அத்தியாயம் 10
நேற்றைய பொழுது சுமித்ரா மற்றும் ரித்துவின் உபயத்தால் ருத்ரனின் சோஷியல் மீடியா ஐடியை ஃபாலோ செய்து அவனை பின் தொடர ஆரம்பித்து இருந்தாள் பனி.
அதன் பால் புன்னகைத்தவாறு இருந்த அவனின் அந்த ஒன்றிரண்டு புகைப்படங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு நேற்றைய பொழுதை கழித்தவள், ருத்ரன் கூறியிருந்த ரெக்கார்ட் நோட்டை எழுதி முடிப்பதற்கு மறந்தே போயிருந்தாள்.
மறுநாள் காலை வழக்கம் போல் அனைவரும் கல்லூரி வந்து சேர்ந்திருந்தனர்.
பனிவிழி மட்டும் அந்த பெஞ்சில் அமர்ந்து நேற்றைய பொழுது ருத்ரனின் முகத்தில் பூத்த புன்னகையை இன்றும் பார்ப்பதற்கு ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாள்.
ருத்ரன் தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கில் விட்டுவிட்டு எப்பொழுதும் அவனுடன் இருக்கும் அதே இறுக்கமான முகத்தோடு வண்டியில் இருந்து இறங்கி தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அதே மிடுக்கான கம்பீரமான நடையுடன் நடந்து வருவதை பார்த்தவள்,
‘என்னது… சிடு மூஞ்சி மறுபடியும் ஃப்ரீஸ் மோடுக்கு போயிருச்சு…?’ என்று நினைத்தவள் நேற்றைய பொழுது காணக் கிடைத்த அரிதான அவனின் அந்த புன்னகை முகத்தை மனதில் நினைத்துக் கொண்டே அவனின் கண்ணில் படும் முன்பே தனது வகுப்பறைக்கு வந்து சேர்ந்தாள்.
வகுப்பில் அனைவரும் மிகவும் ஆர்வமாகவும் அவசரமாகவும் நோட்டை திறந்து வைத்து எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தவள், ‘இவங்க எல்லாத்துக்கும் என்ன ஆச்சு..? இன்னும் க்ளாஸ் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள ஏன் இப்படி ஆர்வமாக எழுதிட்டு கிடக்குறாங்க..?’ என்று நினைத்துக் கொண்டே தன்னுடைய இடத்திற்கு சென்றாள்.
அங்கே சுமித்ரா மட்டும் எழுதாமல் குஷியாக அமர்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி எல்லாரும் என்னத்தையோ முக்கி முக்கி எழுதுறாங்க… நீ மட்டும் ஜாலியா உக்காந்துருக்க..? நீ எழுதலையா..?”
“நான் தான் நேத்தே எழுதி முடிச்சிட்டேனே…! நேத்து எழுதிட்டு வராத எல்லாரும் இப்ப உட்காந்து எழுதறாங்க… நம்மளுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்… அதான் அவங்க சார் மேல உள்ள பயத்துல வேக வேகமா எழுதுறதை பார்த்து என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்…”
“எந்த சாருக்கு பயப்படனும்…? எதுக்கு இவ்வளவு வேகமா எழுதணும்..?”
அவள் அவ்வாறு கேட்டதும் அவளை வேற்று கிரகவாசி போல் ஒரு பார்வை பார்த்த சுமித்ராவோ, “ஏய் இன்னைக்கு ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ணனும்ல… எப்பவும் போல ருத்ரன் சார் ஃபர்ஸ்ட் க்ளாஸுக்கே வந்துருவாரு… அவர் வரும்போது ரெக்கார்ட் நோட்டு எழுதி முடுச்சு ரெடியா இல்லன்னு வையி அவ்ளோ தான் நம்ம எல்லாரும் செத்தோம்….”
அவள் கூறியதை கேட்ட அதிர்ச்சியில், “அய்யய்யோ…!!” என்று தலையில் கை வைத்து தான் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து நின்றாள் பனி.
“ஏன்டி இவ்ளோ ஷாக் ஆகுற…? ஏன் நீயும் எழுதலையா..?”
“இல்லடி நானும் எழுதவே இல்ல… இன்னும் சொல்லப்போனால் நான் அதை மறந்தே போயிட்டேன்…”
“போச்சு போ… இன்னைக்கு நீயும் செத்த…. எனக்கு தெரிஞ்சு இந்த பயலுக்கு எல்லாரும் எழுதியே முடிக்க போறானுங்க… நீ பாதியாவது எழுதுனியா…?”
“இல்லையே…!” என்று தனது கைகள் இரண்ட்டையும் விரித்து காட்டினாள் பனி.
“சுத்தம்….! சரி..சரி.. டைம் வேஸ்ட் பண்ணாத பெல் அடிக்கிறதுக்குள்ள வேகமா எழுதி முடிக்கபாரு…”
“ஆங் சரிடி… உன்னோட ரெக்கார்ட் நோட் குடு…” என்று கேட்டு வாங்கி அதில் உள்ளவற்றையெல்லாம் பார்த்து மடமடவென எழுத ஆரம்பித்து இருந்தாள்.
ஆனால் அவளுக்கு சோதனை தரும் விதமாக அவள் முழுதாக ஒரு பக்கம் எழுதி முடிப்பதற்குள்ளாகவே வகுப்பு ஆரம்பிக்கும் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
“அய்யய்யோ பெல் அடிச்சிருச்சே… இன்னும் நான் ஒரு பக்கம் கூட எழுதலையே…!” பரபரப்பாக எழுதிக் கொண்டே அவள் புலம்ப அந்த நேரம் வகுப்பிற்குள் நுழைந்திருந்தான் ருத்ரவர்மன்.
அவனை கண்டதும் மாணவர்கள் அனைவரும் அவனுக்கு காலை வணக்கம் கூற, சிறு தலையசைப்புடன் அதனை பெற்றுக்கொண்டு கையசைத்து அவர்கள் அனைவரையும் அமரக்கூறியவன்,
“லாஸ்ட் வீக் நம்ம கம்ப்ளீட் பண்ண யூனிட்க்கான ரெக்கார்ட்ஸ் எல்லாம் இன்னைக்கு சப்மிட் பண்ணனும் சொல்லிருந்தேன்… எல்லாரும் எழுதி முடிச்சுருப்பீங்கன்னு நம்புறேன்… சோ எல்லாரும் உங்க ரெகார்ட் நோட்ஸ் கொண்டு வந்து டேபிள்ள சப்மிட் பண்ணுங்க…!” மாணவர்களுக்கு கட்டளையிட்டவன் புத்தகத்தை எடுத்து இன்று நடத்தப் போகும் பாடத்திற்கான பக்கத்தை புரட்டத் துவங்கினான்.
அனைவரும் தாம் தம் ரெக்கார்ட் நோட்டை சமர்ப்பித்து விட்டனர். இதில் முதலாவதாக வந்து தனது நோட்டை வைத்தது என்னமோ பனிவிழி தான்.
அனைவரும் தங்களுடைய நோட்டுகளை அங்கு சமர்ப்பித்ததும் இன்றைய பொழுதிற்கான பாடத்தை கண்ணும் கருத்துமாக நடத்த துவங்கி இருந்தான் ருத்ரன்.
“மேடம் என்னத்த எழுதி கிழச்சிட்டீங்கன்னு முதல் ஆளா போய் நோட்டு வச்சிருக்கீங்களாமா…?” என்று கேட்டாள் சுமித்ரா.
“ஏய் நான் முதல் ஆளா போய் வச்சதுனால தாண்டி என் நோட்டு கடைசியா அடியில இருக்கு… இதுவே நாம் பொறுமையா போயிருந்தா என் நோட்டு மேலையோ இல்ல பாதியிலயே மாட்டி இருக்கும்.. ஆனா இப்போ அடியில இருக்கு பாத்தியா அதுக்கு தான்… சார் பாடம் எடுத்து முடிச்சுட்டு மேல இருந்து அடியில இருக்குற அந்த நோட்டை எடுத்து திருத்துறதுக்குள்ள நான் எழுதி முடிச்சுடுவேன்…”
“அது எப்பிடி பண்ண முடியும்…? அதான் நோட்டு சப்மிட் பண்ணிட்டியே…?”
“அங்கதான் நீ ஒரு தப்பு பண்ற…?”
“யாரு நானு எல்லாம் நேரக்கொடுமை…” என்று தலையில் அடித்துக் கொண்டவள் “சொல்லு தாயி…” என்றாள்.
“ஆங் அப்பிடி கேளு… நான் அங்க வச்ச நோட்டே வேற… ரெக்கார்ட் நோட் என்கிட்ட இருக்கு… இந்த க்ளாஸ் ஃபுல்லா டைம் இருக்கு… அதுக்குள்ள நான் ரெக்கார்ட் எழுதி முடிச்சிடுவேன்… அப்புறம் அந்த நோட்டை எல்லாம் இங்க இருந்து எடுத்துட்டு போறதுக்குள்ள நான் ஏதாவது கோல்மால் பண்ணி அந்த நோட்டை எடுத்துட்டு இந்த நோட்டை அங்க வச்சுருவேன் எப்படி என் பிளான்…?”
இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டு பனிவிழி கூற, அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்த சுமியோ, “இப்ப இங்க வந்து இந்த வேலை பாக்குறதுக்கு பதிலா, நேத்தே உட்கார்ந்து எழுதிருக்க வேண்டியதுதானே…!” என்றாள்.
“நீ சொல்றதும் சரிதான்… ஆனா என்ன பண்றது மறந்துட்டேனே…!”
தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்த வேலையில், பனியின் நெற்றியில் சுளீர்றென்று வந்து விழுந்தது ருத்ரனால் எறியப்பட்ட அந்த சாக்பீஸ்.
“ஆ…அம்மா…! எவன்டா அவன்…?” என்று எரிச்சலில் கூற வந்த வார்த்தையை கடினப்பட்டு அடக்கிக்கொண்டு தனது விழிகளை சுழற்றி இதனை எறிந்தது யார் என்பதை அறிய முயன்றாள்.
ஆனால் அவளின் விழிகளுக்கு அதிக வேலை குடுக்க விடாமல் அந்த வகுப்பின் மையத்தில் மார்பிற்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவளையே உறுத்து விழித்தவாறு நின்றிருந்தான் ருத்ரன்.
அவனைப் பார்த்ததும் பயத்தில் விழிகளை விரித்தவள் அவன் விழிகள் பிறப்பித்த கட்டளையிலேயே தன்னிச்சையாக எழுந்து நின்றாள்.
“காலைல முதல் பீரியட்லயே அங்க என்ன பேச்சு வேண்டி கிடக்கு…? நேத்து ஃபுல்லா காலேஜ் லீவு தானே… நீங்க ரெண்டு பேரும் கதையடிக்க இதுக்கப்பறம் எத்தனயோ ஃப்ரீ டைம் இருக்கும்போது, உங்களுக்கு பேசுறதுக்கு இதுதான் நேரமா…? ரொம்ப முக்கியமான சப்ஜெக்ட் போயிட்டு இருக்குல… கவனம் இங்கே இருக்காதா…?” என்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே கண்டிப்பான குரலில் கேட்டான் ருத்ரன்.
அவனின் கேள்வியில் தன்னிச்சையாக சுமித்ராவும் எழுந்து நிற்க, சுமித்ராவை கையசைத்து கீழே அமரக்கூறிய ருத்ரன் பனியின் புறம் திரும்பி அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன்,
“இந்த பீரியட் முடியிற வரைக்கும் நீ இப்பிடியே தான் நிக்கணும்…” என்று கட்டளையிட்டவன் மீண்டும் தனது பாடத்தை நடத்த துவங்கி இருந்தான்.
‘அய்யய்யோ…! பீரியட் முடியுற வரைக்கும் நிக்கணுமா…! இப்பிடி நின்னுட்டு இருந்தா நான் எப்படி எழுதுறது..? அப்பறம் எப்படி இந்த பீரியட் முடியறதுக்குள்ள நோட் சப்மிட் பண்றது..?’ என்றெண்ணி முதலில் விழித்தவள் பின் சுமித்ராவிடம்,
“ஏய் சுமி… சார் போர்டுல எழுதி முடுச்சுட்டு திரும்பி பார்க்கும் போது என்னை அலர்ட் பண்ணுடி…” என்று கூறியவள் ருத்ரன் பாடம் நடத்தும் பொழுது இரண்டு வாக்கியங்கள் எழுதுவதும், பின் சுமித்ராவிடமிருந்து அலர்ட் வரும்பொழுது நேராக நிற்பதுமாக இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவர்களின் இந்த வேலையை சில கணம் கவனித்து கண்டு கொண்ட ருத்ரன், பட்டென திரும்பி நின்று சுமித்ராவிடம் அவளிடம் சொல்லாதே என்பது போல் தனது விரலால் எச்சரித்தவன், மெல்ல நடந்து வந்து அவளின் டேபிள் அருகில் நின்றான்.
வேகவேகமாக எழுதிக் கொண்டிருந்தவள், வகுப்பு மிகவும் அமைதியாக இருப்பதை கவனித்து,
“ஏய் சுமி… என்னடி க்ளாஸ் ரொம்ப சைலண்ட்டா இருக்கு… சிடு மூஞ்சி வெளியே போயிடுச்சா என்ன…?” நிமிர்ந்தும் பாராமல் எழுதுவதில் கவனம் பதித்து சுமித்ராவிடம் கேட்டாள்.
“இல்ல இங்க தான் இருக்கேன்…” என்று தனக்கு மிக அருகில் கேட்ட எஃகு குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து நின்றாள் பனி.
திடீரென்று ருத்ரனை தனக்கு மிக அருகில் பார்த்ததும், வெடவெடத்து போன பனியின் முகத்தில் வியர்வை துளிகள் பூக்க அவனையே அதிர்ந்த விழிகளோடு பார்த்திருந்தாள்.
“அங்க லெசன் எடுத்துட்டு இருக்கும்போது உனக்கு இங்க என்ன எழுத வேண்டி இருக்கு…?” என்றவன் அவள் எழுதிய நோட்டை கவனிக்க தவறியிருந்தான்.
“சா..சார்… அ… அது.. வ…வந்து…” என்று பித்தற்றலாக வெளி வந்தது அவளின் வார்த்தைகள்.
“இனிமே என் க்ளாஸ் நடக்கும்போது நீ இங்க இந்த லாஸ்ட் பெஞ்ச்ல உட்கார கூடாது… ஃபர்ஸ்ட் ரோ ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல தான் உக்காரனும் காட் இட்…!!”
“ஓகே… ஓகே சார்…” என்று சற்றே மிரண்டு குரலில் கூறியவள்,
“அப்போ இன்னும் ஏன் இங்க நிக்கிற.. ஃபர்ஸ்ட் பெஞ்ச்க்கு போ..” என்று அவன் கூறவும் தான் எழுதிக் கொண்டிருந்த ரெக்கார்ட் நோட்டையும் உடன் எடுத்துக்கொண்டு முதல் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
இப்பொழுது அவள் மறைத்து எழுதுவதற்கும் வாய்ப்பே இல்லாமல் போனது.
முதல் வரிசையில் முதல் இருக்கையில் கைகளை பிசைந்த வண்ணம் அமர்ந்திருந்தவள், ‘என்ன செய்வது..? இந்த வகுப்பு முடிவதற்குள் எப்படி ரெகார்ட் நோட்டை சப்மிட் செய்வது..?” என்று யோசித்துக் கொண்டே பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் அமர்ந்திருந்தாள்.
அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஆஃபீஸ் பாயோ, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரெக்கார்ட் நோட் அனைத்தையும் ருத்ரனின் கேபினில் வைப்பதற்காக எடுத்துச் சென்றிருந்தார்.
அதனைப் பார்த்து தலையில் கை வைத்தவள், ‘போச்சா… எல்லாம் போச்சு… இனி நான் என்ன பண்ண போறேன்…?’ என்று யோசித்தவாரே அமர்ந்து இருந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் ருத்ரன் வகுப்பு முடிந்து வெளியேறி இருக்க, “போச்சே போறாரே… போறாரே… அங்க போய் நோட்டு சைன் பண்ணும் போது ரெக்கார்ட நோட் எங்க..? ஏன் வேற நோட்டை வச்சன்னு சொல்லி கேட்டா நான் என்ன சொல்லுவேன்… அதுபோக நான் அடுக்கி வச்சிருந்த நோட்டு வேற கொஞ்சம் வில்லங்கமானதாச்சே…! கடவுளே…! என்னை எப்படியாவது காப்பாத்து…” என்று தெய்வத்திடம் ஒரு வேண்டுதலை வைத்தாள்.
“ஏய் பனி…என்னை எங்கடி கூட்டிட்டு போற…? என்னடி பண்ண போற…?
“நீ பேசாம என்கூட நான் சொல்ற இடத்துக்கு வந்து, நான் சொல்ற வேலையை செஞ்சா மட்டும் போதும் சரியா… ஏதாவது அதிகப்ரசங்கி தனமா பேசி என்னை கடுப்பேத்துன மவளே செத்த…”
“ஏண்டி உனக்கு இதெல்லாம் நியாயமா இருக்கா…? எழுத வேண்டிய நேரத்துல எழுதாம இருந்துட்டு ஏண்டி இப்படி என்னையும் சேர்த்து உசுர வாங்குற…?”
“ஆங்… அது உன் தலைவிதி… நம்ம கிளாஸ்ல மொத்தம் 30 பேர் இருக்காங்க… அவங்க எல்லாத்தையும் விட்டுட்டு, நீ தானே முந்திரிக்கொட்டை மாதிரி என்கிட்ட வந்து முதல்ல ஃப்ரண்ட்ன்னு சேர்ந்த… அந்த கொடுமைக்கு இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்…”
பனிவிழி செய்யப் போகும் காரியம் என்ன..? அதனால் நிகழவிருக்கும் விளைவுகள் என்ன…?
(பனித்தீ தொடரும் 💝💝💝)
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
