நூலிழை பந்தம் ❤️ 7

அடுத்த நாள் விடிந்து இருந்தது… பத்து மணியானவுடன் முதல் வேலையாக வங்கிக்கு சென்று பத்து பவுன் நகையை வைத்தார்…. அதில் அவருக்கு அன்றைய விலையை வைத்து ஒரு ஆறு லட்சத்து என்பதாயிரம் வந்து இருக்க அதில் இரண்டரை லட்சத்தை பவியின் கணக்கில் போட்டு இருந்தார்…

மீதி பணத்தை தன் கணக்கில் போட்டு கொண்டார்… ஒரு சின்ன ஆசுவாசம் கொஞ்சம் பண பிரச்சனை முடிந்துவிட்டது என… ஆனால் பெரும் பிரச்சனை கோவிந்தனும் ஹரியும் நல்ல படியாக குணமாகி வருவது தானே… கண்டிப்பாக வந்து விடுவர் என்று நம்பிக்கை இருந்தாலும் மனதின் ஓரம் சின்ன பயம்…

அங்கு சென்னையில் ஹரி இன்னும் கண் திறக்கவில்லை… பவி அவன் இருந்த அறையை தான் கலங்கிய கண்களுடன் பார்த்து கொண்டு இருந்தாள்… மித்ரனோ “பவி போய் திவி ரூம்ல ப்ரெஷ் ஆகிட்டு வா… அவ ரூம் பக்கத்துல தான் இருக்கு.. அங்க அவ வார்டன் கிட்ட பேசிட்டா.. ஒரு அரை மணி நேரம்… அண்ணா இங்க இருக்கேன் போய் குளிச்சிட்டு வாங்கனு சொன்னாங்க.. நீ திவி கூட இரு.. நானும் ஆதியும் போய் என் ரூமுல குளிச்சிட்டு வரோம் என்று அவளை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்..

சொன்னது போலவே அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து இருந்தனர்.. மூவருடன் திவ்யாவும் வந்துவிட்டாள்… அவர்கள் வந்ததும் ஹரியின் நண்பனும் தன் அறைக்கு குளிக்க சென்றுவிட்டார்.. அவரும் குளித்துவிட்டு காலை உணவை உண்டுவிட்டு மற்ற நால்வருக்கும் வாங்கி வந்து வற்புறுத்தி சாப்பிட அனுப்பி வைத்தார்…

அவருக்கும் ஊரில் இருக்கும் நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது… அவரும் அங்கிருக்கும் நிலைமையை விளக்கி கூறி கொண்டு இருந்தார்…

அனைவரும் உண்டு விட்டு வந்துவிட அன்று முழுவதும் ஹரி கண் விழிக்கவில்லை… நேரம் ஆக ஆக பவி மிகவும் உடைந்து கொண்டே இருந்தாள்…. அவள் உடைவது அவனுக்கு தெரிந்ததோ என்னவோ முயன்று கண்களை திறந்து இருந்தான்…

அவன் கண் திறந்ததை பார்த்த செவிலியர் மருத்துவருக்கு தகவல் கொடுத்தார்… அவரும் அவனை பரிசோதித்து விட்டு எங்கோ வலி இருக்கிறதா என்று கேட்டு கொண்டு இருந்தார்.. அவனும் அதற்கு பதில் கூறி கொண்டு இருந்தான்…

வெளியில் பவியோ டாக்டர் அவசரமாக செல்வதை பார்த்து மிகவும் பயந்து இருந்தாள்… உடன் இருந்தோர் தான் அவளுக்கு தைரியம் கூறி கொண்டு இருந்தனர்…

உள்ளே ஹரி வலியில் மீண்டும் மயக்கமடைந்து இருக்க மருத்துவர் அவனை நார்மல் வார்டுக்கு மாற்றம் கூறி கொண்டே வெளியே வந்தார்…

வெளியில் நின்று இருந்தோரிடம் “அவருக்கு நினைவு திரும்பிடிச்சு… இப்போ வலியில மயக்கத்துக்கு போய்ட்டாரு…. நார்மல் ரூமுக்கு ஷிப்ட் பண்ண சொல்லி இருக்கேன்… ரூமுக்கு ஷிப்ட் ஆனதும் ஆவரை பாத்துக்கோங்க…” என்று கூறி சென்று விட்டார்…

பவியும் பயத்தில் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்…. ஆனந்தத்தில் இல்லை இனிமேல் கோவிந்தனுக்கு அட்டாக் வந்ததை சொன்னால் என்ன செய்ய போகிறானோ அடுத்து இவனை பற்றி வீட்டில் சொன்னால் அங்கு சமாளிக்க வேண்டுமே என்று தான் அந்த பெருமூச்சு…

மாலை போல் கண் விழித்த ஹரி மீண்டும் மயக்கத்திற்கு சென்று விட இரவு பத்து மணி போல் தான் மீண்டும் மயக்கத்தில் இருந்து எழுந்தான்.. அவன் கண் விழித்ததை கண்டு அங்கு அவன் அறையில் அமர்ந்து இருந்த பவி அவன் அருகில் செல்ல அவளை கண்டதும் அவன் முகம் கொஞ்சம் மலர்ந்தது….

சிறு வயதில் அழைப்பது போல் எப்படி இருக்க “சுதன் எதோ வலி இருக்கா” என்று மென்மையாக பாசமாக கேட்டாள்…

“இப்போ வலி ஓகே.. அம்மா அப்பா எல்லாம் எங்க… நீ மட்டும் சென்னை வந்தியா.. இந்த கல்யாணம் வேண்டாம் நிறுத்த சொல்லிடேன் தப்பான ஒருத்தியை நான் சூஸ் பண்ணிட்டேன்… அப்பா இந்த கல்யாணத்துக்கு நிறைய செலவு பண்ணிட்டாருல” என்று அவன் பேசி கொண்டே போக இவள் கண் கலங்கி எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்று விட்டாள்…

அவளின் அமைதி அவனை எதோ செய்ய கோவிந்தன் இவன் மீது இருக்கும் கோவத்தில் தான் வரவில்லை என எண்ணி “நான் செத்தா கூட அப்பாவுக்கு என் மேல இருக்க கோவம் போகாத பவி… நீ மட்டும் ஏன் வந்த போய் தொலையட்டும் விட வேண்டியது தானே… இல்ல நான் கஷ்ட படுறதை பாக்க வந்தியா நீ… என்ன நான் இப்படி அடிபட்டு படுத்த இருக்குறது சந்தோசமா இருக்கா…” என அவனே கற்பனையில் பேச ஆரம்பித்து இருந்தான்…

அவனை வலி நிறைந்த கண்களுடன் பார்த்த பவி எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டாள்.. ஆதியும் மித்ரனையும் அன்று மித்ரனின் அறைக்கு தூங்க அனுப்பி இருந்தாள் பவி எனவே அவர்கள் இருவரும் அங்கு இல்லை.. ஹரியின் நண்பன் மட்டுமே இருக்க அவள் அழுது கொண்டே வருவதை பார்த்தவர் “பவி ம்மா என்ன ஆச்சு ஏன் அழுவுற” என்று கேட்டார்…

ஹரி கூறியதை கூறிய பவி “ரொம்ப வலிக்குது ண்ணா அவன் பேசுனது” என்று அழுது கொண்டே கூறினாள்… “பவிம்மா நீ வா என்கூட… அரை கிறுக்கன் அவன்… நிலைமை புரியாம அவன் வேற எதோ பேசி வைக்குறான்…” என்று ஹரியை கடிந்து கொண்டே பவியை உள்ளே அழைத்து சென்றான்…

பவி கதவின் அருகிலேயே நின்றுகொள்ள ஹரியின் நண்பன் தான் “ஹரி வார்த்தையை எப்பவும் ஒழுங்கா யூஸ் பண்ண மாட்டியா.. அந்த பொண்ணு எந்த அளவுக்கு கஷ்டப்பட்டுச்சு தெரியுமா.. என்ன சொல்லி இருக்க உன் அப்பா நீ செத்தா கூட வர மாட்டாரா.. அந்த மனுஷனே அங்க அப்படி தான் படுத்து இருக்காரு.. உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னிக்கு அவருக்கு மாசிவ் அட்டாக்.. பை பாஸ் சர்ஜெரி பண்ணியே ஆகனும்னு சொல்லிட்டாங்க… அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உனக்கு இப்படி ஆனது தெரியாது… ரெண்டு நாளா இந்த பொண்ணு கொஞ்சம் கூட தூங்கல.. பேசுறதுக்கு முன்னாடி பார்த்து பேசனும்…” என்று கோவமாக கூறிவிட்டு வெளியேறிவிட்டான்…

ஹரி அவன் நண்பன் கூறியதை ஏற்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்… “குட்டிமா” என்று அழைக்க இதுவரை மெதுவாக அழுது கொண்டு இருந்தவள் சத்தமாக அழுது இருந்தாள்… அவன் அவ்வாறு அழைத்து பல வருடங்கள் கடந்து இருந்தது…..

அவ்வாறு அழைத்தும் அங்கேயே நின்று இருந்தாள்.. அப்போது தான் அவன் தவறும் அவசர புத்தியும் புரிந்தது…

மீண்டும் அவனே “குட்டிமா சாரி அப்பாவுக்கு என்ன ஆச்சு.. அப்பா நல்லா இருக்காங்களா..” என்று பரிதவிப்பாக கேட்டான்..

எதுவும் பேசாமல் ராமனுக்கு அழைத்து “அப்பா மாமாவுக்கு சர்ஜெரி முடிஞ்சதா மாமா எப்படி இருக்காங்க போய் பாத்திங்களா” என்று கேட்டாள்…

“சர்ஜெரி முடிஞ்சது பாப்பா… ஆனா இன்னும் அவனை பாக்கல… டாக்டர் சர்ஜெரி நல்ல விதமா முடிஞ்சதுனு சொன்னாங்க…. எப்படியும் கோவிந்தனை பாக்க நாளைக்கு மதியம் மேல ஆகிடும் என்று கூறி பாப்பா ஹரி எப்படி இருக்கான்.. கண்ணு முழிச்சிட்டானா பேசுனானா” என்று கேட்டார்…

அவளும் அவருக்கு அவனை பற்றி கூறினாள்.. மீண்டும் அவரே “பாப்பா பணம் அதுவே போதுமா அப்பா ஏற்பாடு பண்ணி அனுப்பட்டா” என்று அவர் பணம் பற்றி கூற ஆரம்பித்ததும் போனை ஸ்பீக்கரில் இருந்து எடுத்து காதில் வைத்து கொண்டாள்..

ஹரியின் நண்பன் அவன் கண் விழித்ததை மருத்துவரிடம் அவரும் வந்து அவனிடம் வலி எதோ இருக்கிறதா என்று விசாரித்து விட்டு அவன் மீண்டும் உறங்க கூறிவிட்டு பவியை வெளியில் வர கூறினார்….

அவன் கை கால் சரியாக இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் எடுத்து கொள்ளும் எனவும் மாதத்திற்கு இரண்டு முறை செக் அப் வர வேண்டும் எனவும் கூறினார்.. பவி அவரிடம் அவனின் அப்பாவிற்கு அட்டாக் என கூறி நிறைய நாள் இங்கு இருக்க முடியாது என கூறினாள்….

அவரும் சரி என கூறி விட்டு பத்திரமாக சேலம் அழைத்து செல்ல கூறினார்… நாளை முழுவதும் இங்கு இருக்க கூறிவிட்டு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்துகொள்ளலாம் என கூறி விட்டு செவிலியர் பில் தருவார் என கூறிவிட்டு கிளம்பிவிட்டார்…

பத்து நிமிடம் கழித்து பவி ஹரி இருக்கும் அறை செல்ல அவன் உறங்கிவிட்டான் என எண்ணி அவன் நெற்றியில் படும் படாமலும் ஒரு முத்தமிட்டவள் அவன் கையை பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டாள்.. அவன் இன்னும் சரியாக உறங்கவில்லை.. அவள் முத்தம் அவனின் மனதை வருட அப்படியே கண் அயர்ந்து இருந்தான்… அவனின் அருகாமையில் அவளும் உறங்கி இருந்தாள்…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top