வலியோடு வாழ்கிறேன்
வார்த்தைகள் விழுங்கும் இரவுகளில்
வலி தாங்க உன் தோளை விரும்பி வினவுகிறேன்? வருவாயா? இதம் தருவாயா??
விழிகளில் நிஜம் தேட
வழிகிறது கண்ணீர்
விலகிச் சென்று வலியை விதைத்தாய்
விரும்பியே ஏற்றேன்....
வளர்ந்து நிற்கிறது விழுதாக
வீழ்ந்த என்னை
வாடிய இதயத்தை
மீண்டும் மீண்டும்
வலிக்க வைக்கிறாய்...
வழி என்னவோ?
விடை எதுவோ?
வானம் போல
விரிந்த இந்த வேதனைக்கு
விடியல் வருமோ?