நூலிழை பந்தம் ❤️ 4

அன்று பவியின் நட்புகளும் விடுமுறை என்று ஊருக்கு வந்து இருந்தனர்… அவளை பார்க்க வீட்டிற்கு வர வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது… வீட்டை தட்டி பார்த்தனர்.. காலிங் பெல் அடித்து பார்த்தனர்.. ஆனால் அவள் கதவை திறக்கவே இல்லை.. நீண்ட நேரமாக முயற்ச்சி செத்த பின் தான் அழுத முகத்தை திருத்தி கொண்டு கீழே வந்து கதவை திறந்தாள்..

அவள் கதவை திறந்தவுடன் அவள் அழுதுள்ளாள் என கண்டுகொண்டனர் அவள் வானரங்கள்.. அந்த நேரம் ஹேமாவும் அவள் கணவனுடன் வந்து விட அவர்களும் கண்டுகொண்டனர் அவள் அழுததை.. கதவை மூடிய திவ்யா அவளை சோபாவில் அமர வைத்து விட்டு “சொல்லு பவி என்ன ஆச்சு.. எதுக்கு அழுது இருக்க?…” என்று கேள்வி எழுப்பினாள்..

அவளும் திவ்யாவின் மடியில் படுத்து கொண்டே ஹரி வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கூறி இருந்தாள்..

அங்கிருந்த ஐவருக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை.. அவர்களுக்கு தான் தெரியுமே அவளுக்கு ஹரி மீதான காதல்…

என்ன தான் அவள் வெளியில் பிடிக்கவில்லை என்று கூறி சண்டை பிடித்து கொண்டாலும் அவளுக்கு அவன் என்றால் அத்தனை இஷ்டம்…

ஹேமாவின் கணவனிடம் தான் நேற்று பேசி கொண்டு இருந்தாள்… ஹரி வந்ததை தெரிந்து கொண்டவன் அதை வைத்து கிண்டல் செய்து விட்டு ஹேமாவின் வளைக்கப்புக்கு அழைக்க அவனின் அப்பா அம்மா வருவார்கள் என கூறிவிட்டு சென்று இருந்தான்…

தன்னை வைத்து ஒரு சண்டை என வருந்தியவன் ஹரி வேறு ஒரு பொண்ணை விரும்புகிறான் என கேட்டு பவிக்காக இன்னும் வருத்தப்பட்டான்..

மித்ரன் தான் “பவி நாம வேணும்னா ஹரி அண்ணன் கிட்ட பேசி பார்க்கலாமா… அவர் உங்கிட்ட நடந்துக்கிட்டதை பார்த்த அவருக்கு உன் மேல ஒரு பீலிங்ஸ் இருக்க மாதிரி தான் தெரியுது” என்று கூறினான்…

ஆனால் பவியோ வேகமாக எழுந்து “இல்ல மித்து அது மட்டும் வேணாம்… அவர் இப்போ வேற பொண்ணை லவ் பண்றாரு… இப்போ போய் சொன்னா தப்பாகிடும்.. கொஞ்ச நாள் பீல் பண்ணுவேன் அப்பறம் ஓகே ஆகிடுவேன்…” என்று அழுது கொண்டே கூறினாள்..

அவளை ஐவரும் அணைத்து கொண்டனர்.. அணைக்கும் போதே ஹேமாவையும் பார்த்து தான் அணைத்தனர்… ரஞ்சித் அதை ஆதுராமாய் பார்த்து கொண்டு இருந்தார்….

ஹேமாவின் கணவன் ரஞ்சித்துக்கு ஐவரின் நட்பும் அவ்வளவு பிடிக்கும்.. கள்ளம்கபடமற்ற நட்பு…தன்னை போலவே அவர்களின் நட்பை புரிந்து கொள்ளும் துணை மற்ற நால்வருக்கும் வர வேண்டும் என்பதே கடவுளிடம் ரஞ்சித்தின் வேண்டுகோள்..

ஐவரும் சமாதானமாக ரஞ்சித் வெளியில் சென்று ஐவருக்கும் பிடித்த தட்டுவடை செட் வாங்கி கொண்டு வந்தார்.. பவியும் நண்பர்கள் உதவியுடன் கொஞ்சம் அதில் இருந்து மீண்டு இருந்தாள்…

நட்புகள் நால்வரும் பவியை சிரிக்க வைத்து அவள் நார்மல் ஆனதும் தான் வீட்டிற்கு கிளம்பினர்… பவி ஓரளவு தேறி கோவிந்தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்… அங்கு புவனாவை லட்சுமி சமாதானம் செய்து இருந்தார்…

கோவிந்தன் தான் அமைதியாகவே இருந்தார்… அன்று மட்டும் இல்லை அவன் ஊருக்கு கிளம்பும் வரை எதுவும் பேசவில்லை…

ஹரியும் நேரடியாக அவரிடம் பேச முடியவில்லை… ஏனென்றால் அவன் அவர் மன்னிக்கும்படியான காரியத்தையா செய்து இருந்தான்… முடிவு தெரியாமல் தான் சென்னைக்கு கிளம்பினான்…

அங்கு சென்றதும் கரிஷ்மா வேறு “என்ன ஆச்சு ஹரி உங்க வீட்டுல ஓகே சொல்லிட்டாங்களா…” என்று கேட்டு கொண்டே இருந்தாள்…. இவனும் ஒரு மாதம் நேரம் கொடு என்று கூறி கொண்டு இருந்தான்…

ஹரி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ராமனிடம் பேசி கொண்டே இருந்தான்… அவரும் அவரால் முடிந்த வரை கோவிந்தனிடம் பேசினார்… கடைசியில் “என்னமோ பண்ணுங்க… அப்பா ஸ்தானத்துக்கு இந்த கல்யாணத்தை நடத்தி வைக்குறேன்… ஆனா இப்பவும் அவனுக்கு எனக்கும் சம்மந்தம் இல்லை….” என்று கூறி இருந்தார்…

புவனாவிற்கும் இதில் பெருசாக ஈடுபாடில்லை… ராமன் ஹரியிடம் கூறியதும் அவன் சந்தோச படுவதற்கு பதிலாக பெருமூச்சு தான் விட்டான் … அவன் காதலி படுத்தி எடுத்து இருந்தான் இவனை… 

முதல் வேலையாக அவளிடம் கூறியிருந்தான்… அவள் தான் பெரிதாக ஆர்ப்பரித்து கொண்டு இருந்தாள்… அவளும் அவள் வீட்டில் ஏற்கனவே பேசி இருக்க இரு குடும்பமும் சந்தித்து பேதிருமண தேதியை குறித்து இருந்தனர் 

இந்த ஒரு வாரத்தில் பவி ரொம்ப அமைதியாகி இருந்தாள்…. அவளின் நட்புகளுக்கும் ரஞ்சித்துக்கும் புரிந்து தான் இருந்தது… அந்த ஒரு மாதத்தில் ஹேமாவின் வளைகாப்பும் வந்து இருக்க அதில் நன்றாக தான் இருந்தாள்… ஆனால் அவளின் நட்புக்கு தெரியுமே அவளின் சுட்டித்தனம்.. அது தானே அவளின் அழகு…

கோவிந்தன் மனம் மாற பவியும் ஒரு காரணம்… தனக்கு ஹரி இல்லை என்றாலும் அவன் சந்தோசமாக அவன் காதலியுடன் இருக்கட்டும் என எண்ணி அவரிடம் பேசி பேசி கரைத்து இருந்தாள்…

பவி தன் தறி புடவை ஆன்லைன் வியாபாரம் ஜிஎஸ்டி வியாபாரம் என்று தன்னை பிஸியாக காட்டிக்கொண்டாள்…

திருமண தேதி நிச்சயம் செய்தது ஊரில் தெரிந்து அனைவரும் முறை பொண்ணை வைத்து வெளியில் பெண் எடுப்பதை குறித்து கேட்டு கொண்டே இருந்தனர்… கோவிந்தனுக்கு அனைவரும் கேட்கும் போதே இவன் அவசரப்படாமல் இருந்து இருந்தால் பவியே தன் வீட்டிற்கு மருமகளாக வந்து இருப்பாள் என ஹரி மீது கோவம் தான் வந்தது …

ஆனால் அவன் மீது உள்ள கோவத்தில் திருமண வேலைகளை செய்யாமல் இல்லை… அவர் கடமையை தவறாமல் செய்தார்.. கடமையாய் தான் செய்தார்…

இதில் சந்தோசப்பட வேண்டியவனே ஒரு மாதிரி தான் சுற்றி கொண்டு இருந்தான்… ஏனோ அவனால் சந்தோசப்பட இயலவில்லை… 

அவன் மனதிற்கு அவனுக்கு சொந்தமானது அந்நியம் ஆனது போல் இருந்தது.. இத்தனை நாள் தன் கைக்குள் இருந்த பொருள் தன் கை மீறி போனது போல் இருந்தது… அது என்னவென்றே அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் அவன் மனது ஒரு நிலையில் இல்லை…

பத்திரிகை அடித்து ஊரில் உள்ள அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்து இருந்தனர்… இப்பொழுது எல்லாம் ராமனும் லட்சுமியும் திருமண வேலைகளை பார்ப்பதற்காக அதிகம் கோவிந்தன் வீட்டில் தான் இருக்கின்றனர்..

அவளுக்கு விருப்பமான தறியை கூட பவி ஓட்டுவதில்லை…. ராமன் ஏன் என்று கேட்டதுக்கு கூட “அப்பா முன்ன பட்டறை வேல பாக்க நீங்க இருந்திங்க.. இப்போ கல்யாண வேலைல பிஸி.. சோ நான் தானே பாக்கனும் அது தான்…” என்று கூறி அவரை அனுப்பி இருந்தாள்…

தினமும் அவள் நட்புகளும் அழைத்து பேசிவிடுவர்… அவளுக்கு அத்தனை சந்தோசமாக இருக்கும் … நல்ல நண்பர்களை சம்பாதித்து உள்ளோம் என..

நாட்கள் யாருக்கும் காத்திராமல் செல்ல திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருந்தது… அப்போது தான் வீட்டில் அந்த பிரச்சனை நடந்தது…

அதை ஹரியிடம் தெரிவிக்க முயன்ற போது அவன் அழைப்பை ஏற்கவே இல்லை… புவனாவில் இருந்து ராமன் லட்சுமி பவி மற்ற சொந்தங்கள் என அனைவரும் அவனுக்கு அழைத்து பார்த்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை…

அனைவரும் அவன் மீது கோவத்தில் இருக்க ராமனும் பவியும் எதோ சரியில்லை என உணர்ந்தனர்… உடனே பவி மித்ரனுக்கு அழைத்து ஹரியை சென்று பார்க்க கூற அவனும் பார்த்து விட்டு கூற அது பவி மற்றும் ராமனை மேலும் நிலைக்குலைய வைத்து இருந்தது… ஆதி அன்று இளம்பிள்ளை வந்து இருக்க அவனை அழைத்து கொண்டு பவி சென்னை கிளம்ப ரஞ்சித் உதவியுடன் ராமன் எல்லாத்தையும் பார்த்து கொண்டார்….

ஹரி ஏன் அழைப்பை ஏற்கவில்லை..???

ஹரியின் வீட்டில் என்ன பிரச்சனை ஆனது…???

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top