“அம்மா அவனை பத்தி பேசுனா மாமா கோவப்படுவாங்கனு தெரியும்ல அப்புறம் ஏன் பேசுறீங்க… போய் கோவிலுக்கு ரெடியாகுங்க… நீங்க முதல்ல அத்தைய கூட்டிகிட்டு கோவிலுக்கு போங்க… நான் பின்னாடியே வரேன்” என்று கூறி அறைக்கு சென்று விட்டாள்…
ஹரி அன்று அவ்வாறு செய்வான் என்று யாரும் எண்ணவில்லை… அதை மற்றவர்கள் மறந்தாலும் கோவிந்தன் மறக்கவே இல்லை… எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று எண்ணி கோவிலுக்கு கிளம்ப சென்றார்… தான் தயரானதும் பவியிடம் கூறிவிட்டு கோவிந்தன் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி புவனாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டார்…
பவியும் காலை உணவை உண்டுவிட்டு அழகான சிவப்பு மஞ்சள் கலந்த பாவாடை தாவணி அணிந்து அழகாக தயாராகி கோவிலுக்கு கிளம்பினாள்…அன்று கோவிந்தன் வீடு பூஜை கோவிலில்.. பூஜையை முடித்து சாமி தரிசனம் செய்து விட்டு அனைவரும் கோவிந்தன் வீட்டை அடைந்தனர்…
பவ்யா எப்போதும் அமரும் ஊஞ்சலில் அமர்ந்து விட மற்ற நால்வரும் அமர்ந்து பேச ஆரம்பித்து இருந்தனர்… ஊஞ்சலில் அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்தவள் “அப்பா” என்று சந்தோசமாக ஆர்ப்பரித்து “நமக்கு இருபது சாரீ ஒரே கஸ்டமர் ஆடர் பிளேஸ் பண்ணி இருக்காங்க நான் வீட்டுக்கு போய் பட்டறைக்கு போய் ஸ்டாக் இருக்கா பாத்துட்டு வரேன்…” என்று வீட்டு சாவி எடுத்து கொண்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் சிட்டாக பறந்துவிட்டாள்…
நால்வரும் போகும் அவளை தான் சிரிப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்… லட்சுமி ஆன்லைன் வியாபாரம் வேண்டவே வேண்டாம் என்று கூறினார்… ராமன் கூட வேண்டாம் என கூறினார்.. கோவிந்தன் தான்” ராமா இப்போ எல்லாம் நம்ம ஊருல இது சகஜம்… பாப்பா ஆசைப்படுறா செய்யட்டும்” என்று உறுதுணையாக இருந்தார்..
முதலில் எந்த வியாபாரமும் ஆகாமல் இருந்தாலும் நாட்கள் போக போக கொஞ்சம் வியாபாரம் ஆக தொடங்கியது.. ஆன்லைனில் வியாபரம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது.. இந்த ஒரு வருடத்தில் இது தான் மிகப்பெரிய ஆர்டர்.. அது தான் அவ்வளவு குஷி பவ்யாவிற்கு…
அவர்கள் கேட்ட அளவிற்கு அவளிடம் புடவை இருக்க அவர்களை தொடர்பு கொண்டு ஆர்டரை உறுதி செய்துவிட்டாள்…
வாட்சப் சென்றவள் தன் நண்பர்கள் குழுவில் அரட்டை அடித்து கொண்டு இருந்தாள்.. அவளின் நட்பு கூட்டத்தில் அவளோடு சேர்த்து ஐந்து வானரங்கள் பவ்யா, திவ்யா, ஆதி, ஹேமா, மித்ரன்… ஐவரும் சிறு வயது முதலே நண்பர்கள்.. ஆதியும் மித்ரனும் அங்கு அருகில் இருக்கும் ஊரில் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்க மற்ற மூவரும் அவர்கள் ஊரில் இருக்கும் பெண்கள் அரசு பள்ளியில் பயின்றனர்…
ஐவரும் படிப்பில் படு சுட்டி… பள்ளிப்படிப்பை முடித்து வேறு வேறு கல்லூரி என ஐவரும் பிரிந்தாலும் விடுமுறை நாட்களில் சந்தித்துக்கொள்வர்… ஐவருக்கும் எந்த ஒளிவுமறைவும் கிடையாது…அனைத்தையும் பகிர்ந்துகொள்வர்…
திவ்யாவும் மித்ரனும் தற்போது சென்னையில் வேறு வேறு கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருக்க ஆதி கோவையில் வேலை பார்த்து கொண்டு இருந்தான்… ஹேமாவிற்கு கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் முடித்து வைத்து இருந்தனர்.. தற்போது கர்ப்பமாக உள்ளாள்…
இன்று விடுமுறை தான் எனவே வேலைக்கு செல்லும் மூவரும் விடுதி அறையில் தான் இருந்தனர்… மித்ரன் தான் “ஹே பவி நேத்து நைட் ஹரி அண்ணாவை பார்த்தேன்.. அண்ணா ஆளே மாறி போயிட்டாரு… நேத்து பேசிட்டு தான் ரூமுக்கு வந்தேன்.. ஊருக்கு போனியா எல்லாரும் நல்லா இருக்காங்களானு கேட்டுட்டு இருந்தாரு…” என்று கூறினான்.. அவனுக்கு பவ்யா ஒரு ம்ம் மட்டும் கொட்டினாள்..
சிறிது நேர அரட்டைக்கு பின் ஐவரும் கலைந்தனர்.. இவளும் மீண்டும் அறைக்கு சென்று ஒரு சுடிதார் அணிந்து கொண்டு மீண்டும் கோவிந்தன் வீட்டுக்கு கிளம்பினாள்…
அங்கு கோவிந்தனும் ராமனும் வெளியில் கிளம்பி இருக்க லட்சுமியும் புவனாவும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.. அப்போது ஹரி தன் தாயிற்கு வீடியோ கால் செய்ய இருவரும் பேசி கொண்டு இருக்க யாரோ வந்துவிட்டார்கள் என புவனா அவர்களிடம் பேச செல்ல லட்சுமி அவனிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது தான் பவ்யா வீட்டிற்குள் நுழைந்தாள்…
லட்சுமி அவளிடம் போனை கொடுத்து விட்டு புவனா இருக்குமிடம் சென்றுவிட்டார்.. இருவரும் ஒருவரை ஒருவர் முறைப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர்.. “என்னடி ரொம்ப முறைக்குற கண் வெளிய வந்துட போகுது…” என்று கிண்டலாக கூறினான் ஹரிஹரசுதன்…
“போடா வந்துட்டான் என்னை கிண்டல் பண்ண.. போனை வைக்குறியா உன்கூட பேசவே எரிச்சலாக இருக்கு” என்று இவளும் கடுப்பாக கூறினாள்..
“ஏய் என்ன வர சவுண்ட் போடுற… உன்னை கல்யாணம் பண்ணி உன் திமிர நான் அடக்குறேன்” என்று அவன் தெனாவெட்டாக கூற இவள் அதீத கோபத்துடன் “உன் மூஞ்சுக்கு நான் கேட்குதா.. நான் எல்லாம் உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்.. இதே ஊருல இருக்க மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிப்பேன்.. உன்னை கல்யாணம் பண்ணவே மாட்டேன்” என்று கோவமாக கூறினாள்….
அவன் அதே திமிருடன் “உன்னை கல்யாணம் பண்ணி ஊருக்கே அனுப்ப மாட்டேன் பாருடி என்ன திமிரு உனக்கு…” என்று கூறினான்..
அவள் கிண்டலாக “போடா வந்துட்டான் பேச..”. என்று சத்தமாக கூறிவிட்டு அவனிடம் கூறாமல் காலை கட் செய்து இருந்தாள்…
அங்கு ஹரியோ “உடம்பு முழுக்க இவளுக்கு திமிரு.. மரியாதையை பேச தெரியுதா பாரு.. ஆனா இந்த அப்பாவுக்கு இவ தான் உசத்தி.. நானாச்சும் இவளை கல்யாணம் பண்ணிக்க போறதாச்சும்… இவ எல்லாம் எனக்கு செட் ஆகவே மாட்டா…” என்று வாய் விட்டே திட்டியவன் ஊரை சுற்ற வெளியில் கிளம்பிவிட்டான்…
இங்கு வீட்டில் பவியோ “ஜாலியா இருந்தேன்.. இவன் கிட்ட பேசி என் மூடே ஸ்பாயில் ஆகிடுச்சு” என்று எரிச்சலாக கூறி கூறிக்கொண்டே அங்கிருக்கும் அறைக்குள் சென்று உறங்கிவிட்டாள்…
அந்த நாள் இரவு வரை அங்கு இருந்த பவ்யா குடும்பம் இரவு தங்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டது… பவ்யாவும் அந்த பெரிய ஆர்டரை அனுப்ப வெற்றிகரமாக பேக் செய்து இருந்தாள்.. பேக் செய்வதை வீடியோ எடுத்து அந்த கஸ்டமருக்கு அனுப்பி விட்டு அவர்கள் சரி என்று கூறியவுடன் அடுத்த நாள் அதை கொரியர் போட்டு இருந்தாள்.. அடுத்த இரண்டு நாட்களில் அது கஸ்டமருக்கு சென்று சேர்ந்து இருந்தது.. அவர்களுக்கும் புடவையின் தரம் நிறம் என அனைத்தும் பிடித்து இருந்தது.. அவளுக்கு நல்ல ரிவ்யூ கூறி இருந்தனர்…
அந்த கஸ்டமர் மூலம் அவளுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆர்டர் வந்து இருந்தது.. பெரிய ஆர்டர் இல்லை என்றாலும் அவளை நம்பி தருவது அவளுக்கு சந்தோசமாக இருந்தது…
ராமன் தறி ஓட்டுவது வெளியில் இருந்து வரும் புடவைகளை வாங்கி கணக்கு பார்த்து அவர்களுக்கு கூலி தருவது என்று ஓடிக்கொண்டு இருந்தார்… லட்சுமியும் இதுக்கு உறுதுணையாக இருந்தார்..
பவ்யா தறி ஓட்டுவது ஆன்லைன் வியாபாரம் ஒரு சில கடைகளுக்கு ஜிஎஸ்டியின் மூலம் வியாபாரம் செய்வது என்று நாட்கள் அழகாக சென்றது….
பவ்யா பேஷன் டெக்னாலஜி முடித்து இரண்டு வருடங்களாகிறது… இப்போது அவளுக்கு வயது இருபத்தி நான்கு.. லட்சுமிக்கு அவளை தன் அண்ணன் வீட்டிற்கே திருமணம் செய்து வைக்க ஆசை.. தன் கணவனிடம் இன்னும் அதை கூறவில்லை… ஜாதகம் பார்த்து விட்டு அனைவரிடமும் கூறிவிடலாம் என்று எண்ணி கொண்டு இருக்கிறார்…
கோவிந்தன் கோன் மற்றும் ஆட்களை வைத்து தறிக்கு தேவையான வார்ப்புகளை வியாபாரம் செய்து கொண்டு வருகிறார்.. ஹரிக்கு இதில் எதுவும் நாட்டமில்லை… எனவே அவன் ஊருக்கு வரவே அவன் விரும்புவது இல்லை.. புவனாவின் நச்சரிப்பில் தான் அவன் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து சென்று கொண்டு இருக்கிறான்..
அடுத்து வரும் தொடர் விடுமுறையில் ஊருக்கு வர முடிவு செய்து இருந்தான்…. அவன் சென்னையில் ஒரு பொண்ணை விரும்பி கொண்டு இருந்தான்… அதை வீட்டில் கூற தான் வர முடிவு எடுத்து இருந்தான்.. இதற்கு கண்டிப்பாக கோவிந்தன் ஒத்துக்கொள்ள போவது இல்லை… புவனாவிற்கும் பவ்யாவை அவனுக்கு திருமணம் செய்து வைக்க தான் ஆசை எனவே அவரிடமும் கூறுவது வேஸ்ட் என எண்ணி ராமனிடம் முதலில் கூற எண்ணி இருந்தான்…
ராமன் என்ன கூறுவார்???.. அவருக்கும் பவ்யாவை இவனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை இருக்குமோ????… கோவிந்தனுக்கும் ஹரிக்கும் என்ன பிரச்சனை???… கோவிந்தனுக்கு இவனின் காதல் தெரிந்தால் என்ன ஆகும்???…