கார்முகில்களின்
காதல் கடிதங்கள்
திரவத் திவலையானால்
தேகம் தீண்டும் மென்மழை
ராசிக்காதோர் யாருண்டு?
அதன் வாசம்
புசிக்காதோர் யாருண்டு?
ஆலி, சோனை, தூறல்,
அடைமழை, ஆலங்கட்டி- என
அத்துணை சொற்களும்
ஆதிமூலம் மழைதானே!
கைம்பெண்ணோ
கன்னிகையோ
தாயுருவோ
தனிஉறவோ
பெருங்காதல் கண்ணாடி...