கையில் வைத்திருக்கும் கடிகாரம் சிரிக்க, நண்பர்கள் நால்வரும் விக்கித்துப் போய் நின்றனர். ராகவ் ஓரு படி மேலாக, “பேய்”, எனக் கத்தி அந்த அலாரத்தை தூக்கி ஏறிய,
“ஐயோ… டேய் மாட்டுப்பல் காரா, ஏன் டா என் இடுப்பை ஓடைச்ச”, எனக் கேட்டுக் கொண்டு எலிக்குட்டி போல நடந்த வந்தது அலாரக் கடிகாரம்.
“அம்மா… என்னை யாராச்சும் காப்பாத்துங்க. பேய்… பேய்”, எனக் கதறினான்.
“யாரை டா பேயின்னு சொன்ன… நீ பேய், உன் ஆள் பேய், உன் கூட இருக்கிற எல்லாரும் பேய்”, என்றது அலாரம் கோவமாக.
“வாங்கடா ஓடிர்லாம்”, என திரு சொல்ல,
“வா போலாம். எனக்கும் இங்கேயே இருந்து போர் அடிக்குது”, என அலாரம் சொல்ல.
“பேய் ஒட்டுற சாமியார் கூட்டிட்டு வரணும் டா. எனக்கு பயமா இருக்கு டா”, என விஷ்வா சொல்ல.
“லிசா இல்லனா உஷான்னு போற நாய், எனக்கு பேய் ஓட்ட போறியா?”, என நான்கு பேரையும் லெஃப்ட் ரைட் வாங்கியது அலாரம்.