ருத்ரனின் பனித்தீ 💖அத்தியாயம் 11

அத்தியாயம் 11

“பனி வேணாண்டி சொன்னா கேளுடி… இது எங்கையாவது வில்லங்கத்துல போய் முடிய போகுதுடி…” 

“இப்போ நான் இதை பண்ணலன்னா தான் எனக்கு பெரிய வில்லங்கம் வரும்… வாய மூடிக்கிட்டு என் பின்னாடி வா…” 

“ஏய் நீ பண்ண கோல் மாலுக்கு நான் ஏண்டி உன் கூட சேர்ந்து மாட்டணும்…?” 

சுமி எத்தனை புலம்பியும் அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு இல்லை இல்லை இழுத்துக்கொண்டு ருத்ரன் கேபின் நோக்கி சென்றாள் பனி.

 ருத்ரன் தன்னுடைய கேபினில் அமர்ந்து தன் முன்பு இருந்த ரெக்கார்ட் நோட்டை திருத்துவதில் கவனமாக இருந்தான்.

 அதனைப் பார்த்ததும் “ஹே சுமி… சார் நோட்ல சைன் பண்ண ஆரம்பிச்சுட்டாருடி..” 

“லூசு… அதுக்காக தானடி எடுத்துட்டு வர சொன்னாரு… அப்ப சைன் பண்ண மாட்டாரா…? என்னடி கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்க…”

 “அப்படியே ஒன்னு போட்டேன்னா பாரு… இப்ப திருத்த ஆரம்பிச்சுட்டா நான் எப்பிடி என் நோட்டை கொண்டு போய் அங்க வைக்கிறது…?

“ஸ்ஸோ… இப்ப என்ன தான்டி பண்ண போற…?” 

“பிளான் எல்லாம் பக்காவா யோசிச்சு இருக்கேன்… மணி எத்தனை…?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல லஞ்ச் டைம் ஆரம்பிச்சுரும்டி…”

 

“வாவ் சூப்பர்…! எனக்கும் அதுதான் வேணும்… நீ என்ன பண்ற நான் சொல்ற மாதிரியே செய்யிற சரியா…?”

“இப்பவும் அதை தானடி பண்ணிட்டு இருக்கேன்…”

“இவ ஒருத்தி…” என்று அவளின் சலித்த முகத்தை பார்த்து தானும் சலித்துக் கொண்டவள் மீண்டும் ஒருமுறை கேபின் உள்ளே எட்டிப் பார்த்து, ருத்ரனின் கவனம் தங்கள் மேல் இல்லாமல் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவள் சுமித்ராவின் புறம் திரும்பி,

“இப்போ நம்ம என்ன பண்றோம்னா… உன் கையிலையும் என் கையிலையும் இருக்கிற இந்த மூணு வாழைப்பழ தோலை இந்த வாசலுக்கு வலது பக்கமா வைக்கிறோம்…”

“அது ஏன் வலது பக்கம்…?”

“ஏன்னா கேண்டீன் இந்த பக்கம் தான் இருக்கு…. அப்போ லஞ்ச் டைம் ஆரம்பிச்சதும் சிடு மூஞ்சி ரைட் சைடா தான் வெளியேறி போவாரு, அப்போ இதை இந்த பக்கம் வச்சா தான் கரெக்ட்டா இருக்கும்…” 

 “சரி இதை இங்க வச்சா… அவர் தெரியாம அதுல கால் வச்சு வழுக்கி விழுந்துடுவாரே…!”

 “அதுக்காக தானடி வைக்க போறதே…”

“அடியேய்…!!! என்னடி திட்டம் போட்டுருக்க…!!? நான் கூட நீ இந்த வாழைப்பழத்தை குடுத்து சாப்ட சொன்னப்போ என் மேல உள்ள பாசத்துல தான் ஆசையா குடுக்குறியோன்னு நெனைச்சேன்.. ஆனா இப்பத்தானே தெரியுது நீ என்ன வேலை பார்க்குறதுக்காக என்கிட்ட இதை குடுத்தன்னு…”

“சும்மா வளவளன்னு பேசாதடி… இன்னும் கொஞ்ச நேரத்துல பெல் அடிச்சிடுவாங்க…” என்று கூறியவள் ஏதோ பெரிய க்ரைம் மூவி அளவிற்கு தான் போட்ட அந்த போட்ட திட்டத்தை அவளிடம் எடுத்துரைத்தாள்.

ருத்ரன் எப்படி எழுந்து வருவான் கதவின் எந்த புறமாக வெளியேறுவான் என்பது வரை கைகளை ஆட்டி ஆட்டி ஸ்கெட்ச் போட்டவள், 

“ஆங்… நான் சொன்னது சரி தான்… சுமி தோலை இங்கவே வச்சுடு… அதுதான் சரியா இருக்கும்…” 

 “ஏதே…! நான் வைக்கவா…! நான் வைக்கிறது மட்டும் ருத்ரன் சார் பார்த்தாருன்னு வையி நான் செத்தேன்டி…!”

“சரி… நான் இங்கையே நிண்டு சார் உன்னை பாக்குறாரா…பாக்காம இருக்காரான்னு பாத்து சொல்றேன் நீ கரெக்டா வச்சிடு…” 

“ஏண்டி இப்படி உசுர வாங்குற…!” என்று புலம்பிக்கொண்டே அவள் கூறிய, அந்த கேபின் கதவை திறந்ததும் அடுத்த அடி ருத்ரன் எடுத்து வைக்கும் இடத்தில் வரிசையாக மூன்று வாழைப்பழ தோல்களை அடுக்கிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.

 சரியாக அந்த நேரம் ரவுண்ட்ஸ் சென்றிருந்த வைஸ் பிரின்ஸிபால் லோகநாதன் அங்கு வரவே, அவரைப் பார்த்த பனியோ,

“ஏய் சுமி.. வைஸ் பிரின்ஸிடி…!” என்று கூறவும், வரிசைபடுத்திக் கொண்டிருந்த அந்த மூன்று வாழைப்பழத் தோலையும் சுருட்டி எடுத்து தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு அட்டேன்ஷன் பொஷிஷனில் நின்றாள் சுமித்ரா.

அவர்களின் அருகில் வந்த லோகநாதன் அவர்கள் இங்கு இருப்பதற்கான காரணம் என்னவென்று விசாரித்தார்.

அதற்கு பனியோ, “கெமிஸ்ட்ரில ஒரு சின்ன டவுட் இருந்துச்சு, அதான் ருத்ரவர்மன் சார் கிட்ட கேட்டுட்டு போகலாம்னு வந்தோம் சார்…” என்று கூறி சமாளித்தாள்.

சரி என்று கூறிய லோகநாதன் அங்கிருந்து சென்றிருக்க, அறைக்கு வெளியில் அரவம் சத்தம் கேட்டு எழுந்து வெளியில் வந்தான் ருத்ரன்.

இதற்கு முன் பனியும் சுமியும் கிசுகிசுவென பேசிக்கொண்டதால் இவர்களின் அரவம் அவனின் செவியை தீண்டி இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது லோகநாதனின் பேச்சில் சத்தம் கேட்டதும் எழுந்து வந்து வாசலில் நின்றிருந்த இருவரையும் பார்த்து புருவம் சுருக்கியவன்,

“நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க…?” தன்னுடைய சிறப்பு மிக்க எஃகு குரலில் புருவம் சுருக்கி கேட்டான் ருத்ரன்.

லோகநாதன் சென்று விட்டாரா…? என்று பார்ப்பதில் கவனமாக இருந்த சுமியும் பனியும் தங்களுக்கு பின்னால் மிக அருகில் ருத்ரனின் குரலை கேட்டதும் ஒரு நொடி பயந்தில் திடுக்கிட்டு இரு கண்களையும் இறுக மூடித் திறந்து பொறுமையாக திரும்பி அவனை பார்த்தனர்.

 இருவரது முகமும் பயத்தில் வெளுத்திருப்பதை பார்த்து மேலும் புருவம் சுருக்கியவன், 

“நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டேன்… பதிலையே காணோம்..?” என்றான் அதட்டல் குரலில். 

 அதற்கு சுமித்ராவோ, “சா..சார் இவ தான் உ…உங்ககிட்ட ஏதோ 

பே…பேசணும்னு சொன்னா… அதனாலதான் சார் நானும் இவ கூட வந்தேன்…” என்று தயங்கி தயங்கி கூறி அவனின் கவனத்தை பனியின் புறம் திருப்பி இருந்தாள்.

“நீ என்கிட்ட பேசணுமா…? என்ன பேசணும்…?” என்று கூறியவாரே கேபினுள்ளே திரும்பி நடந்தான் ருத்ரன். 

அவனின் பின்னாலேயே தானும் உள்ளே சென்ற பனி அவனறியா வண்ணம் சுமியின் புறம் திரும்பி, “நான் சொன்ன பிளான் மாதிரியே பண்ணி வச்சிட்டு போயிடு…” என்று சைகை மொழியில் கூறினாள்.

 அதனைக் கேட்டு சரியென்று தலையசைத்து பனியின் திட்டப்படியே, அவ்வழியே ஏதேர்ச்சியாக வந்தால் யாருடைய கவனமும் அதில் படாதவாறு அந்த கதவின் ஒரு புறத்தில் வாழைப்பழத் தோலை வைத்துவிட்டு, தப்பித்தால் போதும் என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி இருந்தாள் சுமித்ரா. 

 “சொல்லு என்கிட்ட என்ன டவுட் கேட்கணும்…?” 

“ஐயையோ… கேக்குறாரே கேக்குறாரே…இப்ப நான் என்ன பதில் சொல்லி சமாளிப்பேன்…? கடவுளே… என்னை காப்பாத்து..” என்று கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டு விழித்தவள், பின் திடமாக மனதை உறுதிப்படுத்திக் கொண்டவளாக, 

 “சார் அது வந்து…”

“..ம்ம்…சொல்லு..”

“இல்ல சார்… அது… நான் அன்னைக்கு லேப்ல டெஸ்டிங் ட்யூப் உடைச்சு தப்பு பண்ணிட்டேன்ல… அதுக்கு தான் சாரி கேட்டுட்டு போலாம்னு வந்தேன் சார்…”

அவளின் பேச்சில் ஒற்றை புருவம் சுருக்கி அவளை கூர்ந்து கவனித்தவன் “அப்படியா…! சரி போலாம்…” என்று கூறியவன் மீண்டும் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.

 அவன் அமர்ந்து பின் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு அங்கிருந்து செல்ல எத்தணித்தவள், தனது லொட லொடா வாயை வைத்துக்கொண்டு அமைதியாக வெளியேறாமல் மீண்டும் அவன் புறம் திரும்பி,

 “சார் எனக்கு ஒரு டவுட்டு…?” 

“வேகமா கேளு.. என் டைம்ம வேஸ்ட் பண்ணாத… எனக்கு டைம் வேஸ்ட் பண்ண பிடிக்காது…!” 

“ஓகே… ஓகே சார்.. அன்னைக்கு நான் லோகநாதன் சார் கிட்ட உங்களை பத்தி பேசினது உங்களுக்கு தெரியும்… நான் அன்னைக்கு உங்களை கம்ப்ளைண்ட் பண்ற மாதிரி தான் பேசுனேன்… அது எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சும் கூட, ஏன் சார் நீங்க அதை பத்தி என்கிட்ட எதுவுமே கேட்கல…?” 

 அவள் அவ்வாறு கேட்டதும் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவனோ,  

“எனக்கு தெரிஞ்சு… நீ லாஸ்ட் இயர் படிச்ச காலேஜ்ல பயங்கரமா அடி வாங்கியிருப்ப… அந்த டைம்ல உன்னோட செமஸ்டர் எக்ஸாம் எப்படா முடியும்னு காத்திருந்து, காலேஜ் கரஸ்பாண்டன்ட்டே வாண்ட்டடா உங்க அப்பாவுக்கு கால் பண்ணி, இனிமே உங்க பொண்ணு இந்த காலேஜ்ல படிக்க வேணாம்… தயவு செய்து கூட்டிட்டு போயிருங்க அப்படின்னு டிசிய குடுத்து அனுப்பியிருப்பாரு… 

அதனால தான் உங்க அப்பா வேலை காரணமா சென்னைக்கு வந்ததும், வேற வழி இல்லாம உன்னையும் உங்க ஃபேமிலியவும் கூட்டிட்டு வந்துருப்பாரு… ஆனா உங்க அப்பா வந்ததால மட்டும் தான் நீயும் சென்னைக்கு வந்ததா என்கிட்ட பொய் சொல்லி இருக்க, ஐ அம் அ ரைட்…?”  

அவனின் வார்த்தைகளை கேட்டவாரே அதிர்ச்சியில் இமை குடையை அகல விரித்திருந்த அவளின் விழிகளை அழுத்தமாக பார்த்து, பனியின் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை சரியாக கணித்துக் கூறினான் ருத்ரன். 

 அவன் கூறியதை கேட்ட பனியோ, “சார்…!!! எப்பிடி சார்…! லாஸ்ட் இயர் நான் படிச்ச காலேஜ்ல என்ன நடந்துச்சுன்னு பக்கத்துலேயே இருந்து பார்த்த மாதிரி அவ்ளோ அக்யூரேட்டா சொல்றீங்க…!?”

 அவள் கூறியதை கேட்டு மீண்டும் அவளை ஒரு பார்வை பார்த்த ருத்ரனோ, “அப்போ நான் சொன்னது தான் உண்மை… அந்த காலேஜ்லையும் நீ உருப்படியா படிக்கல… அங்க இருந்த என்னை மாதிரி யாரோ ஒரு ப்ரொஃபசர் கிட்ட நல்லா மாட்டிருக்க அப்படித்தானே…!” 

 “அட… ஆமா சார்…!” என்று வடிவேலு பாணியில் சிரித்தபடி கூறினாள் பனி.

“கெட் அவுட் ஆஃப் மை கேபின் இடியட்….! உன்னை மாதிரி ஒரு தருதலைய இதுநாள் வரைக்கும் நான் பார்த்ததே இல்லை… இது ரொம்ப முக்கியமான டவுட்ன்னு க்ளாஸ்ஸை கட் அடிச்சிட்டு, கேம்பஸ் ஃபுல்லா சுத்திகிட்டு திரியறியா…? இப்போ உனக்கு என்ன க்ளாஸ் போயிட்டு இருக்கு..?” என்று அவன் கேட்க, 

“ஐயையோ வாத்தி சூடாகுதே…!” என்று திருதிருவென விழித்தவள் அவன் கேள்விக்கு பதில் கூறாது அவனை பார்த்தவாரே ஈ…ஈ… என்று பற்களை இழித்துக் காட்டியவள், அவன் அடுத்த கேள்வியை கேட்கும் முன் அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றெண்ணி வேக எட்டுக்களோடு அந்த அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அந்த நேரம் சுமித்ரா அடுக்கி வைத்து விட்டு சென்றிருந்த வாழைப்பழம் சரியாக அவளையே பதம் பார்த்திருந்தது.

 கவனம் ருத்ரனின் புறம் இருந்ததால், கால்கள் தெரியாமல் வாழைப்பழத் தோலில் வைத்து வழுக்கி இருக்க, அதில் பிடிமானம் இல்லாமல் பொத்தென்று தரையில் விழுந்தவள், “ஐயோ… அம்மா…!” என்று கத்தினாள்.

அந்த சத்தத்தில் தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து கீழே விழுந்து கிடந்தவளை பார்த்து பதறி அவளை கையை பற்றி தூக்கி விட்டவன், 

“ஏய்… திடீர்னு என்னாச்சு உனக்கு…? எப்படி விழுந்த..? கண்ணை பாதையில வச்சிட்டு போக மாட்டியா… கை கால்ல எதுவும் அடி பட்டுருக்கா…? நல்லா உதறிவிடு..?” என்று அதற்கும் கண்டிப்புடன் கடிந்து கொண்டவன், அப்பொழுதுதான் தரையில் இருந்த மூன்று வாழைப்பழ தோலையும் கவனித்தான்.

 அவனின் பார்வை தோலின் மீது பதிந்ததை பார்த்து, அந்த வலியிலும் அவனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது…! என்றெண்ணியவள்,

“சார்… எனக்கு ஒன்னும் இல்ல சார்… எனக்கு இப்போ வலி பரவால்ல சார்… நான்…நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்…” என்று கூறியவர் அவனிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து செல்ல முயன்றாள். 

“ஒரு நிமிஷம்…!” என்கின்ற தன்னுடைய அழுத்தமான குரலில் அவளை அங்கிருந்து செல்ல விடாது நிறுத்தி இருந்தான் ருத்ரன். 

 திரும்பிச் செல்ல இருந்தவள் அவன் அழைப்பில் ஒற்றை கண்ணை அழுந்த மூடி ‘போச்சு வசமா சிக்கிட்டேன்…!’ என்று நினைத்துக் கொண்டே நின்றிருக்க,

“திரும்பு…” என்று கடுமையான குரலில் கூறினான் ருத்ரன்.

 அவன் தன்னை தன்னுடைய திட்டத்தை கண்டுபிடித்து விட்டான் என்று உணர்ந்தவள் திரும்பாமல் அப்படியே நின்றிருந்தாள்.

“உன்னை தான் திரும்புன்னு சொன்னேன்…!” தனது பற்களை நறநறவென அறைந்து கொண்டே கூறினான்.

 அதில் வேறு வழி இல்லாமல் தலை தாழ்ந்த வாரே அவன் புறம் திரும்பி நின்றாள் பனி. 

 “இது நீ பார்த்த வேலை தானே…!” என்று கீழே கிடந்த வாழைப்பழ தோல்களை சுட்டிக்காட்டி கேட்டான். 

அதற்கு அவளோ எந்த பதிலும் கூறாமல் அதே நிலையில் திருதிருவென விழித்து கைகளை பிசைந்து வண்ணம் இருந்தாள்.

“ஆன்சர் மீ…!” என்று தாடை இறுக கர்ஜித்தான் ருத்ரன்.

 அவனின் குரலில் உடல் திடுமென அதிர உலுக்கி விழுந்தவள், “ஆ… ஆமா சார் நா…நான் தான் சார்…” என்று திக்கித் திணறி கூறினாள். 

(பனித்தீ தொடரும் 💝💝💝)

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top