அத்தியாயம் 10 :
இரவு நேரம்…
நான்கு பக்க சுவர் மட்டும் கொண்ட எட்டுக்கு எட்டடி சன்னல்கள் அற்ற இருட்டறை, யாரோ ஒரு பெண் நாற்காலியில் விரல்களைக் கூட அசைக்க முடியாதளவிற்கு கட்டி வைக்கப்பட்டிருகின்றாள்.
சுவாசிக்க முடியாது தடுமாறினாள். அவளின் நா வறண்டு போயிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக யாருமற்ற அவ்விடத்தில் தன்னை காப்பாற்றச் சொல்லி கத்திக்கொண்டிருக்கின்றாள். தண்ணீருக்கு அவளின் நாக்கு ஏங்கியது. ஒரு சொட்டு போதுமே என தவித்தது.
“யாராவது உடன் இருந்தாலாவது கேட்கலாம், யாருமில்லையே, யார் தன்னை கடத்தியது” தெரியாது விழித்தாள்.
அவளின் கண்முன்னே தொலைக்காட்சியில் காட்டப்பட்ட மாலதி, தீபா, சிறுமி அபியின் இறந்த சடலங்கள் தோன்றி பயத்திற்கு பதிலாக தைரியத்தையே கொடுத்தது. எதற்காக தன்னை கடத்திருந்தாலும் அவனுக்கு தன் கையால் தான் சாவென்று உறுதி எடுத்தாள். எந்நிலையிலும் பயந்து விடக் கூடாதென்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
கட்டப்பட்டிருக்கும் கயிற்றினை கழற்ற எவ்வளவு முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை. நாவின் வறட்சி வேறு அவளை திக்குமுக்காட செய்து கொண்டிருந்தது. காலுக்கு கீழ் கண்ணாடித்துண்டு ஒன்று கிடக்கவே அதனை எடுக்க முடியுமாவென்று கால்களை நகர்த்த நாற்காலியோடு சேர்ந்து தரையில் சரிந்தாள்.
சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்த தடியன் ஒருவன்.. “நீ எவ்வளவு தான் முயற்சித்தாலும் இங்கிருந்து தப்பிக்க முடியாது” என்றவனாக அவளோடு சேர்த்து நாற்காலியினை நிமிர்த்தி வைத்தான். இருட்டில் அவனின் நிழலுருவம் மட்டுமே தெரிந்தது.
இவ்வளவு நேரம் வெளியிலிருந்தும், நான் கத்திய கத்தலுக்கு அசையாமல் இருந்திருக்கின்றான் என்றால் தான் சிக்கியது பெரிய இடத்தில் என்பது புரிந்தது. அவளால் அவன் யார் என்பதையும் யூகிக்க முடிந்தது.
என்னதான் மனதில் திடம் இருந்தாலும் அவளுக்குள்ளும் பெண்ணாக சிறு பயம் இருக்கவே செய்தது.
திடீரென்று கேட்ட தரையை உரசும் பூட்ஸ் சத்தத்தில் மெல்லிய நடுக்கம் உடல் முழுவதும் பரவியது. கீற்று போல் வெளிச்சம் அறையினுள் ஊடுருவ, உள்ளே நுழைந்தது ஒரு உருவம். அந்த உருவம் தனக்கு முன்னால் அமர்வதை உணர்ந்தாள் அப்பெண். அவன் அமர்ந்ததும் அறை முழுவதும் வெளிச்சம் வந்தது.
தனக்கு முன்பாக கால் மேல் காலிட்டு தெனாவட்டாக அமர்ந்திருக்கும் ரவீந்தரனைக் கண்டதும், அவளது ரத்தம் முழுக்க முகத்தில் பாய்ந்து, அவளின் கோபம் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது.
அவன் தானென்று கணித்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது படப்படப்பாகவே அவளுக்கு இருந்தது.
“இன்று தான் கோர்ட் விசாரணை முடிந்து வெளியில் வந்திருக்கிறான், என்ன தான் குற்றம் செய்யவில்லையென்று நீதிமன்றம் சொல்லியிருந்தாலும், இப்படியொரு வழக்கிற்காக உள் சென்று வந்ததே பெரிய அவமானம் தானே… அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல், என்னை எதற்கு கடத்தி வைத்துள்ளான். நிச்சயம் வேறு ஏதேனும் காரணம் இருக்கும்.” அவளின் மனம் பலவற்றையும் சிந்தித்தது.
பயத்தை வெளியில் காட்டாது தன்னை நேருக்கு நேர் முறைத்தபடி பார்த்திருக்கும் அவளை ரவீந்திரனால் மெட்சாமல் இருக்க முடியவில்லை. இதுவரை பெண்களின் கண்களில் பயத்தை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு அவளது கோபம் சுவாரஸ்யமாக இருந்தது.
“சரி சொல்லு எதற்கு என்னை கொலை செய்ய வந்த?”
அவன் அவ்வாறு கேட்டதும் பவித்ராவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஆம் அவள் பவித்ரா தான். நீதிமன்றத்தில் விஜய்யிடம் பேசிவிட்டு திரும்பும் போது ரவீந்திரன் தூணுக்கு பின்னால் மறைந்து நின்ற உருவத்தையும், கையிலிருக்கும் கத்தியையும் பார்த்துவிட்டான்.
யாரது, என்ன செய்யப்போகிறார்கள்… ஐம்புலன்களையும் கூர்மையாக்கியபடி ரவீந்திரன் முன்செல்ல, அவன் பின்னால் சென்ற உருவம் கத்தியால் குத்த கை ஓங்க.. ரவீந்திரன் திரும்பி தடுக்க நினைக்கையில் விஜய்யால் இழுத்து செல்லப்பட்டதை பார்த்த ரவீந்திரன் பவியின் முகத்தை மட்டும் அடையாளமாக தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
தன் அடியாட்களிடம் ரவீந்திரன் பவித்ராவின் புகைப்படத்தை கொடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் கடத்தப்பட்டிருந்தாள்.
“என்னை கொலை செய்ய வந்திருக்க அப்படியானால், நீ என்னால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. பட் எனக்கு உன்னைத் தொட்ட நினைவில்லையே.”
மகள் வயது பெண்ணிடம் முறை தவறி பேசினான்.
பவித்ரா முகத்தை சுளித்தவளாய் திருப்பிக் கொள்ள, அவளை மேலிருந்து கீழ் வரை உடலின் அனைத்து அங்கங்களையும் மையலுடன் பார்த்து.. “ஆள் செமயா இருக்க, தானா வந்து சிக்கிட்டியே, இரண்டு நாளா பொண்ணுங்க இல்லாம ஏங்கி போயிட்டேன். கொஞ்சம் நேரம் காத்திரு வந்துவிடுகிறேன்” என்ற ரவீந்திரன் வெளியில் சென்று பத்து நிமிடத்தில் மீண்டும் வந்தான். அவனின் கைகளில் போதை மருந்தும், ஊசியும் இருந்தன.
‘அதனை கண்டதும் பவிக்கு சர்வமும் நடுங்கியது.’
போதை மருந்தினை ஊசியில் ஏற்றிக்கொண்டே, பவியின் மருண்ட விழிகளை ஏறிட்ட ரவீந்திரன்.. “எனக்கு அடங்காம ஆட்டம் காட்டும் பெண்களை பிடிக்காது.. அதனால் தான் இந்த போதை மருந்தினை செலுத்தி எவ்வித எதிர்ப்புமின்றி சந்தோஷமாக.. ஆனால் உன்னை அடக்கி ஆளனும் தோணுது, அதனால் இந்த ஊசிக்கு வேலையில்லை” என்றபடி ஊசியினை தூக்கி எறிந்த ரவீந்திரன், கட்டப்பட்டிருக்கும் கயிற்றினை அவிழ்த்து பவித்ராவின் எதிர்ப்புகளை எல்லாம் தடுத்து தனது ஆளுமைக்குள் கொண்டு வந்திருந்தான்.
**************************
மூன்று நாட்கள் சென்றிருக்க.. ஆதிரா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு விஜய்யால் ஆசிரமத்திற்கு அழைத்து வரப்பட்டாள். அறையில் தனித்திருந்த இருவருக்குள்ளும் அமைதியே ஆட்சி செய்தது. அறைக்குள் நுழைந்த துளசியம்மா இருவரின் நிலையை உணர்ந்து பேச்சு கொடுத்தார்.
“நான் ஆதிராவை பார்த்துக்கிறேன் விஜய், அவள் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்” என்றவர் விஜய்யுடன் சேர்ந்து அறையிலிருந்து வெளியேறினார்.
“என்ன தான் விஜய் சொல்றாள் அவள்?”
“வழக்கம்போல் தான்ம்மா, எப்போதும் அவள் பாடும் அதே பல்லவி தான்..”
“சரி அவள் அவளுடைய முடிவில் உறுதியா இருக்கிறாள், நீ உன் வாழ்க்கையை பார்க்கலாமே.”
“என் வாழ்க்கை என் ஆதி இல்லாமல் முழுமை அடையாதும்மா, எத்தனை காலமானாலும் அவளுக்காக மட்டுமே காத்திருப்பேன்.” அவனிடத்தில் காதலிலும் ஒருவித கம்பீரம் இருந்தது.
அவர்கள் இருவரின் உரையாடல் அறைக்கு வெளியிலிருந்தாலும், உறங்காது ரம்யாவை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த ஆதிராவுக்கு தெளிவாகவேக் கேட்டது.
இறுதியாக விஜய் கூறியதில், அவளையும் அறியாது கண்ணீர் வழிந்தது. தானுமொரு முழுமையான பெண்ணாக பிறந்திருக்கலாமென்று அக்கணம் மிகவும் வருந்தினாள். அவனுக்காகவாவது தன்னுடைய மனதினை மாற்ற முயற்சி செய்ய வேண்டுமென முடிவெடுத்தாள்.
“ரம்யா எப்படி இறந்தாள் விஜய்?”
எவ்வளவு தான் எடுத்துக்கூறினாலும் ஆதிரா விஷயத்தில் அவன் பின் வாங்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தாலும் தான் வளர்த்த பிள்ளை குடும்பமாக வாழ வேண்டுமென்கிற ஆசையில் கேட்டவர்.. வருடங்கள் பல உருண்டும் அவன் நிலையில் திடமாக இருப்பதால் தன்னுடைய அடுத்த பேச்சிற்கு தாவினார்.
“ரவீந்திரன் தான் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சட்டத்திற்கு ஆதாரம் அல்லவா வேண்டும்” என்ற விஜய் “அவனின் இறப்பு எப்போது நிகழ்ந்தாலும் அது என் கையில் தான்” எனக் கூறிச் சென்றான்.
விஜய் காவல் நிலையத்திற்கு சென்று தனது இருக்கையில் அமர, கணேஷ் அரக்க பறக்க ஓடி வந்தான்… அவனுக்கு மூச்சு வாங்கியது. சொல்ல வந்ததை சொல்ல முடியாது திணறினான். தனக்கு முன் மேசை மீதிருந்த தண்ணீர் குவளையை கணேஷின் பக்கம் நகர்த்த, அவன் தண்ணீரை மறுத்தவனாக,
“சார் சிறையிலிருந்து அந்த கந்தன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்திருக்கிறது” என்றான்.
“தெரியும்”… கூலாகா சொல்லியிருந்தான் விஜய்.
“ஒரு கைதி சிறையில் இறந்துவிட்டான் என்கிறேன், இவரென்னவோ ஒன்றும் நடவாததைப்போல் அசால்ட்டா தெரியும் என்கிறார்”, கணேஷ் குழப்பத்துடன் விஜய்யின் முகத்தை பார்த்திருந்தான்.
கணேஷின் தற்போதைய தோற்றம் விஜய்க்கு சிரிப்பினை வரவழைத்தது. இருப்பினும் எதுவும் சொல்லாது மூர்த்தியை அழைத்த விஜய்,
“ரொம்ப பசிக்குது மூர்த்தி அண்ணா, நல்ல பெரிய லெக் பீஸ் வைச்சு தர சொல்லி ஒரு பிரியாணி வாங்கிட்டு வாங்க” என்றான்.
மூர்த்தி விஜய்யை வித்தியாசமாக பார்த்துச் சென்றார்.
“என்னாச்சு இவருக்கு, எப்போதும் இப்படி கேட்க மாட்டாரே.. நானே வாங்கி வர்றேன் சொன்னாலும், எனக்கான சிறு வேலையையும் நான் தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருப்பாரே”.. தனக்குள்ளே பேசிக்கொண்ட மூர்த்தி, “ஒருவேளை உண்மையிலே பசியில் இருப்பார் போல்” என்றவராக விரைந்து உணவினை வாங்கி வந்து கொடுத்தார்.
விஜய்யின் அறையிலேயே ஓரமாக உணவு உண்பதற்கு சிறு மேசை போட்டிருக்க, அதில் உணவினை எடுத்து வைத்த மூர்த்தி விஜய்யை உண்பதற்கு அழைத்தார்.
“நம்ம பகதூர் பாய் கடையில் தானே வாங்குனீங்க” மூர்த்தியிடம் கேட்டவனாக, அவர் “ஆமா சார்” என்றதும் பிரியாணியை ஒரு கட்டு கட்டினான். லெக் பீஸை விஜய் ரசித்து உண்ண, அவனின் செயலை மற்ற இருவரும் புதிதாக வினோதமாக பார்த்தனர்.
“என்ன கணேஷ் பிரியாணி உங்களுக்கும் வேண்டுமா, “
“சார்!”
“என்னை இப்படி மொறைச்சு பார்த்துட்டு இருந்தால், எனக்கு வயிறு வலிக்காதா?”
விஜய் பேசுவது, செய்வது எதுவும் கணேஷுக்கு பிடிபடவில்லை.
“சார் அந்த கந்தன்?”
“அதுதான் இறந்துட்டானே, விடுங்க கணேஷ்”… விஜய்யின் இதழில் விஷமப் புன்னகை தோன்றி மறைந்தது.
அவனின் இதழ் விரிப்பின் பொருளை நொடியில் புரிந்துகொண்ட கணேஷ்.. “சார் அப்போ கந்தனை கொன்றது… ” அவன் அதிர்ச்சியில் கேட்க வந்ததை முடிக்காது இழுக்க,
“அவனெல்லாம் உயிரோடு இருந்து என்ன செய்யப்போறான் கணேஷ்.. இன்னும் பல பெண்களுடைய வாழ்வு வீணாவதற்கு காரணமா இருப்பான். போய் சேரட்டும் விடுங்க” என்ற விஜய் கை கழுவச் சென்றான்.
“அப்போ அந்த ரவீந்திரன்?”
“அவனுக்கும் ஒருநாள் வரும், பவித்ராவைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா?”
“தேடிட்டு இருக்கோம் சார், பட் பலனில்லை… எங்கு போயிருப்பாங்க ஒரு தகவலும் இல்லை.”
“ரம்யா மாதிரி பவித்ராவையும் விட்டுவிடக் கூடாது கணேஷ்” என்ற விஜய்யின் கண்ணில் முதல்நாள் பார்த்த பவியின் முகம் தோன்றியது.
“ஒருவேளை ரவீந்தரனை மீண்டும் கொலை செய்ய முயற்சித்து அவனிடம் மாட்டிக் கொண்டாளோ”, இவ்வாறு சிந்தித்த அடுத்தநொடி தவறாக எதுவும் நடக்காதென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
மேலும் இரண்டு நாட்கள் சென்றும் பவித்ராவைப் பற்றி எந்தவொரு தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ரவீந்தரனை கண்காணிக்க ஆள் வைத்திருந்தபோதும் பவித்ரா அவனிடம் சிக்கிக்கொண்டதற்கு ஆதராமாக சிறு பொறி கூட விஜய்க்கு கிட்டவில்லை. மேலும் இப்போது தான் ஒரு பிரச்சனையிலிருந்து வெளிவந்திருப்பதால் அதற்குள் தனது வேட்டையை ரவீந்திரன் தொடங்க மாட்டான் என்றே விஜய் நினைத்திருந்தான்.
ரவீந்திரன் வேறு எந்த வகையில் நெருங்க முடியுமென்று விஜய் சிந்தித்துக் கொண்டிருக்க, முதன்முறையாக அவனின் வீட்டிற்கு வருகை தந்திருந்தாள் அவனவள்.
உண்மையில் அவளின் வருகையை விஜய்யால் நம்ப முடியவில்லை. விஜய் தங்கியிருப்பது காவலர் குடியிருப்பு பகுதியில் அவனுக்கென்று ஒதுக்கியிருக்கும் தனி வீட்டில் தான். இதுவரை அவனைத் தவிர யாரும் அவ்வீட்டிற்குள் காலடி வைத்ததில்லை. அவனும் யாரையும் வீட்டிற்குள் அழைத்ததில்லை. முதன்முறையாக வந்திருக்கும் ஆதிராவையே இமை மூடாது விஜய் பார்த்திருக்க, அவளது கண்கள் வீட்டினை சுற்றி மேய்ந்தது.
கருவிழி சுழற்றியவளின் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது. அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சட்டத்தில் ஆதிரா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வை நின்ற இடத்தை நோட்டமிட்ட விஜய் போச்சுடா என்று நினைக்கையில் ஆதிரா அவனிடத்தில் ஒரு உரையை நீட்டினாள்.
“இந்நேரம் இங்கு ஒரு வாக்குவாதம் தொடங்கியிருக்க வேண்டுமே, அவளின் புகைப்படம் இருப்பதை பார்த்தும் அமைதியாக இருக்கின்றாளா!”
ஆச்சரியத்துடனே அவள் கொடுத்த உரையை பிரித்து பார்த்த விஜய் “வாட் இஸ் திஸ் ஆதி” என்றான் சிறு அதிர்வுடன்.
“எஸ் விஜய்… நான் வேலையை ராஜினாமா செய்றேன்” என்றாள் தலை நிமிர்த்தி.
“மக்களுக்கு என்னால் முடிந்த நல்லதை செய்ய வேண்டுமென்று தான் இந்த வேலையில் கஷ்டப்பட்டு சேர்ந்தேன். எல்லோருக்கும் வேலை கிடைப்பதில் கஷ்டம் தான் ஆனால் என்னைப்போன்றோருக்கு இரண்டு மடங்கு கஷ்டம் அல்லவா… தன்னால் ஒருத்தருக்கு நன்மை கிடைத்தால் அந்த கஷ்டமெல்லாம் ஒன்றுமில்லாமல் இருந்திருக்கும். ஆனால், என்னால் ஒரு உயிர் போயிருக்கிறது.. நீதி கேட்டு என்னிடம் வந்த ரம்யா, எனது பாதுகாப்பில் என் கண்முன் இருந்தும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அப்புறம் எதற்கு இந்த காக்கிச்சட்டை” என்றாள்.
“மறுத்து நான் ஒரு கேள்விகூட கேட்டுவிடக் கூடாதென்று நீ கூறிய விளக்கம் நியாயமாக இருக்கலாம், அதற்காக வேலையை விடத்தான் வேண்டுமா!”
“எனக்கு நீ மேலதிகாரி என்பதால் தான் ராஜினாமா கடிதத்தை உன்னிடம் கொடுத்தேன். நீ முடியாதென்றால் உனக்கு மேலான அதிகாரியிடம் என்னால் கொடுக்க முடியும்” என்றவள் இங்கிருந்தால் இவன் தன் முடிவில் பின்வாங்க வைத்துவிடுவானென்று வேகமாக வெளியேறினாள்.
செல்லும் அவளை கையாளாகத நிலையில் பார்த்து நின்றான்.
தொடரும்…