எந்தன் தேடல்
உனைச் சேரும்
துருவன்❤️🩹நிரல்யா
கல்லூரி நாட்களில் காதல் கொண்டு
கண்முன் நின்றாள் நிரல்யா...
காதலைக் கூறிட
குழந்தைத்தனம் எனக் கைவிட்டான் துருவ்...
கண்களால் கவர்ந்து
காதல் கொண்டு
காத்திருக்க
கோபம் கொண்டு
கத்திவிட்டு செல்ல....
கண்ணீரில் கரைந்த மனதுடன்
கண்ணில் படாமல்
காணாமல் சென்றிட...
காலம் மட்டும்
காயம் வைத்தது...
காயம் தாங்கிய மனமாயினும்,
காதலைக் கைவிடாத
காதலர்கள்....
கை தொழிலில் உயர்ந்தான்...
காணாமல் போன காதலை
காதலன் தேடி அலைய
காலத்தை வென்று கண் முன் நிற்க...
கண்கள் பேசும் நேரத்தில்
காயங்கள் எல்லாம் கரைந்து போய்
காதல் மீண்டும் மலர்ந்தது.....
கல்யாணம் கனவாக நின்றபோது
கடுமையான திருப்பம் வந்தது...
கொடூரன் துரத்த, குலைந்த மனம்
களை இழந்த
குடும்பம்....
காவலன் வந்தான் குற்றங்களை கண்டுபிடித்து குடும்பத்தை
காப்பாற்றி விட்டான்....
கண்ணீரும் கரைந்து கஷ்டங்களும் மறைந்து
காதலோடு கை கோர்த்தனர்
கடைசியில்....