தீர்த்தக்கரை தனிலே-6
தன் அப்பார்ட்மெண்ட் முன் காரை நிறுத்திய ஹேமமாலினி அதிலிருந்து இறங்க, கிருஷ்ணா அவளையே பார்த்திருந்தான்.
‘அச்சோ பேசுனா நான்தான் ஹேமானு கண்டுபுடிச்சிடுவானே இப்போ எப்படி ஒண்ணும் சொல்லாமப் போக’, அவள் தயங்கியவாறு அவன் முகம் பார்த்து நிற்க,
“நீங்க எதுக்கோ என்னை அவாய்ட் பண்றது போல தெரியுது மேடம். நீங்க இதுக்கு முன்ன என்னை எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?”,
ஹேமமாலினியின் தலை பலமாய் இல்லையென்று அசைந்தது.
“அப்புறம் எதுக்கு சின்ன தேங்க்ஸ் கூட சொல்லாம இப்படி பே’னு பார்க்குறீங்க? பேசுங்க மேடம் பேசுங்க”,
“…..”,
“ஊப்ஸ்… பேசமாட்டிங்களா? ஓக்கே இனிமே ஜாக்கிரதையா இருங்க. போயிட்டு வர்றேன்”, கிருஷ்ணா காரை நகர்த்தப் பார்க்க,
சைகையால் அவனுக்கு நன்றி நவிழ்ந்திருந்தாள் ஹேமமாலினி.
“அச்சோ மேடம் நீங்க ஊமையா? உங்களால பேச முடியாதா?”, சட்டென்று விழியில் ஒரு கழிவிரக்கம் தோன்றி மறைந்தது.
ஹேமமாலினியின் மனம் குறும்புகளால் நிரம்பி வழிய, தலையை ஆமாமென்று ஆட்டினாள்.
“அச்சோ அதான் உங்களால என்கிட்ட எதுவும் சொல்ல முடியல ஸாரி மேடம் ஸாரி. நீங்க ஒரு தேங்க்ஸ் கூட என்கிட்ட சொல்லாதத நினைச்சி நான் உங்கள திமிரான ஆளுனு ஐ யம் எக்ஸ்ட்ரீம்ளி ஸாரி”, மனப்பூர்வமாய் கேட்டான்.
ஒரு சிறுநகை இதழோடு இருக்க கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு நின்றாள் ஹேமமாலினி.
“ஓக்கே மேம் இதுதான் உங்க அட்ரஸா? இங்க எத்தனாவது பிளாட்ல இருக்கீங்க?”,
அவள் இதழ் மடித்து கடித்துவிட்டு ஒரு உக்கிரப் பார்வை பார்க்க,
“தப்பா நினைக்காதீங்க மேடம். நாளைக்கு மெக்கானிக் கிட்ட சொல்லி உங்க வண்டிய ரிப்பேர் பண்ணி அணுப்பனும்ல அதான் கேட்டேன்”,
இருவிரல்களில் நம்பரை ஒன்றினைத்துக் காட்டியவள், பாய் சொல்லிவிட்டு நகர்ந்திருக்க, கிருஷ்ணா புன்னகை மலர காரை எடுத்திருந்தான்.
இருவரையும் சேர்க்கத் துடித்த விதி மௌனியாய் சிரித்துக் கொண்டது.
நடுக்கத்தில் வெடவெடத்த உதடை இறுக்கி கடித்துக் கொண்ட ஹேமமாலினியின் மனதுக்குள் கிருஷ்ணா சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான்.
ஆண்களைக் கண்டாலே ஒவ்வாமையாய் எண்ணிக் கொண்டிருந்தவள் ஆபத்தில் உதவிய ஆபத்பாந்தவனை நினைத்து உள்ளம் மகிழ சிரித்துக் கொண்டாள்.
தன் பிளாட் வந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் நிலைக்கண்ணாடி முன் சென்று நிற்க, இன்றுதான் அவள் இந்த உலகிற்கு புதிதாய் வந்ததைப் போல் உணர்ந்தாள்.
“கி…ரு…ஷ்…ணா…”, ஒவ்வொரு எழுத்துக்களாய் உதடுகள் நோவினைத் தராமல் உச்சரித்துப் பார்த்தது.
மெல்லிய வெட்கம் இதயக்கமலத்தில் சூழ வலக்கரம் கொண்டு முகம்மூடி சிணுங்கினாள்.
“லவ், மேரேஜ், பேபிஸ் எக்ஸட்ரா எக்ஸட்ரா எதுவுமே வேண்டாம்னு இருந்த எனக்குள்ள முதல் முதல்ல ஒருத்தன் மூலமா சாரல் மழை. உன்னோட காதல் எவ்ளோ ஆழம்னு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா கிருஷ்ணா?”, கேள்வி கேட்டவள் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்றாள்.
“முதல்ல பார்த்த உடனே ஏதோ ஒரு பரவசம் என்னை சூழ்ந்து நின்னுச்சு ஆனா அந்தப்பொண்ணு வாய் பேச முடியாத ஊமைனு தெரிஞ்ச உடனே ப்ச்… என்ன சொல்லுறதுனு கூடத் தெரியல. என்னோட ஹேமாவுக்கு ஒரு உருவகம் யோசிச்சு இருந்திருந்தா மே பீ இந்தப்பொண்ணோட ஒத்துப் போயிருக்குமோ என்னவோ? ஏன்னா என் உள்மனசு அப்படித்தான் சொல்லுது. மாலு சீக்கிரம் கண்ணு முன்ன எதிர்ப்படேன். பார்க்குற ஆட்கள் கிட்ட உன்னை தேடித் தேடி தோத்துக்கிட்டு இருக்கேன். ம்… இராஜா சார்”, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன் பாடலை ஒலிக்க விட்டவாறு வீடு நோக்கிச் சென்றான்.
முழுதும் இருள் நீங்காத விடியல் பகலை வரவேற்றுக் கொண்டிருந்தது.
உறக்கம் களைந்து எழுந்த ஹேமமாலினி ஒரு நீண்ட கொட்டாவியை விட்டுக் கொண்டாள்.
தினமும் காலை எதற்கு பொழுது புலர்கிறது என்று எண்ணும் மனது இன்று மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
கை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டவள் ஜன்னல் திரைச்சீலை விலக்கினாள்.
சூரியன் சுள்ளென்று எதிர்படும் முன் அபார்ட்மெண்டின் நீண்ட காரிடரில் காரை வைத்துக் கொண்டு நின்றான் கிருஷ்ணா.
அவனை பார்த்த மாத்திரத்தில் ஆயிரம் வாலா பட்டாசை கொழுத்தி போட்டது போல் அவள் உள்ளும், புறமும் துடிக்க, ஹாய் என்று கையைக் காட்டிய கிருஷ்ணாவை சிரிப்பு இயைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஓரிரு நொடி சிரித்தவள் அவன் தன்னைக் கவனிக்கிறான் என்றறிந்த போது கோபமாய் நின்றாள்.
காதில் கரம் வைத்தவன், “பிளீஸ் கீழ இறங்கி வாங்க”, என்று அழைக்க,
தோள்களைக் குலுக்கி கண்ணாடியில் தன் உருவத்திற்கு முத்தம் வைத்துக் கொண்டவள் படிகளில் பூஞ்சிட்டாய் தாவி ஓடி வந்தாள்.
சந்தோஷ ஊற்று உள்ளே பொங்கினாலும் அவனை முறைத்துப் பார்த்தவாறே கீழிறங்கி வந்தாள்.
“இங்க எதுக்கு வந்தீங்க?”, கையை காற்றில் அசைத்து கோபமாய் கேட்க,
“காலையிலையே இவ்வளவு கோபம் கூடாது மேடம் ஜஸ்ட் ரிலாக்ஸ்”,
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டாள்.
“நீங்க இங்க என்ன?”, என்றாள் சைகையில்.
“உங்களோட வண்டிய ரிப்பேர் பண்ணி கொண்டு வந்தாச்சு மேடம் அத சொல்லிட்டு அப்படியே வண்டிக்கு ஆன செலவையும் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”,
‘கிருஷ்ணா நீங்க எல்லாத்துலையும் ரொம்ப பாஸ்ட் தான் இல்ல’, மனதுள் எண்ணியவள் அவனைப் பார்க்க,
“மொத்தமா பில் தவுசன்ட் ஆச்சு மேடம்”, அவள் விழி பெரிதாய் விரிய நெஞ்சத்தில் கைவைத்தாள்.
“என்ன மேடம் அமௌன்ட் ஜாஸ்தியா தெரியுதா? என்னை பகல்நேரக் கொள்ளைக்காரன்னு ஒருநொடி யோசிச்சுருப்பீங்களே?”,
அவள் மௌனமாய் நிற்க,
“உங்க பார்வையிலேயே தெரியுது நீங்க கண்டிப்பா அப்படித்தான் யோசிச்சுருப்பீங்கனு. நான் ஒன்னும் உங்கள ஏமாத்தல மேடம். உங்க வண்டிக்கு டயர், டீப் மாத்துனது பிளஸ் இராத்திரி அங்க இருந்து இங்க உங்கள கொண்டு வந்து விட்டது, இப்பவும் கார எடுத்திட்டு இங்க வந்ததுனு என்னோட பெட்ரோல் செலவையும் நோட் பண்ணி தவுசன்ட் சொல்லுறேன்”,
அடப்பாவி என்ற ரீதியில் அவள் வாயில் விரல் வைக்க,
“மேடம் நான் யார் காசுக்கும் தேவையில்லாம ஆசைப்பட மாட்டேன். நீங்க பேமென்ட் கொடுத்தா நான் உடனே கிளம்பிடுவேன்”,
“உங்க காச ஒரு டென் ஓ கிளாக் வந்து வாங்கிக்கோங்க”, சைகையில் மொழிந்தாள்.
“என்னாது பத்து மணியா?”, ஏகத்துக்கும் அதிர்வாய் உணர்ந்தான் கிருஷ்ணா.
“மேடம் எனக்கு கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் பத்து மணிக்கு தேனாம்பேட்டை குறுக்கு சந்துல இருக்கிற என் முத்தரசன் அண்ணே டீ கடைய விட்டு எங்கேயும் வரமாட்டேன்”,
“எதுக்கு?”, அவள் வலக்கையை காற்றில் வீச,
“நான் அப்போதான் ஹேமமாலினி நிகழ்ச்சிய மனசாரக் கேட்டு காதார இரசிப்பேன்”,
“நீங்க அவங்க தீவிர பேனா?”,
ம்… பெருவிரலால் நிலத்தில் கோலம் போட்டான்.
‘என் பேர சொன்னதுக்கே இந்த வெட்கம்னா எதிர்ல நிக்குற நான்தான் ஹேமமாலினினு தெரிஞ்சா?’, அவள் கண்கள் அதீத ஆர்வத்தில் மின்னியது.
அதெல்லாம் செட் ஆகாது எனக்கு வொர்க் இருக்கு நீங்க போங்க போயி இப்போவே பைசா எடுத்திட்டு வாங்க”,
“நோ வே டென்னா வந்து பேமென்ட் வாங்கிக்கோங்க இல்லேனா நாளைக்கு வாங்க”,
“அய்யோ மேடம் என்ன இது உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்ததுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா? சரி நான் நாளைக்கே வந்து வாங்கிக்கிறேன்”, கிருஷ்ணா காரை எடுத்துக்கொண்டு நகர ஹேமமாலினி ஒரு புன்சிரிப்போடு தன் ஸ்கூட்டி அருகில் வந்திருந்தாள்.
“ஹேய் ஸ்வீட்டி பார்த்தியா உன்னைப்போல இன்னொருத்தர் கூட எனக்கு துணைக்கு வந்துட்டார்”, அதன் மேல் விரல் வைத்து தடவிக் கொண்டவள் தன் வேலைகளை பார்க்க நகர்ந்திருந்தாள்.
“என்ன ஹேமா விளையாடுறியா? நீ சொன்னது போல நான் இல்ல இங்க யாருமே செய்யமாட்டாங்க”, தேவகி இரைந்து கொண்டிருக்க, ஷேரில் அமர்ந்திருந்த ஹேமமாலினி புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
“நீ இத செஞ்சுதான் ஆகணும்”,
“ஏய் ஹேமா அந்த புரோகிராம் அந்த டைம்ல அவ்ளோ ரீச் கிடைக்கிறதே உன்னால தான். உனக்கு, உன்னோட வசீகரிக்கிற வாய்ஸ்க்கு ஏராளமான பேன் பேஜ் இருக்கு. நீ எதுக்கு இப்படி பண்ற?”,
“எல்லாமே ஒரு காரணமாதான் தேவகி. நாண் ஒண்ணும் உன்னை டெய்லி ஷோவ ரன் பண்ண சொல்லல ஜஸ்ட் இன்னைக்கு ஒருநாள் மட்டும்…”,
“அதான் நீ இருந்தும் ஷோ பண்ணாம இருக்க இந்த ஒருநாள்ல என்ன இருக்கு”,
உதட்டில் விரல் வைத்தவள் மௌனமாய் சிரித்துக் கொண்டாள்.
“சரி இது நாம மட்டும் டிசைட் பண்ற விஷயம் இல்ல மேனேஜ்மென்ட் கிட்டவும் பேசி அவங்க ஓக்கே சொன்னா நான் இத பண்றேன்”,
முடியவே முடியாதென்று சொல்லிவிட்ட மேனேஜ்மென்டிடம் கெஞ்சி கூத்தாடி தேவகி, “தென்றல் பொழுதுகளை”, இன்று ஒருநாள் மட்டும் பேசி முடிக்க அனுமதி வாங்கியிருந்தாள் ஹேமமாலினி.
மைக்கை பற்றியிருந்த தேவகியின் விரல் அதில் நர்த்தனமாட, வேர்வை சிந்திய முகத்தில் அப்பட்டமான பயம் தேங்கியிருந்தது.
“ஹேமா கண்டிப்பா இத செஞ்சுதான் ஆகணுமா? எல்லாரையும் ஓரளவு மேனேஜ் பண்ணிடுவேன் ஆனா கிருஷ்ணா என்னால முடியாது நீயே பேசேன்”, பெருவிரலால் மற்றைய விரல்களை சொடுக்கிட்டுக் கொண்டாள்.
“இவ்ளோ தூரம் எனக்காக பண்றேன்னு வந்து உட்கார்ந்துட்டேல பயப்படாத நான் இருக்கேன்”,
நொடி முட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருக்க, ஹேமாவின் அவஸ்தையும், தேவகியின் அவஸ்தையும் பலமடங்கு கூடிக் கொண்டே போனது.
புரோகிராம் தொடங்கியிருக்க, “ஹாய், ஹலோ, வணக்கம், நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தென்றலின் நைன்ட்டி சிக்ஸ் பாயிண்ட் நைன்”, இதற்கே தேவகிக்கு வார்த்தைகள் திக்கித் திணற தொடங்கியிருந்தது. அவள் கரத்தில் ஹேமமாலினி அழுத்தம் கொடுக்க,
“இன்றைய தென்றல் பொழுதுகளுக்கு உங்களை ஆழ்ந்த அன்போடு வரவேற்கிறேன். நான் உங்கள் ஆர். ஜே. தேவகி. நிகழ்ச்சியில் என்னுடன் பேச நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9682******. பின் இணைப்புக்கு பூஜியம், நான்கு, ஐந்து, இரண்டு”, கூறிவிட்டு அவள் அழைப்புக்கு காத்திருக்க, மீட்ட துடிக்கும் வீணை போல் துடித்துக் கொண்டிருந்தது ஹேமமாலினியின் இதயம்.
ஐந்து நிமிட ஹேமமாலினியின் அவஸ்தை பின்னே அழைப்பு வந்தது.
“ஹலோ…”,
“…..”,
“ஹலோ இணைப்பில வந்துட்டீங்க பேசுங்க”,
“…..”,
“ஹலோ கிருஷ்ணா”,
“என்னாது கிருஷ்ணாவா? என்ன மேடம் மாலினி மேடம் இல்லாம நீங்களா நிகழ்ச்சிய தொகுத்து வழங்கவும் யாரையாவது செட் பண்ணி கிருஷ்ணானு பேசச் சொல்லிருக்கீங்களா?”, அழைப்பில் வந்த முதல் நபரே தேவகியை அழ வைத்துவிடும் அளவுக்கு பேச, அரண்டே போனாள் தேவகி.
ஒருவழியாய் அந்த நபரை சமாளித்துவிட்டு ஏதோ ஓர் பாடலை ஒலிக்க விட்டுவிட்டு ஹேமமாலினியை மூச்சிரைக்க பார்த்து முறைத்திருந்தாள் தேவகி.
“அடியே கிருஷ்ணா அழைப்பில வரல, அழைப்பில வந்த முதல் நபரே உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைன்ற அளவு படுத்தி எடுத்துட்டான்டி இதுக்குமேல என்னால முடியாது”, தேவகி எழுந்து கொள்ள ஆயத்தமாக,
“இன்னிக்குப் பொழுது உனக்கே உனக்குத்தான் எப்படியோ சமாளி. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போயிட்டு வந்துறேன்”, ஹேமமாலினி நழுவிக் கொள்ள,
அடுத்தடுத்து அழைப்பில் வந்து தன்னை அழ வைத்துக் கொண்டிருந்த ஆட்களை முடிந்த மட்டும் கண்ணீரோடு சமாளித்துக் கொண்டிருந்தாள் தேவகி.
ஸ்கூட்டியில் பயணப்பட்ட ஹேமமாலினி சிலநொடி நேர பயணத்தின் பின்னே முத்தரசன் டீ கடை அருகே வந்து நின்றிருந்தாள். அவள் விழிகள் கிருஷ்ணாவை தேட ஒரு ஷேரில் கன்னத்தை தாங்கியவாறு தென்பட்டான் அவன்.
‘அடேயப்பா ஒருநாள் என் குரல் கேட்க முடியலைனா இவ்ளோ சோகம். அச்சோ புள்ளை இன்னைக்கு ரொம்ப ஏமாந்து போயிடுச்சு போல’, மனதுள் எண்ணியவள் அவனையே நோட்டம் விட, முத்தரசன் கிருஷ்ணாவின் அருகில் வந்து நின்றிருந்தார்.
“கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச்சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத்தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே
நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும்
வா வா கண்ணே…”,
நதி கரை தொடும்…
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
