அத்தியாயம் 2
ப்ரின்சிபால் அறையிலிருந்து வெளியேறிய ஆதர்ஷின் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அதற்கான காரணம் என்னவென்று அவனது நண்பர்களில் ஒருவனான கிஷோர் கேட்க,
“He finally agreed and gave permission…” ஆதர்ஷின் பதிலில் மற்றொரு நண்பனான வினு துள்ளி குதித்தான்.
அவனின் உற்சாகத்திற்கான காரணம் புரியாமல் ஆதர்ஷ் என்னவென்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவ,
அது வந்து மச்சான்…..
“ஃப்ரெஷர்ஸ் டே வைக்காம ஒரு பிகர் நேம் கூட தெரியல டா.. அது மட்டுமில்லாமல், ஒரு டிபார்ட்மெண்ட் இருந்தா பரவாயில்லை… எல்லா ஸ்டடீஸ்’ம் ஒரே கேம்பஸில் இருப்பதால் எந்த பொண்ணு என்ன குரூப், எந்த இயர் ஒண்ணும் தெரியல மச்சி…” என வினு கூறிக்கொண்டிருக்கும் போதே இடைப்புகுந்தான் கிஷோர்..
“காலையில ஒரு பொண்ண கூப்பிட்டு உன் பேரு என்னென்ன கேட்டதுக்கு, ஹலோ பாஸ் நான் சீனியர் ஸ்டுடன்ட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு போயிடுச்சு” என்றான் வருத்தமாக,
” அதுக்கு ஏன்டா இப்படி பீல் பண்ற?” வினு.
“அவ போகும் போது என்னை பார்த்து நக்கலா சிரிச்சா… அப்புறம் தான் தெரிஞ்சுது.. அந்தப் பொண்ணு தேர்ட் இயர் பட் ஃப்ரெஷர்தான்… லாஸ்ட் இயர் வேற காலேஜ்.. இன்னைக்கு தான் நம்ம காலேஜில் ஜாயின் பண்ணியிருக்கா…” கிஷோர் முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு கூறினான்.
அதில் அடக்கமாட்டாமல் வினு என்கிற வினேஷ் சிரிக்க,
ஆதர்ஷ் கண்கள் அகல விரிந்தது.
இருவரும் ஆதர்ஷின் முறைப்பில் அங்கிருந்து ஓடியிருந்தனர்.
மாலை கல்லூரி முடிந்ததும் ஆடிட்டோரியமில் உள்ள மீட்டிங் அறையில் ஆதர்ஷ் தன் நண்பர்களுடன் கூடினான்.
“ஆல்ரெடி இட்ஸ் டூ லேட்.. சோ, ஃபிரேஷர்ஸ் டே செலப்ரேஷன் இன்னும் த்ரீ டேஸ்ல வைக்கணும். லாஸ்ட் இயர் நடந்த மாதிரி எந்தவொரு பிரச்சனையும் வரக்கூடாது.”
ஆதர்ஷ் கல்லூரியின் தலைமை மாணவன் என்ற அடிப்படையில் அனைவருக்கும் நடுநாயகமாக நின்று பேசினான்.
ஒவ்வொரு துறையிலிருந்தும் ரெப்ரசென்டேட்டிவ் மாணவர்கள் அங்கு குழுமியிருந்தனர்.
ஒரு மாணவன், “போன வருஷம் இந்த ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் தான் பிராப்ளம் கிரியேட் பண்ணாங்க” என்று வாய் விட, அம்மாணவர்கள் எழுந்து சத்தம் போட… அப்பேச்சு முற்றுப்பெறாத தொடர் சங்கிலியாக நீண்டு கொண்டே சென்றது.
இவர்களது பஞ்சாயத்து இப்போதைக்கு முடிவடையாது என்பதை உணர்ந்து மணி பார்த்த ஆதர்ஷ்க்கு அப்போது தான் மஹியின் ஞாபகம் வந்தது.
‘ஒரு நிமிஷம் வெயிட் பண்ண வச்சாலே ஓட விடுவா.. இதுல அரை மணி நேரத்திற்கும் மேலாகிடுச்சே’ என்று மனதில் எண்ணியவன் தனக்கு அருகில் நின்றிருந்த கிஷோரை அழைத்து, “கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டில் மஹிரான்னு ஒருத்தவங்க இருப்பாங்க அவங்களை நான் கூப்பிட்டேன்னு இங்க கூட்டிட்டு வா” எனக் கூறினான்.
“யாருடா மச்சான்?” எனக் கேட்டவனை முறைத்து..
“சொன்னதை மட்டும் செய்டா!” என்று அனுப்பி வைத்தான்.
ஆதர்ஷ் அனைவரிடமும் நன்கு பழகுபவன் தான்… ஆனால், அவனாக நினைக்காமல் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையைக் கூட பெற முடியாது.
மாணவர்களின் சலசலப்பு நின்றபாடில்லை..
ஆதர்ஷ் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான்.
வினுக்கு தான் அவனது அமைதி பீதியை கிளப்பியது.
பொறியியல் துறை மாணவன் ஒருவன், “இனி நாங்க செலெப்ரேஷன் எல்லாம் தனியா வைத்துக்கொள்கிறோம்” என்றுக் கூறினான்.
திடீரென யாரோ யாரையோ அறையும் சத்தத்தில் அவ்விடமே அமதியாகியது. ஆதர்ஷ் தான் அம்மாணவனை கன்னத்தில் அறைந்திருந்தான்.
“நீயே முடிவெடுக்க பிரசிடெண்ட் அப்படின்னு நான் எதுக்கு இருக்கேன்” என்றுக் கேட்டுக் கொண்டே மீண்டும் தான் நின்ற இடத்திற்கு வந்து நின்றான்.
அறை வாங்கிய மாணவன் தரையில் சுருண்டு கிடந்தான்.
அங்கிருந்த ஒரு சில மாணவிகள் ஆதர்ஷின் கம்பீரத்தில் சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
“இந்த மாதிரி தனித்தனியா நடக்க கூடாதுன்னு தான் ப்ரின்சி இனி எந்தவொரு பன்க்ஷன்சும் நடக்க வேண்டாம்னு சொன்னாரு..
ஸ்டூடெண்ட்ஸ் நாமெல்லாம் ஒற்றுமையா இருந்தாதான் பலம், அதை விட்டு ஒரே கேம்பஸ்குள்ள இப்படி தனித்தனியா நான் வேற நீ வேறன்னு நிற்பது நன்றாகவா இருக்கும்?” எனக் கேட்டவன்..
“எல்லாரும் ஒண்ணா இருப்போம்னா இந்த பிரேஷர்ஸ் டே செலபிரேஷன் வச்சுக்கலாம்.. இல்லைன்னா இனி எந்தவொரு பங்க்ஷனும் இல்லை” என்க.. மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இனி ஒற்றுமையாக இருப்போமென்று உறுதியளித்தனர்.
அதிக நேரமாகிவிட்டதால் மற்றவற்றை நாளை பேசிக்கொள்ளலாம் எனக்கூறி அனைவருக்கும் விடையளித்தான்.
ஒரு பெண் மட்டும் செல்லாமல் ஆதர்ஷையே பார்த்து நின்றிருக்க அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாது அவனும் வினுயை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
இவர்கள் ஆடிட்டோரியமிலிருந்து வெளிவரும் சமயம் கன்னத்தை கையினால் தாங்கியபடி கிஷோர் வந்தான்.
என்னாச்சுடா என்ற ஆதர்ஷிடம்…
” யாருடா மச்சான் நீ கூட்டிட்டு வர சொன்ன பொண்ணு, சரியான பஜாரியா இருப்பா(ள்) போ…”
கிஷோர் சொல்லி முடிக்கவில்லை ஆதர்ஷின் கரம் அவனின் மற்றொரு கன்னத்தில் இடியாய் இறங்கியது.
“எதுக்குடா இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க” என வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கேட்பவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே…
“அவளை நீ பஜாரின்னு சொன்னதுக்கு” என்றுவிட்டு மஹியை தேடிச்சென்றான்.
“அவளை சொன்னா இவனுக்கு ஏன்டா கோபம் வருது. இவன் சொன்ன கிளாஸ்க்கு போயிட்டு மஹி நியூ ஸ்டூடெண்ட் யாருன்னு தான்டா கேட்டேன் அதுக்கு அடிச்சிட்டாடா… (அவளது பெயரை சுருக்கி அழைத்தால் அவளுக்கு பிடிக்காதுன்னு அவனுக்கு எப்படி தெரியும்) அப்புறம் காலையில என்னை நோஸ் கட் பண்ணவ தான்டா அவள். அவ கிட்ட இவனுக்கு என்னடா பேச்சு. அவளுக்காக பிரண்ட் என்னையவே அடிச்சிட்டு போறான்.”
புலம்பிக்கொண்டிருக்கும் கிஷோரை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல், ஏதோ வேலையிருப்பதாக தப்பித்துவிட்டான் வினு.
வினு, ஆதர்ஷ் சென்ற திசையில் அவனைத் தேடி செல்ல… கிஷோருக்கும் என்ன செய்வதென்று தெரியாததால், தனது நண்பர்களை நோக்கி சென்றான்.
ஒரு இடத்தில் கூட்டமாக இருக்க, அங்கு என்னவென்று மூவரும் எட்டிப் பார்க்க, அங்கு மஹி ஒருவனை அடி வெளுத்துக்கொண்டிருந்தாள்.
‘அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாளா!’ என்று மனதில் நினைத்த ஆதர்ஷ் கூட்டத்தை விலக்கி மஹியை நெருங்கினான்.
“என்னா… பொண்ணுடா!” என மஹியை சிலாகித்து, வினு கூற…
“நீயும் நாலு அடி அவ கையில வாங்கி பாரு அப்போ தெரியும் என்ன பொண்ணுன்னு.. கடுப்பில் பேசிய கிஷோர் இவளுக்கு யாரையாவது அடிச்சிட்டே இருக்கணும் போலடா” என்க,
“அப்போ ஐயா அடி வாங்கியது இந்த வீர மங்கையிடம் தானா?” எனக் கேட்டு வினு சிரித்தான்.
ஒருவனை அடித்துக்கொண்டிருந்த மஹி தன் தோளில் படிந்த கரத்தில் ஆத்திரம் மிகுந்தவளாய்…
“எவன்டா அது?” எனக் கேட்டவளாய் திரும்ப… அங்கு நின்றிருந்த ஆதர்ஷை பார்த்து ஒரு நொடி பம்மினாலும் அடுத்த கணம் மீண்டும் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
ஆதர்ஷோ, “மஹி” என்று பற்களை கடிக்க..
அவளோ.. ஒருவனை அடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் “கால் மீ மஹிரா” என்று அழுத்தமாகக் கூறினாள்.
“ஆமா, இப்போ இது ரொம்ப முக்கியம்” என்றவன்.. அவளின் கை பிடித்து இழுத்து, வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு வந்தான்.
பல பெண்கள் ஆதர்ஷின் கடைவிழிப் பார்வைக்காக ஏங்கி நிற்கும் போது அதையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாதவன், இன்று உரிமையாக மஹியை கை பிடித்து இழுத்துச் சென்றது அங்கிருந்த மாணவர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததென்றால்… அவனை கனவு நாயகனாக மனதில் நினைத்திருக்கும் பல பெண்களுக்கு மஹி மீது பொறாமை எழுந்தது.
“இவன் எதுக்குடா இந்த ஆம்பள பையனை இப்படி இழுத்துட்டு போறான்.” கிஷோரின் ஆச்சரியமான கேள்வியில்,
“அது யாருடா ஆம்பள பையன். அவன் ஒரு பெண்ணை தானே இழுத்துட்டு போனான்.” அதி முக்கியமான சந்தேகத்தை வினு கேட்டான்.
“அவளை நீ வேணும்னா பொண்ணுன்னு சொல்லு. பட் நான் ஒத்துக்க மாட்டேன். எல்லாரும் வேடிக்கை பாக்கிறாங்கன்னு கொஞ்சம் கூட பயமில்லாம ஒரு பையனை போட்டு என்னா மிதி மிதிக்கிறா!” ஒரு கணம் கிஷோருக்கு மஹி அவனை கன்னத்தில் அடித்தது நினைவு வந்தது.
தன் தலையை உலுக்கிக்கொண்டவன், “சரிவாடா நாமும் கிளம்பலாம்” என்று பார்க்கிங் ஏரியாவுக்கு வினுவுடன் சென்றான்.
அங்கு இவர்கள் கண்டக்காட்சி இருவரையும் மயங்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.
ஆதர்ஷ் கோபமாக நின்றிருக்க, மஹி அவனின் கன்னத்தை கிள்ளியபடி, “சாரி விஹூ. அவன் உன்னை தப்பா பேசினான். அதான் அடிச்சேன். முடிஞ்சளவு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு தான் இருந்தேன். லாஸ்டா அவன் ஒண்ணு சொன்னான், ஐ காண்ட் கண்ட்ரோல் மை டெம்பர். இனி இப்படி பண்ணமாட்டேன். என்கிட்ட பேசுடா.. இப்படி கோபமா உம்முன்னு மூஞ்சியை வைச்சிருக்காதே!” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
“என்னடா நடக்குது இங்க? ஒருவேளை இந்தப்பொண்ணு ஆதர்ஷ் லவ்வரா இருக்குமோ” என்று வினு வினவ,
“அச்சச்சோ… இந்த ரவுடி புள்ள நம்ம மச்சானுக்கு வேண்டாம்” என்று கிஷோர் அலறினான்.
“இவன் வேற ஒருத்தன்” என்று கிஷோரை சலித்துக்கொண்ட வினு..
“கொஞ்ச நேரம் சும்மா இருடா! என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்போம்” என்று அவர்களிடத்தில் கவனத்தை பதித்தான்.
எல்லோரிடத்திலும் திமிருடன் நடந்து கொள்பவள் தன்னிடம் மட்டும் அடங்கிக் கெஞ்சுவது ஆதர்ஷ்க்கு எப்போதும் ஆச்சரியம் தான். அவள் கெஞ்சுவது பிடிக்காமல், “சரி அப்படி என்ன தப்பா அவன் பேசினான்?” எனக் கேட்டான்.
இவ்வளவு நேரம் அமைதியாக உம்மென்று இருந்தவன் இதை கேட்பதற்காகவாவது பேசினானே என்று, எதற்காக தான் அவனை அடித்தோம் என்பதைக் கூறினாள்.
கிஷோர் மஹி யாரென்று கண்டுபிடித்து ஆதர்ஷ் அழைப்பதாக கூறியதும், இவ்வளவு நேரம் தன்னை காக்க வைத்துவிட்டானே என்று உள்ளுக்குள் அவனை கருவிக்கொண்டு ஆடிட்டோரியம் நோக்கி சென்றவள் தன்னை கடந்து சென்ற இருவரின் பேச்சில் ஆதர்ஷின் பெயர் அடிபடவும் அப்படியே நின்று கவனிக்கலானாள்.
“ஏன்டா… அவன் அடிச்சா… நீ திருப்பி அடிக்க வேண்டியதுதானே” என்று இருவரில் ஒருவன் கேட்க,
மற்றொருவனோ, “நீ அடிப்பியா டா?” என்றான்.
அவனது வார்த்தையில் ஆதர்ஷின் மீதான கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
“அந்த ஆதர்ஷ்க்கு பிரசிடெண்ட் அப்டிங்கிற திமிரு.” இந்த இடத்தில் தான் அவர்களது பேச்சு மஹியின் செவிகளில் விழுந்தது.
“ப்ரின்சியிலிருந்து எல்லோரும் அவன் பேச்சைக் கேட்கிறங்காங்கிற ஹெட் வெயிட்… அவனுக்கு அவன் ஆணழகங்கிற நினைப்பு. எல்லா பொண்ணுங்களும் அவனையே சுத்தி வராலுங்கல அந்த மதப்பு தான். ஆமா மாப்ள எனக்கொரு டவுட், இவ்ளோ பொண்ணுங்க அவனை சுத்தி வருதே, நம்ம ரேஷ்மா… (ஆடிட்டோரியமில் மீட்டிங் முடிந்தும் ஆதர்ஷையே பார்த்திருந்தவள்) அவ கூட அவனை மட்டும் தான் பார்க்கிறாள். இவன் யாரையும் கண்டுக்கிறதே இல்லையே. ஒருவேளை இவன் அவனா இருப்பானோ?” எனக் கேட்டு நக்கல் வழிய சிரிக்க, அவனது முதுகிலே ஒரு உதை விட்டிருந்தாள் மஹிரா.
தலை குப்புற விழுந்தவன் எழுந்து சுதாரிக்கும் முன் அவனின் முகத்திலே ஒரு பன்ச் விட்டாள். அவனின் மூக்கு உடைந்து ரத்தம் வெளியேற பயந்தவனாய் மற்றொருவன் தள்ளி நின்று கொண்டான், தனக்கு எந்தவொரு சம்மந்தமும் இல்லையெனும் விதமாக.
அவனை வாய் திறக்க விடாதவளாக புரட்டி எடுக்க, மாணவர்கள் கூட்டம் கூடியது.
கூறி முடித்தவள் ஏதாவது கூறுவானென்று அவனது முகத்தை உற்று நோக்க,
அவனோ… “யாரோ ஏதோ பேசிப்போறான். உனக்கு எதுக்கு பையன் மாதிரி இந்த அடிதடியெல்லாம்” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து அவளை அமருமாறு சைகை செய்தான்.
அட்லீஸ்ட் தன்னைப்பற்றி தவறாக பேசியவன் மீது கோபமாவது வருமென்று எதிர்பார்த்தவளுக்கு அவனது அமைதி சுத்தமாக பிடிக்கவில்லை.
“நீ சரியான தயிர் சாதம் டா!” என்று அலுத்துக்கொண்டவள் அவனது தோளில் ஒரு அடி வைத்தாள். அதற்கு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தவன் தன்னை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்கும் தன் நண்பர்களிடம் தலையசைத்தவனாக பைக்கை சாலையில் ஓடவிட்டான்.
“ஹே… உண்மையிலே இது நம்ம ஆதர்ஷ் தானாடா!” தன்னை எதிர்த்து பேசுறவனை பார்வையாலே ஓடவிடுவான். அவனா இப்போ இவ்வளவு அமைதியா போறான்.” வாய்ப்பிளந்தவனாக கிஷோர் கூற,
அதை சிறிதும் கண்டுகொள்ளாத வினு… “நீ ஒன்னை கவனிச்சியா மச்சான், அவனோட பைக்கை நம்மல டச் பண்ண கூட விட மாட்டான். இப்போ ஒரு பொண்ணை அதுல உட்கார வச்சி கூட்டிட்டுப்போறான். ஒருவேளை அது அவன் தங்கச்சியா இருக்குமோ?” எனக் கேட்டான்.
(மஹியை அவனின் தங்கை என சொன்னது மட்டும் ஆதர்ஸுக்கு தெரிந்தது வினு.. நீ காலி தான்)
“அவங்க நெருக்கத்தைப் பார்த்தால் அண்ணன் தங்கையா இருக்க வாய்ப்பில்லை” என்ற கிஷோர், “கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல பிரண்ட்ஸா இருக்கோம். எப்போவாவது அவன் குடும்பத்தைப் பற்றி சொல்லியிருப்பானாடா? வழக்கம் போல அவன் வாயிலிருந்து வரும் வரை காத்திருப்போம்” என்றான்.
வீட்டிற்குள் நுழையும் வரை மஹி ஆதர்ஷிடம் புலம்பி தீர்த்தாள். உன்னை தவறாக பேசியவன் மீது சிறு வருத்தம் கூட வரவில்லையாயென்று, அதையெல்லாம் காதில் வங்காதவனாய் அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தான்.
ஆதர்ஷின் அமைதிக்கு பின் வரும் புயலை இதுவரை மஹி பார்த்ததில்லை.. ஏன் அவன் குடும்பத்தாருக்கு கூட அவனுக்கு கோபம் வருமென்று தெரியாது.
ஆதர்ஷ் வீட்டில் எவ்வளவு அமைதியும், அன்பும் நிறைந்தவனோ, வெளியில் அதற்கு எதிரானவன். எதிரியை தன் பார்வையாலே நடுங்கச் செய்பவன்.
நாளை அவனின் மற்றொரு முகத்தைக் காணும் நேரம், மஹி நிச்சயம் இது ஆதர்ஷ் தானா என்று சந்தேகம் கொள்ளப்போகிறாள்.
என்றும் நான் உனக்கு முரணானவன்.