மார்கழி இரவில்
பனி சிந்தும் வேளையில்
குளிர் காற்றில்
உன் நெருக்கத்தில்
நின் மார்பில்
தலை சாய்த்து
மேக பெண்ணில்
காதல் கொண்டு...
துரத்தும் சந்திரனை,
இமைத் தட்டி, ரசித்திட ஆசை...
ஒளி வீசும் பகலில்
தகிக்கும் வெயிலில்
புழுதி பறக்கும் வளியில்
நின் தோள் உரசி
விரல்கள் கோர்த்து
கடற்கரை மணலில்
பாதம்...