- Joined
- Mar 16, 2026
- Messages
- 903
- Thread Author
- #1

தமிழ்
ஈன்றெடுத்தவளின் முகம் மறந்தாலும்,
முதன்முதலில் அழைத்த மொழி மறப்பேனோ?
பெற்றவனின் வாசம் மறைந்தாலும், எம் மொழியின் சுவாசம் துறப்பேனோ?
என் மழலைச் சொற்களில் மகிழ்ந்த வீடு,
என் முதல் கவிதையில் உயிர்பெற்ற கூடு.
உறவுகள் பெயர் சொல்லிக் கற்றபோது,
உலகத்தை அன்பென்று உணர்த்தியது தமிழ்.
பாட்டியின் கதைகளில் இரவைக் கடந்தேன்,
பாரதியின் வரிகளில் சிறகுகள் கொண்டேன்.
தாத்தனின் வழியில் ஞாலம் கண்டேன்,
வள்ளுவனின் வரிகளில் ஞானம் கொண்டேன்.
கல்லில் செதுக்கிய எழுத்தல்ல நீ,
காலத்தின் நெஞ்சில் பதிந்த உயிர் நீ!
எத்தனை மொழிகள் என்னைச் சூழ்ந்தாலும்,
உணர்வின் வேராக இருப்பவள் நீ.
காலம் புதுமையைத் தழுவிக் கொண்டாலும்,
உன் பழமை தரும் பெருமை குறைவதில்லை.
என் ஜீவன் பிரியும் நொடியும் மறையாதிருக்கட்டும்,
என் கடைசி மௌன
த்திலும் ஒலிக்கட்டும் தமிழ்!
Author: Priyadharshini S
Article Title: தமிழ்
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.