நேச நெஞ்சங்கள்

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
340
#நேச_நெஞ்சங்கள்

விநோதன் ❤️ ஆதர்ஷினி பகுதிக்கு ApsareezBeena Loganathan அக்கா பகிர்ந்துகொண்ட கவிதை.

விநோ❤️தர்ஷி

பெற்றவரின் பணி பிடிக்காது போக
பார்வையில் இருந்து
பிரிந்து விட
பிடித்து வைக்கும்
பந்தம் தாய்....
பிடிக்காத பாதையில்
பதிந்த புண்களுடன்
பாசத்தை பிடித்து
பிழைத்தாள் தாயுடன்...

கடமை அழைத்த போதும்
கன்னியின் காதல் உரைத்த போதும்
கண்ணியம் வைத்து
ஒதுக்கி வைத்த போதும்
கட்டுப்பாடு காத்த
காவலன்....
காணாத
காதலை
காதலி வைத்தே
காப்பாறிக் கொண்டான்....

வார்த்தையின்றி
வளர்ந்த விழிகள்
விண்ணப்பம் விட்ட
வஞ்சியை தவிர்க்க...

விதியின் வழியில்
வந்த விசித்திரமான
விருப்பம்....

பெயரில்லா நேசம்
பார்வைகள் பதிந்த
பிணைப்பு புரியாமல்
பரவிய பாசம்
பின்னர் பிரிவாகி
புண்ணானது.....

காணாத காதல்
கைவிட
காரணம் கேட்காமல்
காலம் கட்டாயம்
கல்யாணம் கட்டியது....

வலியுடன் வாழ்ந்த
விழிகள் உண்மை
வெளிப்பட...

விதியின்
விளையாட்டு
விட்டுப்போன
விருப்பம்
வெளிச்சமானது....

பிடிவாதம் போட்ட
பந்தம் பின்னர்
புரிதலாய் பரிமாறி
பாசமாய் பெருகி
புது பொலிவானது....

காயங்கள் கலந்த
கணங்கள்
கனிவாய் குணமாய்
காதலாய் கூடி
கனவான வாழ்வு நினைவானது....

விழுந்த விழிகள்
விழித்துக் கொள்ள
வலிகள் மறைந்து
வாழ்க்கை வசந்தம்
வந்து விரிந்தது
விநோ❤️தர்ஷி
வாழ்வில்
வெற்றியானது.....
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
340
@Shafna Rangarajan

#நேச_நெஞ்சங்கள்_விமர்சனம்

நான்கு பேர் நான்கு காதல் தனி தனியே நான்கு கதைகளாக 😍 நான்கு பேரும் உறவாக நட்பாக ஒருவரை ஒருவர் இணைத்ததாக அமைத்தது சிறப்பு 👌

விநோதன்,வசீகரன் ,யது நந்தன், துரு மற்றும் பாசில் இவர்களுடைய கதைகள் தான் இது.🤩🤩 என்னடா இது நான்கு பேர்னு சொல்லிட்டு ஐந்து பேர் குறிப்பிடுறேன்னு நினைக்காதீர்கள் அது என்னனு கதையில் ரொம்ப நல்லா சொல்லிருக்காங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க 😍😍

விநோ எல்லாமாக ரொம்ப ஈர்த்துட்டான் என்னை ❤❤ நல்ல காவல் அதிகாரியாக அண்ணனாக மகனாக தோழனாக மற்றும் சிறந்த காதலனாக 😊😊

வசீ ஏதோ வசியம் பண்ணிட்டே தர்ஷினிய அவள மட்டுமா 😜 ❣️❣️ அதுவும் இப்படி ஒரு கல்யாணம் யாரும் பண்ணிருக்க மாட்டாங்க 😍😍

ஆதர்ஷினி தப்பு யாரு செஞ்சாலும் அப்பாவா இருந்தாலும் தப்பு தப்புதானு நின்ன நேர்மை எனக்கு பிடித்தது

துரு ஆரம்பத்தில் சில காட்சிகளில் செமடா நீ னு நினைக்க வைச்ச ❣️😍 ஆனால் காதல்னு வந்துட்டா நீ ஆளே வேறயால மாறிட்டே 😍 நிரல் காதல்னு துருவை சுத்தி சுத்தி வந்தது அப்பறம் அவனை சுத்தல்ல விட்டது எல்லாம் சரிதான்❣️ஆனால் பிரச்சனைக்குள்ள இப்படியா மண்டைய விடுவாங்க 😰😰

விநோக்கு அப்பறம் எனக்கு ரொம்ப பிடித்தது யது 😍😍 சும்மா கலக்கீட்டீங்க CM 😍 அதுவும் பாவனாக்கு குடுத்த ஷாக் ட்ரீட்மென்ட் அற்புதம் 🤣🤣🤣 யது உன்னி பாண்டிங் நல்லா இருந்தது ❣️ ஆனால் குற்றவாளி ட்விஸ்ட் எதிர்ப்பார்க்கல 👌

பாசில் 💞கோகிலா ரொம்பவே குட்டி கதை இவங்களுக்கு. கோகிமா உங்களுக்குள்ளே இப்படி ஒரு வீர லட்சுமியை எதிர்ப் பர்க்கவில்லை 🙄🙄

துரு தர்ஷி நல்ல பாண்டிங் 👌 பூரிமா ரொம்ப நல்ல மாமியாருங்க நீங்க 😏😏 பையனையே சுத்தல்லவிட ஐடியா குடுக்குறீங்க ரொம்ப நல்ல இருக்கு போங்க 😅😅

இவங்க எல்லாரையும் குடும்பமா பார்க்க மனநிறைவா இருக்கு 😍

கோகி கல்யாணத்திற்க்கு ஆரோனையும் அழைத்திருக்கலாமே ஏன் விட்டுட்டீங்க?

நல்ல கதை ❤ வாழ்த்துக்கள்🎉🎊
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
340
#நேச_நெஞ்சங்கள்

கதைக்கு Priya Srikanth அக்கா அவர்களின் விமர்சனம்.

விமர்சனத்திற்கு நன்றி அக்கா 🫂

""நேச நெஞ்சங்கள்"" நான்கு பேரோட வாழ்க்கையை அழகாக காட்டிய கதை😍😍😍😍.
முதல் ஜோடி விநோ 🥰ஆது.. விநோவா இருக்கும் போதும் சரி வசீயா இருக்கு போதும் சரி பயங்கரமா ஸ்கோர் பண்றான்.💜💜.. இவனுக்கு கொஞ்சமும் குறைஞ்சவ இல்ல ஆது.. எந்த செயல் தகப்பனிடம் பிடிக்கலைனு ஒதுங்கி இருக்காளோ அதே சேயலை இவன் செய்கிறானு தெரிஞ்சும் விலக முடியாம அவனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் வசியை அவனுக்காகவே ஏற்றுக்கொண்ட சூப்பரா பெண்.. இவங்க இரண்டு பேரில் இவளோட காதல் ஹீரோவோட காதலை விட கொஞ்சம் அதிகமா பிடிச்சது💕💕💕
இரண்டாவது ஜோடி துருவ்🥰நிரல்.. சீனியர், ஜுனியரா பிடிச்ச மாதிரியே ஜோடியாகவும் பிடிச்சது.. விநோவிற்கு தம்பியா மட்டும் இருந்த போது அண்ணன் மேல் இருந்த பாசம் நம்பிக்கை நிரலோட புருஷனான பிறகு போயிடிச்சு😡😡... அப்புறம் மாறினாலும் என்னால இவனை மன்னிக்க முடியல.. அந்த நிகழ்வுக்கு பிறகு இவனை பிடிக்கல.. நிரலை ரொம்ப பிடிச்சது
மூன்றாவது ஜோடி யது😍பாவனா.. One man army காதலுக்காக குழந்தைக்காக இவன் மட்டுமே போராடி ஜெயிச்சான்💕💕💕💕💕.. இவனோட முயற்சி இல்லைனா பாவனாவோட நிலை சொல்றதற்கு இல்ல... யதுவோட காதலுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவ இந்த பாவனா... பெயர் அளவில் காதல் இருந்து என்ன பிரயோஜம் அதை காப்பாற்ற சின்ன விஷயம் கூட செய்யல... முக்கியமா கணவன் மேல் நம்பிக்கையே இல்ல.. அவளோட கடந்த காலம் அப்படி இருந்தாலும் யதுவை நம்பாதது ரொம்ப தப்பு... ராதாம்மாவுக்கு இருந்த நம்பிக்கை கூட இவளுக்கு இல்லை😡😡😏😏
நான்காவது ஜோடி பாசில்🥰கோகி... Short and sweet story இவங்களோடையது... கோகி பற்றி எதுவுமே தெரியாம காதலில் விழுந்து தெரிஞ்ச பிறகும் மாறாம அதே காதலோடு பாசில் இருந்தது சூப்பர் 💕💕💕💕💕... பாசிலோட அம்மாவை ரொம்ப பிடிச்சது.. மகனுக்காகனு ஆரம்பிச்சாலும் மற்றவர்களை அவர்களோட தன்மையோடு ஏற்றுக்கொண்டது சூப்பர் .. இவங்களை ரொம்ப பிடிச்சது💕💕💕💕..
பூரணி, ஒரு மாநிலத்தின் முதல்வனுக்கே தாய் ஸ்நாதத்தில் இருந்தும் நிரல் விஷயத்தில் நிறைய சொதப்பி மகனை கஷ்டப்படுத்திய லூசு அம்மா😂😂😂... பேசாமலையே மகளுக்காக தவிச்ச ஆதுவோட அம்மாவும் சூப்பர் 💕💕💕💕... கொஞ்சம் பெரிய கதை... ஆனா எந்த இடத்திலேயும் போரடிக்காம கதையை நகர்த்திய விதம் அழகு.. Priyadharshini S எனக்கு கதையை ரொம்ப பிடிச்சது டா😘😘😘😘😘😘😘😘😘
 
Top