இனிமேல் தலைநிமிர்ந்து நிப்பேன். நிற்கப் போறேன்.
உன் அறிவுரை க்கு ரொம்ப நன்றி அஞ்சலி ” என்றாள், சிரித்துக் கொண்டே.
இனி என்ன நடந்தாலும் சரி. ராமை தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
காரணம் அவளுக்கு, அவளுடைய அண்ணியின் கட்டுப் பாடு, அடக்குமுறை மற்றும் தேவையில்லாமல் அவளை திட்டுவது ஆகிய எதுவும் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தான்.
மேலும், தன் சொந்த வீட்டிலேயே, ஒரு கொத்தடிமை போல, அவளுடைய அண்ணிக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அவள் அந்த அடிமை வாழ்வை வெறுத்தாள். அந்த சிறையில் இருந்து வெளிவரத் நினைத்தாள். துடித்தாள்.
இப்போது அதற்கு தனக்கு, இருக்கும் ஒரே வழி, ராமை த் திருமணம் செய்து கொள்வது தான் என்ற தீர்மானத்துக்கு வந்தாள், அவள்.
அதன் பிறகு அவளுடைய கவலையெல்லாம் காற்றாக பறந்து போய் விட்டது.
வாழ்க்கை யைப் பற்றி ய பயம் கூட , பறந்து போய் விட்டது அவள் தீர்மானம் செய்த வுடன்.
அதன் பிறகு ஒரே குதூகாளம் தான், கொண்டாட்டம் தான், சந்தோஷம் தான் அவளுக்குள் .
அந்த சந்தோஷத்தில், அவளையறியாமல், அவளுடைய உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று கூட அரும்பியது.
அவளுடைய மனம் சந்தோஷத்தில், அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதை நினைத்துத் துள்ளியது.
மேலும் அவன் அவளிடம் சொல்லி இருந்தான், ” இந்த வேலையை நீ உடனே விட்டு விட்டு, உன் வீட்டிலியே இரு சிநேகா !.
நான் இன்னும் ஒரு வாரம் கழித்து உன் வீட்டுக்கு வருகிறேன்.
உன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதைச் சொல்கிறேன் .
அதற்கு, அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
உன் அண்ணி உன்னை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று ஏதாவது சொன்னால், அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்.
மேலும் நான், நம் கல்யாண பத்திரிக்கை யுடன் வருகிறேன் ” என்றான்.
அவள் பதில் பேசுவதற்குக் கூட இடம் கொடுக்காமல், உடனே புறப்பட்டு போய் விட்டான், அங்கிருந்து வேகமாக.
ஆனால் எதிர்காலம் அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்று அப்போது தெரியவில்லை, அவளுக்கு .
இப்படி யெல்லாம் நடக்கும் என்று முதலிலேயே தெரிந்திருந்தால், அவள் ஒரு வேளை அவனைக் கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ ? யாருக்குத் தெரியும் ?.
‘விதி வலியது’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் !?.
மேலும், ‘விதி வழி தான் மதியும் போகும் என்றும், வேறு சொல்லி இருக்கிறார்களே, அவர்களே.’ ?
(V R K)
