நூலிழை பந்தம் ❤️ 3

நினைத்தது போலவே ஹரி ஆயுத பூஜை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தான்… கோவிந்தன் அவனை கண்டுகொள்ளவே இல்லை… புவனா தான் மகனை கொஞ்சி தீர்த்துவிட்டார்.. வீட்டில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தவன் ராமன் வீட்டுற்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்… இவர்கள் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் ராமன் வீடு.. எனவே நடந்தே சென்று விடலாம்… அவன் செல்லும் போது ஒரு காட்சியை பார்த்து சட்டென்று கோவம் மூண்டது…

 

அங்கு பவி எதோ ஒரு ஆணுடன் நின்று பேசி கொண்டு இருந்தாள்… அவன் அவளிடம் பேசி கொண்டே அவளின் தலையை கலைத்து விட்டவன் அவளுக்கு பிடித்த சாக்லேட் எடுத்து நீட்டினான்… அதை பார்த்து துள்ளி குதித்து அவனுக்கு நன்றி கூறினாள்…

 

என்ன தான் சம்பாதித்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் எதோ வாங்கி கொடுத்தால் ஒரு சந்தோசம் வருமே அந்த சந்தோசம் தான் பவிக்கு…

 

“சரி பவி அம்மா அப்பா வீட்டுக்கு வருவாங்க…” என்று கூறியது ஹரிக்கு தெளிவாக கேட்டது…

அவளும் சந்தோசமாக சரி என்று சொன்னாள்…

 

அவன் சென்றதும் ஹரி அவளை நெருங்கியவன் “உனக்கு என்னடி பேச்சு அவன் கூட.. அவன் அப்பா அம்மா எதுக்கு வீட்டுக்கு வரணும்..” என்று கோவமாக கேட்டான்….

 

“நான் யார் கிட்ட பேசுனா உனக்கு என்னடா நீ உன் வேலையை பாரு வந்துட்டான் பேச….. அவங்களும் எனக்கு அத்தை மாமா தான்… எதுக்கு வேணா வருவாங்க… என்னை கேள்வி கேட்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல…”என்று அவளும் கோவமாக கூறி விட்டு பட்டறைக்கு சென்று விட்டாள்…

 

அவள் கூறிய எந்த ரைட்ஸும் இல்ல என்ற வார்த்தையை கேட்டு கோவமானவன் அவள் பின்னே பட்டறைக்கு சென்றான்… அங்கு வேலை செய்பவர்கள் யாரும் இல்லை.. ராமனும் வெளியில் சென்று இருக்க இருவர் மட்டும் தான்..

 

இவன் வேகமாக சென்று அவள் கையை பிடித்து தன்னிடம் இழுத்தவன் “ஏய் எனக்கு ரைட்ஸும் இல்லையா… அவனை விட எல்லா ரைட்ஸும் எனக்கு தான் இருக்கு…” என்று கோவமாக கூறினான்…

 

அவள் கோவமாக கையை அவனிடம் இருந்து விடுவிக்க பார்த்தவள் “கையை விடு ஹரி இங்க இருக்க யாரும் வேண்டாம்னு சொல்லி தான் சென்னைக்கு போன… இப்போ எதுக்கு ரைட்ஸ் இருக்கு அப்டினு பேசுற… முதல்ல என் கையை விடு… நீ சென்னைக்கு போயிடுவ இங்க நான் தான் இருக்கனும்… நீ இப்படி என்னை பிடிச்சு வெச்சு இருந்தா என்னை தான் தப்பா பேசுவாங்க…” என்று கூறினாள்..

 

அன்று வாயில் அவனுக்கு வாஸ்து சரி இல்லை போல… “இங்க உள்ள நான் கையை பிடிச்சு இருக்குறது கசக்குது… வெளிய அவன் உன்னை தொட்டது.. நீ இளிச்சு இளிச்சு பேசுனது இனிச்சதா…” என்று கோவமாக கேட்டான்…

 

“வார்த்தையை அளந்து பேசு ஹரி… உனக்கு அவளோ தான் லிமிட்… நீ இப்படி கேவலமா பேசுவனு நினைச்சு கூட பாக்கல…” என்று கோவமாக கத்தியவள் அவன் பிடித்து இருந்த கையை விடுவித்து கொண்டு வேகமாக வீட்டிற்கு சென்றுவிட்டாள்…

 

அவள் சென்ற பின்பும் இன்னும் கோவத்தில் தான் இருந்தான்… “என்னை விட அவன் முக்கியமா… என் லிமிட் அவளோ தான் அப்படினு சொல்ற…” என்று கருவிக்கொண்டு இருந்தான்…

 

அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வர அதை கூட கண்டுகொள்ளாமல் கோபத்துடன் நின்று இருந்தான்.. மீண்டும் மீண்டும் அழைப்பு வர எரிச்சலுடன் யார் என்று எடுத்து பார்த்தான்…

 

அவனின் காதலி தான் அழைத்து இருந்தாள்… அப்போது தான் அவனுக்கு தான் ஏன் இப்னு வந்தோம் என்றே நியாபகம் வந்தது…

 

“ச்சே அவ யாரு கூட பேசுனா எனக்கு என்ன.. நாம எதுக்கு வந்தோமோ அதை பாக்கனும்..” என்று தனக்குள் கூறிக்கொண்டே தன் காதலிக்கு அழைத்தான்… அவளோ முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவள் “ஹரி நான் அவளோ டைம் கூப்பிடுறேன்.. நீ எடுக்கவே இல்லை.. என்ன ஊருக்கு போய் ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ள என்னை மறந்துட்டியா…” என்று கோவமாக கத்தினாள்…

 

“லுக் கரிஷ்மா என் பேமிலி பத்தி நான் சொல்லி இருக்கேன்.. நானா கூப்பிடுற வர கூப்பிட கூடாதுனு சொல்லி தான் ஊருக்கு வந்தேன்.. நம்ம மேட்டர் பேச தான் இங்க வந்தேன்… எனக்கு தடவை குடு டூ டேஸ்.. குட் நியூஸோட வரேன்.. பை லவ் யூ” என்று கூறி அவள் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான்..

 

ராமனிடம் கூறாமல் அப்படியே வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.. அன்று அவன் பேசும் மனநிலையில் இல்லை.. எனவே நாளை பார்த்துக்கொள்ளலாம் என கிளம்பிவிட்டான்…

 

கோவிந்தன் அடுத்த நாள் ஒரு வேலையாக சேலம் சென்று பெண்கள் மூவரும் கோவிலுக்கு சென்றுவிட இவன் ராமனிடம் பேச வந்து இருந்தான்..
ஹரியை பார்த்ததும் “வா ஹரி இப்போ தான் மாமா வீட்டுக்கு வர நேரம் கிடைச்சதா… நேத்தே வந்து இருக்க வந்து இருக்கலாம்ல.. டீ வேணுமா காபி வேணுமா” என்று கேட்டார்…

 

“அது எல்லாம் எதுவும் வேண்டாம் மாமா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.. அப்பா கிட்ட நீங்க தான் சொல்லனும்” என்று தயங்கி தயங்கி கூறினான்..

“மாமா கிட்ட என்னடா தயக்கம்… தயங்காம சொல்லு.. உன் அப்பன் கிட்ட பேசிக்கலாம்..” என்று கூறினார்…

 

“மாமா நான் ஒரு பொண்ணை சென்னையில லவ் பண்றேன்… அவ பேரு கரிஷ்மா.. என்கூட தான் வேலை பாக்குறா… ரொம்ப நல்ல பொண்ணு மாமா.. அப்பா கிட்ட நீங்க தான் மாமா பேசி சம்மதிக்க வைக்கனும் மாமா” என்று கெஞ்சலாக கேட்டான்..

 

ராமன் இதை கேட்டதும் ஒரு நிமிடம் அமைதியாகிவிட்டார்… அவர் அமைதியை பார்த்ததும் “மாமா” என்று தயக்கமாக அழைத்தான்…

 

“என்ன மாப்பிள.. அவனை பத்தி தெரிஞ்சும் இப்படி பண்ணி இருக்க… அவனுக்கு இது எல்லாம் பிடிக்காதுனு என்னடா இது…” என்று கூறி “சரி நான் அவன்கிட்ட பேசி வைக்குறேன்.. நீயே அந்த பொண்ணு பத்தி அவன் கிட்ட சொல்லு.. இன்னிக்கு அவன்கிட்ட பேசிடுறேன்… நான் கூப்பிடுறப்ப அவன்கிட்ட வந்து பேசு….” என்று கூறினார்…

 

அவனும் சரி என்று கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்…அன்று மாலை கோவிந்தன் வீட்டிற்கு வந்தது தெரிந்து ராமன் கோவிந்தன் வீட்டிற்கு கிளம்பினார்…

அவருடன் லட்சுமியும் பவியும் கிளம்பினர்…

“வாடா ராமா என்று அழைத்த கோவிந்தன் என்னடா எதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்ன” என்று கேட்டார்..

 

ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட ராமன் “கோவிந்தா நம்ம ஹரி ஒரு பொண்ணை லவ் பண்றான்.. அதை உங்கிட்ட சொல்ல பயப்படுறான்… அது தான் நான் உங்கிட்ட சொன்னேன்” என்று அவர் கூறிய நொடி வீட்டில் பேரமைதி நிலவியது…

 

லட்சுமிக்கு தன் மகள் இந்த வீட்டிற்கு மருமகளாக வர வாய்ப்பில்லை என்று எண்ணி மிகவும் கவலை அடைந்தார்.. புவனாவிற்கு பேரதிர்ச்சி தன் மகன் காதலிக்கிறான் என்பதை கேட்டு…

 

ஒரு சில நிமிடம் அமைதியாக இருந்தவர் “அவனை பத்தி என்கிட்ட ஏன் சொல்ற ராமா… சாரே பெரிய ஆளு அவர் கல்யாணத்தை அவரே பண்ணட்டும் எனக்கு என்ன வந்தது…” என்று நிதானமாகவே கூறினார்….

 

“என்ன கோவிந்தா இது… என்ன இருந்தாலும் உன் பையன் அது உண்மை தானே… அப்போ எதோ தெரியாம பண்ணிட்டான்.. அதனால நமக்கு இழப்பு தான்.. இல்லைனு சொல்லல… மன்னிச்சு அவனை ஏத்துகிட்டு அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு குடு” என்று அவருக்கு எடுத்து கூறினார்..

 

“எனக்கு டைம் வேணும் ராமா யோசிக்க..” என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்… ராமனும் அவருடன் பேச அவரை பின் தொடர்ந்து வெளியில் சென்றுவிட்டார்…

 

லட்சுமிக்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கட்டும் என்று வாழ்த்தி அழுது கொண்டு இருந்த புவனாவை சமாதானம் செய்ய சமையலறைக்கு அழைத்து சென்று விட்டார்…

 

ஹரி அனைவரையும் பார்த்து கொண்டு இருந்தான்… கடைசியில் அவன் பார்வை பவியின் மீது விழ அவள் அதை கண்டுகொள்ளாமல் “ம்மா நான் வீட்டுக்கு போறேன்” என்று கூறி விட்டு அவரின் பதிலை எதிர்பாராமல் வீட்டிற்கு ஓடி இருந்தாள்…

தன் வீட்டிற்கு சென்றவள் வெளிகதவை அடைத்தவள் மாடிக்கு ஓடி சென்று அங்கிற்கும் ஒரு போட்டோவை கண்ணீருடன் அணைத்து கொண்டாள்… அதில் அவளும் ஹரியும் சிறு வயதில் எடுத்த போட்டோ…

error: Content is protected !!
Scroll to Top