முள்ளிடை மலரிதுவே-4

New member
Joined
Oct 31, 2026
Messages
16
ஆன்ம அரங்கத்தில்
அலர்நிறை அணிவகுக்க
ஆலக்கிளைபோலே
படர்ந்தேகி வேர்பிடித்து
பைஞ்சுடராய் ஆனவளே
உயிர்நேயம் உனக்காக
உளமதிலே கொண்டிங்கு
தவம் நோற்று
தானிருக்கிறேன்
அணைத்தாட்கொள்
பேரணங்கே!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

(https://www.facebook.com/groups/1428761022791249/)


(கவிதைக்கான விளக்கமும் சொல்ல விரும்புகிறேன். இது வெறும் உடல் சார்ந்தாக நான் எழுதவில்லை. அதனால் இதன் பொருளையும் எழுதி இருக்கிறேன். பொருள்: உன் நினைவு என் ஆன்ம அரங்கில் வேரூன்றி, உயிரின் ஒவ்வொரு அணுவிலும் காதல் சுடராய் மலர்ந்திருக்கிறது. உன் பேரன்பின் அணைப்பொன்றை வேண்டி, என் உயிரையே தவமாக்கிக் காலங்களாய் காத்திருக்கிறேன், உள்ளும் புறமும் பேரழகு கொண்ட பெண்ணே❤️).

முள்ளிடை மலரிதுவே-4
 
Last edited:
Top