அத்தியாயம் 4.,
நான்கு நண்பர்களும் பயத்தில் இருக்க, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது அலாரம்.
“இத்தனை நாள் பயன்படுத்தாம இருந்ததால ஒர்க் ஆகலையோ?”, என்ற அர்ஜுனின் கேள்விக்கு மறுப்பாகத் தலையை ஆட்டியது அலாரம்
“அப்புறம் ஏன்? எந்த ரியாக்ஷனும் காணோம்”, என்றான் ராகவ்.
“நான் தான் சொன்னேனே அது ஆக்டிவேட் டைம் 4.04am”, என்றது அலாரம் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே,
“வாட் டூ யூ மீன்”, என விவேக் பாணியில் பயந்து கொண்டே வினவினான் விஷ்வா.
“இட்ஸ் மீன்… அது மார்னிங் 4.04 மணிக்கு வேலை செய்யும்னு நினைக்கிறேன்”, என்ற அலாரத்தை முறைத்தனர் நண்பர்கள்.
“அப்படின்னா நீயே உட்கார்ந்து அதை ஒர்க் பண்ணு, நாளைக்கு எங்களுக்கு ஆஃபீஸ் இருக்கு டா சாமி”, என திரு சொல்லிக் கொண்டே அறைக்குள் செல்ல,
“டேய் பசிக்குது”, எனக் கத்தியது அலாரம்.
“என்ன?”, மீண்டும் அதிர்ச்சி அவர்களிடம்.
“என்ன… என்ன?”, கடுப்பாகக் கேட்டது அலாரம்.
“உனக்கு பசிக்குமா? எப்படி சாப்பிடுவ? வயிறு எங்க இருக்கு?”, என கேள்விக்கு மேல் கேள்வியாக குவிய,
” நானும் மனுஷன் தானே டா”, என்றது அது.
“மனுஷனா இருந்தேன்னு வேணா சொல்லு. இப்போ நீ ஒரு மெசின்”, என விஷ்வா கேலி செய்ய,
“மூடு”, என கோவமாக சொன்ன அலாரம், “நிஜமாவே பசிக்குது”, என்றதும். திரு கிச்சன் சென்று மடமடவென சமைக்க ஆரம்பித்தான்.
நால்வரில் திருவிற்கு நன்றாகவும் வேகமாகவும் சமைக்க வரும்.
“என்ன செய்யற”, என்றபடி அலாரம் தாவி, தொற்றி என சமையல் மேடையை அடைந்தது.
“இன்னும் பொருள் எதுவும் வாங்கல. சோ உப்மா”, என திரு சொல்ல,
முகத்தை சுளித்தாலும் சோறு வேண்டும் என்ற ஒரே காரணத்தால் அது எப்போது ரெடி ஆகும் என காத்திருந்தது.
பின் ஐந்து பேரும் சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்குள் அடைந்து விட,
ஹாலில் இருக்கும் டீபாயில் கால் மேல் கால் போட்டு படுத்திருந்தது.
விழித்துக் கொண்டுதான் இருந்தது. என்னவோ சரியில்லை என தோன்றினாலும் சரி செய்ய வழியில்லை. என்ன நடந்தாலும் நண்பர்களுக்கு எதுவும் ஆக விடக் கூடாது என மனதில் எண்ணிக் கொண்டு, நடக்கவிருக்கும் மாற்றத்தை எதிர்கொள்ள தன்னை தயார் செய்து கொண்டது அலாரம்.
அறையில் சென்ற நண்பர்கள் நான்கு பேருக்கும், ஆளுக்கொரு கனவு.
விஷ்வாவிற்கு, ஒரு பாதாள குழியில் விழுந்து மூச்சு விட முயன்று முடியாமல் போக, கண்கள் சொருகி தொண்டை அடைத்த மயங்கி விழும் நேரம், கனவில் இருந்து அரக்க பறக்க விழித்துக் கொண்டு, தன் கனவை எண்ணி அரண்டு போய் தூக்கம் தொலைத்தான்.
திருவிற்கு, ஏதோ ஒன்று அவனை இறுக்கி பிடித்து நசுக்கி பிழிவது போல இருக்க, அவனும் மூச்சுக்கு ஏங்கி, கண்கள் பிதுங்கும் அளவில் அடித்து பிடித்து கனவை விட்டு வெளியில் வந்து சுற்றம் உணர்ந்தான்.
இங்கு ராகவோ, கருப்பு நிற உருவம் ஒன்று அவனை விட பல மடங்கு உயரமும் அகலமுமாய் அவனை சுற்றி வளைத்திருக்க, நிஜத்தில் அவனுக்கு உச்சாவே வந்து விட்டது.
அடுத்தாக அர்ஜுன், அவன் சுற்றிலும் புகை மண்டலமாக இருக்க, எங்கிருந்தோ பூ மாலை ஒன்று அவன் கழுத்தில் விழ, அதைத் தொடர்ந்து அரசகுல நாட்டியப் பெண்கள் சிலர் அவனை சுற்றி நின்று நாட்டியம் ஆட பல்லைக் காட்டிக் கொண்டு அதைப் பார்த்திருந்தான்.
கனவு என்று சொல்லிட முடியாது நிஜமாய் நடப்பது போலயே உணர்ந்தான் அவன். பின் அது எல்லாம் காற்றோடு காற்றாக மறைந்து போய், பாலைவனமாக காட்சியளிக்க. குடித்துக் கொண்டிருந்த பழச்சாறு வற்றிய நிலையில் இருந்தது.
குடிக்க கூட தண்ணீர் இன்றி தத்தளித்துக் கொண்டே தன் இறுதி நேரத்தை நெருங்கும் நேரத்தில் நிஜம் வந்து, கனவு தொலைத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தான் அவன்.
நால்வரும் அரண்டு போய் தங்கள் அறையை விட்டு வெளியில் வந்தனர். மொத்தமாய் நால்வரின் தூக்கமும் தொலைந்தது.
ஹாலில்…
நம் ஆட்ட நாயகன் இனிமையாக தூங்கிக் கொண்டிருந்தான். இடையிடையே, “ஹேய் ஸ்ருதி”, என சொல்ல இவர்கள் நான்கு பேருக்கும் உட்ச பட்ச கடுப்பு.
சரியாக அதன் அருகில் சென்று அதை தொடும் நேரம், “ட்ரிங்”, என சத்தமாக ஒலித்தது அலாரம். அதில் அலாரம் எழுந்திருக்க,
நான்கு பேரும் “ஆஆஆ…”, எனக் கத்த,
சரியாக 4.04am என்ற நேர நிமிடத்தில் மஞ்சளாக பாய்ந்த ஒளி ஒன்று, அலாரத்துடன் சேர்த்து நண்பர்கள் நால்வரையும் தன் ஒளிக்குள் அடக்கி, மெதுமெதுவாக மறைந்த ஒளி அவர்களையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு அங்கிருந்து மறைந்து போனது.
அவர்கள் மறைத்த அடுத்த நொடியில், வேறொரு இடத்தில், அந்தரத்தில் உண்டான அந்த மஞ்சள் வண்ண ஒளி, ஒரு நுழைவு வாயில் குழி போல திறந்து, ஒவ்வொருவராக பொத்து பொத்தேன கீழே விழ வைத்து மறைந்து போனது.
பயத்தில் உறைந்து போன நண்பர்கள், தங்கள் இருந்த இடத்தை சுற்றிப் பார்க்க, அலாரத்தை மட்டும் காணவில்லை.
“டேய் அவன் நம்மள நல்லா மாட்டி விட்டுட்டான்”, என விஷ்வா சொல்ல, மேலும் மேலும் பயந்தனர் அவர்கள்.
“சின்ன குழந்தை மாதிரி கதறாத இங்க தான் இருக்கேன்”, என விழுந்த வேகத்தில் மண்ணுக்குள் புதைந்து போன அலாரம் திக்கி முக்கி எழுந்து வந்தது.
“இப்போதான் டா. கொஞ்சம் நிம்மதி”, என திரு சொல்ல,
“இது எந்த இடம்னே தெரியாம வந்து விழுந்து கிடக்கிறோம். இது நிம்மதியா உனக்கு”, என பயத்திலும் கோபத்திலும் சீறினான் ராகவ்.
“எதுக்கு டா மெட்டல் மண்டையா எங்களை இங்க கொண்டு வந்து விட்டு இருக்க”, என அர்ஜுன் கேட்க,
“நீங்க உங்க அறிவை எல்லாம் யூஸ் பண்ணி ஒரு பட்டனை ப்ரஸ் பண்ணீங்களே. நீங்க குடுத்த ஆக்ஷனோட ரியாக்ஷன் தான் இது”, என பதில் சொல்லிக் கொண்டே சுற்றிக் பார்வையை அலைய விட்டது அலாரம்.
“எந்த இடம் இது. பாக்க ஏதோ வனாந்திர காடு மாதிரி இருக்கு”, என விஷ்வா சொல்லி முடிக்கும் முன், தடதடவென நிலமே அதிரும் சத்தம். மேலும் பயம் ஆட்கொள்ள அவர்கள் நின்றிருக்க,
உஷாரான அலாரம் அவர்களை இழுத்துக் கொண்டு புதராக இருந்த இடத்தில் ஒளிந்து கொள்ள, வானை முட்டி விடுமோ என்ற உயரத்தில் இருந்தது அந்த உயிரினம்.
“இது… இது…”, என ராகவின் வாய் பேச்சு வராமல் திக்க,
“டைனோசர்”, என்றது அலாரம்.
” கொய்யால எங்க வந்து, யார்கிட்ட கோர்த்து விட்டு இருக்க”, என அழுகையே வந்துவிடும் போல குரலில் சொன்னான் அர்ஜுன்.
” நீ சொல்றேன்னு பட்டனை அழுத்தின எங்களை பிஞ்ச செருப்பால அடிக்கணும் டா”, என பயத்திலும் அலாரத்தை வறுத்தான் விஷ்வா.
“ச்சு… நான் தான் இருக்கேன்ல. பயப்படாதீங்க”, என அலாரம் சொல்ல,
“நீ இருப்ப… நாங்க இருப்பமா”, என “டங் டங்”, என நடந்து சென்ற டைனோசர் ஃபேமிலியைப் பார்த்து எச்சில் விழுங்கினர் நால்வரும்.
ஒருவாறாக ஒரு இருபது முப்பது டைனோசர் அவர்களை கடந்து சென்று விட அந்த இடமே அமைதியானது.
புதரில் இருந்து வெளியில் வந்தவர்கள், “இங்க இருந்து எப்படி வெளிய போறது”, என திரு கேட்க,
“அது… ஒரு டாஸ்க் இருக்கு”, என தயக்கமாக சொன்னது அலாரம்.
“உன்னை”, என அர்ஜுன் தரையில் எதையோ கோவமாக தேட,
“என்ன விட்டுறு டா”, என ஓடியது அலாரம்.
” அட நிறுத்துங்க. எப்படி இங்கிருந்து வெளிய போறதுன்னு பாப்போம்”, என விஷ்வா சொல்ல,
“அதுக்கு தான் டாஸ்க் கம்ப்ளீட் பண்ணனும்”, என மூச்சிறைக்க மீண்டும் தன்னிடம் வந்து நின்றது அலாரம். அதை கடுமையாக முறைத்துக் கொண்டு நின்றான் அர்ஜுன்.
“என்னனு சொல்லித் தொலை”, எக்கச்சக்க கடுப்பில் சொன்னான் ராகவ்.
“அதை நாம தான் தேடனும்”, என சொல்லவும் மீண்டும் வெறியானான் அர்ஜுன்.
“வெளிய போய் உன்னை வச்சுக்கிறேன்”, என சொல்லிக் கொண்டு கால் வலிக்க, அங்கேயே அமர்ந்து விட்டான் அர்ஜுன்.
” எனக்கு ஒரு சந்தேகம்… நீதான் இந்த மெசினை கண்டு பிடிச்ச, என்ன டாஸ்க் எங்க இருக்குன்னு உனக்கு தெரியும் தானே”, என திரு கேட்க. மற்ற நண்பர்களும்,
வழி பிறந்தது… ஒளி பிறந்தது… என ஆசையாய் அதன் பதிலை எதிர்பார்த்திருக்க,
“எனக்கு தெரியாது… என்னை வச்சு யாரும் மிஸ் யூஸ் பண்ணக் கூடாதுன்னு”, என அது நிறுத்த,
“கூடாதுன்னு”, என முறைப்பாகக் கேட்டான் விஷ்வா.
“அதை எனக்கே தெரியாதது போல தான் டிசைன் பண்ணேன்”, என்ற அலாரம் அர்ஜுன் பார்த்த பார்வையில் நெருப்பு மட்டும் இருக்குமேயானால் கரிந்து சாம்பலாகி இருக்கும். அத்தனை அனலாய்ப் பார்த்தான் அவன்.
“முடியலடா என்னால… இங்கேயே டைனோசர் மிதிச்சு நம்ம சாகப் போறோம்”, என ராகவ் சொல்ல,
“அப்படி எல்லாம் விட மாட்டேன்”, என அலாரம் சொல்ல,
“நீ வாயை மட்டும் திறக்காத”, என அதனிடம் சீறினான் அர்ஜுன்.
“எப்படி டாஸ்க் தேடுறது. அதாவது தெரியுமா?”, என விஷ்வா கேட்க,
குனிந்த தலை நிமிரவில்லை அலாரம்.
“சோ… நம்ம தான் அதைத் தேடனும்”, என ராகவ் அழுத்தமாகச் சொல்ல, மௌனமாக தலையை மேலும் கீழுமாக ஆட்டியது அலாரம்.
பின்னர் ஐந்து பேரும் ஆளுக்கொரு புறமாக சென்று, என்ன தேடுவது என்றே தெரியாமல் தேடினர்.
விதியே என நொந்து கொண்டு சம்மணமிட்டு அமர்ந்து விட்டான் அர்ஜுன்.
அருகில் கிடைத்த சிறிய குச்சி ஒன்றை வைத்து மண் தரையில் கீறிவிட்டு விளையாடினான். அவனுக்கு திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தான்.
அவன் குச்சியை வைத்துக் கீற கீற, திடீரென பூமியடியில் இருந்து கடமுடவென சத்தத்துடன் ஒரு டைனோசர் கற்சிலை ஒன்று மண்ணைப் பிளந்து கொண்டு வெளியில் வந்தது.
“டேய்”, என அர்ஜுன் கூச்சலிட… என்னவோ ஏதோவென மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓடிவர, அண்ணாந்து பார்க்கும் அளவில் ஒரு டைனோசர் சிலை ஒன்று எழுந்து நின்றதைப் பார்த்து விழி விரித்துப் பார்த்து நின்றனர்.
“என்னடா பண்ணி தொலைச்ச”, என ராகவ் கேட்க, பதில் சொல்லாமல் அதிர்ந்து நின்று இருந்தான் அர்ஜுன்.
கொஞ்சம் நகரவில்லை எனில் அதன் முதுகில் அல்லவா அவன் இந்நேரம் அமர்ந்து போஸ் கொடுத்திருப்பான். அந்த அதிர்ச்சியே அவனை உறைந்து விட செய்தது.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
