வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 19

அத்தியாயம் 19 :

தந்தையிடம் பேசிவிட்டு தனது அறைக்கு ஆவலாக வந்தவனை.. அவனின் மனைவியின்றி வெறுமையான அறையே வரவேற்றது. முகத்தில் ஏமாற்றம் கவிழ சில நிமிடங்கள் நின்றிருந்தவனை, “கொஞ்சம் வழி விடுங்க” என்ற சிவாவின் குரல் மீட்டது.

கையில் மிகப்பெரிய பெட்டியை தூக்க முடியாது தூக்கியபடி வந்தவள்.. “இதை வாங்கி அப்படி வைப்பதற்கு என்னவாம்!” தன் முகவாயில் நொடித்தவளாய் தானே கீழிறக்கி வைத்தாள்.

நானியின் உடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கப்போர்டினை திறந்தவள், அவனின் ஆடைகள் அனைத்தையும் ஒரு பக்கமாக மூலையில் ஒதுக்கிவிட்டு கப்போர்டில் முழுவதும் பெட்டியிலிருந்த தன்னுடைய துணிகளை அடுக்க ஆரம்பித்தாள்.

அவளின் செயலை அவன் சுவாரஸ்யமாக பார்த்திருக்க.. “என்ன இங்க வேடிக்கை, அங்கு என் ரூமில் என்னுடைய தின்க்ஸ் எல்லாம் பையில் போட்டு வைத்திருக்கேன். போய் தூக்கிட்டு வாங்க” என்று நானியையே வேலை வாங்கினாள்.

எதுவும் கூறாது அவள் பொருட்கள் அனைத்தையும் தனது அறைக்கு இடம் மாற்றியவன், அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொள்ள.. சிவா நானியின் அறையை தங்களது அறையாக மாற்றிக்கொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் நிமிர்ந்த பொழுது மணி இரவு பத்துக்கு மேலாகியிருந்தது. நானி இருக்கையில் அமர்ந்தவாறு அரை உறக்கத்திலிருக்க, அவனை தன் வளையல்களை அசைத்து அதன் சத்தத்தில் எழுப்பியவள், கட்டிலில் கால்நீட்டி சாய்ந்தமர்ந்து “கால் பிடித்து விடு மாமா” என்றாள்.

அவளின் வார்த்தையில் பட்டென்று அவளருகில் அமர்ந்தவன்.. தன்னவளின் பாதம் பிடித்து, “உனக்கு என் மேல் கோபமே இல்லையா ரனிம்மா” எனக் கேட்டிருந்தான்.

“நீ என்ன செய்திருந்தாலும் அது எனக்கான நன்மையாக மட்டுமே இருக்கும். எனக்குத் தெரியும் மாமா… நான் உனக்கு எவ்வளவு முக்கியம் தெரியும், நீ கோபமா இருப்பதைப்போல் இவ்வளவு நாட்கள் நடிச்சதும் தெரியும்… என்னை முறைக்கிற மாதிரியே சைட் அடிப்ப அதுவும் தெரியும்…” சிவா சொல்லிக்கொண்டே போக,

“வேறென்னவெல்லாம் தெரியும்” எனக் கேட்டவனை நெருங்கி…
“தினமும் இரவு என்னறைக்கு வந்து நான் உறங்கிட்டதா நினைத்து முத்தம் கொடுப்பியே அதுவும் தெரியும்” என்றாள்.

“அடிப்பாவி… ஃபிராடு… அப்போ இவ்வளவு நாள் என்னை ஏமாத்திட்டிருந்தாயா?

நானி கேட்டதற்கு.. “நீ என்னுடன் இல்லாத நாட்களில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்ததே இரவில் நீ தெரியாமல் வந்து கொடுக்கும் முத்தம் தான் மாமா” எனக் கூறியவளை காற்றுப்புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்து தனக்குள் புதைத்தான்.

அவளும் அவனுள் வாகாக அடங்கிப் போனாள்.

“என்ன தான் என் செயல்களுக்கு பின்னால் காரணமிருந்தாலும்… உனக்கு என் மீது கோபமில்லையென்றாலும்.. நான் செய்தது சரியாகி விடாதே.. என்னை மன்னிப்பாயா ரனிம்மா?” உள்ளார்ந்த வருத்தத்துடன் கேட்டிருந்தான்.

“அதிகமான ஆழமான உண்மை காதல் எதையும் மன்னிக்கும் மறக்கும் ஏற்கும் மாமா.”

சிவா கூறிய பதிலில் அவளின் முகம் பற்றியவன் தன் முத்திரைகளை அவளின் முகமெங்கும் ஆவேசமாக பதித்தான்.

அவளின் புரிதல் கண்டு மீண்டும் ஒருமுறை அவளின் காதலில் விழுந்தான்.

“லவ் யூ ரனிம்மா… லவ் யூ சோ மச்…”

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னவனின் காதல் வார்த்தைகள் செவி நுழைய, அது தந்த இன்பத்தில் மகிழ்வுடன் தன் மன்னவனின் மடியிலேயே துயில் கொண்டாள்.

சிவா நன்கு உறங்கியதும் வாகாக அவளை படுக்க வைத்தவன் தன்னவளை அணைத்துக் கொண்டு தானும் நிம்மதியான உறக்கம் கொண்டான்.

அதிகாலையில் குளித்து முடித்து அடுக்கலைக்குள் நுழைந்த பத்மாவும் அரசியும் அங்கு நானி நின்றிருந்த கோலத்தைக் கண்டு வாய்விட்டு நகைத்தனர்.

ஷார்ட்ஸ் மற்றும் கையில்லா பனியன் அணிந்திருந்தவன், தலையில் துண்டு ஒன்றினை கட்டிக்கொண்டு தேநீர் வார்த்துக் கொண்டிருந்தான்.

“காஃபி வேணும்னா சொல்லியிருக்கலாமே,” அவனின் கையிலிருந்த கோப்பையை வாங்க முனைந்த அரசியை தடுத்தவன்… “காஃபி எனக்கில்லை வேறொரு முக்கியமானவங்களுக்கு” என்றான்.

“அந்த முக்கியமான ஆளு நான் தானே…” சமையலறை வாயிலிலிருந்து குரல் கொடுத்தாள் நந்தினி.

“ச்சே… ச்சே.. உனக்கெல்லாம் போட்டுக்கொடுக்க ஆள் ரெடியாகிட்டு இருக்காங்க.” நானி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த ஆள் அங்கு வருகை தந்திருந்தார். அது வேறு யாருமில்லை, கபிலன் தான். நானி குறிப்பிட்டு சொல்லியது கபிலனென்றதும் அங்கு சிரிப்பலை எழுந்தது.

பேச்சினூடே தேநீரை தயாரித்து முடித்த நானி, கோப்பையில் ஊற்றி ஆவி பறக்க கையில் எடுத்துக்கொண்டு தனது அறை நோக்கி சென்றான்.

“டேய் அண்ணா காஃபி யாருக்குன்னு சொல்லிட்டு போடா” என்ற நந்துவின் தலையில் தட்டிய கபிலன், “இன்னுமாடி உனக்கு அது யாருக்குன்னு புரியல” என்றதும், அவள் முறைத்த முறைப்பில் கபிலனும் தன்னவளுக்காக தேநீர் தயாரிக்க ஆரம்பித்தான்.

தலையணையில் முகம் புதைத்து கால்களை குறுக்கி சிறு பிள்ளையென தனது மஞ்சத்தில் உறங்குபவளை ஆசை தீர ரசித்தவன், தேநீர் ஆறிப்போவதை உணர்ந்து.. தன்னவளின் முகம் நோக்கி மெல்ல குனிந்து பட்டு போன்ற அவளின் கன்னத்தில் தனது பற்கள் பதியுமாறு அழுத்தமாக கடித்திருந்தான்.

அவன் கடித்ததில் வலி பொறுக்காது.. மெத்தையில் எழுந்து அமர்ந்தவள் வலியில் அலறினாள். அவன் கடித்த இடம் நன்கு சிவந்திருந்தது.

ராட்சசா… கொலைகார…. எதுக்குடா இப்படி கடித்து வைத்தாய்… திட்டியவளின் கண்கள் வலியில் கலங்கியது. அவள் கண்களில் நீரை கண்டவன் பொறுக்காது, தான் கடித்த கன்னத்திற்கு தன் முத்தத்தால் மருந்திட்டான். காயத்தின் தீவிரம் குறைந்த பின்னரும், அவனின் மருந்திடல் மட்டும் நீடித்துக் கொண்டேயிருந்தது. இருவரும் தங்களுக்கான தனியுலகில் சஞ்சரித்த வேளையில் கரடியாய் இடை புகுந்தார் அழகேசன்.

கதவு தட்டும் ஓசையில் பதறி விலகியவன், தான் கொண்டுவந்திருந்த தேநீரை அவளிடம் கொடுத்துவிட்டு, தன்னை சரி செய்த பின்னர் கதவினை திறக்க.. அங்கு அழகேசன் நின்றிருந்தார்.

“கண்ணு போலீஸ் வந்திருக்குப்பா…”

அவர் பதட்டத்தை தன் பார்வையால் குறைத்தவன்… “நீங்க போங்கப்பா நான் ஒரு 2 மினிட்ஸில் வந்துவிடுகிறேன்” என்றவன், அறைக்குள் விரைந்து அவசரமாக உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தான்.

வந்திருப்பவர் தேனி மாவட்ட AC.. மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானிக்கு வணக்கம் தெரிவித்தவர், “சார் அக்யூஸ்ட்…” என்றிருந்தார்.

அவர் கேட்டதும்… அங்கு கூடியிருந்த தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சுற்றி பார்த்த நானி, பாண்டியம்மாளை கை காட்டினான்.

“நானி…” பத்மா பதறியவராக, “என்ன கண்ணு அவர் உன் அப்பத்தா” என்க,

“இப்போது அவர் ஒரு குற்றவாளி” என்றதோடு வேறெதுவும் நானி பேசவில்லை.

நாளை கேஸ் விசாரணைக்கு வருமென்று காவல்துறை அதிகாரி தெரிவிக்க… என் வக்கீலின் மூலம் அனைத்து விதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறேன் என்ற நானி வாசல்வரை சென்று தனது அப்பத்தாவை வழியனுப்பி வைத்தான்.

பாண்டியம்மாள் செல்லும்போது, நீ எப்போதும் என்னை ஜெயித்துவிட முடியாதென்ற பொருள் மறைந்த பார்வையை நானியின் மீது வீசி சென்றார்.

நம் குடும்பத்துக்கு இப்படியொரு சோதனை வந்திருக்க வேண்டாமென்ற அழகேசன்.. வீட்டுல நல்ல காரியம் நடக்க போகுது அதுக்குண்டான வேலையை கவனியுங்கள் என்று அனைவரையும் சகஜ நிலைக்கு திருப்பினார்.

கபிலன் நேற்று இரவு தனக்கு வந்திருந்த மெயில் பற்றி அழகேசன் மற்றும் நானியிடம் தெரிவித்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் என் கம்பெனி வேலை விஷயமாக நான் லண்டனில் இருக்க வேண்டுமென்றவன், அதற்குள் திருமணத்தை முடித்து விட்டால், நந்துவையும் என்னுடன் அழைத்து சென்றுவிடுவேனென்றான்.

ஆதலால், பத்து நாட்களுக்குப் பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று குறித்த தேதியை மாற்றி இன்னும் இரு தினங்களில் திருமணமென்று ஏற்பாடாகியது.

நேற்று மாலை பூஜையறைக்குள் சென்ற செல்வி.. இப்போது தான் வெளியில் வந்தார். தன் துக்கமெல்லாம் தீரும் வரை இறைவனிடம் புலம்பி தீர்த்தவர், மனம் அமைதி பெற்ற பிறகே அங்கிருந்து எழுந்திருந்தார்.

அவர் தனது காலை பணிகளை முடித்து அசதியாக அமர்ந்த போது, காசியின் காரியதரிசி வக்கீலுடன் வருகை தந்தார்.

சில பத்திர காகிதங்களை செல்வியின் முன் வைத்தவர், சார் அவருடைய எல்லா சொத்துக்களையும் நீங்கள் சொல்லியதை போல் நல்ல காரியங்கள் செய்வதற்காக உங்களுடைய பெயரிலேயே ஒரு ட்ரஸ்ட் தொடங்கிவிட்டார் ம்மா… அதில் இப்போது நீங்களிருக்கும் வீடும் அடக்கம். வீரபாண்டி கிராமத்தில் உங்களுடைய பூர்விக சொத்தாக இருக்கும் இரண்டு ஏக்கர் நிலமும், ஒரு பண்ணை வீட்டையும் உங்கள் பெயரில் மாற்றி எழுதியுள்ளார். உங்களை அங்கு போய் இருக்க சொன்னார் என்ற வக்கீலின் வார்த்தையில் தனக்காக தான் சொல்லியதை நிரூபித்து அவருடைய காதலை உண்மையென காட்டிவிட்டாரென்று தன் கணவனை நினைத்து உள்ளம் பூரித்தார் செல்வி.

மகிழ்ச்சி பொங்க… அவரெங்கே என்ற செல்வியை கலக்கத்துடன் பார்த்த இருவரும், ஐயா இதுவரை செய்த குற்றங்களுக்காகவும், அரசியலில் செய்த ஊழல்களுக்காகவும் உண்மையை ஒப்புக்கொண்டு தானே போலீசில் சென்று சரணடைந்து விட்டார் என்றனர்.

இந்த செய்தி கேட்டதும் செல்வி என்ன மாதிரி உணர்ந்தாரென்று அவருக்கேத் தெரியவில்லை. ஆனால், தன் கணவனின் மீது இந்த வயதிலும் காதல் ஊற்றெடுத்தது. தன் கணவனின் வார்த்தைப்படி அன்றே தங்களது பண்ணை வீட்டிற்கு சென்றவர், காசியின் தண்டனை காலம் முடிந்து அவரின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

காசியின் திடீர் மனமாற்றம், சரண்டர் ஆகியவற்றை ராஜேஷின் மூலம் தெரிந்துகொண்ட நானி.. இதற்கான காரணம் தெரியாவிட்டாலும், மாவட்டத்தில் மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதி திருந்தியது நன்மைக்கே என்று ஆறுதலடைந்தான்.

நானியின் தலைமையில் நடைபெற்ற.. அரசு பள்ளிகள் சீரமைக்கும் பணிகளும் எவ்வித தடங்கலுமின்றி நன்முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அன்று மதியம் தனது தந்தையுடன் தேனி காவல்நிலையம் சென்ற நானி, 21 வருடங்களுக்கு முன்பு தனது மருமகனையே கௌரத்திற்காக கொன்றதற்கான ஆதாரமாகவும், குளத்தின் குத்தகைக்காக பக்கத்து ஊர் தனக்காரர் பெரியசாமியை கொலை செய்ததற்காகவும், தனது மனைவி சிவாவை கொலை செய்ய முயற்சித்ததாகவுமென்று.. மூன்று வழக்குக்கான ஆதாரமாகவும் வீரபாண்டியளித்த ஒப்புதல் வாக்குமூலமடங்கிய ரெக்கார்டர் ஒலிபதிவையும்… வீரபாண்டியையும் நேரடியாகவே உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தான்.

நிச்சயம் பெரிய தண்டனை கிடைக்குமென்ற போலீசாரிடம் விடைபெற்ற நானி.. லாக்கப்பில் இருக்கும் பாண்டியம்மாளிடம் சென்று, தண்டனை முடிந்து வெளியில் வரும் போதாவது திருந்தி வா அப்பத்தா என்க.. அழகேசனோ, அவங்ககிட்ட என்ன பேச்சென்று தனது தாயின் முகத்தை கூட பார்க்காது நானியை இழுத்துக்கொண்டு சென்று விட்டார்.

ஒருவழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிந்ததில் நானி நிம்மதியாக உணர்ந்தான். அவனின் பெரும் நிம்மதியே, இனி சிவாவிற்கு யார் மூலமும் ஆபத்தில்லை என்பது தான்.. ஆனால் பாண்டியம்மாளுக்கே சிகரம் வைப்பது போல் ஒமியா சிவாவை அழிக்கும் திட்டத்தோடு வெறியில் சுற்றிக்கொண்டிருந்தாள் என்பதை அவன் அறியவில்லை.

இரு தினங்களில் திருமணம் என்பதால் அனைவரும் ஒவ்வொரு வேலையாக கவனித்துக் கொண்டனர். நானியின் திருமணம் வீட்டிலேயே நடைப்பெற்றதால், இத்திருமணத்தையும் வீட்டிலேயே ஏற்பாடு செய்தார் அழகேசன்.

சிவா தன்னுடைய தோழிக்கு திருமணம் என்கிற மகிழ்வில் அரசி மற்றும் பத்மா கூறும் அனைத்து வேலைகளையும் முகம் கோணாது செய்தாள். அமுதாவிற்கே சிவாவிடம் பழக பழக அவளை மிகவும் பிடித்தது. தன்னுடைய மகளையும் இதுபோல் பொறுப்பாக வளர்க்காமல் தவறு செய்துவிட்டேனேயென வருந்தினார். பத்மாவும் அரசியும் தான் அவளுக்கும் திருமணம் முடிந்தால் பொறுப்பு தானாக வந்துவிடுமென்று தேற்றினர்.

காலையிலிருந்து நானியிடம் போக்கு காட்டி.. அவன் முன் கூட செல்லாது வேலை வேலையென்று சுழன்றவள் இரவு உணவிற்கு பிறகு தங்களது அறைக்குள் நுழைந்தவள்.. மெகந்தி டிசைன்ஸ் அடங்கிய சிறு புத்தகம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வெளியேற,

“ஏய் நில்லுடி…”

என்ற நானியின் சத்தத்தில் அதிர்ந்து நின்றாள்.

“என்னடி நினைச்சிட்டு இருக்க, காலையில் ஒரு கிஸ் கொடுத்தது.. அதன் பிறகு மேடத்தை கண்களால் கூட பார்க்க முடியவில்லை… நந்துவுக்கு தாண்டி கல்யாணம் என்னவோ உனக்குங்கிற மாதிரி ஓவரா ஸீன் போடுற” என்று வெடித்தான்.

காலையிலிருந்து தானும், கல்யாண சாப்பாட்டிற்கு, மேள வாசிப்பிற்கு, பந்தல் போடுவதற்கென ஆட்களை தேடி பிடிப்பதில் பிசியாக சுற்றி கொண்டிருந்ததை அந்நேரம் ஏனோ மறந்து போனான்.

“நானாவது வீட்டில் தான் சுற்றிக் கொண்டிருந்தேன்.. ஆனால், கலெக்டர் சார் காலையில வெளிய போனீங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு தானே வீட்டுக்கு வந்தீங்க..” இதுல என்ன என்னைய மட்டும் குறை சொல்வதென்று முறுக்கிக்கொண்டாள்.

“அப்போ நான் வந்தது தெரிந்தும் மேடம் என்னை பார்க்க வராமல் இருந்திருக்கீங்க,” நானி சோகமாகக் கேட்க, அவனை நெருங்கி உரசி நின்றவள், “எல்லாம் நம் நந்துவிற்காகத் தானே, நாளைக்கு இந்நேரம்…” என்றாள். நாணம் கொண்டு.

தன்னவளின் வார்த்தைகளில் லேசாக இதழ் விரித்தவன்.. “சரி போயிட்டு வா” என்க, அவள் நம்ப முடியாது பார்த்தாள்.

அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ளும் ஆளில்லையே…..

அவளின் மனதை சரியாக படித்தவன், “நாளை இந்நேரம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது.. நீ போய் உன் வேலையை முடித்துவிட்டு வா.. எந்நேரமானாலும் நீ எனக்கு வேண்டும்” என்றவன் கண்களில் காதலும், குரலில் தாபமும் போட்டி போட்டது.

அவனின் பார்வையில் கட்டுண்டவள் சரியென தலையசைக்க, அவளுணரும் முன்னமே இதழில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்து விடுவித்திருந்தான்.

அவள் சுயமடைந்து பார்க்க, நானி இருந்தநிலையிலேயே இருக்க.. இப்போது நடந்தது உண்மையா இல்லை கனவா என்ற குழப்பத்துடனேயே நந்துவின் அறைக்கு சென்றாள்.

சற்று நேரத்திற்கு முன்பு தான் நந்துவை காண வந்த கபிலன் அவளை விட்டு செல்லும் வழியின்றி  இறுக்கி அணைத்திருந்தான்.

மந்திரத்து விட்டவள் போல் அறைக்குள் நுழைந்து சிவா, இருவருமிருந்த நிலை கண்டு அப்படியே சிலையானாள்.

அரவம் உணர்ந்து இருவரும் விலக, சிவாவை பார்க்க தயங்கி கபிலன் தலை குனிந்தவாறே வெளியே சென்றுவிட்டான்.

கபிலன் சென்றும் சிவா அப்படியே நிற்க, நந்துவின் தொடுகையில் மீண்டு, தனது குழப்பம் நீங்கியவளாக நந்துவை கலாய்த்து ஒரு வழி செய்துவிட்டாள்.

கலாட்டா பேச்சுக்கள் முடிவுக்கு வர, நானி காத்திருப்பான் என்ற நினைவு வந்ததும் துரிதமாக நந்துவின் கைகளில் மருதானியிட ஆரம்பித்தாள்.

நள்ளிரவு கடந்தும் சிவா வராததால், அவளைத் தேடி நானியே நந்துவின் அறைக்கு வந்துவிட்டான்.

அப்போது தான் உறங்க ஆயதமாகிக்கொண்டிருந்த நந்து என்ன அண்ணா என்று வினவ, அவன் கேட்ட சிவா எங்கே என்ற கேள்வியில் அதிர்ச்சியாகினாள்.

நந்துவின் பதட்டத்துடனே, சிவா எனக்கு மருதாணி போட்டுவிட்டு அரை மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்டாலே என்க, உள்ளுக்குள் கலவரமான நானி.. சரிம்மா, அம்மா அத்தையிடம் சென்றிருப்பாள் நான் பார்க்கிறேன் நீ தூங்கெனக் கூறிச் சென்றான்.

சிவாவிற்கு என்ன ஆனதென்று தெரியாது உறக்கம் வராமல், ஜன்னலருகே நந்து நின்றிருக்க, ஒமியா தன் காரை சத்தமின்றி நிறுத்திவிட்டு யாருக்கும் தெரியாது வீட்டிற்குள் நுழைந்து கதவடைத்தாள்.

வீடு முழுக்க சிவாவைத் தேடிய நானி தோட்டத்து பக்கம் செல்ல, வேகமாக ஓடிவந்த நந்து ஒமியா தங்களது அரிசி ஆலை பக்கமாக சென்று வந்தாலென்கிற தகவலை அளிக்க நொடியும் தாமதியாது வேகமாக ஆலையை நோக்கி விரைந்தான்.

அந்நேரத்திலும் ஆலை சுறுசுறுப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது.

அந்நேரத்தில் நானியை எதிர்பார்க்காத ஊழியர், இப்போது தாங்க கல்யாண சாப்பாட்டிற்கு புது அரிசி வேண்டுமென்று.. நம்ம வீட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு பாப்பா ஒரு மூட்டை நெல்லு கொடுத்துட்டு போனாங்க.. அந்த விஷியமாகத்தானே நீங்கள் வந்திருக்கிறீங்க ஐயா என்ற வேலையாள்.. காலையில சாப்பாடு செய்வதற்குள் புது அரிசியை வீட்டிற்க்கு அனுப்பி வைத்துவிடுகிறேன் என்று கூற.. ஒமியா கொண்டு வந்த மூட்டை எங்கே என்று பரபரத்தான் நானி.

நானியின் முகத்தில் தென்பட்ட துடிப்பே, ஏதோ சரியில்லை என்பதை எடுத்துக்காட்ட.. “அந்தம்மா கொண்டு வந்தப்பவே, மூட்டையை தூக்கும் போது.. நெல்லு மூட்டை மாதிரி இல்லையேன்னு கேட்டேங்க.. அதுக்கு அவங்க நான் சொன்னதை செய்யுன்னு என் வாயை அடைச்சிட்டாங்க ஐயா” என்ற தகவலை அளித்தவன்.. நெல்லு மூட்டை வேக வைக்கிற பார்லருக்குள்ள போட்டுட்டேன் என்றது தான் நானியின் இதயம் தன் துடிப்பை ஒரு நொடி நிறுத்தியிருந்தது.

நானியின் அதிர்வில் பயந்தவர், “இன்னும் ஸ்விட்ச் போடலங்க” என்றதும் தான் நானியின் உயிர் மீண்டது.

வேகமாக பார்லருக்குள் இறங்கியவன் சிவா கட்டுண்டு கிடந்த மூட்டையை மெல்ல தூக்கி வெளி வந்தான். மூட்டையை பிரிக்க அதில் மயங்கிய நிலையில் சிவா கிடந்தாள். சுவாசம் சீராக இருக்க அவள் விழிப்பதற்குள் வீடு சென்றுவிடலாமென்று தன்னவளை கைகளில் ஏந்தி காருக்கு விரைந்தான்.

“நான் அப்போவே மூட்டையா அவியலுக்கு போட கூடாது.. நெல்லை பிரிச்சு தான் கொட்டனும் சொன்னதுக்கு.. என்னைய அந்தம்மா அடிச்சிபுடுச்சுங்க அதான் நானும் பிரிச்சு பார்க்காமல் மூட்டையை பார்லருக்குள்ள போட்டுட்டேனுங்க.. என்னை மன்னிச்சிடுங்க ஐயா..” சிவாவை காரின் பின் சீட்டில் படுக்க வைத்த நானி, முன்னிருக்கையில் அமர போகையில் அவனின் காலை பிடித்து மன்னிப்பு வேண்டி மன்றாடினான் அந்த வேலையாள்.

இனியாவது பொறுப்பாக இருங்கலென்றவன் புயல் போல் காரினை செலுத்தி வீடு வந்து சேர்ந்தான்.

தங்களது அறைக்கு தூக்கி வந்து மெத்தையில் கிடத்தினான். நானிக்காக காத்திருந்த நந்து சிவாவின் கோலம் கண்டு பதற அவளை அடக்கியவன், தண்ணீர் தெளித்து சிவாவை எழுப்பினான்.

கண்களை கசக்கி விழித்தவள்.. “என்னாச்சு மாமா?” என்க, அதையேத் தான் நானும் கேட்கிறேன் உனக்கு என்னாச்சு என்று வினவினான்.

நெற்றி சுருக்கி யோசித்தவள், நந்துவிற்கு மருதாணி போட்டுவிட்டு அறையிலிருந்து வெளியே வருகையில்.. மீனா தான் அத்தை கொடுத்ததாக பால் கொடுத்தாங்க, அதை குடித்ததும் தூக்கமா வந்துச்சு மாமா அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை என்றாள்.

ஏதோ கூற வந்த நந்துவை தடுத்து அவளின் அறைக்கு அனுப்பி வைத்தவன், திருமணம் நல்லபடியாக முடியட்டுமென்று அமைதி காத்தான்.

என்னாச்சு மாமா.. ஏன் என் மேலெல்லாம் நெல்லு வாசனையா வீசுது எனக் கேட்டவளிடம் ஒன்றும் கூறாது, நீ குளித்துவிட்டு வாயென்று குளியலறைக்குள் அனுப்பி வைத்தான்.

சிவா தன்னை சுத்தம் செய்து வந்ததும் தன்னவளை பாதுகாப்பாய் அணைத்து அவளை உறங்கச் செய்து தானும் உறங்கிப் போனான்.

இந்நேரம் சிவாவின் கதை முடிந்திருக்கும். கல்யாண வீடு, இழவு வீடாகியிருக்குமென்ற சந்தோஷ நினைப்பில் அறையை விட்டு வெளியே வந்த ஒமியா அங்கு உறவினர்கள் அனைவரும் வருகைத் தந்திருக்க, நந்துவின் பெற்றோரும் கபிலனின் பெற்றோரும் வந்திருப்போரை வரவேற்கும் விதமாக உபசரித்துக்கொண்டிருக்க.. அரசியும் சிவாவும் மேடையில் ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுக்கும் வண்ணமாக இருக்க கண்டதில், அதுவும் இரவு செத்து போயிருப்பாளென்று நினைத்தவள் உயிருடன் பட்டு சேலை சரசரக்க சுழன்று வருவதை கண்டு உச்சபட்ச அதிர்ச்சியடைந்தாள்.

தூங்கி வழிந்த முகத்துடன் வந்து நிற்கும் மகளை, அண்ணன் கல்யாணத்தில் இப்படியா வந்து நிப்பாங்க போ, போய் குளித்து முடித்து சுத்தமாக வாவென்று கடிந்துகொண்டார் அமுதா.

அதெல்லாம் அவளின் காதில் விழுந்தால் தானே, அவள் மனம் சிவாவிற்கு ஒன்றுமாகவில்லையேயென கொதித்துக் கொண்டிருந்தது.

தன் தங்கையின் திருமணத்திற்கு வந்திருக்கும் தன்னுடைய நண்பர்களை கபிலனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த நானியின் மற்றொரு கண் ஒமியாவின் நிலை கண்டு உள்ளுக்குள் ஆனந்த குதியாட்டம் போட்டான்.

அந்நேரம் ஐயர் தேங்காய் கலசத்திற்கு புது ஜலம் வையுங்கோ என்க, அரசி சிவாவை கிணற்றிலிருந்து கொண்டு வரும்படி அனுப்பி வைத்தார்.

சிவா தனியாக செல்வதை கண்ட ஒமியாவும் அவளை பின் தொடர்ந்து தோட்டத்திற்கு சென்றாள்.

ஒமியாவின் மீது ஒரு கண் வைத்திருந்த நானியும் அவள் எங்கு செல்கிறாளென்று பின்னோடு வந்தான்.

சிவா கிணற்றில் நீர் இரைத்துக்கொண்டிருக்க, அவளை அப்படியே பின்னாலிருந்து கிணற்றுக்குள் தள்ளிவிட நினைத்து ஒமியா சத்தமிடாது அடியெடுத்து வைத்து முன்னோக்கி செல்ல, அவளின் எண்ண ஓட்டம் அறிந்த நானி அவளை தடுக்க முயல்வதற்குள் தொப்பென்று நீருக்குள் விழும் சத்தம் கேட்டது.

சத்தம் கேட்ட அதிர்வில் கண்களை இறுக்கி மூடிய நானி மெல்ல இமை திறக்க, காதுகளை கைகளால் பொத்தியபடி பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தாள் சிவா.

வேகமாக தன்னவளை நெருங்கிய நானி சிவாவைத் தொட்டு திருப்ப சுயம் பெற்ற இருவரும் கிணற்றினுள்ளே எட்டி பார்க்க ஒமியா தண்ணீருக்குள் மூழ்கி வெளிவந்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள்.

ஒமியா சிவாவின் முதுகில் கை வைத்து தள்ள நெருங்குகையில், சிவா தண்ணீர் எடுத்துக்கொண்டு விலகிவிட.. காலிடறி ஒமியா கிணற்றிற்குள் விழுந்துவிட்டாள்.

“தன் வினை தன்னையேச் சுடும்”… என்பது ஒமியாவின் விஷியத்தில் உண்மையாகிவிட்டது.

ஒமியா உயிருக்கு போராடுவதை கண்டு… அவளை காப்பாற்றுமாறு சிவா நானியிடம் கேட்க.. கொஞ்ச நேரமிரு ரனிம்மா, அவ்வளவு சீக்கிரமெல்லாம் அவள் செத்துவிட மாட்டாள்.. கொஞ்சம் உயிர் பயமென்றால் என்னவென்று அவளும் உணர்ந்து கொல்லட்டுமென்ற நானி ஒமியா போராடுவதை ஒருவித சந்தோஷ மனநிலையில் பார்த்திருந்தான்.

“இப்போ நீ குதிச்சு அவளை காப்பாத்தாலன்னா நானும் குதிச்சு செத்துப்போயிடுவேன்.”

சிவா தன் வார்த்தைகளை முடிப்பதற்குள் நானி கிணற்றில் குதித்து ஒமியா மேலே இழுத்து வந்திருந்தான்.

சிவாவின் கரம் கொண்டு ஒமியாவின் வயிற்றினை அமுக்க, அவள் குடித்திருந்த நீர் மொத்தமும் வெளியேறிவிட கண் விழித்தாள் ஒமியா.

ஒமியாவை அருவெறுப்புடன் பார்த்தவன், நீயெல்லாம் பெண்ணே இல்லை என்க.. மெல்ல தலை கவிழ்ந்தாள்.

என்னை காப்பாற்றியதற்கு நன்றி.

குரலே எழும்பாது நன்றி தெரிவித்தவளை குனிந்து நேருக்கு நேராக சந்தித்தவன்.. உன்னை காப்பாற்றியது என் ரனிம்மாவின் வார்தைக்காக என்றதோடு தன்னறை நோக்கி உடை மாற்ற விடுவிடுவென்று சென்றுவிட்டான்.

சிவாவும் அவளிடம் என்ன பேசுவதென்று தெரியாது ஐயர் கேட்ட நீரினை எடுத்துக்கொண்டு திருமணம் நடைபெறும் வீட்டின் வரவேற்பறை நோக்கி நகர்ந்தாள்.

தான் கொலை செய்ய நினைப்பவள் தன்னை காப்பாற்றியிருக்கின்றாள் என நினைத்த ஒமியா தன்னை நினைத்தே வெட்கினாள். நீருக்குள் மூழ்கிய நொடி உயிரின் மதிப்பை உணர்ந்து கொண்டவள், தான் செய்ய நினைத்த செயல் எவ்வளவு கொடியதென்று உணர்ந்துகொண்டாள்.

நானியும் ஆடை மாற்றிக்கொண்டு மேடையில் மணமக்களுக்கு பின்னால் தன்னவளுடன் ஜோடியாக நின்றுகொள்ள, அவனுக்கு போட்டியாக அழகேசனும் பத்மாவை நெருங்கி நின்று தன் முறுக்கு மீசையை கெத்தாக நீவி விட்டுக்கொண்டார்.

அவர்களைக் கண்டு அரசியும் அமுதாவும் புன்னகைக்க, சிவாவும் பத்மாவும் வெட்கத்தில் நெளிந்தனர்.

உங்கள் ரொமான்செல்லாம் தாலி கட்டியதும் வச்சிக்கோங்கோ.. இப்போ மாப்பிள்ளை புள்ளையாண்டான் தாலி கட்டுவதை பாருங்கோ என்று டைமிங் கவுண்டர் கொடுத்த ஐயர்….

கெட்டி மேளம் … கெட்டி மேளம்…. என்க,

மங்கள வாத்தியம் முழங்க கபிலன் தன் காதலியின் கழுத்தில் பொன் தலையிட்டு மனைவியாக ஏற்றுக்கொண்டான்.

கபிலன் நந்துவின் கழுத்தில் தாலியிடும் போது நானி தன்னவளின் விழிகளைத்தான் சந்தித்தபடி நின்றிருந்தான்.

திருமணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப்பிறகு…

கபிலன் அமெரிக்கா திரும்பி செல்ல தயாராகிக்கொண்டிருந்தான். நந்துவிற்கு ஏற்கனவே பாஸ்போர்ட் விசா இருந்ததால் இப்போது அங்கு செல்வதற்கு எவ்வித தடையுமில்லாமல் போனது.

தான் பாசமாக வளர்ந்த வீட்டினை விட்டு செல்வது கஷ்டமாக இருந்தாலும்… அந்த வருத்ததையெல்லாம் தனது அன்பால் தன் கணவன் முறியடித்துவிடுவானென்ற நம்பிக்கையில் சந்தோஷமாகவே அமெரிக்கா செல்லத் தயாராகினாள் நந்தினி.

ஒமியா ஊருக்கு செல்வதற்கு முன் சிவாவிடம் வந்து தான் செய்த தவற்றிற்கு உண்மையிலேயே வருந்தி மன்னிப்பு வேண்டினாள். அதை நான் மறந்துவிட்டதாகக் கூறி சிவா ஒமியாவை அணைத்துக்கொள்ள, மேலும் கூனி குறுகிப்போனாள் ஒமியா.

அவளின் செயல்களுக்கு மன்னிப்பே தக்க தண்டனையென்று நானியும் நடந்ததை யாரிடமும் சொல்லாது விட்டு விட்டான்.

தத்தம் தங்கை குடும்பத்தை அழகேசனும், நானியும் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தனர்.

காரிலேற சென்ற நொடி நானியிடம் திரும்பி வந்த கபிலன், தனது கோர்ட் பாக்கெட்டிலிருந்து கவர் ஒன்றை எடுத்து நானியின் கையில் திணித்துவிட்டுச் சென்றான்.

அதனை பிரித்து பார்த்த நானி அப்பட்டமாக நாணம் கொண்டான்.

சுவிட்சர்லாந்து செல்வதற்கான ஹனிமூன் பேக்கேஜ் அது.. என்னவென்று வாங்கி பார்த்த அழகேசன், இன்றிரவு அவர்கள் சென்னை ஏர்போர்ட்டில் இருக்க வேண்டுமென்பது தெரிந்து விரைவாக கிளம்புமாறு துரிதப்படுத்தினார்.

நானியும் சிவாவும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க.. வீட்டு தொலைபேசி அலறியது. அழகேசன் தான் எடுத்திருந்தார். அழைத்தது தற்போது பாண்டியம்மாள் அடைப்பட்டிருக்கும் காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி.

பாண்டியம்மாள் அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க, உடனடியாக வருகின்றேன் என்ற அழகேசன் வீட்டிலுள்ளவர்கள் யாரிடமும் தெரிவிக்காது காவல் நிலையம் சென்று, அவரின் முகத்தையும் பார்க்க பிடிக்காது.. உறவினர் யாருமில்லை, உங்கள் விருப்பப்படி உடலை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமென்று எழுதி கொடுத்தவர்.. நானிக்கு இந்த விஷயம் தெரிய கூடாதென்றும் கேட்டுக்கொண்டார்.

மகள் தாலியை இழந்து விதவையாக வீட்டிலிருப்பாள் என்பது அறிந்தும்.. அரசியின் கணவரை தெரிந்தே கொன்றவரை அழகேசனால் இறுதிவரை மன்னிக்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்த அழகேசன் நேராக குளியலறைக்குள் புகுந்து தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு ஒன்றும் நடவாதவரைப்போன்று தன் மகனையும் மருமகளையும் வழியனுப்பத் தயாராகினார்.

மூத்தவர்கள் மூவரும் கீழே நின்றபடி, தங்களது மகன்(ள்) மற்றும் மருமகள்(ன்) மாடியிலிருந்து ஒன்றாக இறங்கி வருவதை கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீருடன் ரசித்தனர்.

தங்களது பிள்ளைகளின் முகத்தில் இச்சிரிப்பினை காண்பதற்கு எத்தனை போராட்டங்களென்று நினைத்த அரசி இருவரின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.

மூவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நானியும் சிவாவும் தங்களது தேனிலவு பயணத்தை மகிழ்வுடன் இனிதே துவங்கினர்.

அவர்களின் வாழ்க்கை பயணமும் இனிதே ஆரம்பமாகியது.

காரில் பயணித்துக்கொண்டிருந்த நானி, ஓட்டுனரை பொருட்படுத்தாது தன்னவளின் காதில்… அதிக சந்தோஷத்துடன்,

“சத்தியமா நான் சொல்லுறேண்டி உன்பார்வை ஆள தூக்குதடி…”

“பைத்தியமா நானும் பார்த்துகிறேன், உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி..”

“கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துல தான்,
கிறுக்கா என்ன நீயும் மாத்தி வச்ச…” என்ற பாடல் வழியாக தனது காதலை உணர்த்த ஆரம்பித்தான்.

“நானிலன்  சிவரஞ்சனி இல்லறம் நல்லறமாக வாழ்த்தி விடைபெறுவோம்.”

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

error: Content is protected !!
Scroll to Top