கதை முன்னோட்டம் –

New member
Joined
Oct 30, 2026
Messages
2
🌿 வேராய் அவன்… விழுதாய் அவள்


தனக்கான கனவுகளையும் ஆசைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தன் குடும்பத்தின் நலனுக்காகவே வாழும் ஒரு எளிய கிராமத்து இளைஞன் முத்துக்கருப்பன்.

அவனுடைய உழைப்பையும் தியாகத்தையும் குடும்பம் உணருமா? தனக்கென்று ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் மலருமா?

அவனுடைய வாழ்க்கைக்குள் தாரணியாக வருகிறாள் ஓர் அழகான உறவு. அவனுடைய மௌனத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வலியையும், யாரும் கவனிக்காத அவனுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அவள், அவனுக்கு வெறும் காதலியாக மட்டுமல்ல… அவன் வாழ்வின் துணையாகவும் மாறுகிறாள்.

ஒரு குடும்பத்தின் பாரம் சுமந்தவனுக்கு, அவன் மனம் சுமக்கத் துணையாக வந்தவளின் கதை…

உறவுகள், உணர்வுகள், குடும்பப் பாசம், காதல் என மனதை வருடும் ஓர் அழகான பயணம்! ❤️

கதையைப் படித்துப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்களுடைய கருத்துகளையும் ஆதரவையும் வழங்குங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தும் எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் தரும். ❤️
 
Top