நூலிழை பந்தம் ❤️ 9

அடுத்த நாள் காலை நன்றாக விடிந்து இருந்தது.. கோவிந்தனை அன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தது..

 டிஸ்சார்ஜ் செய்யும் போது தான் பவி மருத்துவமனை சென்றாள்… புவனா அவளை கண்டதும் கட்டிப்பிடித்து அழுது இருந்தார்… பவி அவருக்கு ஆறுதல் கூறினாள்.. பின் கோவிந்தனை பார்க்க அவளுக்கு வலி மிகுந்த புன்னைகையை உதிர்த்தார்…

கோவிந்தனின் வீடோ ஒரு ஹால் கிட்சன் சமையலறை ஒரு ரூம் அட்டாச் பாத்ரூமுடன் இருக்கும்… மேலே மாடியில் இரண்டு அறை பிறகு வராண்டா மாதிரி இருக்கும்.. அதற்கு மேல் மொட்டை மாடி..

கோவிந்தனும் ஹரியும் ஒரே அறையில் இருப்பது சிரமம்.. கோவிந்தன் வீட்டிற்கு வந்த பின் பேசிக்கொள்ளலாம் என நினைத்து கோவிந்தனை வீட்டிற்கு அழைத்து வந்தனர்….

லட்சுமி ஆரத்தி எடுக்க வர புவனாவே அதை வாங்கி கோவிந்தனுக்கு ஆரத்தி எடுத்தார்… அதன்பின் அவரை ஹாலுக்கு அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தனர் ராமனும் ரஞ்சித்தும்… அங்கு வீட்டில் ஹரியின் நண்பன் ரஞ்சித் ராமனின் குடும்பத்தினர் கோவிந்தன் லட்சுமி மட்டுமே இருந்தனர்… இன்னும் சிறிது நாட்களுக்கு உறவினர்கள் யாரும் அதிகம் வர வேண்டாம் என கூறி இருந்தனர்…

அறையில் இருந்து எதோ விழும் சத்தம் கேட்க முதல் ஆளாக பவி அறைக்கு சென்று இருந்தாள்.. கோவிந்தன் என்ன சத்தம் ஏன் பவி வேகமாக செல்கிறாள் உள்ளே யார் உள்ளார் என கேள்வி கேட்டார்..

அங்கு உள்ளே ஹரி தண்ணீர் எடுக்கும் போது பாட்டில் கீழே விழுந்து இருந்தது.. அதை அவன் எடுக்க முற்பட்டு கொண்டு இருந்தான்.. “சுதா என்ன செய்யுற நீ… எதோ வேணும்னா யாருக்கோ கால் பண்ணுனு அண்ணா சொல்லி இருக்காங்கல… உனக்கு இது எரிச்சலா தான் இருக்கும்.. சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் ஹெல்ப் கேட்குறது கஷ்டமா தான் இருக்கும்.. பட் ஒரு பிப்டீன் டேஸ் மட்டுமாச்சும் எதுவும் ட்ரை பண்ணாத…” என்று கூறி விட்டு அவனுக்கு தண்ணீர் புகட்டி விட்டு வெளியேறும் முன் “குட்டிமா” என்று அழைத்தான்..

அவன் அழைத்ததும் அப்டியே நின்றவள் அவன் பக்கம் திரும்பவில்லை… “நான் அங்க உங்க வீட்டுல இருக்கேன்.. அப்பாவோட இருக்க முடியாது… எனக்கும் ஒரு மாதிரி இருக்கும்.. அவருக்கும் கஷ்டமா இருக்கும்.. உங்களுக்கு பிரச்சனை இல்லையே” என்று தயக்கமாக கேட்டான்… அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அவள் அறையை விட்டு வெளியேறி இருந்தாள்…

வெளியில் பேசுவது அவனுக்கு கேட்டு கொண்டு தான் இருந்தது.. பவி உள்ளே இருந்த போது ராமன் மெதுவாக ஹரியின் விபத்து பற்றி கூறி இருந்தார்… கோவிந்தன் ஒரு நிமிடம் கலங்கினார்.. பின் தன் கலக்கத்தை மறைத்து கொண்டு எதுவும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டார்…

பவி வெளியில் சென்று ஹரி கூறியதை கூற முதல் மறுப்பு புவனாவிடம் இருந்து தான் வந்தது… லட்சுமிக்கு ஒரு பக்கம் சரி என்று மனது கூறினாலும் இன்னொரு பக்கம் கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் பெண் இருக்கும் போது ஹரி வீட்டில் தங்குவது எவ்வாறு சாத்தியம் என்று யோசித்து கொண்டு இருந்தார்…

இதற்கு முன்பு வேறு அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆகி விட்டது.. எப்படி பவியும் ஹரியும் ஒரே வீட்டில் இருப்பது என்பது யோசனை… இன்னும் அவர்களுக்கு கரிஷ்மாவை பற்றி கூறவில்லை…. கோவிந்தன் எந்த கருத்தும் கூறவில்லை.. அமைதியாக அமர்ந்து இருந்தார்…

ராமனோ “எப்படி புவனா ரெண்டு பேரும் மேல மாடிக்கு போக முடியாது.. ஒரே ரூம்ல இருக்குறது கஷ்டம்… ஹரி அங்க வரட்டும்” என்று கூறினார்…

புவனா என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்… அதற்கு மேல் கரிஷ்மா பற்றி எதுவும் தெரியவில்லை.. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை..

பின் லட்சுமி ஒரு முடிவு எடுத்து “அண்ணி ஹரி அங்க வரட்டும்.. நானும் இவரும் பாத்துக்குறோம்.. ஹரியோட ப்ரெண்ட்ஸ் இருக்காங்க… பவி உங்க கூட இங்க இருக்கட்டும் உங்களுக்கு உதவி பண்ண” என்று கூறினார்.. அவர் கூறியது சரியாக இருந்தது…

ஹரியை அவனின் நண்பன் ஹாலுக்கு அழைத்து வர அவன் முதலில் கோவிந்தனிடம் பேச முயற்சி செய்ய அவரோ எதுவும் பேசாமல் அறைக்கு செல்ல பார்த்தார்.. அவர் வேகமாக எழுவதை பார்த்த பவி அவர் கையை பிடித்து கொண்டு அவரை மெதுவாக அறைக்கு அழைத்து சென்றாள்… ஹரியின் முகம் என்ன உணர்வை காட்டியது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை…

ஹரியின் நண்பர்கள் உதவியுடன் ஹரியை ராமன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்… பவியும் தன் உடமைகளை எடுத்து கொண்டு கோவிந்தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்..

நாட்கள் அனைவருக்கும் பாரமாக தான் சென்றது.. பவி கோவிந்தனை பார்த்து கொண்டு தன் ஆன்லைன் விற்பனைகள் தறி ஓட்டுவது என அனைத்தையும் பார்த்துக்கொண்டாள்…

பதினைந்து நாட்கள் சென்று இருந்தது.. கோவிந்தனை பவி ராமன் புவனா மூவரும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்… அங்கு அவரை பரிசோதனை செய்து எந்த பிரச்னையும் இல்லை.. ஆனால் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க கூடாது இன்னும் பல அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்…

நேராக அனைவரும் ராமன் வீட்டிற்கு தான் சென்றனர்… கோவிந்தன் தான் போக சொன்னார்… இரு குடும்பம் மட்டும் இருக்க கோவிந்தன் தான் பேச்சை ஆரம்பித்தார்… “ராமா ஹாஸ்பிடல் பீஸ் எல்லாம் எப்படி கட்டுன என்கிட்ட கைல கம்மியா தான் இருந்தது.. மீதி எப்படியும் ஏழு லட்சம் மேல கூட ஆகி இருக்கும்.. உன்கிட்டயும் அவளோ காசு இருந்து இருக்காது.. வெளிய கடன் எதோ வாங்குனியா” என்று கேட்டார்..

ராமனோ “அது எல்லாம் எதுக்கு உனக்கு… அமைதியா இரு..” என்று அமைதி படுத்தினார்… ஆனால் கோவிந்தனோ “சொல்லுடா வெளிய வட்டிக்கு வாங்குனியா” என்று அழுத்தமாக கேட்டார்… அவரை டென்ஷன் செய்ய வேண்டாம் என நினைத்து ராமன் வங்கியி நகை கடன் வாங்கியதை கூறிவிட்டார்…

“கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டா உனக்கு.. நகையை எதுக்கு வெச்ச… போற உசுரு போகட்டும்னு விட வேண்டியது தானே.. இவனை மாதிரி பையனை பெத்ததுக்கு நான் செத்தே போய் இருக்கலாம்… இவனால் என் பொண்ணு உசுரு போச்சு.. இப்போ மானம் மரியாதை பணம் எல்லாமே போச்சு… இனிமே நான் உசுரோட இருந்து என்ன ஆக போகுது… என் தொழிலே வெயிட் தூக்குறது தான்.. இப்போ அதுவும் கூடாதுனா நான் சோத்துக்கு என்ன டா பண்ணுவேன்.. இவனுக்கும் வேலை இல்லை… நீ வேற எங்களுக்காக ஏன்டா நகையை வெச்ச பாப்பா கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச நகை அதுடா… இதுக்கு என் உசுரு போய் இருக்கலாம்” என்று தலையில் அடித்து கொண்டு கண்ணீருடன் கேட்டார்..

ராமனோ “கோவிந்தா என்ன பேசுற… இப்படி எல்லாம் ஏன் பேசுற.. இப்படி எல்லாம் இனிமே பேசாத…” என்று கண்டிப்பாக கூறினார்.. பெண்கள் மூவரும் அழ உள்ளே இருந்த ஹரி இறுகி போய் அமர்ந்து இருந்தான்… அவன் அன்று செய்தது அவனின் தங்கையின் உயிரை பறிக்கும் என அவன் கனவில் கூட நினைக்கவில்லை…

கோவிந்தன் எதுவும் பேசாமல் இருக்க ராமனே “நகை என்னடா பெரிய நகை உன் உசுருக்கு சமமாடா.. லூசு மாதிரி பேசாத… ஹரி பண்ணது சரினு சொல்லல.. அவனால ஒரு உசுரு போய் இருக்கு தான்.. ஹரி மேல அன்னிக்கு தப்பே இல்ல இனிமேலும் வார்த்தையால கொல்லாத.. என்னடா பெரிய பணம்.. அதை நாம நினைச்சா சம்பாதிக்கலாம்… காலைல இன்னும் சீக்கிரம் எழுந்து தறி ஓட்டலாம்.. நைட் இன்னும் கொஞ்ச நேரம் சேர்ந்து ஓட்டுனா பணம் வர போது.. உன் உசுரு போனா வருமா இல்ல அவன் உசுரு போனா தான் வருமா.. இனிமே இப்படி பேசாத அவளோ தான்…” என்று கோவிந்தனின் கையை பிடித்து ஆறுதலாக கூறியவர் பெண்களை பார்த்து “எதுக்கு அழுகுறீங்க.. எல்லாம் சரியாகும்.. போங்க வேலையை பாருங்க.. கோவிந்தா போய் எங்க ரூமுல தூங்கு” என்று அவரை தங்கள் அறைக்கு அழைத்து சென்றவர் கோவிந்தன் உறங்கிய பின் தான் வேலைகளை பார்க்க சென்றார்..

உறவுகளுக்கு பத்திரிக்கை கொடுத்ததால் அனைவரிடமும் திருமணம் நின்றுவிட்டது.. ஹரிக்கு விபத்து அதனால் பெண் வீட்டினர் நிறுத்திவிட்டனர் என்று கூறி சமாளித்தனர் குடும்பத்தினர்.. இடைப்பட்ட நாட்களில் கரிஷ்மாவை பற்றி குடும்பத்தினரிடம் கூறி இருந்தார் ராமன்…

பவி தன்னை சமாளித்து கொண்டு ஹரி இருந்த அறைக்கு செல்ல அவன் இருந்த நிலைமையை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.. கோவிந்தனின் பேச்சு அந்த அளவு அவனை உடைத்து இருந்தது… அந்த அளவு இறுகி போய் கண் எல்லாம் கலங்கி அமர்ந்து இருந்தான்..

அவனின் அந்த நிலையை காண முடியாமல் “சுதா” என்று மென்மையாய் அவன் அருகில் சென்று அழைக்க அவளை அணைத்து கொண்டு கதறி இருந்தான்… அவனின் அந்த கதறல் அவளை மேலும் உடைக்க வெளியில் நின்று இருந்த இரண்டு பெண்மணிகளும் அவனின் இந்த கதறலில் மொத்தமாய் உடைந்து இருந்தனர்…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top