சருகு 🍂 16 :
தான் எதிர்பார்த்த கரங்களினால் தாலி அணிவித்துக் கொண்ட இன்பத்தில் வருணா மூழ்கி திளைத்தாள்.
எந்த நொடி அபியை அவள் காதலிக்க தொடங்கினாள் எனத் தெரியாது, ஆனால் அவளது காதலை உணர்ந்த நொடி முதல், ‘இது நடக்குமா? நடக்காதா?, தான் கொண்டுள்ள நேசம் அர்த்தமானதா?’ என குழம்பித் தவித்தவள், இன்பம் அடைந்தது கணப்பொழுதே.
அவள் தன் ஆசை ஈடேறிய ஆனந்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்த பொழுது அபி மாலையினை கவியின் கரங்களில் கழட்டி கொடுத்துவிட்டு சென்றிருந்தான். அவள் பார்த்தது தன் கணவனின் பின் உருவத்தை தான்.
அபியின் செயலை வைத்து வந்திருந்த உறவினர்கள் அனைவரும் பலவாறு பேச, அதனை ராஜகோபாலன் தான் தன் ஆளுமையினால் அடக்கியிருந்தார்.
தாலி கட்டியதும் அனைத்தும் சரியாகி விடுமென யாரும் எதிர்பார்க்கவில்லை தான், ஆனால்… அபியின் இந்த செயலை வெங்கடாச்சலம் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
சீனுவிடம் வந்தவர், “அவனே எதிர்பாராமல் நடந்ததால், அபி கொஞ்சம் குழம்பியிருக்கிறான்.. அவன் போக்கில் சென்று தான் நாம் அபியை மாற்ற வேண்டும், அதுவரை கொஞ்சம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்” என்றார்.
“என் மகள் வாழ்க்கை எனது அவசர புத்தியால் அலங்கோலமாகிவிட்டதே…” சீனு துக்கத்துடன் கூற…
லலிதாவோ, “நீங்க செஞ்ச தப்பினை என் அண்ணன் சரி செஞ்சிட்டாரு… அபி ஒருபோதும் என் மகளை கை விட மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. வீணா வருத்தப்படாம, ஆக வேண்டியதைப் பார்ப்போம் வாங்க” என அனைவரையும் தேற்றினார்.
வெங்கடாச்சலம் தனது தங்கையின் தெளிவில் நிம்மதியடைந்தார்.
கலாவும்… “என் மகன் ஒரு பெண்ணிற்கு தாலி கட்டிவிட்டு கை விடும் அளவிற்கு தரம் தாழ்ந்து போறவனில்லை. விருந்தினர்களை அனுப்பி விட்டு எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம்” என கூறிக்கொண்டிருக்க… அபி உள்ளே வந்து மணமேடையில் வருவின் பக்கத்தில் அமர்ந்தான்.
கோபமாக வெளியேறியவன் மீண்டும் வந்து அமைதியாக அமர்வதை, அனைவரும் ஆச்சர்யமாகக் காண… ஒரு நொடி அவர்களது பார்வையில் என்ன கூறுவதென தயங்கி, அடுத்த நொடி ஒன்றுமில்லை என்பதை போல்…
“ஒரு முக்கியமான கால்… இங்க சத்தமா இருந்ததால வெளிய போய் பேசிட்டு வந்தேன்” என சமாளித்தான்.
அபியின் பதிலில் அனைவரும் நிம்மதியடைந்தனர்… “இன்னைக்கு ஒரு நாளாவது இந்த முக்கியமான காலெல்லாம் பேசாமல் இருக்க கூடாதா?” எனக் கேட்ட கவி, அபி அவனை பார்த்த பார்வையில் கள்ளச்சிரிப்புடன் அமைதியானான்.
வந்திருந்த உறவினர்களும், “நம்ம அபி பெரிய இயக்குனராச்சே… அதேன், யாராவது பெரிய ஆளுங்க போன் பண்ணியிருப்பாங்க” என்றதோடு தங்களது யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அபியின் முறைப்பையும்.. கவியின் கள்ளச்சிரிப்பையும் கவனித்த வெங்கடாச்சலம், “அவன் திரும்பி வந்ததற்கு நீ தான் காரணமா?” எனக் கேட்க, கண்களை மூடி திறந்து ஆம் என்றான் கவி.
சற்று நேரத்திற்கு முன்….
அபி மணமேடையிலிருந்து எழுந்து சென்றதும்… நொடியும் தாமதிக்காது, கவி யாருக்கும் தெரியாமல் நகர்ந்துச் சென்று அபிக்கு கால் செய்திருந்தான்.
கவி இரண்டு முறை முயற்சித்தும் அழைப்பினை ஏற்காத அபி, மூன்றாவது அழைப்பு… இறுதி ரிங்கில் ஆன் செய்திருந்தான்.
அழைப்பை ஏற்ற அபி அமைதியாக இருக்க, “நான் சொல்றதை நீ மறுக்காமகேட்ப அப்படின்னா… ரெண்டு நிமிஷத்துல இங்க மணமேடையில் இருக்கணும்” என அழுத்தமாகக் கூறிய கவி இணைப்பைத் துண்டித்திருந்தான்.
“இவனும் என்னைப் படுத்துறானே!” என முனகிய அபி, காலால் தரையை ஓங்கி எத்தினான். தன்னை இரண்டு நிமிடங்களில் நிலைப்படுத்தியவன், மணமேடையில் வந்து அமர்ந்திருந்தான்.
அதன் பின்னர் நடைபெறும் சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். குடும்பத்தினரிடம் மகிழ்வு இல்லையெனினும் நிம்மதி இடம் பெற்றிருந்தது.
இரவு நேரம்… மணி ஒன்பதை கடந்திருந்தது,
அபி கட்டிலில் அமர்ந்திருக்க, கவி அபியின் அறையிலிருந்த தனது உடைமைகளை கைகளில் அள்ளிக்கொண்டு பக்கத்திலிருக்கும் தன்னுடைய அறைக்குள் புகுந்துக்கொண்டான். அபியை அவன் நிமிர்ந்தும் பார்த்தானில்லை.
கவியை முறைத்துக்கொண்டிருந்த அபி அடுத்து நிகழவிருக்கும் நடப்பு புரிந்து ஒரு முடிவெடுத்தவனாக, வருவின் வரவிற்காகக் காத்திருந்தான்.
வருவின் அறையில் வருவை அலங்காரம் செய்துக்கொண்டிருந்த கலா, “அபி ரொம்ப நல்லவன் மா… அவனே எதிர்பாராம நடந்த திருமணம், நீ கொஞ்சநாள் பொறுமையாத்தான் இருக்கணும், அவன் கோபத்தில் ஏதாவது பேசிட்டா பொறுத்து போம்மா! உடனே, எல்லாம் சரியாகிடாது. ஆனால், நீ அவனை மாற்றிடுவங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என நீளமாக பேசி முடித்தார். சிறு தலை உருட்டலை மட்டும் பதிலாக அளித்த வரு உள்ளுக்குள் சூறாவளி காற்றில் சுழன்று கொண்டிருந்தாள்.
அபியின் அறை வாயிலில் வருவை விட்டுவிட்டு வீட்டு பெண்கள் சென்றுவிட, ஒரு நொடி தயங்கி நின்று.. மெதுவாக உள்ளேச் சென்றாள். அவள் பயந்த மாதிரி… திரைப்படங்களில் காட்டப்படும் முதலிரவு அறைப் போன்றில்லாமல் மிக சாதாரணமாக இருந்தது. அதில் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு அபி எங்கேயென தன் பார்வையை சுழல விட்டாள்.
யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்த அபி, அவளின் வருகை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
உடலில் நடுக்கம் அப்பட்டமாகத் தெரிய நின்றிருந்தவளின் மீது சுவாரஸ்யம் எழ, அங்கிருந்து சிறு மேசையில் சாய்ந்து நின்று, வருவையேப் பார்த்திருந்தான்.
அவனது பார்வையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது திணறினாள்.
தான் பேச நினைத்ததை பேசிவிட வேண்டுமெனத் தீர்மானித்தவளாக பேச ஆரம்பித்தாள்.
“ச…ச்.. ச…. அத்…. மா…, ச்சே… சசி அத்தான்” என ஆரம்பிக்க எண்ணியவள், மாமா என்ற அழைப்பும் வராமல் போக.. ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதென சலித்துக்கொண்டாள்.
அவளது திணறலில் அவனின் சுவாரஸ்யம் கூடியது.
“நா…நான் உங்களுக்கு விவாகரத்து கொடுத்துடுறேன், நீங்க உங்களுக்கு பிடிச்சவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்க” என ஒருவழியாக, தான் கூற நினைத்ததை கூறி முடித்தாள்.
ஏதோ கேட்க கூடாததை கேட்டது போல் அபி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்.
அவள் கண்களில் நீர் இறங்கவா வேண்டாமா என பட்டிமன்றம் நடைபெற்றது. அழுகையில் அவளது உதடு துடிக்க, அதில் தன் சிரிப்பை நிறுத்தியவன்…
“டப்பிங் சீரியல் நிறைய பார்ப்பியோ?” எனக் கேட்டான்.
அவனது கேள்வியில் புரியாமல் குழம்பி அவள் நிற்க, அவனே பேசினான்.
“எனக்கு டிவோர்ஸ் கொடுக்கிறது பற்றி பேசிறியே, எப்படி இந்த முடிவெடுத்த? டப்பிங் சீரியலில் தான் ஆஃப்டர் மேரேஜ் பிரிஞ்சி ஒரே ரூம்மில் இருப்பது, ஒரு வருஷம் அப்புறம் டிவோர்ஸ் அப்படின்னு இருக்கும். ஆனால், இது இல்லை விஷயம். ஏன் உனக்கு என்னை பிடிக்கலயா? நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன், முதல் நாளே என்னை பிரிந்து செல்ல முடிவெடுக்குற?” எனக் கேட்டிருந்தான். அவள் அவனது கேள்வி ஒன்றிற்கும் பதிலளிக்கவில்லை.
“நாம விருப்பப்பட்டோ, இல்லாமலோ நமக்கு வெட்டிங் நடந்து முடிஞ்சிருச்சு. நமக்காக இல்லைன்னாலும் மத்தவங்களுக்காக, அவங்க ஆசைக்காக வாழ முயற்சி செய்யலாம். இந்த எண்ணம் ஒரு நாள் நமக்காகன்னு மாறலாம்” எனக் கூறியவன்,
மெல்ல அடி மேல் அடி வைத்து வருவிடம் நெருங்கி வர, ஒருவித படபப்புடன் அவள் பின்னால் சென்றாள். பின்னால் நகர்ந்தவள் கட்டிலில் இடித்து மெத்தையில் விழ, அபி அவளின் இருபுறமும் தனது கைகளை அரணாக அமைத்து நின்றான். அவளது தேன் சொட்டும் இதழில் தனது பார்வையை நிலைக்கச் செய்தான்.
நெஞ்சுப்பகுதிக்கு குறுக்கே தனது கைகளை கோர்த்து, கண்களை இறுக மூடினாள். அவனிடமிருந்து சத்தம் வராமல் போக கண்களைத் திறந்தவள் அவனது பார்வையில் திடீரெனத் தோன்றிய விலகல் தன்மையில் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.
வருவை நெருங்கி நின்றிருந்த அபி அவளது முன் நெற்றியில் வழிந்த முடி கற்றையை காதுக்கு பின்னால் ஒதுக்கி,
“நீ எப்பவும் என்னோட பேபி தான். எனக்கு விருப்பமில்லாம நடந்த திருமணமாவே இருந்தாலும், அந்த நேரம் என்னை நம்பித்தான நான் கட்டின தாலியை ஏத்திக்கிட்ட… மேரேஜ் லைஃப்ல ஒருமுறை தான். விரும்பப்பட்டோ இல்லாமலோ கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணை துரத்தி விடுற அளவுக்கு அரக்கன் இல்லை நான். தாலி கட்டினதும் ஒரு மாதிரி மூச்சு முட்டுற ஃபீல், அதான் என் கண்ட்ரோல் இல்லாம எழுந்து போயிட்டேன். அது தப்பு தான். சாரி” என்றதோடு, “நான் பேசுறதெல்லாம் நிதர்சனம். காதல் இல்லாம இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. அந்தக் காதல் தான் உன் மீது இல்லையேத் தவிர பாசம் நிறைய இருக்கு. சோ, லெட் பீ ஃபிரண்ட்ஸ்” எனக் கூறி தள்ளி நின்றான்.
நாம் கணவன் மனைவியாக வாழ்ந்து தான் ஆக வேண்டுமென அவன் மறைமுகமாகக் கூறியது அவளுக்கு புரியவில்லை.
சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது.
“நீங்க, வேற ஒருத்தங்களை லவ் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்” என மெல்லியக் குரலில் கூறினாள்.
ஒரு நொடி அதிர்ந்தாலும், வெளியே காட்டாது…
“அப்படியா? அதனாலதான் மேடம் பரந்த மனசோட எனக்கு டிவோர்ஸ் தர்றேன் சொன்னீங்களோ?” என்ற அபியின் குரலில் நக்கல் வழிந்ததோ!?
“என் வாழ்க்கையில் காதல் அத்தியாயம் எப்பவோ முடிஞ்சிடுச்சு. அதுக்கான வருத்தம், சோகம், கவலை எல்லாமே இப்பவும் இருக்கு. அதுக்காக மேரேஜ் பண்ணிக்கிட்ட பொண்ணை கைவிட்டா, நான் ஒரு பொண்ணை உயிரா விரும்பினங்கிறதே அரத்தமில்லாமப் போயிடுமே! சோ, அதைப்பற்றி கவலைப்படாம படுத்து தூங்கு” என்றவன் பால்கனி காதவினைத் திறந்து வெளியே சென்றான்.
“காதல் முடிந்துவிட்டது”…. அவன் ஒரு அர்த்தத்தில் தெரிவிக்க, இவள் ஒரு அர்த்தத்தில் புரிந்துக்கொண்டாள்.
‘இந்தக் கல்யாணம் நடந்ததால் தான் அவருடைய காதல் முடிஞ்சிருச்சு’ என நினைத்தாள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் அபியின் காதலுக்கு தடையாக இருக்கக் கூடாது, இப்போது ஒன்றாக வாழலாம் எனக் கூறியவன்.. ஒரு நாள் காதல் வலியில் காதலித்தப் பெண்ணுடன் வாழலாமென்று முடிவெடுத்தாள் தான் விலகிவிட வேண்டுமென்றுத் தீர்மானித்தாள்.
நீண்ட நேரம் இருள் வானினை வெறித்தவன் நள்ளிரவு கடந்த வேளையில் அறைக்குள் நுழைந்தான். மெத்தையில் தனது உடலை குறுக்கி மழலையென உறங்கியவளின் தலையை வருடியவன், அவளை சேயாய், ஒரு தோழியாக வாழ் நாள் முழுவதும் பாதுகாக்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.
வருவிற்கு ஒரு போர்வையை போர்த்திவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். நேராகச் சென்று கவியின் அறைக்கதவை தட்டி, அவன் திறந்ததும், அவனை இறுக அணைத்து சில நிமிடங்கள் அப்படியே நின்றவன், எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.
சில நிமிடங்கள் நின்ற இடத்திலிருந்து அபியை முறைத்தவன், தூக்கம் பறந்தோட நாற்காலியில் சென்று அமர்ந்தான். அவன் மனம் பலவற்றை சிந்தித்தது.
உறங்காமல் அமர்ந்திருந்த கவி அதிகாலை ஐந்து மணியளவில் அபியை எழுப்பி, அவன் அறைக்கு அனுப்பி வைத்தான்.
அந்நேரம் தூக்கம் கலைந்து எழுந்த வரு, அபி இல்லாததை அறிந்து, தான் எடுத்த முடிவு சரியென உறுதி செய்தாள். மெல்ல எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்துக்கொள்ள அபி அறைக்குள் நுழைந்தான்.
குளித்து முடித்து வரு வெளியில் வந்ததும், “இப்படி உட்காரு வரு” என்று தனக்கு முன்பாக இருக்கும் நாற்காலியைக் காட்டிக் கூறினான்.
அவள் அமர்ந்ததும்,
“நான் இன்னைக்கே சென்னை போகணும். அங்க நிறைய வேலைகள் எனக்காக வெயிட்டிங்” என்றவன் அமைதியாக இருக்க, வரு தன் தலை நிமிர்த்தி அபியை பார்த்தாள்.
இரவு அவள் விவாகரத்துப் பற்றி பேசியதும் அதனை மறுத்தவன், தனிமையில்… ‘ஒருவேளை தன்னை திருமணம் செய்தது அவளுக்கு பிடிக்கவில்லையோ.. அதனால் தான் அவளாக அதைப்பற்றி பேசினாள் போலும்’ எனத் தவறாகக் கணித்தான்.
அதன் விளைவாக தெரிந்தோ தெரியாமலோ வருவின் மனதை தன் வார்த்தைகளால் வதைத்தான்.
“நீ, இரவு விவாகரத்து பற்றி பேசினப்போ நான் நம்ம குடும்பம், என்னோட நிலைப்பாடு மட்டும் மனதில் வைத்து பேசிட்டேன். உன் பக்கம் யோசித்துப் பார்க்கும் போதுதான் ஒரு விஷயம் புரியுது, உனக்கும் இது வேண்டாத திருமணம் தானே.. சோ உனக்கு வேணும்னா, நீ விருப்பப்பட்டபடி விவாகரத்து தர எனக்கு சம்மதம்” என்றான்.
‘ஒரு நாள் இரவு கூட உங்களால், நீங்க எடுத்த உறுதியை தாக்குப்பிடிக்க முடியவில்லையே அத்தான். நான் உங்களிடம் சொன்னேனா? இது எனக்கு வேண்டாத திருமணம் என்று. உங்களுடன் வாழாம நான் உயிரோடு மரித்துப் போவேனே!!’ மனதோடு புலம்பியவள், வெளியில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவள் அமைதியாக இருக்க,
“சரி.. எப்படியும் நாம் பிரிந்து விடுவோம்.. அதற்கெதற்கு ஒன்றாக ஒரே வீட்டில், உனக்குத்தான் கஷ்டம். உன் படிப்பைக் காரணம் காட்டி நீ இங்கயே இருக்க மாதிரி தாத்தாவிடம் பேசுறேன்” எனக்கூறி கீழேச் சென்றான்.
தான் எழுப்பி அறைக்கு செல்லுமாறு கூறியதும், அபி அமைதியாக சென்றதுமே ஏதோ வில்லங்கமென நினைத்த கவி அவன் பின்னோடு வந்தான். அறையின் ஓரமாக நின்று அனைத்தையும் கேட்டவன் அதிர்ந்தான்.
கவிக்கு அபி பேசியதில் அதிர்வில்லை, வரு இரவே விவாகரத்து கேட்டிருக்கிறாள் என்பதற்கே அதிர்ந்தான்.
அபி அவளுக்காக யோசிக்கிறான் என அபியின் நிலையை புரிந்துகொண்டான்.
அபி வெளியில் வரவும் , அருகேயிருந்த கதவிற்கு பின்னால் ஒளிந்து நின்று அவன் சென்றதும் உள்ளே நுழைந்தான்.
அடுத்த நொடி வருவை பார்த்து…
“கொஞ்சம் கூட அறிவே கிடையாதா? இன்னும் வாழவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள டிவோர்ஸ். எப்போடான்னு காத்திட்டு இருக்கவன்கிட்ட போய்… ஏன் டா?” முதலில் கோபத்தில் வெடித்தவன் இறுதியில் ஆற்றாமையுடன் முடித்திருந்தான்.
தான் கேட்டும் எவ்வித அசைவின்றி கீழே குனிந்து அமர்ந்திருந்தவளின் முகத்தைப் பற்றி நிமிர்த்தியவன், அவளது கண்களில் தெரிந்த வேதனையில் ஒரு அண்ணனாக துடித்துப் போனான்.
“என்ன டா!”
வாஞ்சையுடன் வெளிவந்த அவனது குரலில்… அவன் மீதே சாய்ந்து மொத்தமாக உடைந்து போனவளாக கரைந்து அழுதாள்.
அண்ணனாக தங்கையின் அழுகையை காண சகியாதவன்… ஏதோ கூற வாயெடுத்த நிலையில் தன்னுடைய மாமாவின் வார்த்தைகள் நினைவுக்கு வர..
‘இது அவனுடைய கடந்த காலம் அவனே அவளிடத்தில் சொல்லுவது தான் நியாயமாகும்’, என வெங்கடாச்சலத்தின் குரல் செவிகளில் எதிரொலிக்க அமைதியாகினான்.
ஆனால், பின்நாளில் அவனே அபியின் கடந்த காலத்தை வருவிடம் சொல்லும் நிலை வருமென இப்போது நினைத்திருக்கவில்லை.
வரு தன் கண்களைத் துடைத்து நிமிர்ந்ததும், “நான் சொல்றத புரிஞ்சிக்கோ வரு. உலகத்தை பொறுத்தமட்டிலும் இறுதி வரை அவன் மனைவி நீ மட்டும் தான். எந்த சூழ்நிலையிலும் அவனை விட்டுப் பிரியனும் மட்டும் நினைக்காத! உன்னுடைய பிரச்சனை என்ன?இன்னொரு பெண்ணை காதலிப்பவனை மணந்து அவனது காதலைக் கொன்றுவிட்டதா வருந்துற. அதான? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, அவனோட காதல் முடிஞ்சிடுச்சு. நீ அவன் மனைவிங்கிறது மட்டும் தான் நிஜம்” என அழுத்தமாகக் கூறினான்.
தன்னைத் திருமணம் செய்ததால் அபியின் காதல் முடிந்துவிட்டது என்று தவறாக கவியின் வார்த்தைகளை புரிந்துக் கொண்டாலும், இனி எப்போதும் அபியை விட்டு பிரிய எண்ணக் கூடாது, வேறொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கும் அபியை தன்னுடைய அன்பால் மாற்ற வேண்டுமென முடிவெடுத்தாள்.
கவி கூறியதற்கு தானும் சிந்தித்து முடிவெடுத்தவளாக சரியென தலையசைத்தாள். கவி புன்னகையுடன் அவளது கன்னம் தட்டிச் சென்றான்.
கீழே வந்த கவி, பெரியவரும் அபியும் பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு அருகே அமர்ந்தான். வருவின் படிப்பினைக் காரணம் காட்டி அபி பேச, இடைப்புகுந்த கவி, “அங்கயும் படிப்பினைத் தொடர முடியும்” என்றான்.
கவியை முறைத்துப் பார்த்த அபி,
“பாதியில எந்த காலேஜில் சேர்த்துப்பாங்க?” என வார்த்தைகளை பற்களுக்கிடையே மென்றான். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத கவி,
“நீ எவ்ளோ பெரிய டிரெக்டர்.. நீ சொன்னா காலேஜில் சீட் கிடைக்காதா என்ன? உனக்கு தெரியாத பெரிய ஆளுங்களா? அதுமட்டுமில்லாம உன் பிரண்ட் ஒருத்தன் அவங்க அப்பா வழி கல்லூரியை மேனேஜ்மென்ட் செய்றதா ஒருமுறை சொன்னியே, அங்க சேர்க்கலாம்” என்று தீர்வு கண்டவனாக வழி சொல்ல,
பெரியவரும், “கவி சொல்வதுதான் சரி அபி, உன் நண்பனிடம் வருவின் படிப்பு விஷயத்தை பேசு, அவளையும் உன்னோட அழைத்து செல்வதுதான் நல்லாயிருக்கும்” என்பதோடு முடித்துக் கொண்டார்.
அபி.. ‘எதுவும் என் விருப்பப்படி நடக்காதா’ என்று உள்ளுக்குள் மருகினான்.
‘எல்லாம் நீ நல்லா இருக்கணும் என்று தான்’, அவனின் மனம் புரிந்தவனாககவி மனதோடு சொல்லிக்கொண்டான்.
அவர்களது பேச்சிற்கு முன்பே அங்கு வந்திருந்த வெங்கட் தன்னுடைய மருமகனை பாசத்தோடு அணைத்துக்கொண்டார்.
அதை பார்த்த அபி ‘இதெல்லாம் இவர்களது கூட்டு சதியா’ என யோசித்தான். தன் வாழ்க்கையில் நடந்தது, நடப்பது என ஒன்றும் புரியாமல் குழம்பியவன் சென்னை செல்லத் தயாராகத் தொடங்கினான்.
அறைக்குள் நுழைந்தவன் பெட்டியில் தனது உடைமைகளை அடுக்கத் தொடங்கினான். அங்கு நின்றிருந்த வருவை ஆழ்ந்துப் பார்த்தவன், “என்னோட வர சம்மதமா?” எனக் கேட்டிருந்தான்.
அவனது கேள்வி மூளையை சென்றடைந்ததும் உற்சாகமாக சம்மதமெனக் கூறினாள்.
இருவரும் கிளம்பி கீழே வந்த சமயம் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்தனர்.
அனைவரிடமும் பொதுவாக வருகிறேன் என்ற அபியை, “இன்னும் ரெண்டு நாள் கழித்து போகலாமே” எனத் தடுத்து பார்த்தார் கலா.
ஆனால், எதுவும் அபியிடம் எடுபடாது போனது. தனது பயணத்தில் உறுதியாக நின்றான். அவன் பிடிவாதத்தில் அனைவரும் அபி சென்னை செல்ல ஒப்புக்கொள்ள, தனது காரிலேறி வருவுடன் புறப்பட்டான்.
வீட்டிலிருந்து வெளியேறும் போது ஒரு நொடி நின்று திரும்பிய அபி, கவியிடம் நாளை மறுநாள் நீ அங்கிருக்க வேணுமெனக் கட்டளையிட்டான்.
“அதான் என் வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சே. அதுவுமில்லாம உனக்குத் தான் நிரந்தரத்துணை கிடைச்சிடுச்சே. நான் எதுக்கு உன் துணைக்கு” என்றான் கவி.
“எங்களுக்கு துணை கிடைத்த வெட் ஆனியன் கதையெல்லாம் நல்லாவேத் தெரியும். நீ நடித்ததுக்கு டப்பிங் உன் டூப் வந்து பேசுமா? உன் ஆட்டத்தை இங்கவே மூட்டைக்கட்டிட்டு வந்து சேரு” என கவி பதில் அளிப்பதற்கு முன் அபி வெளிக்காட்டாத கோபத்தில் மொழிந்திருந்தான்.
அபி இப்போது காண்பித்தது ஒரு சதவிகித கோபம் தான், ஆனால்.. இதுவே வீட்டு உறுப்பினர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த அபிக்கு கோபம் என்றாலே என்னவென்று தெரியாது. எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் அபியை மட்டும் பார்திருந்தவர்களுக்கு இந்த சிறு கோபமும் ஆச்சரியமாக இருந்தது.
முதலில் நடப்பிற்கு வந்த வெங்கட், அபியின் கரத்தினை தன் கரங்களுக்குள் பிடித்து அழுத்தம் கொடுத்தார். அந்த அழுத்தம் ஆயிரம் அர்த்தங்களை அவனுக்கு உணர்த்தியது.
“முடிந்தவரை வருவை நான் பார்த்துக்கிறேன்ப்பா” என்றான் தன் தந்தையிடம். அவன் கூறிய அர்த்தத்தின் பொருளுணர்ந்து, “அவளை உன் மனைவியா பொறுப்புடன் பார்த்துக் கொள்வது கணவனா உன் கடமை அபி” என்றார் வெங்கடாச்சலாம்.
இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் வார்த்தைகளால் விளையாட, குடும்ப உறுப்பினர்கள் புரியாது நின்றிருந்தனர்.
ஒருவழியாக அனைவரிடமும் விடைபெற்று பயணத்தை ஆரம்பித்தான் அபி.
அபி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை சீரான வேகத்தில் செலுத்த, வரு அவனுக்கு அருகேயுள்ள முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அபியை பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அவள் ஓரக்கண்ணால் பார்க்க, அவன் முகம் பாறை போல் இறுகியிருந்தது.
உளுந்தூர்பேட்டை வரை அவன் புறம் திரும்பாது வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவள் விழுப்புரம் அருகே உறங்கிவிட்டாள். காலையில் உணவு உட்கொள்ளாமல் கிளம்பியதால், அபிக்கு நன்கு பசியெடுத்தது. மணியை பார்த்தவன் நண்பகல் எனக் காட்டியதும், வருவைத் திரும்பி பார்த்தான். அவள் நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளை எழுப்பாமல் ஹை-வே ரெஸ்டாரண்ட் ஒன்றில் காரை நிறுத்தினான்.
அவன் உணவை முடித்துக்கொண்டு வெளியில் வரும் சமயம் வரு உறக்கத்திலிருந்து கண் விழித்தாள்.
அவளுக்கும் நன்றாக பசி, அவனிடத்தில் எப்படி கேட்பது என நினைத்தே உறங்கிப்போனாள்.
இப்போது அவன் மட்டும் உண்டு விட்டு வருவதை பார்த்தவளின் மனக்கண் முன்னே, தனக்கு ஊட்டிவிட்ட பிறகு உணவு உட்கொள்ளும் அந்த அபி தோன்றினான். மனதின் ஓரத்தில் சிறு வலி ஏற்பட்டது.
‘இத்திருமணத்தால் நீங்க என்மேல் வைத்திருக்கும் அன்பும் இல்லாமப் போயிடுச்சா அத்தான்” என அவன் இரவு பேசியதெல்லாம் நினைவில்லாமல் மனதோடு கண்ணீர் வடித்தாள்.
காருக்கு அருகே வந்தவன் தனது இருக்கையில் அமர்ந்ததும், கையோடு வாங்கி வந்திருந்த உணவு பார்சலை அவள் புறம் நீட்டி,
“நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பல. பசி தாங்கமாட்டல, அதான் பார்சல் வாங்கி வந்தேன். இங்கயே சாப்பிடு. நீ சாப்பிட்டதும் கிளம்பலாம்” என்றான்.
திருமணத்தால் ஏற்பட்ட ஏனென்றே தெரியாத கோபம் இருப்பினும் தன் மீது அக்கறையுடன் இருக்கும் அவனது எதிர்பார்ப்பற்ற அன்பில், அவன் மீதான காதல் அவளுக்கு அதிகமாகியது.
“என்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா, சாப்பாடு தானா வாய்க்குள்ள போயிடுமா?” என்ற அவனது கேள்வியில் சுயம் பெற்றவள், பசியின் மிகுதியால் அவசர அவசராமாக உணவினை அள்ளி வாயில் அடைத்து வயிற்றிற்க்குத் தள்ளினாள். வேகமாக உண்பதிலே அவளின் பசியை அறிந்தவன் சற்று நேரத்திற்கு முன்பே சாப்பிட சென்றிருக்க வேண்டுமோ எனத் தன்னிடமே கேள்விக் கேட்டுக்கொண்டான்.
புரையேறி அவள் இரும்ப, தலையில் தட்டுவதற்காக தன் கையை கொண்டு சென்றவன் கையை இறக்கியவனாக தண்ணீர் பாட்டிலினை எடுத்து திறந்து கொடுத்துவிட்டு காரிலிருந்து இறங்கி வெளியே நின்றுகொண்டான்.
‘உனக்கு என்ன ஆச்சு அபி, வரு உன்னோட பேபி, இப்போ அவ கழுத்துல பிடிக்காத ஒரு கயிறு கட்டிட்டா உன் பேபி இல்லன்னு ஆகிடுமா, அவள் மீது நீ வச்சிருக்கும் பாசம், அக்கறையெல்லாம் இல்லைன்னு ஆகிடுமா. கொண்டு போன கையை பின்னுக்கு இழுத்துட்ட… அவ மனைவியா எப்பவும் உன் மனதில் குடியேற முடியாது தான். ஆனால் இறுதி வரை, முன்பும் இப்பவும் எப்பவும் உன்னுடைய பேபி அதை மனதில் வைத்து எப்பவும் போல நடந்துக்க’ என்று தனக்குத் தானே திட்டிக்கொண்டும் ஒரு முடிவெடுத்தவனுமாய் மீண்டும் காருக்கு அருகில் வரவும் வரு சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருக்க சென்னை நோக்கிய அவர்கள் பயணம் தொடங்கியது.
துளிர்விடும்🌱.