நேச நெஞ்சங்கள் 37

உயிர் உறை 37

தேடல் 13

ஊசி போட்டதால் வீட்டிற்கு வருவதற்குள் சற்று தெளிந்திருந்தான் விநோதன்.

“நீங்க டாக்டரை பார்க்கும்போது, உங்க மேடம் கால் பண்ணாங்கண்ணா. கிளம்பிட்டோம் சொன்னேன். ஹாஸ்பிட்டல் வந்திருக்கிறதை சொல்லல” என்றான் விஸ்வம்.

“ம்ம்ம்” என்ற விநோ, “ரொம்ப டயர்டா தெரியரனா?” எனக் கேட்டான்.

“டல்லாகிட்டிங்கண்ணா.”

விநோவிற்கு இப்போதே தன்னை குறித்து வருத்தம் கொள்ளும் ஆதர்ஷினியின் சுருங்கிய முகம் நினைவில் வந்து இம்சித்தது.

காவல் நிலையம் செல்வதற்கு முன்னிருந்த நிலை நெஞ்சோரம் குளிர் பாய்ச்சியது. வீடு வந்து சேர்ந்ததையே அவன் உணரவில்லை.

விஸ்வம் தான் தட்டி நிகழ் மீட்டான்.

“சாரி… ஏதோ தாட்” என்று வண்டியிலிருந்து இறங்கிய விநோவிடம், “தாட் இல்லை ட்ரீம்” என்றான் விஸ்வம்.

“விசு…” விநோ சுட்டு விரல் காட்டியதில்,

“மீ… எஸ்கேப்” என்று பறந்திருந்தான் விஸ்வம்.

வீட்டின் அழைப்பு மணி அடிக்க துருவன் கதவினை திறந்திருந்த்தான்.

“செக்யூரிட்டி எங்க?” கேட்டிற்கு அருகில் இருக்கை காலியாக இருப்பதை கவனித்து…

கேட்டுக்கொண்டே விநோ உள்ளே செல்ல,

“தூங்கியிருப்பார்” என்றான் துருவன்.

“நீ தூங்கலையா?”

துருவனின் முகம் நோக்கிய விநோ…

“நிரல் எல்லாம் சொல்லியாச்சா?” எனக் கேட்டான். தன் தம்பியின் வேதனை படிந்த முகம் கண்டு.

“விநோண்ணா…” விநோவை பாய்ந்து கட்டிக்கொண்டான்.

“பீ ஸ்ட்ராங் டா” என்ற விநோ, “ஒரு போலீஸா நான் இதை இப்போ சொல்லக்கூடாது. இருந்தாலும் உன்னை இப்படி பார்க்க முடியலடா” எனக்கூறி… “நிரல் கொலை பண்ணல. அதுக்கான எவிடன்ஸ் என்கிட்ட இருக்கு. இப்போ சஸ்பெக்ட் யாருன்னு கண்டுபிடிக்கணும். விடிஞ்சதும் நிரலை இந்த கேஸிலிருந்து ரிலீவ் பண்ணிடலாம்” என்றான்.

“எப்படி விநோண்ணா… நாமதான் நேரிலே பார்த்தோமே?”

“கண்ணால் பார்ப்பதெல்லாம் உண்மையா இருக்கணும் அவசியமில்லை துருவ்” என்ற விநோ, “போய் நிம்மதியா தூங்குடா” என்று துருவனை அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டே தனது அறைக்கு சென்றான்.

துருவ் இருந்த குழப்பத்தில் விநோவின் கையிலிருந்த மருந்து கவரினையோ, அவனது உடல் சூட்டையோ உணரவில்லை.

உறங்காமல் இருந்தாலும் அவன் திட்டிவிட்ட வருத்தத்தில் உறங்குவது போல் கண் மூடி படுத்திருந்தாள் ஆதர்ஷினி.

அறைக்குள் நுழைந்த விநோதன், சிலை போன்ற ஆதர்ஷினியின் அசையாத நிலையிலேயே தூங்கிவில்லை என்பதை கண்டுகொண்டான்.

ஆடைமாற்றி வந்தவன் அவளை விட்டு விலகியே படுத்தான்.

ஆதர்ஷினி தான் சிறிது நேரம் பொறுத்திருந்துப் பார்த்துவிட்டு அவனை ஒட்டி படுத்தவள்,

“எதுக்குடா அந்த கத்து கத்துற… ரவுடி போலீசுக்கு பொண்டாட்டி மேல கோபமெல்லாம் வருது?” எனக் கேட்டு அவனின் மீசையை வலிக்க இழுத்து வைத்தாள்.

“அவுச்… வலிக்குதுடி” என்றவன் அவளை இறுகக் கட்டிக்கொள்ள… திமிறி விலகினாள்.

“இவ்வளவு சுடுது” என்றவள், “வாங்க ஹாஸ்பிடல் போவோம்” என்று எழ, “போயிட்டு தான் வரேன்” என்று அவளை பிடித்து தன்னருகில் அமர வைத்தவன் தலையை அவளது மடியில் வைத்து முகம் புதைத்துக் கொண்டான்.

அவனது உடல் வெப்பநிலை ஆடை தாண்டி அவள் மடி பரவியது.

“எனக்கே இவ்வளவு சுடுது. இன்ஜெக்ஷன் போட்டாங்களா?” என்று அவனிடம் வினவியவள், அவனது கேசத்தில் தன் விரல்களை அலைய விட்டிருந்தாள்.

“ம்” என்று முனகியவன் அரை உறக்கத்தில்… “குளிருது ஆது” என்றிட அவனை தன் மடியோடு போர்த்தி தட்டிக்கொடுத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவனிடம் அரற்றல் சத்தம் வேறு.

சூடு அதிகமாகியிருப்பதை கண்டு பயந்தவள், அவனின் தலையை மெல்ல தலையணையில் வைத்துவிட்டு, ரூமில் ஹீட்டரை சற்று அதிகப்படுத்தினாள்.

துணியை தண்ணீரில் நனைத்து அவனின் நெற்றியில் வைத்து வைத்து எடுக்க… மணியை கவனித்து மாத்திரை விழுங்கச் செய்தாள்.

அவனுக்கு முன்பே உட்கார்ந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தவள், சட்டென்று விழித்து அவனது உடல் வெப்பத்தை பரிசோதிக்க மெல்ல குறையத் தொடங்கியிருந்தது.

மணியைப் பார்த்தவள் அவனுக்கு போர்வையை நன்கு போர்த்திவிட்டு, அடுத்த பக்கம் சென்று படுக்க… வியர்த்ததில் உறக்கம் கலைந்தவன் போர்வையை விலக்கிட…

“குளிரல?” எனக் கேட்டாள்.

“குளிருது தர்ஷி” என்றவன் அவளை நெருங்கிப்படுத்தான்.

“அப்போ ஏன் பெட்ஷீட் தள்ளிவிட்டிங்க?” என்றவள் மீண்டும் போர்த்திவிட, அவன் மீண்டும் தள்ளிவிட்டான்.

“விநோ” என்றவள் எழுந்து மெத்தையில் அமர்ந்த நிலையில் இடுப்பில் கைகள் குற்றி அவனை முறைக்க, அவளின் கரம் பற்றி இழுத்தான்.

அவன் இப்படி இழுப்பானென்று எண்ணாதவள், அவன் மீதே குப்புற விழுந்தாள்.

அவளை இடையோடு நெருக்கமாக சேர்த்து தனக்குள் அழுத்தியவன்,

“இப்படி கூட குளிரை குறைக்கலாம்” என்றான் அவளின் காதில் மெல்லொலியில்.

“உங்களுக்கு இப்போ காய்ச்சல் இருக்கு.” அவனது அணைப்பில் நெளிந்தவளாய் முனகினாள்.

“மருந்து கொடுத்தா சரியாப்போகும்.” தனனுடைய அதரம் அவளின் காது மடல் உரசிடக் கூறினான்.

தேகம் சிலிர்த்து நாணியவள்,

“கொடுத்திட்டனே” என்றாள் அவனுக்கு நிகரான ஹஸ்கி குரலில்.

“உன்கிட்ட இருக்கும்போது எப்படி கொடுத்திருப்ப” என்றவனின் பேச்சு புரியாது குழம்பியவள், புரிந்ததும் அவனின் தோளிலே அடித்தாள்.

“எனக்கு காய்ச்சல் டி. இப்படி அடிக்குற.”

“அப்போ அது மட்டும் ஓகேவா இப்போ?”

“நான் தான் முன்னவே சொன்னனே ஆரம்பித்ததை முடித்துதான் பழக்கமுன்னு.” அவனது கைகள் அவளின் முதுகில் எல்லை மீற ஆரம்பித்திருக்க… அவளோ அவனுள் இன்னும் ஆழ தன்னை புதைத்துக் கொண்டிருந்தாள்.

“விநோவோட இந்த காய்ச்சலுக்கான மருந்தின் பெயர் ஆதர்ஷினியாம்.”

“ஆஹான்…”

“என்னடி?” என்றவன் அவளின் இடையில் குறுகுறுப்பை உண்டாக்கினான்.

“விநோ…”

“இந்த அதர்ஷினியோட விநோ.” அவளின் உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

“ரொம்ப பண்றீங்க.”

வார்த்தையாலே அவளை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் ஒண்ணுமே பண்ணலடி…”

“அய்யோ” என்றவள் அவனின் நெஞ்சத்தை முட்டி முகம் மூடினாள்.

“என்னை பாரு ஆது” என்றவன் அவளின் கன்னம் பற்றி தன் முகம் காணச்செய்து விழிகளோடு விழிகள் கலந்து உறவாடியவனின் பார்வை மெல்ல மெல்ல கீழிறங்கி அவளின் செவ்விதழில் நிலைத்தது.

“ஜஸ்ட் மெல்ட்டிங்” என்று பெருவிரலால் அவளின் இதழ் வருடியவன் சட்டென்று தன் இதழ் பொருத்தியிருந்தான்.

இதழ்கள் இணைந்து உள்ளுக்குள் உணர்வுகள் உடைப்பெடுக்க… சில்லென்ற இதமும், தவிப்பின் வெம்மையும் ஒன்றாக தேகங்களை அரவணைக்க… இதழ்களும் கைகளும் தங்களது ஆதிக்கத்தை மற்றவரின் உடலெங்கும் செலுத்த துவங்கின.

இரு உயிர்கள் கலந்து… நீ, நான் என்கிற வேறுபாடு முற்றும் கலைந்து நாம் என்றாகினர். ஒவ்வொரு நொடியிலும் தன் இணையை காத்து… தடுமாறிய கணம் வழிநடத்தி… தேடல்களை முழுதாய் உணர்த்தி… தேடிப்பெற்ற இன்பத்தில் மொத்தமாய் சங்கமித்தனர்.

இயல்பாய் இயற்கையாய் அவர்களுக்குள் ஓர் புனிதம் அரங்கேறியது. மண பந்தத்தின் வாழ்வியலை காதலாய் ஒருவர் மீது ஒருவர் கொண்ட நேசத்தால் தொடங்கியிருந்தனர்.

இருவரின் கைகளும் பின்னிக்கொண்டது மட்டும் தான் நினைவிருக்கிறது. நேரம் கடந்திருக்க… கலைந்த ஓவியமாக தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி துயில் கொண்டிருந்த மனைவியின் கேசம் ஒதுக்கி நெற்றியில் இதழ் பதித்தவன்,

“லவ் யூ ஆதும்மா” என்றிட…

“நானும்” என்றவள் அவனில் சரிந்து விலக…

அங்க உரசலின் தீண்டலில் அங்கே மீண்டும் உணர்வுகளுக்குள் தீப்பற்றிக்கொண்டது.

களைத்து மறுத்தவளை தன்வழிக்கு உடன்படவைக்கும் வித்தையை நன்கு அறிந்திருந்தவன், தன்னவளையும் தன்னில் தேட வைத்து, அவளுள் தொலைந்து போனான். முடிவில் ஒருவரையொருவர் அணைத்தவர்களாக உறங்கிப்போயினர்.

காலையில் கண் விழித்த ஆதர்ஷினி, அவனுள் தன்னை புதைத்து வைத்திருந்த அவனின் கரம் விலக்கி எழுந்தவள் அவனது உடல் சூட்டினைத்தான் முதலில் பரிசோதித்தாள்.

காய்ச்சல் முழுதாய் விட்டிருக்க அவனுக்கு நன்கு வியர்த்திருந்தது.

அப்போதுதான் அவளிடம் ஓர் ஆசுவாசம்.

“நான் தான் சொன்னனே.” கண்களை மூடிக்கொண்டே சொல்லியவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரியாது…

“என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள். மெத்தையை விட்டு இறங்கியவளாக.

“விநோக்கான மருந்து ஆதர்ஷினின்னு. சொன்ன மாதிரியே ஆது மேடம் மருந்து கொடுத்ததும் காய்ச்சல் போயேப்போச்சு” என்றபடி கண்களை திறந்து இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் வைத்தவனாக சரிந்து பாதி நிலையில் அமர்ந்தவன்… “உண்மை தானே ஆதும்மா?” என்று விஷமமாகக் கேட்டான்.

விநோவின் பேச்சில் நாணம் மேலிட… முன்னிரவின் நினைவில் அவனின் முன்பு நிற்க முடியாது குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.

“மே ஐ…”

“போதும்.”

விநோவின் வாக்கியம் முற்று பெரும் முன்னரே… மூடிய கதவு வழியாக ஒற்றை வார்த்தையில் அவனை அடக்கியிருந்தாள்.

விநோவின் அட்டகாசமான சிரிப்பு அவளிடமும் புன்னகையைத் தோற்றுவிக்க… குளியலறை கதவில் சாய்ந்து நின்று தன்னவனின் காதல் பரிமாணத்தை மூடிய கண்களுக்குள் ரசித்திட்டாள். இரவின் நிகழ்வை மனதோடு அசைப்போட்டு மகிழ்வு கொண்டாள்.

“லவ் யூ விநோ.” சொல்லிக்கொண்டவள் குளித்து முடித்து வெளியில் வர மீண்டும் விநோதன் உறங்கியிருந்தான்.

“என்னாச்சு விநோ…”

திரும்ப உடல் நிலை கீழிறங்குகிறதோ என்று அவனைத் தொட்டு வினவினாள்.

“இல்லடா… டயர்ட்னெஸ் இருக்கு. கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்” என்றான். அரை தூக்கத்தில்.

“இதுக்குத்தான் அப்போவே அது…”

வேகமாக அவளின் வாயில் கை வைத்து பேச்சினை தடுத்தவன்,

“எது?” என்று புருவ தூக்கலுடன் வினவினான்.

“ஏன் இப்படிலாம் பண்றீங்க?” என்று சிணுங்கியவள், “உங்களுக்கு பேசவே தெரியாதுன்னு நினைச்சேன்” என்றாள்.

“நீயா நினைச்சா நான் என்னடி பண்றது” என்றவன், “இன்னும் பேசுவேன். உன்கிட்ட மட்டும்” என்றதோடு அவளின் காதில் ஏதோ முணுமுணுக்க,

“வ்வ்வா…” வாயில் கை வைத்தவள் “ரொம்ப பேசறீங்க” என்றவள் அவன் முன் நிற்க முடியாது ஓடியிருந்தாள்.

காவல் நிலையம் செல்வதற்கு ஏதுவாக கிளம்பி வந்த விநோ, விஸ்வத்திற்கு அழைத்து தன்னுடைய இருசக்கர வாகனத்தை காவல் நிலைய டிரைவரிடம் கொடுத்தனுப்ப சொல்ல… விநோவின் உடல்நிலை விசாரித்த விஸ்வம் அவன் சொல்வதை செய்வதாகக் கூறி வைத்தான்.

ஆதர்ஷினி சொல்லிய பின்னர் தான் விநோவின் காய்ச்சல் பற்றி தெரிந்திருக்க… அனைவரும் விசாரித்த பின்னர் உணவு உண்ண ஆரம்பித்தவன்,

“நான் கால் பன்றேன் துருவ். அப்போ நிரல்யாவை ஸ்டேஷன் கூட்டிட்டு வா” என்றான்.

“ஏன்’ப்பா” என்று பதறிய பூரணி, “என்னாலதான் இவள் இந்த சிக்கலில் மாட்டிக்கிட்டாள். நான் அவளுக்கு துணையா திவாகர் விஷயத்தில் தைரியம் கொடுக்காம இருந்திருந்தா, அவள் அவனுக்கு எதிரா கேஸ் கொடுத்திருக்கவே மாட்டாள்” என்று வருந்தினார்.

“உங்களால் பல பொண்ணுங்க லைஃப் சேவ் ஆகியிருக்கு’ம்மா. வருந்தாதீங்க. நிரல் நிரபராதி. இன்னைக்கு எல்லாத்தையும் முடிச்சிடுறேன்” என்று நம்பிக்கை அளித்தான்.

துருவனுக்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றி நிரல்யாவை கொலை வழக்கிலிருந்து முழுதாய் வெளி மீட்டிருந்தான் விநோதன்.

கொலையாளி எதிர்பார்க்காத ஒரு நபர். துருவனுக்கு மட்டுமே உண்மை அதிர்வை கொடுத்தது.

*******************

விநோ காவல் நிலையம் செல்ல வெளியில் வர, அவனது இருசக்கர வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் கான்ஸ்டபிள்.

“ட்யூட்டி முடிஞ்சுதா சேகர்?”

“முடிஞ்சுது சார்.” சொல்லியவர் விநோவிடம் விடைபெற, “உங்கவீடு எங்கிருக்கு?” எனக் கேட்டான்.

“உங்க ரிசார்ட்டுக்கு பின்னுக்க இருக்க மலையில் சார்” என்ற சேகரிடம், “ஏறுங்க” என்று தனக்கு பின்னால் காட்டினான்.

“இல்லை வேணாங்க சார். பாதைகிட்ட போனால், ஜீப் ஏதாவது வரும்” என்று மறுத்தவரை வம்படியாக வண்டியில் ஏற வைத்திருந்தான்.

விநோ வெளியில் சென்று நிமிடங்கள் பல கடந்தும் அவனது வண்டியின் சத்தம் கேட்காததால் வெளியில் வந்து பார்த்த ஆதர்ஷினியை, வண்டியின் கண்ணாடி ஊடு கண்டவன் திரும்பி என்னவென்று உருவம் உயர்த்தினான்.

ஒன்றுமில்லையென அவள் தலையை இட வலமாக அசைத்திட முன் திரும்பி கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தை, கண்ணாடியை சரி செய்வதுபோல் தொட்டு வாயருகே விரல் வைத்து ஊதிட… அங்கே அவள் மேனி அவன் சுவாசம் தீண்டியதாய் சிலிர்த்தது.

“விநோ…” என்று சத்தமின்றி உதடசைத்து, சுட்டு விரல் நீட்டி அதடியவளை திரும்பிப் பார்த்து கண்சிமிட்டியவன் தலையசைப்புடன் புறப்பட்டிருந்தான்.

“நீங்கலாம் இன்னும் ஏன் அங்கயே இருக்கீங்க?”

சில நிமிடங்களுக்கு பின்னர் விநோ பேச்சுக்கொடுத்தான்.

“புரியலையே சார்?”

“இப்போ நீங்களும்… தப்பா எடுத்துக்காதீங்க, உங்க இன மக்களும் நல்ல நிலையில் ஐ மீன் படிப்பில் வேலையில் அப்படின்னு வெளி உலகத்திற்கு வர ஆரம்பிச்சிட்டீங்க. அப்புறமும் ஏன் மலையில காட்டுக்குள்ளே இருக்கீங்க?” எனக் கேட்டான்.

“வேர்ன்னு ஒண்ணு இருக்குங்களே சார். அங்க மட்டும் தான் சார், எங்க வேர் நிலைச்சு நிக்கும்.” அவர் சொல்லிய பதில் விநோவிற்கு அத்தனை பிடித்தது.

“இப்போ எங்களில் படிக்காத ஆளுங்க கூட உங்க ரிசார்ட்டில் தான் வேலைக்கு போறாங்க. எல்லாம் துருவ் தம்பி ஏற்பாடு தான். முன்ன மாதிரி காட்டுக்குள்ள தேன் எடுக்க, வேட்டையாட அனுமதி இல்லை. சுள்ளி பொறுக்கக்கூட தடை போட்டுட்டாங்க சார். வயித்து பிழைப்புக்கு என்ன பண்றதுன்னு தெரியாமல் கலங்கி நின்னவங்களுடைய நிலைமை தெரிஞ்சு, துருவ் தம்பி தான் ரிசார்ட்டில் தோட்டம், துப்புறவுக்குன்னு வேலையில் அமர்த்தினார்” என்று அவன் கேட்காததையும் சொல்லிக்கொண்டு வந்தார்.

விநோவுக்கு வேண்டியதும் அதுதானே. அவனாக அவர்களைப்பற்றி விசாரித்தால் சந்தேகம் எழும். அதனை தவிர்ப்பதற்கே இப்படி சுத்தி வளைத்து அவரை பேச வைத்திருந்தான்.

“அப்போ இப்போ நீங்க யாரும் வேட்டையாடுறது இல்லையா?” விநோ சாதாரணமாக கேட்பதைப்போல் வினவினான்.

சேகர் யாரென்று தெரிந்துகொண்டே தான், தனக்கிருக்கும் யூகத்தை வைத்து அவரை நேரடியாக விசாரித்து அறிய முடியாதென்று… தன்னுடைய வண்டியை எடுத்துவர வைத்த சாக்கில் சாதாரண உரையாடல் போல் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

“இல்லை சார். வேட்டையாடுறதெல்லாம் விட்டு ரொம்ப வருசம் ஆச்சு சார். எங்க ஆளுவ யாரும் இப்போலாம் துப்பாக்கி தூக்குறது இல்லைங்க” என்றார்.

‘அப்புறம் அங்கெப்படி துப்பாக்கி சவுண்ட்… திவாகரை சுட்டது யார்?’ மனசுக்குள்ளே கேள்வி எழுந்தது.

“இங்க… இங்க தான் சார். இந்த பாதையிலே நிறுத்திடுங்க” என்ற சேகர் இறங்கிக்கொண்டார்.

அங்கு காட்டிற்குள் செல்ல இன்னும் சிலர் ஜீப்பிற்காகக் காத்திருந்தனர்.

அதில் ஒரு பெண்ணை விநோ கூர்ந்து நோக்கிட…

“இந்த பொண்ணோட அப்பா கூட ரிசார்ட்டில் தான் வேலை பார்க்கிறார்” என்றார் சேகர்.

அப்பெண்ணை எங்கோ பார்த்தது போலிருக்கிறது என்றுதான் விநோ யாரென்று யோசனையாய் பார்த்தான். இப்போது சேகர் சொல்லவும், ரிசார்ட்டில் அவளுடைய தந்தையை காண வந்தபோது பார்த்திருக்கலாம் என்று அவனாக ஒரு யூகம் வைத்து வண்டியை கிளப்பிட… விநோவின் பார்வையை உணர்ந்த அப்பெண் வேகமாக அருகிலிருந்தவருக்கு பின்னால் மறைந்து கொண்டாள்.

‘போலீஸ் பார்வை பயம் கொள்ளச்செய்திருக்கும்’ என நினைத்தவனுக்கு மனதிற்குள் ஒரு நெருடல். எதையோ அவனுக்கு உணர்த்திட முயன்றது.

அவன் மனமே அவனுக்கு புரியவில்லை.

ஆனால் கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஒன்றை தவறவிடுகிறான். மூளை கிரகிக்க முயன்றது.

யோசனையோடே காவல் நிலையம் வந்து சேர்ந்தவன்…

நிரல்யா குற்றவாளி இல்லை என்பதற்கான அனைத்து காரணங்களையும் தகுந்த விளக்கங்களுடன் கோப்புக்குள் அடக்கியவன், மனதின் காட்டிக்கொடுப்பு விளங்காது அப்படியே அமர்ந்திட்டான்.

“என்னாச்சு சார்?”

விநோ தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, விஸ்வம் அருகில் வந்து கேட்டான்.

“ஏதோ ஒன்னு… என் கண்ணுக்கு முன்னாடி தான் இருக்கு. பட் மிஸ் பன்றேன் விசு” என்று மேசையை ஓங்கி குத்தியவனின் கண்முன் மீண்டும் மீண்டும் மலைப்பாதையில் தன்னை கண்டு மறைந்த பெண்ணின் முகம் தோன்றி மறைந்தது.

“ஓ ஷிட்” என்றவன், வேகமாக எழுந்திருக்க, அவன் இப்படி சட்டென்று எழுவானென்று அறியாத விஸ்வம் விலகுவதற்கு முன் விநோ அவன் மீது மோதி நிலை தடுமாறிய காலை அழுந்த ஊன்றி நிலையாக நின்றான்.

இருவருக்குமான மோதல் மனதின் குரலை காட்டிக்கொடுத்தது.

“காட் இட்” என்று விஸ்வத்தின் இருபக்க தோளையும் பிடித்தவன்… “வெளிய போகனும் விசு” என்றதோடு,

வேகமாக துருவிற்கு அழைத்திருந்தான்.

“விநோண்ணா… கிளம்பவா?”

நிரல்யாவை அழைத்து வர சொல்லியது துருவனின் கேள்வியில் நினைவுவர,

“இப்போ வேண்டாம்” என்றவன், “நீ நம்ம நியூ ரிசார்ட் வந்திடு. க்யூக்” என்றவன் விசுவுடன் கிளம்பியும் இருந்தான்.

“கோ ஃபாஸ்ட் மேன்” என்ற விநோவின் வேகத்திற்கு விசுவால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

“அண்ணா என்னாச்சு… நீங்க இவ்வளவு டென்ஷனா இருந்து பார்த்ததே இல்லையே?” என்ற விஸ்வத்திடம், “சஸ்பெக்ட் யாருன்னு தெரிஞ்சிடுச்சு” என்றான்.

*****

துருவனிற்கு முன்பு விநோ ரிசார்ட்டில் இருந்தான்.

“என்னாச்சு விநோண்ணா… ஸ்டேஷன் வரசொல்லிட்டு, இப்போ… இங்க வர சொல்லியிருக்கீங்க?” என்றவன், அலுவலக அறைக்கு வெளியில் நின்றிருந்த இருவரையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய அறை வந்து அமர வைத்தான்.

“நிரல்யா கேஸ் சமந்தப்பட்டதா விநோண்ணா?”

“ம்..”

துருவ் விஸ்வத்தை பார்க்க…

“நிரல்யாவை இதிலிருந்து விடுவித்ததும் இந்த கேஸை டீல் பண்ணப்போறது விசு தான். அவனும் இருக்கனும்” என்றான் விநோதன்.

மேற்கொண்டு துருவ் எதுவும் பேசவில்லை… அங்கு, தான் வந்த வேலையை முடித்துகொண்டு கிளம்பிய விநோ,

“நிரல்யாவை கூட்டிட்டு கோர்ட் வந்திடு துருவ். இன்னைக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தனும்” என்றான்.

மேஜிஸ்ட்ரேட் முன் நிரல்யா குற்றவாளி இல்லை என்பதற்கான விளக்கம் கொடுக்கத் தயாராகினான் விநோதன்.

திவாகர் நிரல்யாவால் கொல்லப்படவில்லை. நிரல்யாவின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்த குண்டின் அளவும், திவாகரின் உடலிலிருந்த குண்டின் அளவும் வேறு வேறு.

திவாகரின் உடலிலிருந்து பெறப்பட்ட குண்டு… பொதுவாக நாட்டு வகைத் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்டு சற்று மெலிந்து நீண்ட அளவிலான ரக குண்டு.

அதனைப்பற்றிய விளக்கம் உடற்கூறு ஆய்வு அறிக்கையின் தகவலில் இருந்து தெரிந்துகொண்ட விநோவிற்கு அங்கு தான் தன்னுடைய முதல் சந்தேகம் எழுந்தது.

நிரல்யாவின் கையிலிருந்து பெறப்பட்ட துப்பாக்கியை பிரித்து பார்க்க அதில் ஒரு குண்டு மட்டுமே இருந்தது. அதனை எடுத்து, திவாகரின் உடலிலிருந்த குண்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போதுதான் பொதுவாக அந்த வகை குண்டுகள் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேட்டைக்கு பயன்படுத்துவர் என்பது தெரிந்தது.

அச்சமயம் கூட யாரோ வேண்டுமென்று திவாகரை… அதாவது கொலை செய்ய வேண்டுமென்று சுட்டிருக்க மாட்டார்கள், வேட்டையின் போது பறவைக்கு வைத்த குறி திவாகரின் உடலில் பாய்ந்துவிட்டது என்றே நினைத்தான். அதனால் தான் சேகரிடம் இன்னமும் துப்பாக்கி சுடும் பழக்கம் அவர்களிடம் இருக்கிறதா என்பதை பேச்சுவாக்கில் அறிந்திட முயற்சித்து தெரிந்துகொண்டான்.

அத்தோடு நிரல்யா திவாகருக்கு முன்னின்று சுட்டிருக்க… குண்டு துளைத்ததோ திவாகரின் பின்னுடலை.

நிரல்யாவின் கையிலிருந்த துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருந்திருக்க, அதுவும் லாக் ரிலீஸ் செய்திடாமல் நிரல்யா டிரகரை அழுத்தியிருக்க, குண்டும் வெளிவரவில்லை. இரண்டாவது முறையாக துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கவில்லை.

விநோ சொல்லிட இதனை அடிப்படையாகக் கொண்டே, நிரல்யா திவாகரை கொலை செய்யவில்லை என்பது ஊர்ஜிதமாக அன்றே அவ்வழக்கிலிருந்து நிரல்யா நிரபராதியென்று மொத்தமாக விடுவிக்கப்பட்டாள்.

கொலையாளி யாரென்பதை விரைந்து கண்டுபிடிக்குமாறு கோர்ட் காவல்துறைக்கு உத்தரவிட விஸ்வம் விநோவை அர்த்தமாக ஏறிட்டான்.

விநோ கண்களை மூடி திறந்தான்.

“குற்றவாளியை இப்போதே கோர்ட்டில் சமர்ப்பிக்க அனுமதி வேண்டும்” என்று கேட்ட விநோ, நீதிபதியின் அனுமதியில் விஸ்வத்தை வழக்கினை விவரிக்கக் கூறினான்.

இது சாதாரண கொலை வழக்கு. இதற்கு துணை ஆணையர் விசாரணையில் இறங்குவது அதகப்படி. நிரல்யாவிற்காக மட்டுமே தானே வழக்கில் ஈடுபட்டிருந்தான். இதற்கு மேல் தான் தலையிடுவது அதிகப்படி என்பதாலேயே விஸ்வத்திடம் ஒப்படைத்தான்.

இந்த கொலையில் விநோவின் சந்தேகம் விழுந்தது அன்று துருவ் மற்றும் விநோ நிரல்யாவை தேடி காட்டிற்குள் செல்லும்போது துப்பாக்கி சத்தம் கேட்ட அடுத்த கணம் விநோவின் மீது மோதிய பெண்ணின் மீது தான்.

அந்த பெண் தான் விநோவை கண்டு ஒளிந்தவளும். அவளின் மறைவிற்கு இதுதான் காரணமென்று அப்போது விநோ அறிந்திருக்கவில்லை.

அவளின் தந்தை துருவனின் ரிசார்ட்டில் தான் தோட்டக்காரராக பணி புரிகிறார்.

விநோ ரிசார்ட்டிற்கு சென்றதற்கு காரணம் இதுதான். விநோ மீது அப்பெண் மோதியதும், துருவன் தனக்குத் தெரிந்த பெண்ணென்று சொல்லியதால், விஸ்வத்தின் மீது எதிர்பாராத மோதியதில் அப்பெண்ணின் நினைவு வர, துருவனிடம் விசாரிக்க ரிசார்ட் வந்துவிட்டான்.

வீட்டில் வைத்து கேட்டால், நிரல்யா பாதிக்கப்படுவாள் என்பதால் இங்கு வைத்து கேட்டான்.

காட்டுப்பகுதியில் விநோ பார்த்த பெண் குழலி. அவளது தந்தை மாடசாமி. அக்கா கல்யாணி. காட்டுப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

மற்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதைப்போல் கல்யாணியிடமும் திவாகர் நடந்து கொண்டிருக்கிறான். இதில் கல்யாணி திவாகரின் வதையில் மொத்தமாக இவ்வுலகை விட்டு சென்றிருந்தாள்.

கல்யாணியின் இறப்பு அவளின் குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தை கொடுக்க… அதிலிருந்து மீள முடியாது துடித்துக் கொண்டிருக்கையில் தான், திவாகரை மாடசாமி ரிசார்ட்டில் தோட்டவேலை செய்யும்போது பார்த்திருக்கிறார்.

பெண்ணின் இறப்புக்கு காரணமானவனை கொலை செய்யும் வெறி எழ, அதற்காக தக்க தருணம் எதிர்பார்த்து காத்திருந்தவர், திவாகர் நிரல்யாவை அழைத்துச் செல்லும்போது பின் சென்றார்.

தந்தையை தனித்து விடமுடியாதென குழலியும் அவருடன் வந்திருந்தாள்.

திவாகரை சுடுவதற்கு தயாராக மறைந்திருந்த மாடசாமி, திவாகர் நிரல்யாவிடம் அத்துமீற முயல்வதைக் கண்டதும் குறி பார்த்து சுட்டிருந்தார்.

அடுத்த கணம் ஆட்களின் அரவம் உணர்ந்து, விநோ மற்றும் துருவனை அங்கு கண்டவர் குழலியை ஓடிவிட சொல்லிவிட்டு அவர் குகைக்கு முன்னிருந்த பள்ளத்தில் சரசரவென்று இறங்கியிருந்தார். வேட்டைக்கு சென்று பழக்கமிருந்ததால் அவருக்கு அது எளிதானதாக இருந்தது.

மாடசாமி ஓடிவிடு என்றதும், பயத்தில் விநோ இருந்த திசையிலேயே ஓடியது தான் அவர்கள் இப்போது மாட்டுவதற்கு காரணமாக இருந்தது.

துருவனின் மூலம் மாடசாமியை அழைத்து விசாரித்த போது…

“இதில் எங்களால் இன்னொரு பொண்ணு மாட்டியிருக்கிறது தெரியாது சார். தெரிந்திருந்தால் நானே வந்து உண்மையை ஒத்துக்கிட்டிருந்திருப்பேன்” என்று விநோவிடம் சொல்லிய அனைத்தையும் விஸ்வத்தின் வாயிலாக மாடசாமி நீதிபதியின் முன்பு  சொல்லியிருக்க… அவரே செய்த தவறை ஒப்புக்கொண்டதாலும், கொலை செய்யப்பட்ட திவாகர் போலீஸ் தேடும் குற்றவாளி என்பதாலும், மாடசாமிக்கு குறைந்த அளவில் தண்டனையாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

மாடசாமியை விஸ்வம் சிறைக்கு அழைத்துச்செல்ல…

அவரின் அருகில் சென்ற துருவன், குழலியை தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி, மகளை நினைத்து பரிதவித்தவரை ஆற்றுப்படுத்தினான்.

அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் துருவன் விநோவை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

அவனது மனைவி அவனுடன் இருக்க காரணம் விநோ அல்லவா.

துருவனின் நெஞ்சம் உருகிய தருணம் அது.

மொத்தமாக ஓய்ந்து போனவளாக கதறிதுடித்த நிரல்யாவை ஆதர்ஷினியும், கோகிலாவும் மடி தாங்கி ஆறுதல் படுத்தினர்.

சில நாட்களுக்குப் பின்னர் அக்குடும்பத்தில் மகிழ்வான தருணம்.

பூரணி தன் பிள்ளைகள் ஐவரையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி எடுத்த பின்னரே உள்ளே அனுமதித்தார்.

நிரல்யாவின் கஷ்டங்கள் யாவும் துருவனின் அருகில் காணாமல் கரைந்து போனது. அதற்கு காரணமாக இருந்த விநோவின் மீது இருவருக்குமே மரியாதையும் அன்பும் பல்கிப்பெருகியது.

தன் மக்களின் ஒற்றுமை ஒன்றே தன்னுடைய மகிழ்ச்சி என்று கண் கலங்கிய பூரணியை ஐவரும் கட்டிக்கொண்ட காட்சி கவிதையாய்.

அன்றைய இரவின் தனிமையில்…

தேடி கிடைத்த தன்னுடைய பொக்கிஷம் பாதகனின் கையில் அகப்பட்டு சீர்கெட்டுவிடுமோ என்ற துருவனின் தவிப்புகள் யாவும் தன் கையில் அடங்கியிருந்த தன்னவளின் விழிகளிலும் நெருக்கத்தில் மெல்ல கரைந்து கொண்டிருந்தது.

வேறெந்த கரங்களும் தன்னை இத்தனை பொத்தி பாதுகாத்திடாது என்பதை சில நிகழ்வுகளில் கண்டுகொண்ட நிரல்யா, தன்னவனின் ஆதிக்கத்தில் தன்னை மொத்தமாக ஒப்புவித்திருந்தாள்.

ஒற்றை ஆளாக குடும்பத்தை எவ்வித பாதக சூழலிலிருந்தும் அரணாக நின்று காக்கும் கணவனை தன்னுடைய விநோவை அன்று தனது கட்டுப்பாட்டிற்குள் ஆட்டி வைத்து அடக்கினாள் விநோவின் ஆதர்ஷினி.

இரு ஜோடிகளும் தத்தம் இணையுடன் அன்றைய இரவினை ஆனந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்க…

ஒருவனின் ஆன்மா துடித்துக் கொண்டிருந்தது.

*****

‘எந்தன் தேடல் உனைச் சேரும்.’

கதையின் இரண்டாம் காதல் முடிவடைந்தது.

துருவன் ❤️ நிரல்யா காதல் முற்று பெற்றது.

அடுத்த பாகத்திற்கும், முடிந்த இரண்டு பாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது.

விநோதன் வருவான்…

error: Content is protected !!
Scroll to Top