எழுத்தாளர்களோடு உரையாடல்

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
703

எழுத்தாளர்களோடு ஓர் உரையாடல்​


ஒரு கதை வாசிக்கும்போது, அதன் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் கடந்து… அந்தக் கதையை உருவாக்கிய எழுத்தாளரின் மனதிற்குள் ஒருமுறை பயணித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்?


ஒரு கதைக்கான விதை எங்கே விழுகிறது?
ஒரு கதாபாத்திரம் எப்படி பிறக்கிறது?
எழுத முடியாமல் தவித்த தருணங்கள் எத்தனை?
வாசகர்களின் பாராட்டும் விமர்சனமும் எழுத்தாளரை எப்படிப் பாதிக்கிறது?
ஒரு படைப்பின் பின்னால் இருக்கும் உழைப்பும் கனவும் என்ன?


இப்படிப் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, தமிழ் எழுத்தாளர்களோடு நடத்தப்படும் மனம் திறந்த உரையாடல்களுக்கான பகுதி.


தங்கள் எழுத்தின் மூலம் வாசகர்களின் மனதில் இடம்பிடித்த எழுத்தாளர்களை, அவர்களின் படைப்புகளுக்கு அப்பால் ஒரு மனிதராகவும் படைப்பாளியாகவும் அறிமுகப்படுத்தும் முயற்சி இது.


ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தனிப்பட்ட எழுத்துப் பயணம் இருக்கிறது.
ஒவ்வொரு கதைக்கும் ஒரு பிறப்புக்கதை இருக்கிறது.
அந்தப் பயணத்தையும், அந்தக் கதைகளின் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களையும் எழுத்தாளர்களின் வார்த்தைகளிலேயே கேட்போம்.


வாசிப்போம்… பேசுவோம்… எழுத்தாளர்களை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்வோம்!
எழுத்தாளரின் அனுபவம், பல எழுத்தாளர்களுக்கு தெரியாதவற்றை தெரிந்துக்கொள்ளவும், வாசகர்களுக்கு எழுத்தாளரின் எழுத்தின் மதிப்பையும், அதற்கான அவர்களின் மெனக்கெடல்களை புரிந்துகொள்ளவும், சில கேள்விகளும், பதில்களும் வாய்ப்பாக அமையும் நோக்கில் துவங்கப்பட்ட சிறு முயற்சி.
 
Top