நூலிழை பந்தம் ❤️ 6

அன்று போல் ஒரு மோசமான தினம் பவி பார்த்ததே இல்லை… அந்த அவள்’ இறந்த போது கூட அவள் மனது இவ்வளவு கனக்கவில்லை… இன்று கோவிந்தன் ஒரு பக்கம் உயிருக்கு போராட இன்னொரு பக்கம் கரிஷ்மாவின் உண்மை முகம் ஹரியின் மனப்போராட்டம் விபத்து என அவளை வாட்டி எடுத்துவிட்டது…

பவியால் எதுவும் பேச இயலவில்லை… அமைதியாக திவ்யாவின் தோள் சாய்ந்துவிட்டாள்… மருத்துவர் ஹரியின் அறையில் இருந்து வர “காட் கிரேஸ் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை… பட் ரைட் லெக் யூஸ் பண்ணி நடக்குறது ரொம்ப கஷ்டம்… எலும்பு எல்லாம் உடைஞ்சு போச்சு… பிளேட் வெச்சு இருக்கோம்… பட் நடக்குறது கஷ்டம் தான்… ரைட் ஹாண்ட் பிராக்சர் (fracture) கட்டு போட்டு இருக்கு… லெப்ட் ஹாண்ட்ல பெருசா எந்த அடியும் இல்ல… அவர் தலைல பயங்கர அடி அவர் விழுந்த வேகத்துக்கு இன்னும் அடி பட்டு இருக்கனும்… பட் அவர் ரொம்ப ட்ரை பண்ணி தலையை கீழ மோதாம இருக்க பாத்து இருக்காரு…. அப்படி பண்ணலனா கண்டிப்பா உயிர் போய் இருக்கும்… பட் அவர் கண்ணு முழிக்க ரெண்டு நாளாகிடும்… கண் முழிச்சா தான் நார்மல் ரூமுக்கு சேஞ்சு பண்ண முடியும்.. அன்ட் ஒருத்தர் மட்டும் போய் பார்த்துட்டு வாங்க… ” என்று கூறி கிளம்பிவிட்டார்…

பவி கொஞ்சம் பயந்து கொண்டே தான் அறைக்கு சென்றாள்… அவனை இப்படி காயத்துடன் எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.. அவனை அப்படி பார்க்க அவளுக்கு மனதைரியம் இல்லை.. மெதுவாக அறைக்கு சென்றவள் அவன் அருகில் சென்றாள்… பின் மெதுவாக அவன் தலையை தடவியவன் அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்…

“சுதன் நீ ஏன்டா இங்க வந்து படுத்து இருக்க… இது தான் உன் வாழ்க்கைனு நினைச்சிட்டியா.. அங்க நாங்க எல்லாரும் இருக்கோம்டா… நீ நினைக்குற மாதிரி இல்லடா.. நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஆனா இனிமேலும் என் விருப்பம் என்கிட்டயே புதைஞ்சு போகட்டும்.. சீக்கிரம் வந்துருர்டா எத்தனை நாள் நான் சமாளிப்பேன்னு தெரியல.. நீ கண்ணு முழிச்சிட்டா நான் கொஞ்சம் நார்மலாகிடுவேன்.. சீக்கிரம் எழுந்திருடா” என்று கூறி அழுது கொண்டே வெளியில் வந்துவிட்டாள்…

இங்கு இப்படி இருக்க புவனாவின் சொந்தங்கள் மருத்துவமனையை இரண்டாக்கி கொண்டு இருந்தனர்.. அனைத்தையும் அவர்கள் தான் பார்ப்பதை போன்று .. ராமன் லட்சுமி ரஞ்சித் என யாரையும் அருகில் விடவில்லை…

ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் புவனாவை இன்னும் வாட்டி கொண்டு இருந்தனர்.. ஏற்கனவே கணவர் மருத்துவமனையில் இருக்க மகன் ஒரு பக்கம் அழைப்பை ஏற்கவில்லை என்ற கவலையில் இருக்க இவர்கள் வேறு கண்டதையும் சொல்லி அவரை கஷ்டப்படுத்தி கொண்டு இருந்தனர்…

புவனா கவலையில் இருந்தாலும் இவர்களால் ராமன் லட்சுமி யாரும் அருகில் வராததை பார்த்து ஒரு கட்டத்தில் அவர்களிடம் கத்தி இருந்தார்… “அண்ணா அண்ணி போதும்… ஏற்கனவே நானே மனக்கஷ்டத்துல இருக்கேன்.. இதுல நீங்க வேற ஏன் என்னை இப்படி படுத்துறீங்க… எனக்கு ராமன் அண்ணா போதும் என்னையும் என் குடும்பத்தையும் விட்ருங்க… என்ன ராமன் அண்ணாவை கேள்வி கேட்குறீங்க நீங்களா ஹாஸ்பிடலுக்கு பணம் கட்ட போறீங்க.. எப்படியும் அவர் தான் கட்டுவாரு…. எங்க கிட்ட ஒரு பைசா காசு இல்ல.. எல்லாத்தையும் கலையானதுக்கு செலவு பண்ணிட்டாரு … இப்போ ஹாஸ்பிடலுக்கு அண்ணா தான் காட்டுவார்… நீங்க காட்டுறேன்னு சொல்லுங்க இப்பயே எல்லாரையும் கிளம்ப சொல்றேன்.. என்னையும் என் புருஷனையும் பாத்துக்கோங்க” என்று கூறி இருந்தார்..

அவ்வளவு தான் புவனாவின் அண்ணனும் அண்ணியும் கிளம்பிவிட்டனர்… புவனா லக்ஷ்மியின் தோள் சாய்ந்து கதறிவிட்டார்.. “எனக்கும் மட்டும் ஏன் அண்ணி இப்படி.. இவர் உடம்பு சரியில்லாம படுத்து இருக்காரு.. ஹரி போன் பண்ணா இந்த நேரத்துல கூட எடுக்க மாட்டிங்குறான்.. அவர் சொல்ற மாதிரி அவனுக்கு குடும்பம் மேல பாசமே இல்ல.. இத்தனை நாள் தெரியல.. என் பொண்ணு செத்து போனதுக்கு இவன் தான் காரணம்னு இப்போ புரியுது.. இதுல என் அண்ணா அண்ணி வேற.. முடியல அண்ணி..” என்று அழுது தீர்த்துவிட்டார்…

லட்சுமி தான் அவருக்கு ஆறுதலாக இருந்தார்… மருத்துவமனையில் அதிக கூட்டம் இருக்க கூடாது என எண்ணி பவியின் நட்பின் பெற்றோர்கள் கிளம்பி இருக்க ரஞ்சித் ராமன் லட்சுமி புவனா மட்டும் உடன் இருந்தனர்…

நீண்ட நேரமாக பவி இங்கு இல்லாததை கண்ட லட்சுமி ராமனிடம் கேட்க ராமன் ஹரிக்கு நடந்ததை மேலோட்டமாக கூறி “லட்சு தங்கச்சி கிட்ட சொல்லிட்டு இருக்காதா… தங்கச்சி சத்தியமா தாங்க மாட்டா… பாப்பா எல்லாத்தையும் பாத்துப்பா…” என்று தைரியம் கூறி அனுப்பினார்…

ராமனுக்கு நெருக்கடியான சூழ்நிலை தான் பணம் பிரட்ட அவரால் முடியவில்லை… ஒரே நாளில் நகையை வைத்து வங்கியில் பணம் வாங்க முடியவில்லை…

மதியம் மேல் சென்றதால் அதிக பணம் இப்போது முடியாது ஏன கூறிவிட்டனர்… நாளை கண்டிப்பாக வங்கி சென்று நகையை வைத்து பணம் வாங்க வேண்டும் என நினைத்து கொண்டார்.. கண்டிப்பாக கோவிந்தனுக்கே ஏழு லட்சம் பக்கம் ஆகி விடும்… இதில் ஹரிக்கு எவ்வளவு செலவு ஆகும் என தெரியவில்லை…

இப்போது அவரிடம் இருப்பது கோவிந்தனிடம் இருந்த மூன்று லட்சம் பணம், பவி அனுப்பிய ஒரு லட்சம் அடுத்து அவரிடம் இருந்த ஐம்பதாயிரம்… இது மட்டுமே இருந்தது…

கண்டிப்பாக வங்கியில் பத்து பவுன் நகை வைத்தால் தான் போதுமான அளவு பணம் வரும்… இன்றே வங்கியில் சொல்லி விட்டு தான் வந்தார்… நாளை பத்து பவுன் நகை வைக்க வேண்டும் என்று கூறி விட்டு தான் வந்து இருந்தார்… அவர்களும் சரி என்று கூறிவிட்டனர்…

ரஞ்சித் நான் தருகிறேன் என்னிடம் ஒரு லட்சம் உள்ளது என கூறினான்… ராமனோ “தம்பி இப்போ பணம் ரொம்ப அவசியம் உனக்கு.. எட்டு மாசம் மேல ஆகிடிச்சு… எப்போ வேணா ஹேமாவுக்கு வலி வரலாம்… உன் கைல பணம் இருக்குறது அவசியம்… நாளைக்கு பேங்க் போனா கிடைச்சிடும்… கவலைப்படாத… நைட் வீட்டுக்கு போ… இங்க நான் பாத்துக்குறேன்…. ரொம்ப அலையாதீங்க.. நான் பாத்துக்குறேன் தம்பி” என்று கூறி ரஞ்சித்தை அனுப்பி வைத்தார்…

இரண்டொரு சொந்தங்கள் இருந்தாலும் பணத்தை பற்றி எல்லாம் வாயே திறக்கவில்லை… ஹரியின் நண்பர்களும் வந்து இருந்தனர் அவர்கள் பண உதவி எதோ வேண்டுமா என்று கேட்டனர்.. அவர்களும் ராமனுக்கு உதவியாய் இருந்தனர்… சொந்தங்களை விட நண்பர்கள் உதவியாய் இருக்கின்றனர் என்று பெருமையாய் எண்ணினார்… ரஞ்சித்தை ஹேமா இருக்கிறாள் என அனுப்பி வைத்துவிட்டார்.. ஹரியின் நண்பர்கள் நாங்கள் செல்ல மாட்டோம் என கூறிவிட்டனர்…

ராமன் அவர்களிடம் ஹரிக்கு நேர்ந்த விபத்தை கூறி இருந்தார்… அங்கே கிளம்புகிறேன் என்று கூறினர்… ஆனால் அதிகம் பேர் வேண்டாம் அங்கு இருக்கின்றனர் என்று கூறிவிட்டார்… ஹரியின் வேறொரு நண்பன் சென்னையில் இருக்க அவனிடம் கூறினர் அவனும் உடனே மருத்துவமனை கிளம்பிவிட்டான்…

இங்கு சென்னையில் திவ்யாவை அவள் விடுதிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்த பவி சோர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்… ஒருநாளில் அவள் அத்தனை துயரப்பட்டு போய் இருந்தாள்… வேதனையாய் முகத்தை கையால் வைத்து மூடி கொண்டு அமர்ந்துவிட்டாள்…

மித்ரனும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பவியின் அருகில் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று அமர்ந்து கொண்டனர் அவளுக்கு ஆதரவாய்..

ஹரியின் நண்பனும் மருத்துவமனை வந்து இருக்க அவரும் அவர்களுக்கு உதவியாய் இருந்தார்

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top