என் ஆயுள் நீயே 32

என் ஆயுள் நீயே 32

“உனக்கு வேண்டான்னா எனக்கும் வேண்டாம்.”

அஷ்மிதா சொல்லிட பிரணவ் பக்கென்று சிரித்துவிட்டான்.

“அண்ணா…”

அஷ்மிதாவின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்த பிரணவ், “நான் நோ சொல்வேன் தோணுதா உனக்கு?” எனக் கேட்டான்.

“அண்ணா” என்றவள், தாவி பிரணவ்வின் கழுத்தினை கட்டிக் கொண்டாள்.

“உன்கிட்ட சொல்லாம விட்ட கில்ட்… ஒரு மாதிரி தவிப்பாகிருச்சுடா. சாரி… சாரி… சாரிடா” என்ற அஷ்மி, “எப்படியும் உதய் சீனியரை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க, அதுவரை நான் பொறுமையா இருக்கணும் நினைச்சுதான் சொல்லாம இருந்தேன். ஆனால் இப்படி திடீர்ன்னு ஃபாஸ்ட்டா நடக்கும் தெரியாது” என்றாள்.

“ஹேய்… அஷ் குட்டி அழுதா பிரணவ்வும் அழுவான் தெரியும்ல” என்று அவளின் முதுகை வருடியபடி பிரணவ் சொல்லி முடிக்கும் முன்பு, அவனிலிருந்து பிரிந்து வேகமாக கண்களைத் துடைத்து, “நான் ஒன்னும் அழல” என்றாள்.

“பாருடா… அப்போ கண்ணுல என்னவாம்?” என்ற பிரணவ், “என்கிட்ட முதலில் சொல்லலன்னு ஃபீல் பன்றியா?” என்றான்.

ஆமென மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.

“இப்பவும் என்கிட்ட தான் பர்ஸ்ட் சொல்லியிருக்க” என்றான்.

“இல்லையே அவங்க கேட்கவும் சொல்லிட்டனே” என்றாள்.

“எவங்க?” பிரணவ் குலுங்கிய சிரிப்போடு கேட்க, அவனின் தோளில் அடித்த அஷ்மிதா “அண்ணா” என்று சிணுங்கினாள்.

“டேய் பாப்பா வெட்கப்படுறியா நீ?” என்று மேலும் அட்டகாசமாக சிரித்த பிரணவ், “நிறைய ஷாக் குடுக்காதடா. பாடி தாங்காது” என்றான்.

“உனக்கு என்மேல வருத்தமில்லையே?”

“நீயா உன் லவ்வை உதய்கிட்ட கூட பர்ஸ்ட் சொல்லல. என்கிட்ட தான் சொல்லியிருக்க. இப்போ நீ வீட்டில் கிளம்பும் போது கூட, எல்லாம் தெரிஞ்ச மாம் உன்னை பேச கூப்பிட்டிருப்பாங்க. நீ என்கிட்ட பேசணும் ஓடி வந்திருப்ப கரெக்டா?” எனக் கேட்டான்.

“ஆமா… உன்கிட்ட சொல்லாம அவங்க கேட்டதும் ஓகே சொன்னது எதோ உன்னைவிட்டு மறைச்சு செய்யுற மாதிரியே இருந்துச்சு. அதான் ஓடி வந்தேன்” என்றாள்.

“ம்ம்… எனக்கு உன்னைத் தெரியும்டா…” என்று தங்கையின் கன்னம் தட்டினான்.

தனக்காக பார்த்து அர்த்தங்கள் கோர்க்கும் அவனின் புரிதலில்… நெஞ்சம் நெகிழ பார்த்தாள் அஷ்மிதா.

“லவ் யூ’ண்ணா” என்று ஒற்றை விரல் அவனது இதயத்தை நோக்கி நீட்டி அவள் சொல்ல, பிரணவ் தன்னிரு கரங்களை விரித்து வா என்று பார்வையால் அழைத்தான்.

பாந்தமாய் தனக்குள் அடங்கிய தன்னுடைய தங்கையாகிய குழந்தையை ஆதுரமாய் அடைகாத்துக் கொண்டான்.

“உன்னோட மொமண்ட்ஸ்… நோ ஹர்ட் ஃபீலிங்க், ஓகே” என்று அவளின் நெற்றி முட்டி விலகினான்.

“சாரி…”

“இந்த சாரி எதுக்கு?”

“எனக்கு நீயும் சீனியரை லவ் பன்றங்கிற ஃபீல்… எதோ காரணம் ரெண்டு பேரும் சொல்லிக்காம விலகி நிக்கிறிங்கன்னு யூகம். எனக்கும் சீனியரை ரொம்ப பிடிக்குமா! அதான் உதய் ஹெல்ப் கேட்டப்போ மறுக்க முடியல. தென் அவங்ககிட்ட பேச ஒரு சான்ஸ் கிடைக்காதா வெயிட் பண்ண என் மனசுக்கு இதை ஒரு வாய்ப்பா யூஸ் பண்ணிக்கிட்டேன். அடிக்கடி இல்லைன்னாலும் சீனியருக்காக என்கிட்ட பேசுவாங்க நினைச்சேன். நான் கேட்டு நீ இல்லைன்னு சொல்லிட்டா, என்னால உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய முடியாதே. அதான் உதய் என்னை சீனியருக்காக அப்ரோச் பண்ணதை, அவரோட பிளான் எதையும் உன்கிட்ட சொல்லல. சீனியரை விட உனக்கு யாரும் பொருத்தமா இருக்கமாட்டாங்க தெரியும். உனக்கு லவ்வே இல்லைன்னாலும், சீனியர் லவ் மட்டுமே உன் லைஃப் கலர்ஃபுல்லா மாத்திடும் நினைச்சேன். எல்லா நேரமும் சீனியர் சைட் மட்டுமே யோசிச்சிருக்கேன்ல” என்றாள்.

பிரணவ் இதழ் விரியா சிரிப்பை உதிர்த்தான்.

“உன் பக்கம் ஒரு காரணமிருக்குல. அன்னைக்கு நீ உன்னையே பிடிக்கல சொல்ல சொன்னப்போ… அதை சொல்றதுக்கு முன்ன எவ்ளோ பெயின் ஃபீல் பண்ணியிருப்ப… இதையெல்லாம் யோசிக்காம, சீனியர் நோ சொல்ல நீதான் காரணம்ன்னு உன்னை பிளேம் பண்ணிட்டேன். சாரிடா” என்றாள். தன்னிரு காதுகளையும் பிடித்துக் கொண்டு இரைஞ்சும் பார்வையில்.

“முழுசா என் பக்க லவ் தெரியாமலே எனக்காகதான் எல்லாம் யோசிச்சிருக்க… என் மேல கோபம் கூட எனக்காகத்தான… நானே யோசிக்காத விஷயம், என் லவ்க்காக நீயும் உதய்’யும் செய்திருக்கீங்க. நான்தான் சொதப்பிட்டேன்” என்றான்.

“நாளைக்கும் ஒரு பிளான் இருக்கு சொதப்பிடாத” என்றாள்.

“என்ன பிளான்?”

“உன் ஆளு வருவாங்க. அவங்ககிட்ட நான்தான் பொண்ணுன்னு கூட சொல்லாம சாஸ்பென்ஸாதான் கூட்டிட்டு வராங்க… தென்…” என்று இழுத்த அஷ்மிதா, “உங்களுக்கு தான் பர்ஸ்ட் மேரேஜ்” என்றாள்.

“அடிப்பாவிங்களா… எனக்கே தெரியாம என் கல்யாணம் டிசைட் பண்ணியிருக்கீங்க… இதழுக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.

“உதய் உனக்காக சீனியர்கிட்ட பேசியிருக்காங்க… உன்னை கொஞ்சமே கொஞ்சம் அழ வச்சிக்கிறேன் சொன்னாங்களாம். அவங்களை உனக்கு புரியுமாம்” என்று அஷ்மி சிரித்திட, “மொத்தமா கட்டம் கட்டுறீங்க” என்றான் பிரணவ்.

“பின்ன நீங்களா சேருவீங்கன்னு வெயிட் பண்ணா… அவ்ளோதான்” என்று அஷ்மி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரணவ்வுக்கு விமலாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“வீட்டுக்கு எப்போட வர? உன் தங்கச்சி எல்லாம் சொல்லிட்டாளா? பேசணும் சீக்கிரம் வா” என்று அவரே பேசி வைத்திட்டார்.

கதவினை தட்டிவிட்டு ரீமா உள்ளே வந்தாள்.

“ஹேய் அஷ்மி என்னவோ சொன்னியே… ரீஸன் என்ன? மீட்டிங் டேக் ஓவர் பண்ணதால உடனே வர முடியல” என்று அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“அஷ்மிக்கு ப்ரொபோஸல் வந்திருக்கு ரீமா. நாளைக்கு வராங்க” என்ற பிரணவ், “லவ் புரோபோஸல்… நம்மகிட்டவே மறைச்சிட்டா” என்றான். தங்கையை பொய்யாக சீண்டிட.

“அண்ணா” என்ற அஷ்மிதா, “அதான் எல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன்ல” என்றவள், “எனக்காக நீ ஓகே சொல்ல வேண்டாம்” என்றாள்.

“அப்போ நான் வேண்டாம் சொன்னா அக்செப்ட் பண்ணிப்பியா நீ?”

“நீ சொல்லமாட்ட தெரியும். நடிக்க ட்ரை பண்ணாத” என்றாள்.

“அப்போ நான் வேணாம் சொல்லமாட்டேன் தெரிஞ்சே, அப்படியே பாசமலர் மாதிரி ஆக்ட் விட்டிருக்க நீ?” என்று அவள் தலையில் வலிக்காது கொட்டினான்.

“நீ என் அண்ணா டா… எனக்காக பார்ப்பேன்னு கூடவா தெரியாது” என்றாள். இருவரின் அன்பும் கரை கடந்து அலை வீச அவர்களின் இந்த புரிதல் தான் காரணம்.

“பையன் யாரு?” ரீமா இருவருக்கும் நடுவில் தனக்குரிய கேள்வியைக் கேட்டாள்.

“நாளைக்கு வீட்டுக்கு வாங்க உங்களுக்கு சர்ப்ரைஸ்” என்ற அஷ்மிதா, “மாம் கால் பண்ணாங்கல… வா வா போலாம்” என்று பிரணவ்வையும் ரீமாவிடம் எதையும் சொல்லவிடாது இழுத்துக்கொண்டு சென்றாள்.

இருவரும் ஒரே வண்டியில் செல்ல, நனியிதழிடமிருந்து பிரணவ்வுக்கு அழைப்பு வந்தது.

“உன் சீனியர் தான்” என்ற பிரணவ் அழைப்பினை கார் ப்ளூடூத்தில் பொருத்திவிட்டு, வண்டியை லாவகமாக செலுத்தினான்.

“பிரணவ்…” மதியம் அவனிடம் பேசிய நனியின் குரலுக்கும் இப்போது ஒலிக்கும் குரலுக்கும் அத்தனை வித்தியாசமிருந்தது.

“இதழ்… அழறியா?” என்று பிரணவ் பதறி கேட்க,

“டூ யூ லவ் மீ?” என தழுதழுப்பாக வினவினாள்.

“எஸ்… அம் லவ்விங் யூ” என்று சட்டென்று சொல்லிய பிரணவ், “என்னடி ஆச்சு?” எனக் கேட்டான்.

“இப்போ வீட்டுக்கு வர முடியுமா?”

நனியிதழ் அவ்வாறு கேட்டதும் அண்ணனும் தங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னடா…?”

“வீட்ல வந்து பேசுங்க. டைம் இல்லை. நாளைக்கு வேற பையனோட பேசி முடிக்கப் போறாங்க” என்று அவள் அழுதுகொண்டே சொல்ல, அஷ்மிதா வந்த சிரிப்பை அடக்கினாள்.

“உங்க பிளானா இது?” என்று தங்கையின் தோளில் தட்டிய பிரணவ், “உனக்கு நான்தான்டி மாப்பிள்ளை. வேற யாரும் குறுக்க வர முடியாது” என்று நனியிடம் கூறினான்.

“நான் சொன்னா அண்ணா கேட்பாங்க. ஆனால் என்னால் மறுத்து சொல்ல முடியாத சிட்டுவேஷன்ல இருக்கேன் பிரணவ்… பிளீஸ் நீங்க வந்து பேசுங்க” என்றாள்.

“நீ பர்ஸ்ட் விஷயத்தை தெளிவா சொல்லு?” என்ற பிரணவ் தங்கையை முறைத்தான்.

“எதுக்குடா முறைக்கிற?” சத்தமின்றி உதடசைத்தாள்.

“இவ்ளோ நாள் அவள் அழுதது போதாதா?” என்று அவனும் சத்தமின்றிக் கூறினான்.

“பிரணவ்…”

“கேட்குதா இதழ்?”

“ம்ம்…” என்ற நனியிதழ், “அண்ணா லவ் பண்றாங்க. அவங்க பொண்ணெடுத்து பொண்ணு கொடுக்க விருப்பப்படுறாங்களாம். இப்போ அண்ணாக்கு ஓகே சொல்லனும்னா நான் அவங்க பையனை கட்டிக்க ஓகே சொல்லணுமாம். எனக்கு என்ன பண்ணனும் தெரியல” என்றாள் விசும்பலோடு.

“இதுதான் உங்க கார்னர் ஐடியாவா?” என்று தங்கையிடம் கேட்ட பிரணவ்,

“நீதான் என்னை வேண்டாம் சொன்னியேடி… பார்க்குற பையன் நல்லவனா இருந்தா அவனை கட்டிக்கோயேன்” என்று தன்னவளிடம் விளையாடினான்.

“பிரணவ்” என்று பற்களைக் கடித்த நனியிதழ், “நீதாண்டா வேணாம் சொல்ல சொன்ன” என்று சீறினாள்.

“என்னடி டா சொல்ற?”

“ஆமா… சொல்லுவேன். உன்னை லவ் பண்றேன். டா கூட சொல்லக்கூடாதா?” என்றவள், “வர முடியுமா முடியாதா?” எனக் கேட்டாள்.

“வரணுமா?”, பிரணவ்.

“நான் வேணாமா?” என்ற நனியிதழ், “கிவ் மீ வன் சான்ஸ் கேட்ட” என்றாள்.

“வரேன்” என்ற பிரணவ், “அழமா இரு” என்று வைத்திட்டான்.

“அண்ணா போகப்போறியா?” அஷ்மி கேட்க, “எப்படியும் நாளைக்கு வர அவகிட்ட உண்மையை சொல்லமாட்டிங்க தான? அதுவரை அவள் ஓவர் திங்க் பண்ணி ஃபீல் பண்ணனுமா? இதுவரை அவளுக்கு தெரியாம நான் கொடுத்த பெயினே போதும். தெரிஞ்சே கொடுக்க விரும்பல. அவங்க வீட்ல வச்சு தானே என்னை பிடிக்கல சொல்லுன்னு சொல்ல சொன்னேன். அப்போ அங்க வச்சே அவளை தான் எனக்கு பிடிச்சிருக்கு சொல்றது தானே சரி” என்ற பிரணவ், “வீடு வந்தாச்சு” என்று அஷ்மியை வீட்டின் முன் இறக்கிவிட்டு உள்ளே கூட செல்லாது அத்தீஸ்வரம் நோக்கி பறந்தான்.
_____________________

உதயன் ஹார்பரில் வேலையென்று சென்றதும், கல்லூரியிலிருந்து எழிலை அழைத்துவர இன்பாவும் புறப்பட்டிருந்தான்.

கஜமுகன் அழைத்தாரென்று நனியிதழ் அறையை விட்டு வெளியில் வர, பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

“சொல்லுங்க தாத்தா” என்று பக்கம் வந்தவளை தனக்கு முன்னால் அமர்த்திக்கொண்ட கஜா, “உதயா உன்கிட்ட சொல்லியிருப்பாங்க” என்றார்.

“சொன்னாங்க தாத்தா. நாளைக்கு பொண்ணு பார்க்க போகணும் சொன்னாங்க” என்றாள்.

“உதயா அந்தப் பொண்ணை விரும்புறாங்க” என்றார் கஜேந்திரன்.

“தெரியும் சித்தப்பா.”

“அப்போ உன் அண்ணன் ஆசைப்பட்டது நடக்கிறது உன் கையில் தான் இருக்கு” என்றார் இளங்கோவன்.

“புரியலப்பா?”

“பொண்ணுக்கு அண்ணன் இருக்காங்களாம். அவங்க பொண்ணை கொடுக்கிற இடத்தில் தான், பொண்ணெடுக்க விருப்பமா அவங்களுக்கு” என்றார் லட்சுமி பாட்டி.

“இதுல நான் என்ன பாட்டி பண்ணனும்?” அப்போதும் புரியாது வினவியவளுக்கு, காமாட்சி விளக்கமாக சொல்லிட ஒரு நொடி உலகமே அவளுக்கு இருண்டுவிட்டது.

“உன் சம்மதம் வேணும்” என்று கஜா கேட்க, அவள் எப்படி மறுத்திடுவாள். அவளின் அண்ணனின் காதல் இதில் அடங்கியுள்ளதே! பொங்கி வர துடித்த கண்ணீரை தனக்குள் அமிழ்த்துக் கொண்டவள், “உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடி வந்திருந்தாள்.

உண்மை தெரியாது ஒரு மூச்சு அழுது கரைந்தவள், உதயனிடம் சொல்லலாம் என்று நினைத்த நொடி, தனக்காக அவனது காதலையும் துறந்திடுவான் என நன்கு அறிந்தவளாக, அப்போதைய தவிப்புகள் அடங்குவதற்காக பிரணவ்விற்கு அழைத்து அவன் வந்து பேசினால் பெதுமென நினைத்தவளாக அவனிடம் விஷயத்தை ஒப்படைத்து விட்டாள்.

சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே உதயனின் வீட்டிற்கு முன் நின்றிருந்தான் குரு பிரணவ்.

error: Content is protected !!
Scroll to Top