7. ஸ்டேரிங்கில் மோதிக் கொண்ட வம்சி தன் பின்னந்தலையை தடவியவாறு நிமிர அருகில் யாழொளி இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
“ஹேய் யாழ் ஹே… ஹே என்னாச்சு?”, ஒருநொடி தன் நெஞ்க்கூடு அதிர உணர்ந்தவன் அவள் தலையை பற்றி முகம் நிமிர்த்தினான்.
முகத்தில் சிறு இடம் கூட விடாமல் இரத்தம் பாய்ந்தோடி இருக்க, தன் கரத்தில் அவளை ஏந்திக் கொண்டவன்,
“யாழ், யாழ், யாழ்மா இங்க பாரேன். ஹேய் எனக்கு பயமா இருக்கு”, பதட்டத்தில் கைகள் நடுங்கத் துவங்க, அருகிலிருந்த தண்ணீர் கேனை எடுத்து முகத்தில் தண்ணீரை தெளித்தான். அவள் மயக்கம் அப்படியும் களையாது போக வம்சியின் பயமும், பதட்டமும் கூடிக்கொண்டே போனது.
தன்னையே சாடிக்கொண்டவன் தட்டுத் தடுமாறி போனை எடுத்து நம்பரை டயல் செய்யத் துவங்க, சிரிப்பொலி சப்தம் கலகலத்துக் கேட்டது.
“என்ன பாஸ் பயந்துட்டீங்களா?”, முகத்திலிருந்த இரத்தத்தை கைகளால் வழித்து துடைத்தவாறு அவள் கேட்க,
“ஹேய் யாழ் நீ ஓக்கே தான உனக்கு ஒண்ணுமில்லையே”,
“ஒண்ணுமே இல்ல பாஸ். ஐ யம் ஆல்ரைட் நவ்”,
“அப்போ இந்த இரத்தம் வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?”, அவன் அவளை அலசி ஆராய,
“டோண்ட் பேனிக் பாஸ் எனக்கு எங்கேயும் அடிபடல”,
“அப்போ இந்த இரத்தம்?”,
“டொட்ட டொய்…”, தன் ஹேண்ட் பேக்கிலிருந்து டொமேட்டோ சாஸை எடுத்து நீட்டினாள் யாழொளி.
“சும்மா உங்கள பயம் காட்டுறதுக்காக? எனக்கு அடிபட்டா நீங்க என்ன ரியாக்க்ஷன் காட்டுறீங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காக இப்படி பண்ணேன். சும்மா சொல்லக் கூடாது ரொம்பவே துடிச்சீங்க. ஐ லைக் திஸ் பாஸ்”,
யாழொளி பேச பேச கோபத்தின் உச்சியில் இருந்தவன் அவள் அவனை திரும்பி பார்த்த நொடி விட்டான் பட்டென்று அவள் கன்னம் நோக்கி ஒன்று.
“ஆர் யூ மேட். எது எதுல விளையாடனும்னு விவஸ்தை இல்ல. நான் எவ்ளோ பயந்தேன்னு தெரியுமா? நீ சின்னப்பிள்ளை போல விளையாட்டுக்கு பண்ணேன்னு சொல்லிட்டு இருக்க. ஒருநொடி எனக்கு உயிரே இல்ல. லிமிட் தெரியாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்க இல்ல. எனக்கு வர்ற கோபத்துக்கு அப்படியே…”, கரத்தை மீண்டும் அவளை அடிக்க ஓங்கிக் கொண்டவன் அவளின் வேல்விழியின் பயத்தைக் கண்டவாறு காரிலிருந்து இறங்கி வெளியே வந்தான்.
நெற்றியை நீவி, கண்களை தடவிக் கொண்டவன் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
விசும்பல் சப்தம் அவனருகில் கேட்க, மெள்ள திரும்பிப் பார்த்தான்.
“ஸா… ஸா… ஸாரி பாஸ். எல்… எல்… எல்லாத்தையும் போல தா… தான் இதையும் விளை… விளையாட்டாப் பண்ணேன். ஆ… ஆனா நீ… நீங்க இவ்ளோ ஹே… ஹே… ஹேர்ட் ஆவிங்கன்னு தெரி… தெரியாது. ஐ யம் எக்ஸ்… எக்ஸ்ட்ரீம்ளி ஸாரி”,
உதட்டின் ஓரம் சிறு காயம் அவன் அடித்த அடியில் பட்டிருக்க கன்னத்தில் கைவிரல் ரேகைகள் பதிந்திருந்தது.
அவசரப்பட்டு விட்டோமோ? தன்னுடைய கலகலப்பான பேச்சால் குறும்புடன் இருப்பவளை தான் தான் காயப்படுத்தி விட்டோமோ என்றெண்ணியவாறு அவனிருக்க,
“அதெப்படி பாஸ் இந்த அடிபட்ட மாதிரி, பயந்த மாதிரி எல்லாம் எல்லாரும் ரொம்ப தத்ரூபமா நடிக்குறாங்க. எனக்கு சுட்டுப் போட்டாலும் அந்த மாதிரியெல்லாம் ஒண்ணுமே வராது. நீங்க என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணது இதுதான? அந்த மாடுலேஷன்லயே பேசிட்டேன் இது உங்களுக்கு ஓக்கேதான. இப்போ உங்களுக்கு கோபம் போயிடுச்சா?”, கன்னத்தில் நாக்கை சுழற்றியவாறு கேட்க,
‘இதெல்லாம் என்ன மாதிரி மேக்னெட். உண்மையிலேயே இவள பெத்தாங்களா? இல்லை வேற எங்கேயும் ஆர்டர் குடுத்து செஞ்சு வாங்குனாங்களா?’, யோசனையில் நின்ற வம்சி பட்டென்று சிரித்துவிட்டான்.
“ஹப்பாடி கோபம் போயிடுச்சு. பாஸ் ரொம்ப அழகா சிரிக்குறீங்க”, திருஷ்டி சுற்றி கன்னத்தில் முறித்துக் கொண்டாள்.
“ஸாரி யாழ் ரொம்ப கோபம் வந்துடுச்சு. கண்ட்ரோல் பண்ணிக்க முடியல அதான் அடிச்சுட்டேன். ரொம்ப வலிக்குதா?”,
“ஒருபக்க காது சும்மா ங்கொயிங்ன்னு சத்தம் போடுது. என்னோட பஞ்சு போன்ற சருமத்துல வரிக்குதிரைக்கு கோடு போட்டது போல கோடு. ஏன் பாஸ் கோபமா இருந்தாலும் ஒரு அளவு கம்மியா வரவேண்டாம். ம்ஹும்…”, யாழொளி உதடு சுழித்தாள்.
காரை எடுத்துக் கொண்டு ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தார்கள். வரும் வழியெல்லாம் வாய் ஓயாது துடுக்காய் எதை எதையோ பேசிக்கொண்டே வந்தாள் யாழொளி.
“செல்வி மாப்பிளையும், பொண்ணும் வந்துட்டாங்க பாரு”, திண்ணையில் அமர்ந்திருந்த சக்திவேல் வீட்டுக்குள் குரல் தர, பூமிச்செல்வி ஆராத்தி தட்டோடு வந்தார்.
இருவரையும் ஆலம் சுற்றி வரவேற்றவர் உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டு அருந்த மோர் கொடுத்தார்.
“காலையில இருந்து ரொம்ப எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தோம் ஏன்மா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்ளோ நேரம்?”,
“அது ஒண்ணுமில்லமா வர்ற வழியில ஒரு சின்ன ஆக்…”, யாழொளி கூற வர வம்சி முந்திக் கொண்டு பதில் தந்தான்.
“கொஞ்சம் கம்பெனி விஷயமா போயிருந்தேன் அத்தை அதான் டிலே வேற ஒண்ணுமில்ல”,
“ஓ… சரிங்க மாப்பிள்ளை. வந்தது களைப்பா இருக்கும். நீங்க ரெண்டுபேரும் போயி ரெஸ்ட் எடுங்க. கொஞ்சநேரத்துல விருந்து சாப்டலாம்”,
யாழொளியின் அறைக்குள் வந்தார்கள் இருவரும்.
வேகமாக கதவடைத்து தாழ் போட்டவன் யாழொளியின் தலையில் ஓங்கி கொட்டுவது போல் வந்தான்.
“என்ன பாஸ் ஏன்?”, உதடு பிதுக்கினாள் யாழொளி.
“கொஞ்சமாவது அறிவு இருக்கா யாழ் உனக்கு? நேத்துதான் கல்யாணம் ஆகிருக்கு அதுக்குள்ள இன்னிக்கு ஆக்சிடென்ட்னு வந்து சொன்னா பெரியவங்க மனசு பதறாது. எங்க, எப்டி என்ன பேசணும்னு தெரிஞ்சு பேசு யாழ்”,
“ஓ… அந்த ஆக்சிடென்ட் மேட்டர்ல இப்படி ஒண்ணு இருக்கோ. ஐ யம் ஸாரி பாஸ் மறந்துட்டேன். சரி நீங்க இங்க இருங்க நான் போயி அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்”.
யாழொளி வெளியேற அறையை சுற்றிலும் விழிகளை மேயவிட்டான் வம்சி.
ஒருபக்க சுவற்றில் அரையடி சட்டத்தில் தன் கன்னத்தில் கை வைத்தவாறு சல்வார் கமிசில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் யாழொளி.
அவள் படத்தை பார்த்து உதட்டோரம் புன்னகை மின்ன சிரித்தவன் இதழ், “நைஸ்”, என உச்சரித்துக் கொண்டது.
செல்ஃபில் வரிசையாக புத்தகங்கள் இருக்க அதை எடுத்து பார்த்தவன், “நல்ல நல்ல பழக்கம் தான் யாழ் உன்கிட்ட இருக்கு. ம்… ஐ லைக் திஸ்”, என்றான்.
வாணலியில் தாளிப்பு நடந்து கொண்டிருக்க, பூமிச்செல்வியை பின்னிருந்து அணைத்துவிட்டு, சமையல் மேடையில் ஏறி அமர்ந்தாள் யாழொளி.
அருகிலிருந்த கேரட்டை பல்லிடுக்கில் கடித்துக் கொண்டே, “சீக்கிரம் சமைச்சுடுவியாம்மா”, என்றாள்.
“இதோ இப்போ ஆயிடும் யாழ்”, இங்குமங்கும் பார்வையை ஓடவிட்ட பூமிச்செல்வி, யாழிடம் நெருங்கி வந்து,
“எதுவும் பிரச்சனை இல்லையே நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கீங்கல்ல”,
சட்டென்று ஒரு எரிச்சல் தோன்றி மறைந்தது யாழிடம்.
“ம்மா… இன்னும் எந்த காலத்தில இருக்க நீ. கல்யாணம் முடிஞ்ச உடனே எல்லாமே எதிர்பார்க்குறது சுத்த ஹம்பக். இப்போ நாங்க சந்தோசமா இருக்கோம் அப்படி சொன்னா அது போதுமில்ல உனக்கு”,
பூமிச்செல்வி தலை குனிந்து கொள்ள,
“சோகமா மூஞ்ச வைக்காத பூமி. சீக்கிரமே நீ எதிர்பார்க்குற நல்ல செய்திய சொல்லுறேன்”.
விருந்தை முடித்துவிட்டு ஆயாசமாக ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவர்கள் மாலை ஷாப்பிங் மால் நோக்கிச் சென்றார்கள்.
“வாங்க பாஸ் ஷாப்பிங் பண்ணலாம்”, யாழொளி அவன் கைப்பிடித்து இழுக்க,
“கார்ட் தர்றேன் உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்கோ. நான் வரல”,
உதடு பிதுக்கியவள் கார்ட்டை வாங்கிக் கொண்டு நகர வம்சி அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
தன் கைநிறைய பொருட்களை அள்ளிக்கொண்டு யாழொளி வர,
“மச்சான் குட்டிய பாருடா மஞ்சகயிரு மின்ன பள பளங்குது”,
“ஆமாடா மச்சான் தனியா வந்துருக்கு போல ஒரு தட்டாவது தட்டிடனும் கை நமநமங்குது”,
இருவரின் கூற்றைக் கேட்ட வம்சி கோபத்தில் அமர்ந்திருக்க, யாழொளியின் பின்னே சென்ற இருவரும் மெல்ல நடந்து வந்து அவளின் பின்னே கை ஓங்க, ஓங்கிய கையை வளைத்து இறுக்கி முறுக்கிப் பிழிந்தான் வம்சி.
“அடிங்க் பொண்ணுங்கள பார்த்தா உங்கள மாதிரி ஈனபிறவிங்களுக்கு எப்டிடா தெரியுது. இன்னொருமுறை பொண்ண தப்பா பேச வாயும் இருக்காது. தட்ட கையும் இருக்காது”, வாயிலேயே ஓங்கி குத்தியவன் கையை திருகியவாறு ஒடித்தான்.
வலி தாளாமல் இருவரும் கத்திக் கதற, ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்த ஆட்கள் வம்சியையே பார்த்திருந்தனர்.
“அய்யோ பாஸ் போதும் விடுங்க. ரெண்டுபேரும் செத்துட கித்துட போறாங்க”, வம்படியாய் வம்சியை பிடித்து இழுத்தாள் யாழொளி.
“இன்னொரு முறை யார்கிட்டயாவது மிஸ் பிஹேவ் பண்ண நினைச்ச கொன்னே போட்டுருவேன்”, ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவன் யாழை இழுத்துக் கொண்டு காருக்கு வந்திருந்தான்.
கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, “எதுக்கு பாஸ் இவ்ளோ கோபம் உங்களுக்கு? நான் கூட பயந்தே போயிட்டேன்”,
“வாயமூடு சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு பார்க்கமாட்டியா? நான் மட்டும் வரல இந்நேரம் நீ மூக்க சீந்திக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருப்ப”,
“அப்டியா அப்படி என்ன நடந்திருக்கும்?”, அவள் நாடியில் விரல் வைத்து யோசிக்க,
யோசித்த விரலை கொக்கி போட்டு இழுத்து பிடித்து வளைத்தான் வம்சி.
“ஆ… ஹான்… அய்யோ பாஸ் விடுங்க வலிக்குது”,
அவள் முகத்தைப் பார்த்துக் கண்களில் கலந்தான். கண்களில் கலந்தவனின் கந்தகப் பார்வை பெண்ணின் மனதை காந்தமாய் இழுத்துக் கொள்ள முற்பட்டது.
இமை சிமிட்டி அவள் தன்னை நிதானிக்க, அவளின் வெண்டை விரலில் சண்டையிட்டவன், “என்ன டிரஸ் இது? இனி நீ இந்தமாதிரி டிரஸ் எல்லாம் போடக் கூடாது”, அவளின் ஜீன்ஸை பார்த்துக் கூற,
“என்ன பாஸ் சொல்லுறீங்க அவனுங்க பார்வை தப்புன்னா அதுக்கு என்னோட ட்ரசிங்க் சென்ஸ் என்ன பண்ணும். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு என்னை பார்க்குற அடுத்தவங்க பார்வைக்காக இதை எல்லாம் மாத்த முடியாது”,
“யாழ் உன்னோட டிரசிங் சென்ஸ யாரும் குறை சொல்லக் கூடாதுன்ற எண்ணத்துலதான் சொல்லுறேன். அண்ட் நெக்ஸ்ட் டைம் இந்தமாதிரி டிரஸ் போடாத”, வார்த்தையில் கண்டிப்பு கலந்திருந்தது.
“சரி பாஸ் இனி இப்படி டிரஸ் பண்ணமாட்டேன். பதினாறு முழம் சேரிய சுத்திக் கட்டிக்கிறேன்”, ஜன்னல் வழி வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.
‘நீ என்னோட உடைமை அத இன்னொருத்தர் பார்த்து கலங்கப்பட விடமாட்டேன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதான சுத்தி வளைச்சு எதுக்கு இவ்ளோ பெரிய செமினார். நீங்க சீக்கிரம் மாறிடுவீங்க வம்சி எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு’, உள்ளுக்குள் நினைத்தவள் வெளியே மிருதுவாய் சிரித்துக் கொண்டாள்.
மிதமிஞ்சிய ராகத்தில் மிதந்து வந்தது கானம்.
“எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ!
கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்…”,
நதி கரை தொடும்…
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
