அவள் அவள் ஆகிறாள் 2

New member
Joined
Nov 4, 2026
Messages
5
காலை 6:30 மணி மகிழினி மெல்ல கண்விழித்து உள்ளங்கையை பார்த்துக்கொண்டே பக்கத்தில் விக்ரம் இல்லை எங்கே சென்றிருப்பான்? என்று நினைத்துக் கொண்டே... தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள பாத்ரூம்குள் நுழைந்தாள்.

வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு கொண்டிருக்கும் பொழுது ,பால் பாக்கெட் உடன் வந்தான் விக்ரம்.

"அடிக்கடி குனியாதே என்று எத்தனை முறை சொல்லி இருக்கேன், சின்ன கோலம் போடு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று அடுப்பில் காப்பி போட ஆரம்பித்தான்.

இரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு அவள் அருகில் உள்ள சேரில் அமர்ந்தான்.

காபியை குடித்துக்கொண்டே நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் நேரம் ஆகுது நான் அங்கேயே சாப்பிடுகிறேன் என்று கிளம்ப ஆரம்பித்தான்.

விக்ரம் மும்பை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரபல கடடுமான பிரைவேட் கம்பெனியின் மேனேஜராக ஒர்க் செய்து கொண்டிருக்கிறான்

ரெடியாகி சீருடையில் வந்து ஷூவை போட்டுக் கொண்டே, சேஞ்ச் கொடு அப்புறம்... ஒரு ரிட்டயர்மென்ட் பார்ட்டி இருக்கு அதுக்கு 2000 கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டு என்று பைக்கில் எரி அமர்ந்து அப்புறம்... "அந்த பேங்க் ஸ்டேட்மென்ட் காப்பி வாங்கிட்டு வந்துரு, அந்த இன்சூரன்ஸ் அமௌன்ட் எவ்வளவு கட்ட வேண்டும் என்று கேட்டுட்டு அப்படியே லாஸ்ட் டேட் என்ன என்று நோட் செய்துவிட்டு வா யூனிபார்ம் ஐயன் செய்து கொடுத்து வாங்கிடு வேற ஏதாவது இருந்தா ஆபீஸ்ல இருந்து போன் செய்றேன் சரியா?" ஓகே பாய் என்று கிளம்பினான்.

மகி வண்டிய பார்த்து ஓட்டு, மெதுவா ஓட்டு என்றான்.

ஒரு பெருமூச்சியை விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் மகிழினி வாசலில் பூனை யாழ்வின் இவளின் காலை சுற்றிக் சுற்றி வந்தது மெல்ல அதனை எடுத்து வருடி கொடுத்தபடி,

என் போனை எங்க வெச்சேன் பாப்பா போன் செய்வாள் என்று நினைக்கும் போதே பெட்ரூமில் போன் அடிக்கும் சத்தம் கேட்டது என் பிள்ளைக்கு ஆயுசு நூறு என்றபடி போனை எடுத்தாள்.

"குட் மார்னிங் ஹவ் எ நைஸ் டே பாபபா" என்று மகிழினி சொன்னவுடன் "சேம் டு யு அம்மா"
என்றாள் மகள்.

"என்ன செஞ்சிட்டிருக்கமா? அப்பா ஆபீஸ் கிளம்பிட்டாங்களா? என்றாள் மகள்.

"அம்மா நான் ரெடி ஆயிட்டேன் ,இனிமேல் சாப்பிட்டு காலேஜ் கிளம்ப வேண்டியதுதான் அதற்கு முன் உன் கிட்ட பேசிடலாம் என்று தான் கூப்பிட்டேன் ,அப்புறம் காலேஜ்ல போன் பேச முடியாது இல்லையா" என்றாள் மகள்.

"நானும் ரெடி ஆகணும் பாப்பா" என்றாள் மகிழினி மகளிடம்.

"சரி ...எங்க கிளம்ப வேண்டும்"? என்றாள் மகள் அப்பா 3 வேலை கொடுத்து இருக்காங்க 1 பேங்குக்கு போகணும் ஸ்டேட்மென்ட் காப்பி வாங்கி அப்பாவுக்கு மெயில் பண்ணனும், 2வது இன்சூரன்ஸ் ஆபீஸ் போயிட்டு டீடைல் கேட்டு வரணும்,3வது டாடி துணியெல்லாம் அயன் பண்ண கொடுக்கணும், என்று சொல்லும் போதே... மகள் குறுக்கே வந்து "அம்மா ஆட்டோ அங்கில உன் கூட கூட்டிட்டு போ" என்றாள் அம்மாவிடம்.

"வேணாம் பாப்பா, பேங்க்ல எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியாது, அவர அதுவரை வெயிட் பண்ண சொல்ல முடியாது நான் பார்த்து போயிட்டு வந்துடறேன் டா" என்றாள் மகளிடம்.

"சரிம்மா பார்த்து ஓட்டு, பெல்ட் போட்டுக்கோ, தண்ணி எடுத்துக்கோ, முக்கியமா போனை எடுத்துக்கோ, சாப்பிட்டு கெளம்பு,"என்ற மகளின் அக்கறையில் மகிழ்ந்து தான் போனாள் மகிழினி.

"நான் பாத்துக்குறேன் டா... நீ இத பத்தி எல்லாம் யோசிக்காத , காலேஜ்ல ஒழுங்கா பாடத்தை கவனி. ஹாஸ்டல்க்கு வந்தவுடன் கூப்பிடு என்று போனை கட் செய்தால் மகிழினி.

மெல்ல சிரித்துக் கொண்டே ..மகிழினி விக்ரம் செல்பில் உள்ள, துவைத்து மடித்து வைத்த அயன் செய்ய வேண்டிய துணிகளை, 1,2,3,... என்று எண்ணிக் கொண்டே கட்டப்பையில் அடுக்கிக் கொண்டு , காலையில பேங்க் போ போகும் முன்னே கொடுத்தால் இன்னைக்கு ஈவினிங் வாங்கிடலாம், லேட்டானா நாளை தான் தருவான் என்று நினைத்தபடியே ஹாலில் உள்ள சாவி வைக்கும் இடத்தில் அருகில் வைத்தாள்.

இப்பொழுதெல்லாம் அடிக்கடி மறதி ஏற்படுது இங்கே வச்சா சாவி எடுக்கும்போது பார்த்து விடுவோம் என்றபடி, பேங்க் பாஸ்புக் இன்சூரன்ஸ் தன் கைப்பையில் வைத்துக் கொண்டு,
குளித்து ரெடியாகிடலாம் என்று நி,னைத்துக் கொண்டே... அம்மாவுக்கு கால் செய்தாள் எடுத்த அம்மாவிடம் "நான் இன்னைக்கு பேங்க் வர போக வேண்டியது இருக்கு, இடையில் போன் செய்தால் எடுக்க முடியாது அதனால தான் இப்பவே கூப்பிட்டேன்,
நான் வந்து பேசுகிறேன் அம்மா என்றாள், "அப்பா எங்க? குட்டீஸ் ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களா?" என்றபடி தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பாத்ரூம் கம்பியில் போட்டுவிட்டு கட்டிலில் உட்கார்ந்தாள்.

"நீ தனியாவா வண்டி ஓட்டுவ? ஆட்டோல போ, இப்பதான் உடம்பு சரியாகி இருக்கு, திரும்பவும் இழுத்து வச்சுக்காதே!" என்ற அம்மாவிடம் "வேற யார போக சொல்ற, அவருக்கு காலையில் போனா இரவு தான் வர முடியும், தம்பி இங்க இல்ல பெங்களூர்ல இருக்கான், பாப்பா ஹாஸ்டல்ல இருக்கா, அப்பொம் நான் தானே செய்ய வேண்டும் என்றாள் ஒருவித சலிப்புடன்.

"இது என்ன புதுசா கல்யாணம் ஆன முதல் நான் தான் செய்கிறேன்" என்றாள் மகிழினி

"அது சரி புள்ள, இப்போ உடம்பு முன்ன போல இல்லையே... இப்பதான் முதுகு பிரச்சனை குறைஞ்சிருக்கு ..அதான் சொன்னேன் என்றாள் அம்மா கவலையுடன்.

"சரி சரி கவலைப்படாதே நான் பார்த்து மெதுவா போயிட்டு வரேன் "என்று அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு, போயிட்டு வந்து நான் கூப்பிடுறேன் என்று காலை கட் செய்தாள் மகிழினி.

பாத்ரூம்குள் வந்தவுடன் பாத்ரூம்ல பார்த்து நட நான் ஈவினிங் வந்து பாத்ரூம் கிளீன் செய்யுறேன் லைசால் மட்டும் ஊத்தி வை என்று விக்ரம் சொன்னது.

"மா நீ நின்னுக்கிட்டே கிளீன் பண்றதுக்கு, உனக்கு இந்த பிரஷ் தான் சரியாக இருக்கும் என்று ஆள் உயரத்துக்கு இருந்த பிரஷை எடுத்து மகள் கொடுத்தது நினைவில் வந்தது... சிரித்துக் கொண்டாள்.

பாத்ரூமை மெல்ல க கிளீன் செய்ய ஆரம்பித்தாள், ஆபீஸ் இருந்து டயடா வருவாரு என்று நினைத்துக் கொண்டாள், ஒரு மனம் சொன்னது "இப்படி பாவம் பார்த்து பார்த்து தான் இழுத்து வெச்சிருக்க" என்று சொன்ன மனசாட்சியை அடக்கினாள்.

கொஞ்சம் பேன்ல உக்காந்தா பரவாயில்லை என்று தோன்றியது.

ஃபேனை ஆன் செய்தாள் ஒரு பத்து நிமிடம் ரெஸ்ட் என்றபடி வாட்ஸ் அப்பிற்குள் சென்றாள்,

அம்மாவிடம் என்று குட் மார்னிங் மெசேஜ் வந்திருந்தது.

அதை பார்த்து சில சமயங்களில் பதில் அளிப்பாள் மற்ற சமயங்களில் பதில் அளிப்பதில்லை, ஆனால் பார்த்தால் கொஞ்சம் நிம்மதி அம்மா எழுந்து விட்டால், நலமுடன் இருக்கிறாள் என்று நினைத்துக் கொள்வாள்.

குட் மார்னிங் லேட்டாக வந்தாலோ, வரவில்லை என்றாலோ ...ஏதோ சரியில்லை என்று அறிந்து கொள்வாள், என்ன எது என்று அப்பாவிற்கு அழைத்து கேட்டுக் கொள்வாள் மகிழினி. இது வழக்கமான நிகழ்வுதான்.


ரெடியாகி வெளியே வரும் முன் யாழ்வினுக்கு உணவு தண்ணீர் வைத்துவிட்டு அவனை கொஞ்சம் கொஞ்சி விட்டு, எல்லாம் சரியா இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு, வீட்டில் எல்லா லைட் ஃபேன் எல்லாம் அனைத்து இருக்கிறோமா? என்று பார்த்துவிட்டு வாசல் வரை வந்தாள்.

இப்பொழுது அரிசி நனைய வைத்து விட்டால் வந்தவுடன் அரைத்து விடலாம்
இரவு இட்லிக்கு சரியாக இருக்கும் என்று கிச்சனுக்கு சென்றாள்.

அங்கு சென்றவுடன் அவருக்கு அடை பிடிக்கும் அடைக்கு போட்டு விடுவோம் என்று கொஞ்சம் அரிசி, உளுந்து சுண்டல், பாசிப்பயறு கடலைப்பருப்பு, திணை என்று அனைத்தையும் எடுத்து ஊற வைத்துவிட்டு
கையை துடைத்தபடியே ஒரு பையையும் எடுத்துக்கொண்டு, சின்ன வெங்காயம் வாங்க வேண்டும் அப்படியே வானதி விட்டில் முருங்கைக்கீரையை பரி பறித்து வரவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு கதவை பூட்டினாள்.

நேராக அயன் செய்யும் இடத்திற்கு சென்று விட்டு "எப்பொழுது கிடைக்கும்? என்றாள்.

"நாளை போன் செய்கிறேன் அக்கா" என்று பையன் சொன்னவுடன் "இன்னைக்கு எனக்கு அவருடைய யூனிபார்ம் வேணும் அதனால அதை முதல்ல அயன் பண்ணி கொடுத்துவிட்டு,மீதியை நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்". என்று பையனிடம் பையை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தாள்.

பேங்க் வாசலில் வண்டியை விட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

இவளை கண்டவுடன் ஆப்ரேசர் சுமதி "என்ன மேடம் நகையேதும் வைக்க வேண்டுமா? என்றாள்.

இல்லை ,இல்லை ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டும் என்றாள் சிரித்தபடி.

"உடனே கிடைக்கிறது டவுட்டு தான் மேடம் அந்த 2ம் எண் கேபிளில் இருக்கும் மேடம் கிட்ட குடுங்க" என்றாள் சுமதி.

சரி என்று சொல்லிவிட்டு 2ம் எண் கேபின் இடத்திற்கு சென்றாள்.

அங்கு ஒரு வரிசை நின்று கொண்டிருந்தது பலரும் தங்கள் மகள் ,மகனுடன் நின்று கொண்டிருந்தனர் அதை பார்த்தவுடன்
சென்ற வாரம் மகளுடன் தான் வந்தது நினைவு வந்தது.



















 
Top