சிறகை விரி… பற…
அத்தியாயம்:3- குழப்பத்தில் சிநேகா…

சிநேகா குழந்தைகளுடன் அந்த ஆஸ்பத்திரி யில் இருந்து, வெளியே வந்தாள். பாப்பாத்தி அவர்களை அழைத்துக்கொண்டு வந்து நின்றாள்.
**********************************
சிநேகா தன் மனதில் நினைத்துக் கொண்டாள், உணர்ச்சி வசப்பட்டு ஒரு நிமிடத்திற்கு தான் எவ்வளவு பெரிய தப்பை செய்து விட்டேன் என்று.
அந்த விபத்தில் தனக்கு ஏதாவது ஆகி இருந்தால், தன் இந்த இரண்டு சிறு குழந்தைகளின் கதி, மற்றும் அவர்களின் எதிர்காலம் என்ன வாயிருக்கும் என்பதை அவளால், இப்பொழுது கற்பனை கூட, செய்து பார்க்க முடியவில்லை .
அவள் இன்று தனிமரமாக, அநாதையாக இருப்பதைப் போல், தன்னுடைய குழந்தை கள், தானும் இல்லாமல், எதிர்காலத்தில் கஷ்டப் படப் போவதை, அவள் சிறிதும் விரும்பவில்லை.
அவளுடைய கழுத்தில், திடீரென்று ஏதோ உறுத்தியது போல இருந்தது.
அதை என்ன என்று அவள் குனிந்து பார்க்க, அது அவள் காதல் கணவன், ராம் கட்டிய தாலி, அவளைப் பார்த்து, கேலி செய்வதைப் போல் இருந்தது.
புடவைத் தலைப்பால் தன் கழுத்தை இறுக மூடிக் கொண்டாள்.
இப்போது, அவனே இல்லாத போது, அவன் கட்டிய அந்த தாலிக்கு மட்டும், என்ன மரியாதை என்று அவளுக்குத் தெரியவில்லை.
இருந்தாலும், அதை கழட்டி வீசி எறிய அவளுக்கு ஏனோ மனம் வரவில்லை.
தாய்க்கு பொறுப்பும், சுமையும், பொறுக்கும் பலமும், கொடுத்த இறைவனின் கணக்கு தப்பாகுமோ? என்று தன் மனதில் நினைத்துக் கொண்டாள் சிநேகா .
அவள் அவளைச் சுற்றி பார்த்தாள். நிறைய மனிதர்கள் வேகமாக அந்த ரோட்டில், இரண்டு பக்கமும் போய்க் கொண்டிருந்தார்கள், ஏதேதோ வேலையாக.
அதைப் பார்த்த அவளுக்கு, ‘இந்த உலகம் ரொம்பப் பெரிது’ என்ற ஒரு எண்ணம் வந்தது, முதல் முறையாக.
இவ்வளவு பேர் பிழைக்கும் போது, இந்த பரந்த உலகத்தில் தன்னால் பிழைக்க முடியாதா என்ற கேள்வியும் எழுந்தது, அவளுள். ?
டாக்டர் தேவிகா சொன்ன மாதிரி தான், தன் குழந்தைகளுக்காகவாவது இனிமேல் வாழ வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் வந்தது.
பக்கத்தில் நின்றிருந்த தன் அம்மா சிநேகா வை பார்த்ததும், மித்ரன் பாப்பாத்தி கையை , திடீரென்று உருவிக்கொண்டு அவளிடம் வந்தான்.
நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்து விட்டு, அவளுடைய புடவையை ஒரு கையால் பிடித்து கொண்டு, ” அம்மா… எனக்கு ரொம்ப பசிக்குதும் மா… ” என்றான் பரிதாபமாக.
அதைக் கேட்டு அவள், மூன்று வேளையும், இனி தன்னை பயமுத்தப் போகும் வார்த்தை அது என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அவளுடைய கவலையில்/ பிரச்சினை யில் அவள், அவர்களைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அவர்கள் சாப்பிட்டார்களா இல்லை யா என்று கூட, பாப்பாத்தி யை கேட்கவில்லை.
அவள் பாப்பாத்தி யை பார்த்து, ” பாப்பாத்தி… எனக்கு இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை.
என்னுடைய எதிர்காலமே, புரியாத ஒரு புதிராக, கேள்வி க்குறியாக இருக்கிறது.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கிறது எனக்கு ” என்றாள் கண்ணீருடன்.
அதைக் கேட்ட பாப்பாத்தி, ” அம்மா எதுக்கும் கவலைப் படாதீங்க… மொதல்ல… உங்க கண்ணை தொடச்சிக்கங்க… பசங்க உங்களையே பாக்குறாங்க… அவங்க பயந்துக்க போறாங்க .”
” மொதல்ல நாம, நம் வீட்டுக்கு போகலாம் மா. அப்புறமா என்ன செய்யறதுன்னு … யோசனை செய்ய லாம்மா… ”
” இவ்வளவு பேர் இந்த உலகத்துல பொழைகற போது, நாம பொழைக்க ஒரு வழி இல்லாமலா போயிடும்?.
என்ன பிரச்சினை வந்தாலும், நான் உன் கூட இருக்கேன் ம்மா. கவலைப் படாதே. அப்பால பார்த்துக் கலாம் ” என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னாள்.
சிநேகா நினைத்துக் கொண்டாள், பாப்பாத்தி அதிகம் படிக்காதவள் தான்.
மிகவும் ஏழை தான். அவள் ஒரு வேலைக் காரி தான்.
அதுவும், அவர்கள் வீட்டில் வேலை செய்ய வில்லை தான்.
ராமை திருமணம் செய்து கொண்டு, அவள், சிநேகா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வந்த போது, சில நாட்கள் கழித்து, அவளே ஒருநாள், சிநேகா வீட்டிற்கு வந்தாள்.
” நீங்கள் தான் புதுசா இந்த வீட்டுக்கு குடிவந்திருக்கிறவங்களா ? ” என்று கேட்டுக் கொண்டு.
அதிலிருந்து தான் அவளைப் பழக்கம் சினேகாவுக்கு.
அவள் அந்த பகுதியில் இருக்கும் வேறு சில ஐயர் வீடுகளில் வேலை செய்கிறாள்.
அவர்கள் வீட்டில் சமையல் பாத்திரம் துலக்குவது, மேட்டூர் தண்ணீர், தெரு குழாய்களில் வரும் போது அதை எடுத்துக் கொண்டு வருவது இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறாள்.
அவளுக்கு மூன்று பெண் குழந்தை கள் என்று சொன்னாள். அவள் ஒரு காஃபி பைத்தியம்.
அவளுடைய மூத்த பெண் பெயர் கிரிஜா. அவளுக்கு சுமார் பத்து வயது இருக்கும்.
அடுத்தவள் வேணி. சுமார் 6 வயது இருக்கும். கடைக்குட்டி கமலா. சுமார் 4 வயது இருக்கும்.
அவளுடைய பெண் குழந்தை கள் எல்லோரும் நல்ல மாநிறமாக, பாப்பாத்தி யைப் போலவே அழகாக, மற்றும் சுத்தமாக இருப்பார்கள்.
சிநேகா வீட்டில் எதையும் தொட மாட்டார்கள்.
இது வேண்டும் அது வேண்டும் என்று எதையும் கேட்கவும் மாட்டார்கள்.
அவளிடம் நன்றாக பழகியவுடன், ” அம்மா நீங்க எனக்கு பணம் எதுவும், கொடுக்க வேண்டாம்மா.
நான் நல்ல தண்ணீர், மேட்டூர் தண்ணீர், கொண்டு வந்து உங்களுக்கு கொடுக்கிறேன்.
எனக்கு நீங்க பணம் கூட எதுவும் கொடுக்க வேண்டாம்; தினமும் ஒரு வேளை காஃபி தண்ணி மட்டும் கொடுங்க குடிக்க. அது மட்டும் போதும் எனக்கு.
காஃபி யை குடிச்சுட்டு, குடிக்கலை ன்னா , தலைவலி வருது ம்மா .
தலைவலி வந்தால் உயிரே போகுற மாதிரி வலிக்குது ” என்று சொல்லி, காஃபி மட்டும் குடித்து விட்டு, அமைதியாகப் போவாள்.
தினம் மதியம் அவள் சாப்பிடுவாளோ இல்லையே, யாருக்கும் தெரியாது; ஆனால் காஃபி மட்டும் அவளுக்கு குடிக்க வேண்டும்.
காஃபி அல்லது டீ யிலேயே , சாப்பிடாமல், அந்த நாளை கடத்தி விடுவாள், அவள்.
ஆனால் சிநேகா அவளுக்கு தன் வீட்டில் இருக்கும் எதையாவது சாப்பிட என்று கொடுத்து விடுவாள்.
அதேமாதிரி நல்ல காஃபி யாக போட்டு கொடுத்து விடுவாள், காலை மற்றும் மாலையில்.
அவளும் சளைக்காமல் இரண்டு குடம் போட்டு, மேட்டூர் தண்ணீர் எடுத்து வந்து, அவர்கள் வீட்டு தொட்டியை, குறைய , குறைய நிரப்பி விடுவாள்.
வேண்டாம் என்று சிநேகா சொன்னாலும், அவள், பாப்பாத்தி கேட்கவே மாட்டாள்.
பாப்பாத்தி, சிநேகா வை அந்த நல்ல தண்ணீரிலேயே , மேட்டூர் தண்ணீரிலேயே குளிக்கச் சொல்வாள்.
காரணம், உப்பு தண்ணீரில் குளித்ததால், சினேகாவுக்கு முடி அதிகமாக கொட்டியது.
சிநேகாவுக்கு அவள் மாடு மாதிரி உழைப்பதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதனால், அவளுக்கு கொடுப்பதற்கு மட்டும் கணக்கே பார்க்க மாட்டாள் சிநேகா, என்றும்.
ராம் இல்லாத சமையங்களில், சிநேகா அவளுக்கு சாப்பாடு கூட போடுவாள், அவளுடைய வறுமை நிலையை நினைத்து.
சில சமயங்களில், அந்த மூன்று குழந்தைகளையும் உட்கார வைத்து சாதம் கூட போடுவாள் அவள்.
பாப்பாத்தி கணவன் ஒரு குடிகாரன். மேலும் சோம்பேறி வேறு. ஒரு காலத்தில் மேஸ்திரி வேலைக்கு போய் கொண்டு இருந்தான் அவன் என்று பாப்பாத்தி, சிநேகா விடம் சொல்லி இருக்கிறாள்.
பாப்பாத்தி, அவளுடைய சொந்தம் கூட இல்லை.
இருந்தாலும், அவளுக்கு இருக்கும் நம்பிக்கை கூட தனக்கு இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டாள்.
சிநேகா இருக்கும் சூழ்நிலை யில் அவளால் சுயமாக எதையும் சிந்தித்து முடிவு செய்து, செயல்படும் நிலையில் இல்லை.
எனவே யாராவது ஒருவர் வழி காட்ட, அதன் படி நடக்கும் நிலையில் தான் இருந்தாள், சிநேகா.
பாப்பாத்தி, சிநேகா வுக்கு உடல் நிலை சரியில்லாமல் அடிபட்டு இருப்பதால், ஆட்டோவில் வீட்டுக்கு போகலாமா ? என்று கேள்வி கேட்டாள்.
அதற்கு சிநேகா, வேண்டாம். எனக்கு இப்போது பரவாயில்லை. அதனால் பஸ்ஸிலேயே போகலாம் ன்னு சொல்லி விட்டாள், ஆட்டோவில் போனால் செலவு அதிகம் ஆகும் என்பதால்.
அதனால் அவள் , பாப்பாத்தி எதுவும் சொல்லாமல், சிநேகா சொன்னபடி அவர்கள் வீட்டிற்கு போக, பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தாள், அவர்களுடன்.
பாப்பாத்தி சொன்னாள், ” அம்மா நீங்க இங்கேயே உக்காருங்க .
நான் பசங்களை கூட்டிக் கொண்டு போய் அவங்ளுக்கு சாப்பிட ஏதாவது, பன், பிரெட் மற்றும் பிஸ்கெட் ஏதாவது வாங்கிட்டு வரேன் ” என்று சொன்னாள்.
பிறகு , ” பசங்களா… வாங்க அந்த பேக்கரி கடைக்குப் போய் உங்களுக்கு சாப்பிட… ஏதாவது பன், பிரெட் வாங்கிட்டு வரலாம் ” என்றாள்.
அவர்களும் சிநேகா வை பார்க்க, அவள் தலையை போங்க என்கிற மாதிரி ஆட்ட, பாப்பாத்தி யுடன் சென்று, அவர்கள் சாப்பிட, பன், பால் மற்றும் மில்க் பிரெட் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தாள்.
அதன் பிறகு வந்த பஸ்ஸூல் , அவர்களை ஏற்றிவிட்டு, தானும் ஏறி, அவர்களுக்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டு, பத்திரமாக மித்ரன் மற்றும் மித்ரா கையை பிடித்துக் கொண்டாள்.
அவள் சிநேகாவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
காரணம், அவள் தன் இருண்ட , புதிரான , எதிர்காலம் பற்றிய கவலையில் இருக்கிறாள் என்பது பாப்பாத்தி க்குத் தெரியும்.
அதனால் தான் ஏதாவது பேசி, மேலும் அவளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விரும்ப வில்லை பாப்பாத்தி. அதனால் அவள் பேசாமல் அமைதியாக வந்தாள்.
சிநேகாவை பார்க்க, அவள் மிகவும் சோர்வாக இருந்த மாதிரி இருந்தது, பாப்பாத்தி க்கு.
**********************************
இருந்தாலும், அவளுக்கு வாழ்க்கை அனுபவம் அதிகம். எப்போது எப்படி பேச வேண்டும் என்று அவளுக்குத் தெரியும்.
பஸ்ஸில் இருந்து இறங்கி அவர்கள் நால்வரும், சிநேகா இருக்கும் வீட்டிற்கு வந்தார் கள்.
பாப்பாத்தி எதுவும் பேசவில்லை, சமையலறை க்கு சென்று, பேக்கரியில் வாங்கி வந்திருந்த அந்த பாலைக் காய்ச்சினாள்.
அதன் பிறகு, அதை சூடு ஆற்றி, அந்த குழந்தை களுக்கு கொடுத்து, வாங்கி வந்திருந்த பன் மற்றும் பிரெட் டை ஒரு தட்டில் வைத்து கொடுத்து அவர்களை சாப்பிட சொல்லி விட்டு சிநேகா விடம் வந்தாள்.
அவளே, எதற்கும் சிநேகா வை எதிர்பார்க்காமல், பாலைக் காய்ச்ச காரணம், எங்கே சிநேகா கணவன் மேல் இருக்கும் கோபத்தில், அந்த குழந்தைகளை ஏதாவது திட்டி விடுவாளோ என்று தான்.
குழந்தைகள் இரண்டு பேரும் வழக்கமாக தங்களுக்குள் போடும் சண்டை கூட போடாமல், அந்த பன் மற்றும் பிரெட்டை பாலில் தோய்த்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் அமைதியாக.
நல்ல பசி போல இருக்கிறது இரண்டு குழந்தை களுக்கும் என்று பாப்பாத்தி தன் மனதில் நினைத்துக் கொண்டாள். வெளியில் அதைச் சொல்லவில்லை.
சாப்பிட்டுக்கொண்டிருந்த மித்ரன், திடீரென்று தன் அம்மா வை பார்த்து விட்டு, ” அம்மா உங்களுக்கு வயிறு பசிக்கலையா ? ” என்று கேள்வி கேட்டான்.
அவனும், ஒரு சின்ன பையன் தானே?. அவனுக்கும் 6 வயது தானே ஆகிறது ? அவ்வளவு விவரம் புரியாத வயது அது .
தன் அம்மா ஏதோ கவலையாக அழுது கொண்டு இருப்பது அவனுக்குத் தெரிகிறது.
ஆனால் அவள் ஏன் அழுகிறாள் என்ற காரணம் தான், அவனுக்குத் தெரியவில்லை.
” அம்மா… அம்மா… ” என்று மறுபடியும் அவளை தொட்டு உலுக்கிக் கூப்பிட்டான்.
அப்போது தான் அவள் , கனவுலகில் இருந்து, இந்த நினைவுலகத் கத்துக்கு வந்தவள், ” என்னடா… என்ன வேண்டும் ? ” என்றாள்.
” இல்லை… உனக்கு வயிறு பசிக்கலையா… ? என்று கேட்டேன்.
அதற்கு அவள், ” இல்லை… ” என்றாள்.
” ஏன் உனக்கு வயிறு பசிக்கலை…? “
அதற்கு அவள், ” இனிமே எனக்கு பசிக்காது கண்ணா…
காரணம் என் வாழ்க்கை யை… நான் முழுங்கி விட்டேன்…
இனிமேல் எனக்கு… பசி… தாகம்… தூக்கம்… எதுவும்… ” என்று சொல்லி அழுக ஆரம்பித்து விட்டாள், தன் எதிர்காலத்தை நினைத்து.
அதைப் பார்த்த அவளுடைய மகன் மித்ரன் பயந்து போய், ” பாப்பாத்தி… அம்மா ஏன் அழறாங்க… !? அப்பா கூட வீட்டில் இல்லையே…
அவர் இருந்தாலாவது, அம்மா வையும் எங்களையும் சதா திட்டிக் கொண்டே இருப்பார்… ” என்று சொன்னான்.
அதைக் கேட்ட பாப்பாத்தி க்கு மிகவும் வருத்தமாகப் போய் விட்டது.
அவள் உடனே, சிநேகா விடம், ” அம்மா… பசங்களை பக்கத்து வீட்டில் விளையாட , கொண்டு போய் விட்டுட்டு, வருகிறேன் ” என்றாள்.
பிறகு அவர்களைப் பார்த்து, ” பசங்களா… வயிறு நிறைய சாப்டீங்க தானே? வாங்க என் கூட.
நீங்க போய் பக்கத்து வீட்டில் போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வாங்க” என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு விட்டு விட்டு வந்தாள்.
பாப்பாத்தி க்கு விரக்தியில் இருக்கும் சிநேகா வை தனியாக விட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போக மனசே இல்லை.
காரணம், மறுபடியும் சிநேகா எதாவது செய்து கொண்டாள் என்ன செய்வது என்று கேள்வி வந்தது.
இருந்தாலும் அவள் வீட்டுக்கு போயே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை.
காரணம், அவள் தன் மூத்த பெண் கிரிஜா வை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வந்திருந்தாள்.
அவளுடைய கணவன் ஒரு மொடா குடிகாரன் வேறு.
அவனுக்கு குடித்து விட்டால், மகளுக்கும், தாரத்துக்கும், வித்தியாசம் வேறு தெரியாது.
அதனால், சிநேகா விடம், ” அம்மா நீங்க சாப்பிடுங்க.
நான் வீட்டுக்கு போய், பார்த்து விட்டு , உடனே வந்து விடுகிறேன் ” என்று சொல்லி விட்டு புறப்பட்டு சென்றாள், கவலையுடன், வேகமாக .
(V R K)
