பார்த்திபனின் கயல்விழியாள் 16

அத்தியாயம் 🌾 16 :

“கிளம்பிட்டியா?”

“ஆமா கயல்.”

கயலின் கேள்விக்கு மலரை பார்த்துக்கொண்டே பதில் வழங்கினான் முகிலன்.

“என்ன மலர் காலேஜ் போறீயா?”

“ஆமாக்கா… வீட்டிலிருக்க என்னவோ மாதிரி இருக்கு.”

தனிமை சில நேரங்களில் மனதின் அமைதியை குலைக்கும் காரணி.

“நீங்களும் வயலுக்கு போய்டுறீங்க. வீட்டில் யாரும் இருக்கிறதில்லை. இப்போ மாமாவும் கிளம்புறாங்கா.”

மலரின் வாயிலிருந்து இப்போது எவ்வித தடையுமின்றி மாமா என்கிற அழைப்பு வந்ததில் முகிக்கு அளவற்ற ஆனந்தம்.

“தனியா இருந்தா கண்டதையும் யோசிக்கத் தோணுதுக்கா. அதான் காலேஜூக்கு கிளம்பிட்டேன்.”

மலர் சொல்லுவது சரியெனத் தோன்றினாலும், கயலுக்குள் அவளை கல்லூரி அனுப்பவதா வேண்டாமா என்ற கேள்விகள் ஊசலாடின. அதே சமயம் எவ்வளவு நாட்கள் வீட்டுக்குள்ளே வைத்திருக்க முடியுமென்கிற வினாவும் எழுந்தது.

“எதுவும் யோசிக்காத கயல். அவளே திடமா இருக்கும்போது, நாம மறுத்து பேசி அதை குலைக்க வேண்டாம்.”

முகியின் பேச்சினை ஏற்ற கயல் மனதில் எழுந்த அலைப்புறதலோடு தான் மலருக்கு சம்மதம் வழங்கினாள்.

“உங்களுக்கு வேண்டான்னா, நான் காலேஜ் போகலக்கா.”

கயலின் சுருங்கிய முகத்தைக் கண்டு மலர் உடனடியாகத் தெரிவிக்க…

“நீ காலேஜ் போக வேண்டாங்கிற எண்ணமில்லை மலர். அந்த ரகு… அவனை நினைத்தால் தான்…” என்று வாக்கியத்தை முடிக்காது கயல் தயங்கினாள்.

“எனக்கும் புரியுதுக்கா. எத்தனை நாள் அவனுக்கு பயந்து இப்படியே இருக்க முடியும்.”

“என்ன மலர் இப்படி எதிர்த்து பேசிட்டே இருக்க. கயல் எதுக்கு சொல்லுதுன்னு உனக்கு புரியுதா இல்லையா? கயல் சொல்லுறதை கேளு.”

கயலின் பேச்சிற்கு பதில் பேச்சு பேசிக்கொண்டே இருந்த மலரை மாணிக்கம் அதட்டினார்.

“மாமா… மலர் சொல்லுறதும் சரிதான்” என்று மாணிக்கத்தை அமைதியுற செய்த கயல், “எதிலும் கவனமா இருக்கணும் மலர். கொஞ்ச நாளைக்கு யாரோடவும் நெருங்கி பழக வேண்டாம்” என்று மலர் கல்லூரி செல்ல அனுமதியளித்த கயல் வயலுக்கு கிளம்பிச்செல்ல, முகியும் செல்லும் வழியில் மலரை கல்லூரியில் இறக்கி விடுவதாகக் கூட்டிச்சென்றான்.

பேருந்து நிலையம் வந்து ஆட்டோ ஒன்றை பிடித்து, மலரை கல்லூரியில் இறக்கிவிட்ட முகில்… ஆயிரம் பத்திரங்கள் வழங்கினான்.

“ரகு எதாவது பிரச்சினை பண்ணா பயந்து நிக்கணும் அவசியமில்லை. நம்மை நாமதான் காப்பாத்திக்கணும். தைரியமா இரு” என்றவன், “மிஸ் யூ டி” என காதலாக உருக… பெண்ணவளின் முகம் சிவந்து அவளின் நாணத்தை பறைசாற்றியது.

“மலர்…”அவளின் வெட்கம் அவனுக்கு புதிது. அதனை ஆச்சரியமாக விழிவிரித்தான்.

“இப்படியே உன்னை கூட்டிட்டு வீட்டுக்கு போயிடலாம் தோணுது.”

அவனின் கிரக்க குரலில் தன்னிலை மீண்டவள்,

“ஃபர்ஸ்ட் படிப்பு. கயல் அக்காக்கு கல்யாணம். மத்ததெல்லாம் நெக்ஸ்ட்” என்றிட… “தேங்க்ஸ் டி. அக்காவுக்கு நல்ல வாழ்க்கை அமையனும். அதுவரைக்கும் நாம நிறைய நிறைய லவ் பண்ணுவோம். அதுக்கு முதல் அடியா இப்போ மாமாக்கு நச்சுன்னு ஒரு கிஸ் கொடு பார்ப்போம்” என்று முகில் கண்ணடித்துக் கேட்க,

சுற்றி ஒரு பார்வை பார்த்தவள்… “கல்லூரி முன்பு வைத்து என்ன பேச்சென்று” அவனின் கையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிட்டாள். அவளின் பின்னால் முகிலனின் நகை தொடர்ந்து.

மலரின் உருவம் கண்ணில் மறையும் வரை அவள் சென்ற திசையில் பார்த்தவாறு நின்றிருந்தவன் அதன் பின்னரே சென்றான்.

தேர்வு அறைக்கு வந்தவளிற்கு அதில் கவனம் வைப்பதே சிரமமாக இருந்தது. முகிலன் பத்திரம் சொல்லியது, பிரிவை வார்த்தையால் மொழிந்தது, கண்ணடித்தது, இதழ் ஒற்றல் கேட்டதென அவளின் நினைவுகள், நிகழ் காட்சிகள் முழுக்க முகிலனே நிறைந்திருந்தான்.

அதில் ரகுவை முற்றிலும் மறந்தே இருந்தாள்.

ஆனால் ரகு?

பசி நேரத்தில் இரை ஒன்றே குறியாக இருப்பதைப்போல், தன் பழிக்கு மலரை இரையாக்க காத்துக்கொண்டிருந்தவனுக்கு, ஆட்டோவில் முகிலுடன் வந்திறங்கிய மலர் மீதே தன் கவனத்தை வைத்திருந்தான்.

முகிலனிடம் ஓடும் எண்ணத்தை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தவளை அறைக்கு வெளியே ஜன்னலின் வழியே நோட்டமிட்டபடியே இருந்தான் ரகு.

‘இன்று இவளை விட்டுவிடக் கூடாது.’ தனக்குள் ஜெபம் போல் சொல்லிக்கொண்டே இருந்தான்.

தேர்வு முடிந்து ஒவ்வொருவராக வெளியில் வர, மலரின் வருகையை எதிர்பார்த்து நின்றிருந்தவன்… இறுதியாக மலர் வெளியேறுவதைக் கண்டு தூணிற்கு பின்னால் தன்னை மறைத்து நின்றான்.

வெளியில் வந்ததும் மலர் அலைபேசியை எடுத்து முகிலனுக்குத்தான் அழைத்தாள். அங்கேயே காரிடாரில் நின்று பேச ஆரம்பித்தாள். அவன் இடையில் உணவு உண்டானா, இப்போது எங்கிருக்கின்றான், எப்போது அங்கு சென்று சேர்வான்? என்று அனைத்தும் கேட்டு முடித்து நிமிர்ந்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் அக்கட்டிடமே ஆள் அரவமின்றி இருப்பதை.

இன்று மதியம் தேர்வு இல்லாததால், காலை நேர தேர்வு முடிந்ததும் கல்லூரியே அமைதியாக காட்சியளித்தது.

ஆசிரியர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தனர்.

“பஸ்ல ஏறுன அப்புறம் போன் பண்ணியிருக்கலாம்.” தனக்குத்தானே சொல்லியவள், அலைபேசியை பையில் போட்டபடி நடக்க…

“மலர்…”

யாரோ அழைக்கும் ஒலி.

அந்த குரலை அவளால் இனம் காண முடியவில்லை. அல்லது அவள் குரலினை கருத்தில் ஏற்கவில்லையோ என்னவோ?

திரும்பிப் பார்த்தவளுக்கு, தனக்கு அருகிலிருந்த தூணின் மறைவிலிருந்து தன் முன்னே ஒரு உருவம் வந்தது மட்டும் தான் நினைவு இருக்கிறது. பிம்பம் கண்ணில் விழுந்து கருத்தில் பதியும் முன்னரே, மயக்க மருந்தினை மலரின் முகத்தில் வைத்து அழுத்தியிருந்தான் ரகு.

அதன் பின்னர் பழுதடைந்த பொருட்கள் போட்டுவைக்கும் பூட்டியிருந்த அறைக்குள் மலரை தூக்கிச்சென்று அடைத்தவன் அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான் என்றெல்லாம் சொல்லிட முடியாது.

மயக்க நிலையில் இருந்தவளை பார்க்கக்கூடாத பார்வை பார்த்து ரசித்தான். தீண்டக்கூடாத இடங்களை கண்களால் தீண்டியபடி இருந்தான்.

“இன்னைக்கு உனக்கு செம வேட்டைடா.” அவனிடத்தில் சிறிதும் மாற்றமில்லை.

“எனக்கு பிடிச்சிருந்தா அவளுங்க அனுமதியே தேவையில்லை. ஆனால் உன்கிட்ட மட்டும் அது முடியலடி. இப்போ என்ன வேணா என்னால் செய்ய முடியும். இந்தநிலையில் உன்னால் கத்தக்கூட முடியாது. ஆனால் பாரு, தள்ளி நின்னு பார்த்திட்டு இருக்கேன்.”

ரகு அவன் போக்கில் பிதற்றும் போதுதான் மலர் மெல்ல கண் திறந்தாள்.

தன்னை கடத்தியது ரகு என்றதும் மலரிடத்தில் பயம் எழுந்தது. அதனை அவனிடம் மறைப்பதற்கே அவனை திட்டத் தொடங்கினாள்.

“பேசி பேசியே டயர்ட் ஆகிடாத. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்.”

ரகுவின் அருவருப்பான பேச்சில் முகம் திருப்பினாள் மலர்.

“இந்த திருப்பல் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் காணாமல் போகப்போவுது” என்றவன், “இது பழைய லேப்’ல…” என்று அறையை நோட்டமிட்டவாறு, “இதுவும் வசதி தான், கொஞ்சம் தள்ளி. ஆராய்ச்சி கூடத்தில் ****** ஆராய்ச்சி” என சொல்லி இடியென சிரித்தான்.

அவனின் இத்தகைய வெளிப்படையான பேச்சில் மொத்தமாக அருவருத்துப்போனாள் மலர்.

“இப்படியெல்லாம் பேசாத. எனக்கு கல்யாணமாகிருச்சு.” கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

“ஆமால. உனக்கு கல்யாணம் ஆகிருச்சு.”

சிறு நொடி அமைதி.

“சோ, வாட்.” அறையே அதிர கத்தினான்.

“அந்த முகில் தாலி கட்டிட்டான். இப்போ நான் குடும்பம் நடத்தப்போறேன். அப்போ எங்க ரெண்டு பேர்த்துல உனக்கு யாரு புருஷன்.” யோசிப்பது போலொரு பாவனை அவனிடம்.

“எப்படியும் நான்தான். ஏன்னா மெயின் மே*** நான்தானே பண்ணப்போறேன்.”

“அய்யோ போதும் நிறுத்து.” அவ்வளவு அழுத்தம் அவளிடம்.

“நாய் கடிச்சுதுங்கிறதுக்காக நாயை கட்டிக்க முடியுமா என்ன? அதுக்காக உன்னை நாயோடு சேர்த்து அதை அசிங்கப்படுத்த மாட்டேன். உன்னையெல்லாம் மிருக இனத்தில் கூட சேர்த்திட முடியாது.”

“தேன்க் யூ.”

ரகுவிடம் எவ்வித அலட்டலும் இல்லை.

“இப்படி பேசி டைம் வேஸ்ட் பண்ணாத மலர் பேபி. அல்ரெடி இட்ஸ் கெட்டிங் லேட்” என்றவன் அவளின் கை கட்டினை அவிழ்த்து விட்டான்.

கயிறு அவிழ்ந்ததும் நாற்காலியிலிருந்து எழுந்தவள் கதவினை நோக்கி ஓடினாள்.

ஆனால் அவனோ எவ்வித வேகமும் இன்றி கைகளை கட்டிக்கொண்டு அதே இடத்தில் நின்றிருந்தான்.

கதவினை பலமுறை தட்டியபடி, “யாராவது இருக்கீங்களா?” என்று கத்தியவள் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனவளாக கதவிற்கு கீழே கால்களை கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைத்து அழுதாள்.

அவளை கண்டு அவனிடத்தில் சிறிதும் இரக்கம் வரவில்லை. மாறாக அவளின் கதறலை, அழுகையை ரசித்தான்.

“சும்மா அழுகாத. இனி நீ காலத்துக்கும் அழுதுகிட்டுத்தான் இருக்கப்போற” என்றவன் மெல்ல அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கினான்.

காலடி ஓசையில் நிமிர்ந்தவள் அவன் கிட்ட நெருங்க நெருங்க கதவோடு ஒன்றினாள்.

அவளருகில் ஒரு கால் மடித்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன் மொபைலை கையிலெடுத்து சுழற்றினான்.

மலர் மிரட்சியாகப் பார்த்தாள்.

“இந்தத் தோற்றத்தில் கூட நல்லாத்தாண்டி இருக்க” என்றவன் இன்னும் அவளை உரசியவாறு நெருங்கினான்.

“ஆனால் இந்த தாவணி எனக்கு பிடிக்கல” என்றதோடு அதனை உருவியுமிருந்தான்.

நகர்ந்து செல்ல வழியின்றிப்போக, எழ முயற்சித்தவள் பின்னால் மேல்ச்சட்டை கிழியும் சத்தம் கேட்டு உறைந்து அமர்ந்தாள். கீழிருந்து இரண்டடி உயரத்தில் கதவில் இருந்த தாழ்ப்பாளில் மலரின் மேல்ச்சட்டை மாட்டியிருந்தது. இவள் எழுந்த வேகத்தில் பாதி கிழிந்திருக்க… கொஞ்சம் அசைந்தாலும் முழுதாக கிழிந்து… தாவணியின்றி அவளின் உடல் காட்சியளிக்க வாய்ப்பிருப்பதால், தன்னிலை எண்ணி கழிவிரக்கம் கொண்டாள்.

“ட்ரெஸ் எதுக்குன்னு நினைச்சேன். எனக்கு நீ சிரமம் கொடுக்கல.” அவன் சொல்ல வருவதன் பொருள் புரிந்து தலையில் அடித்துக்கொண்டு கதறினாள்.

“நீ அழறது ரொம்ப பிடிச்சிருக்கு.” கண்கள் மூடி அனுபவித்துக் கூறியவன், “இப்போ நீ எழவும் முடியாது. ஓடவும் முடியாது” என வசனம் பேசினான்.

“இந்நேரம் உன்னை காணோமுன்னு தேடுவாங்கல. அவங்களுக்கு நீ என்னோடதான் இருக்கேன்னு காண்பிப்போமா?” எனக் கேட்டவன், “என்னை கையால் அடிச்சவனை நான் மனசால அடிக்க வேண்டாம்” என்று பழிவெறியோடு உருமினான்.

அதில் மலர் இன்னும் அரண்டு போனாள்.

“உன் மாமனுக்கு கால் பண்ணுவோமா?”

மலரின் விரிந்த பார்வையை பார்த்தவாறே முகிலனுக்கு வீடியோ கால் செய்தான்.

அப்போதுதான் மலர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அவளைத்தேடி காலேஜ் செல்வதாகவும் கிடைத்ததும் கால் செய்வதாகவும் முகிலனிடத்தில் மலர் பேசியிருந்தாள்.

“மலரை காணவில்லையா?” என்று அதிர்ந்த முகில், தான் உடனே திரும்பி வருவதாக சொல்ல… “அவசியன்னா சொல்றேன். கொஞ்சம் பொறுமையா இரு” என்று கயல் கூறியதால் அலைபேசியை வெறித்தவாறு அமர்ந்திருந்தான்.

அச்சமயம் தான் ரகு முகிலிற்கு கால் செய்தான்.

புது எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பினை ஒருவித பதட்டத்துடன் நடுங்கும் விரலால் ஆன் செய்தான் முகிலன்.

திரையில் தெரிந்த முகத்தைக் கண்டு “ரகு” என முகிலனின் வாய் மெல்ல உச்சரித்தது.

“எஸ் ரகு தான்” என்று அட்டகாசமாக சிரித்த ரகு… “என்னோட யார் இருக்கா தெரியுமா?” எனக்கேட்டு தன் கன்னம் அவளின் கன்னம் உரசிய நெருக்கத்தில் மலரின் முகத்தையும் தன்னுடைய முகத்தையும் சேர்த்து காண்பித்தான்.

அதில் பாதி ஆடையின்றிய தன்னவளின் தோற்றம் கண்டு உயிரோடு புதைந்தான்.

“மலர்…” முகி கத்திய கத்தலில்,
“பத்தல… உன் கண்ணுல தெரியுற இந்த வலி பத்தல. இன்னும் இன்னும் உன்கிட்ட எதிர்பாக்குறேன்” என்றவன் “அதுக்கு என்ன பண்ணப்போறேன் தெரியுமா?” எனக்கேட்டு “இப்போ இங்கு நடக்கப்போகும் சம்பவத்தை உனக்கு லைவ் டெலிகாஸ்ட் காட்டப்போறேன்” என்றான்.

“டேய்…”

“ஷ்ஷ்… சத்தம் போடாத முகிலன். நீயென்ன வெறியேத்த வெறியேத்த இவளுக்குத்தான் சேதாரம் அதிகமாகும்.”

ரகுவின் வார்த்தையில் முகிலன் தன் கோபத்தை பற்களை கடித்து அடக்கினான்.

“அது… இப்படி வாய் மூடிட்டு இருக்கணும்” என்று கை சைகையால் கூறிய ரகு… “ஆர் யூ ரெடி… ஸ்டார்ட் பண்ணிடலமா?” என்றவாறு மலரின் கன்னத்தில் அவள் எதிர்பாராது முத்தம் வைத்தான்.

“ச்சீய்.” “டேய் வேண்டாம்’ டா!”

மலர் முகம் சுளித்து திருப்பினாள் என்றால் முகிலனிற்கு உயிர் போய் வந்தது.

மலரின் அழகை சத்தமின்றி அவ்விடத்தை நிறைத்தது.

“மாமா கால் கட் பண்ணு மாமா.”

நடக்கப்போவதை உணர்ந்தவள் தனக்கு நேர்வதை கண்டால் முகிலன் உயிரோடு மரித்துப்போவான் என்பதால் இதனை பார்க்கக்கூடாதென முகியிடம் கெஞ்சினாள்.

“இது அசிங்கம் மாமா. நீ பார்க்கக்கூடாது.”

“அய்யோ மலர்.” தன்னவளுக்கு நேர்வதைக் கண்டு ஒன்றும் செய்யாத தன்னை எண்ணி தன்னுடைய தலையை சுவற்றில் முட்டிக்கொண்டான்.

“மாமா கட் பண்ணு மாமா.”

“பாருடா இங்க தொட்டா அங்க வலிக்குது. அப்படியே தெய்வீக காதலு. ஆனால் எனக்கு இது போதாதே” என்றவன் மலரின் நெற்றியிலிருந்து தன் விரலை கீழிறக்கினான்.

“ரகு ப்ளீஸ்… வேண்டாம். அவளை விட்டுடு.” முகி கெஞ்சினான். துடித்தான். தன்னவளுக்காக கதறினான்.

“மாமா கால் கட் பண்ணு” என்றவள், “பார்க்காத மாமா” என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அப்போதுதான் மலர் ஏன் அசையாது அமர்ந்திருக்கிறாள் என்பதே முகிக்கு உருத்தியது.

“மலர் நீ ஏன் அப்படியே உட்கார்ந்திருக்க. அங்கிருந்து எழுந்து போ மலர்” என்றான் முகி.

தலையை இடவலமாக ஆட்டிய மலர்… உள்ளங்கையில் முகம் புதைத்து வெடித்து கதறினாள்.

“மலர்… மலர்… என்னாச்சுடா? இங்கப்பாரு மலர். என்னைப் பாருடா?” முகியின் குரலுக்கு அவளின் அழுகை கூடிக்கொண்டே போனது.

“அவள் இந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டாள்” என்ற ரகுவின் வார்த்தையில் மலரின் நிலை முகிக்கு நன்கு புரிந்தது.

“மலர் பயப்படாத மலர். நான் வர்றேன்.”

“எப்படி? பறந்தா?” ரகு கேலி செய்தான்.

“நீ இங்கு வருவதற்குள் என் வேலை முடிஞ்சிருக்கும்” என்றவன் எழுந்து இருவரின் உருவமும் நன்கு தெரியுமாறு அலைபேசியை ஓரிடத்தில் பொருத்தினான்.

“ரொம்ப நேரம் கையிலே பிடிச்சிருக்கு முடியல” என்றவன் மீண்டும் மலரை ஒட்டி அமர்ந்தான்.

“ரெண்டு பேரும் நல்லா தெரியுறமா? ஏன் கேக்குறேனா, நீ சரியா பாக்காமல் எதையும் மிஸ் பண்ணிடக் கூடாதுல” என்று சொல்ல, மலர் தவிப்பாய் முகியை பார்த்தாள்.

முகியின் இயலாமை அவனை கொன்றது.

“பிளீஸ் என்னை விட்டுடு.” இரு கரம் குவித்து வேண்டினாள்.

“கொஞ்ச நேரத்தில் விடுறேன்” என்ற ரகு, “முதலில் எங்கிருந்து ஆரம்பிக்கலாம்” என தன் பார்வையை மலரின் மேனியெங்கும் படரவிட்டான்.

“ரகு வேண்டாம்.” முகில் கர்ஜித்தான்.

“மாமா கால் கட் பண்ணு.” இம்முறை அவளின் குரலில் அழுகையில்லை. ஒருவித மரத்த தன்மை.

“இவ(ள்) சொல்லுறான்னு கட் பண்ணிடாத. அப்படி பண்ணாலோ, இல்லை நீ கண்ணை மூடினாலோ இங்கு நடக்கப்போற ஷோவை உலகமே பார்க்கிற மாதிரி செய்திடுவேன்” என்று மிரட்டலாய் கூறினான்.

“யூ லுக்கிங் ஹாட்” என்றவன் அவளின் கழுத்தை நோக்கி குனிய, அவனின் முகத்திலேயே ஒரு குத்து விட்டாள்.

“ஏய்” என்று சீறியவன், அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

“உன்னை சாஃப்ட்டா டீல் பண்ணலாம் நினைத்தேன். அது வேலைக்கு ஆகாது போலிருக்கே” என்றவன் ஒரே இழுவையில் அவளை தரையில் சரித்திருந்தான்.

“வேண்டாம் ரகு விட்டுடு.” முகியால் அதை மட்டும் தான் கூற முடிந்தது.

மலருக்கு தன் ஆடை முழுதாக கிழிந்து விட்டதென்பது நன்கு தெரிந்தது.

அவளின் கண்களில் தெரிந்த அலைப்புறுதலிலேயே ரகுவிற்கும் விஷயம் விளங்கியது.

“எனக்கு வசதி தான்” என்ற ரகு… மலரின் முன்பக்க ஆடையை விலக்குவதற்காக அவளின் நெஞ்சுப்பகுதியை நோக்கி கையை கொண்டு செல்ல… அறையின் கதவு உடைபட்டு கீழே விழுந்தது.

வேகமாக உள்ளே நுழைந்த கயல்… மலரின் நிலையை அறிந்து, அவ்வறையின் மூலையில் கிடந்த தாவணியை கொண்டுவந்து மலரை போர்த்தினாள்.

“அக்கா.” மலர் கயலிடம் தஞ்சம் கொண்டாள். அவளின் உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.

மலருடன் வந்த சிவா ரகுவை புரட்டி எடுத்தான்.

“ஏய் யார் நீங்க?”

ரகு கேட்கும் போதே இரு காவலர்கள் உள் நுழைந்தனர். அவர்களும் ரகு அடி வாங்குவதை வேடிக்கைத்தான் பார்த்தார்கள். சற்றும் சிவாவை விலக்க முயலவில்லை.

“உன்னையெல்லாம் கேட்க ஆளில்லைன்னு என்ன ஆட்டம் போட்ட” என்ற காவல்துறை அதிகாரியும் ரகுவை நையப் புடைத்தெடுத்தார்.

“இவன் மேல ஏற்கனவே நிறைய கேஸ் இருக்கு. இவன் அப்பனால வெளிய மிதப்பா சுத்திக்கிட்டு இருக்கான். இவனுக்குலாம் பெரிய தண்டனையா கொடுக்கணும். அதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க” என்றவர், “வா உன்னை சிலை கடத்தல் கேஸில் உள்ளே தூக்கிப் போடுறேன்” என்றவாறு ரகுவை இழுத்துச் சென்றார்.

error: Content is protected !!
Scroll to Top