அத்தியாயம் 2
மாலை நேரமாக அக்கா தங்கை இருவரும் கல்லூரியிலிருந்து வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
வலியில் முகத்தை சுருக்கி இடுப்பில் ஒரு கை குடுத்து தாங்கி தாங்கி நடந்து வந்த தன் தங்கையை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் வாய் விட்டு சிரித்தவாரே வீட்டிற்குள் நுழைந்தாள் கனிமொழி.
அவள் சிரிப்பதை நினைத்து கோபப்படுவதா… இல்லை இன்று முழுவதும் தான் அனுபவித்த வேதனையை நினைத்து கவலை கொள்வதா…? என்று தெரியாத நிலையில் கனியைப் பார்த்து முறைத்தவாரே அவளுடன் இணைந்து வீட்டிற்குள் நுழைந்தாள் பனிவிழி.
முதல் நாள் கல்லூரிக்கு சென்று வரும் தன் இளைய மகளையும் அகலமாக வாய்விட்டு சிரித்தவாறு அவளுடன் வரும் தன் மூத்த மகளையும் பார்த்து ஒன்றும் புரியாது பார்வை பார்த்திருந்தார் அவர்களின் அம்மா லதா.
“என்னடி நீ கெக்க பக்கன்னு சிரிச்சிட்டு வர்ற… இவ என்னடான்னா ஏதோ தோட்டத்துல இறங்கி வேலை களை புடுங்குற வேலை செஞ்சவ மாதிரி ஒரு கையில இடுப்ப தாங்கி கிட்டு, மூஞ்சிய நாலு முழத்துக்கு தொங்க போட்டுட்டு வர்றா…?” என்று கனி மொழியை பார்த்து கேட்டார் லதா.
“அதுவாம்மா… அது வந்து…” என்று கனிமொழி நடந்த விஷயத்தை கூற வாய் திறப்பதற்கு முன்பு அவளின் வாயை தன் கை கொண்டு பொத்திய பனிவிழியோ,
“அம்மா அது…அது ஒன்னும் இல்லம்மா… வர்ற வழியில ஒரு சின்ன காமெடி நடந்துச்சு அதை பார்த்து தான் இப்படி பல்ல இளிச்சுக்கிட்டு வர்றா…மத்தபடி வேற ஒன்னும் இல்ல…”
வலியால் உண்டான எரிச்சல் மண்டிய குரலை மறைத்துக்கொண்டு தன் தாயிடம் கூறியவள் கனியை விழிகள் சுருக்கி முறைத்து பார்த்து அவளை இழுத்துக் கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்திருந்தாள்.
அறைக்குள் வந்ததும் கனியின் வாயிலிருந்த தனது கையை எடுத்தவள் “இதோ பாருடி நானே சென்னை வெயில்ல வெந்து நொந்து போய் இருக்கேன்… இதுக்கு அப்புறமும் நீ இதே போல சிரிச்சேன்னு வையி அக்கான்னு கூட பார்க்க மாட்டேன் பாத்துக்க…”
கடுக்கடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவள் கூறியதை பார்த்து மேலும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் கனி.
“இன்னைக்கு ஃபுல்லா சென்னையை சுத்தி பாக்கணும் அப்படிங்கறது தான் என்னோட ப்ளான்… ஆனா என்னோட ப்ளானையும் மொத்தமா கெடுத்து விட்டதே நீதான்…”
“என்னது நானா…?”
“ஆமா உனக்காகத்தான் நான் இன்னைக்கு காலேஜுக்கு வந்தேன்.. வந்ததும் இல்லாம உன்னை கிண்டல் பண்ணி அழ வச்ச அந்த பையனுக்கு ரெண்டு ஸ்லாட் குடுத்தனா இல்லையா… அப்படி உனக்காக வந்த என்னை பாத்து நீ இப்படி கேலி பண்ணி சிரிக்கிறது எல்லாம் சரியாடி….”
அவள் அவ்வாறு கூறியதும் மெல்ல மெல்ல தனது சிரிப்பை குறைத்துக் கொண்ட கனிமொழியோ,
“அதெல்லாம் சரி தாண்டி…. நீ எப்பிடி வசமா அதுவும் அந்த சார் கிட்ட மாட்டுன…?”
“அந்தக் கொடுமையை வேற கேக்குறியா நீயி…” என்றவள் கல்லூரியில் நடந்த நிகழ்வினை கனிமொழி இடம் விவரித்து கூற ஆரம்பித்தாள்.
கல்லூரியில்,
ருத்ரனிடம் மாட்டிக்கொண்ட பனி தான் இந்த கல்லூரியில் தான் பயில்வதாக கூறினாள்.
அதனை கேட்டு அவளை நம்பாத பார்வை பார்த்த ருத்ரனோ அவளிடம் ஐடி கார்டை கொடுக்குமாறு கேட்டான்.
அதனைக் கேட்ட பனியோ என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தாள்.
அவளின் பார்வையை வைத்தே அவளிடம் ஐடி கார்டு இல்லை என்பதை உணர்ந்து கொண்டவனோ, “சரி… நீ இப்போதைக்கு பதில் சொல்ல மாட்ட, உங்க அம்மா அப்பா ஃபோன் நம்பர் குடு.. நானே அவங்களுக்கு கால் பண்ணி உன்னோட டீடைல்ஸ் கேட்டுக்குறேன்…”
“என்னது வீட்டுக்கா….! ஐயோ சார் அதெல்லாம் வேண்டாம் சார்…!!” என்றாள் அதிர்ச்சியும் பயமும் கலந்த குரலில்.
“ஏன்….? இதுக்கு முன்னாடி நான் உன்னை இந்த காலேஜ் கேம்பஸ்க்குள்ள பார்த்ததே இல்ல… அப்பிடி இருக்கும் போது நீ இந்த காலேஜ்ல படிக்கிற பொண்ணு தானா அப்பிடின்னு தெரிஞ்சுக்க தான் ஐடி கார்டு கேட்டேன் அதுக்கு நீ திருதிருன்னு முழிக்கிற… சரி வீட்ல இருந்து வரும் போது ஐடி கார்டு மிஸ் பண்ணிட்டு வந்துட்டேன்னு வச்சுக்கிட்டாலும், நீ யாரு… உன்னோட வீடு எங்க…? உன் ஐடி கார்டை நீ உன் வீட்ல தான் மறந்துவச்சுட்டு வந்தியா…? அப்படின்னு இன்னும் சில டீடைல்ஸ் கேட்குறதுக்கு நான் உன் பேரண்ட்ஸ்க்கு கால் பண்ணா… உனக்கு என்ன பிரச்சனை..?”
அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான் ருத்ரன்.
“சார்…. ஐடி கார்டை நான் தான் சார் மிஸ் பண்ணிட்டு வந்துட்டேன்…”
“இப்போ நீ கேர் லெஸ்ஸா மிஸ் பண்ணிட்டு வந்ததுனால தானே நான் உங்க ஃபேமிலிக்கு கால் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்க நம்பர் கேட்குறேன்..”
“சார்… ப்ளீஸ் சார்…நீங்க எனக்கு என்ன பனிஷ்மென்ட் வேணாலும் குடுங்க சார்… ஆனா வீட்டுக்கு மட்டும் கால் பண்ணாதீங்க சார்… எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் சார்…”
(தவளை தன் வாயால் கெட்ட தருணம் )
“ஏன்…? அப்படி என்ன திருட்டு வேலை பார்த்துட்டு வந்த…?”
அவளின் திருட்டு முழியையும் சமாளிப்பான பதிலையும் வைத்து அவள் பொய் கூறுகிறாள் என்பதை சரியாக கணித்த ருத்ரனும் சரியான கேள்வியை அவளிடம் கேட்டிருந்தான்.
அவன் கேட்ட கேள்வியில், ‘தற்சமயம் இந்த பிரச்சனையிலிருந்து தான் தப்பிக்க வேண்டும்… அதற்கு தன்னிலை விளக்க வேண்டும்..!’ என்று எண்ணியவளாக,
“சார் நான் இதுக்கு முன்னாடி கோயம்புத்தூர்ல உள்ள ஒரு காலேஜ்ல படிச்சிட்டு இருந்தேன்… எங்க அப்பாவுக்கு அவர் வேலை செய்யிற ஆஃபீஸ்ல ட்ரான்ஸ்பர் குடுத்ததால அதை வாங்கிட்டு இங்கே வந்துட்டாரு,அதனால நானும் என் அக்காவும் இந்த ஊருக்கே வந்துட்டோம்….
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இந்த காலேஜ்ல எனக்கும் எங்க அக்காவுக்கும் அட்மிஷன் போட்டோம்… என் அக்கா சரியான படிப்ஸ்… இதுல ஃபைனல் இயர் வேற படிக்கிறதால அவ அட்மிஷன் போட்ட அன்னைக்கே க்ளாஸ்க்கு வந்துட்டா…
நான் செகண்ட் இயர் தானே அதான் பொறுமையா ஜாயின் பண்ணிக்கலாம் அப்படின்னு ரெண்டு நாள் லீவு போட்டு…”
விழிகளை அங்குமிங்கும் அலைப்பாய செய்தாவாரே கூறியவளை, “லீவ் போட்டுட்டு….” மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை உறுத்து விழித்தவாறு கேட்டான் ருத்ரன்.
“காலேஜ் போறேன்னு வீட்ல பொய் சொல்லிட்டு… காலேஜ்க்கு லீவ் போட்டுட்டு…. அப்பிடியே… ஜாலியா… சென்னையில உள்ள எல்லா இடத்தையும் எக்ஸ்ப்ளோர் பண்ணலாம் அப்படின்னு…பிளான் போட்டுருந்தேன்… அதனால பேக்ல ஸ்னாக்ஸை நிறைய எடுத்துக்கிட்டதால நான் ஐடி கார்டு எடுத்துட்டு வரல சார்…”
“ஓஹோ.. மேடம் சென்னைய எக்ஸ்ப்ளோர் பண்றதுக்காக காலேஜ் ஃபர்ஸ்ட் டே கூட அட்டெண்ட் பண்ணாம கட் அடிச்சிட்டு ஊர் சுத்துற ப்ளானா…. வாரேவா செம்மையா ப்ளான் போட்டுருக்கியே…!” முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பற்களை நரநர என கடித்துக்கொண்டு கூறினான் ருத்ரன்.
அவனின் இறுகிய முகத்தை பார்த்தவளுக்கு அடி வயிற்றுக்குள் ஜிவ்வென்று ஒரு பய உணர்வு தோன்றினாலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது,
“சாரி… சார்…” பற்களை ஈஈ…என்று இழித்தவாறு காட்டி கூறினாள் பனி.
“ஓகே நீ ப்ளான் போட்டுட்ட… அதனால உனக்கு இந்த ரெண்டு நாளும் காலேஜூக்கு வர்ற ஐடியா இல்லை, நீ பிளான் போட்ட மாதிரியே நீ சென்னைய சுத்தி பார்க்க போகலாம்… உங்க அப்பா அம்மா கிட்டையோ இல்ல இப்போ போனாளே உன் அக்கா கனிமொழி அவகிட்டையோ நான் எதுவும் சொல்ல மாட்டேன்…”
“வாவ்…! சூப்பர் சார்… நான் கூட உங்களை எல்லாரும் சிடு மூஞ்சி வாத்தின்னு சொல்றதை வச்சு நீங்க ரொம்ப மோசம்ன்னு நினைச்சுட்டேன்… ஆனா பரவால்ல நீங்க ரொம்பவே நல்லவரா இருக்கீங்க சார்… ஒரு எங்ஸ்ட்டரோட ஃபீலிங்ஸை ரொம்ப நல்லாவே புரிஞ்சுக்கிறீங்க… தேங்க்யூ சோ மச் சார்…” உற்சாகமாகவும் துள்ளளோடும் கூறியவள் அங்கிருந்து செல்ல எத்தணித்தாள்.
“ஹலோ மிஸ்.. ஒரு நிமிஷம் இங்க வாங்க… எங்க போறீங்க..?” என்று அவளை அழைத்து தடுத்து நிறுத்தினான் ருத்ரன்.
“சார் நீங்க தான் நான் சென்னைய எக்ஸ்ப்ளோர் பண்ண போறதுக்கு பர்மிஷன் குடுத்துட்டீங்களே…!”
“ஆமா நான் பர்மிஷன் குடுத்துட்டேன் நீ இன்னைக்கு ஃபுல்லா உன்னோட ப்ளான் படியே சென்னையை எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்… ஆனா… அதுக்கு முன்னாடி… நீ யோசிச்ச பாத்தியா… காலேஜ் கட் அடிச்சிட்டு ஊர் சுத்தணும் அப்படின்னு… அது ரொம்ப தப்பான விஷயம்… அந்த மாதிரியான எண்ணம் என்னுடைய ஸ்டூடண்ட் கிட்ட இருக்கவே கூடாது…. அந்த ஒரு எண்ணம் இதுவரைக்கும் உனக்கு வந்தவரைக்கும் ஓகே… ஆனா இனிமே வராம இருக்குறதுக்கு அஸ் அ ப்ரஃபஸ்ஸரா நான் உனக்கு ஒரு சரியான பாடத்தை சொல்லித் தரலாம்னு இருக்கேன்…”
“பாடமா… அதுவும் இங்க வச்சா… என்ன பாடம் சார்..?” புருவங்களை உயர்த்தி விழிகளை அகல விரித்து உள்ளுக்குள் எடுத்த உதறலோடு அவனைப் பார்த்து கேட்டாள் பனி.
“அது ஒன்னுமில்ல இந்த கேம்பஸ் க்ரௌண்ட் இருக்கு பாத்தியா… இந்த க்ரௌண்டோட மொத்த அளவு வெறும் அஞ்சே அஞ்சு ஏக்கர் தான்… இந்த க்ரௌண்ட் மொத்தமும் ஒரு செகண்ட் சுத்தி பாரேன்….
உன்னை மாதிரியே நிறைய வேஸ்ட் ஃபெல்லோஸ் எல்லாம் என்ன பண்றாங்கன்னா… ஒழுக்கம் அப்படிங்கறது கொஞ்சம் கூட இல்லாம சாப்பிட்ட குப்பை அங்கங்க போட்டுட்டு போயிடுறாங்க… இப்போ
நீ என்ன பண்ற இன்னைக்கு ஒரு நாள் இந்த குப்பையை ஃபுல்லா கிளீன் பண்ற…!!
“சார்….!!! நான் எப்படி சார் இந்த வேலையெல்லாம் பண்ண முடியும்…?! அதுக்கு தான் காலேஜ்ல கிளீனிங் ஒர்க்கர்ஸ் இருப்பாங்க தானே…!”
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்… நீ பண்ண வேலைக்கு… ஐடி கார்டு மறந்ததுக்கு… காலேஜ் கட் அடிக்கணும்னு நெனச்சதுக்கு… உனக்கான பனிஷ்மெண்ட் இதுதான்… இந்த காலேஜ் கேம்பஸ்ல இருக்கிற குப்பைய இன்க்ளூடிங் லீவ்ஸ் முதற்கொண்டு ஃபுல்லா கூட்டி கிளீன் பண்ணி எடுக்கணும்… அதுதான் இன்னைக்கு உனக்கான பனிஷ்மெண்ட்…
இல்ல… என்னால இந்த வேலையெல்லாம் பண்ண முடியாதுன்னு நீ சொன்னால்… நீயா உன்னுடைய பேரண்ட்ஸ் போன் நம்பரை தர வேண்டியது இல்லை… நானே உன்னுடைய அட்மிஷன் ஃபார்ம்ல இருக்கிற நம்பரை எடுத்து கால் பண்ணி, நீ இந்த ரெண்டு நாளா போட்ட திட்டத்தையும்… இந்த காலேஜ்குள்ள அன்வாண்டடா நீ பண்ண வேலையவும் இன்ஃபார்ம் பண்ண வேண்டியதா இருக்கும்…
க்ரௌண்ட் ஃபுல்லா கிளீன் பண்றியா…? இல்ல இதெல்லாம் என்னால செய்ய முடியாது… நான் சென்னையை எக்ஸ்ப்ளோர் பண்ணத்தான் போவேன்… அதுவும் இப்பவே போவேன்னு நீ முடிவு பண்ணாலும் அது உன் பிரியம்…
ஆனா அடுத்த நடவடிக்கையா நான் இப்போ அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீஸ் ரூம்க்கு போய், உன்னோட பேரண்ட்ஸ் போன் நம்பரை எடுத்து கால் பண்ணி சொல்லுவேன்… அதுக்கப்புறம் என்ன நடக்குமோ அதுக்கு நான் பொறுப்பில்லை…
நீ பண்ண தப்புக்கு என்னுடைய சின்ன பனிஷ்மெண்ட் இதுதான்… லெட்ஸ் ஸ்டார்ட் வித் இன் டூ மினிட்ஸ்…நான் இப்போ க்ளாஸ்க்கு போறேன்… க்ளாஸ்க்கு போறான் நம்மளை கண்டுக்க மாட்டான்னு நீ தப்பா நினைச்சிடக் கூடாது… நான் கிளாஸ்ல இருந்தாலும், என்னோட ஒழுக்கமான ஸ்டூடண்ட்ஸ்க்கு நான் லெஸ்ஸன் எடுத்துட்டு இருந்தாலும், என்னோட பார்வை உன் மேல தான் இருக்கும்… நான் ஈவினிங் வந்து பார்க்கும்போது இந்த க்ரௌண்ட்ல ஒரு சின்ன குப்பை கூட இருக்கக் கூடாது… அது உன்னோட பொறுப்பு…!”
“சார்….! என்ன சார் இப்பிடி சொல்றிங்க…? அது எப்படி சார் என்னால முடியும்..?”
“ஐ டோன்ட் வான்ட் எனி அதர் கன்சர்ன்… ஸ்டார்ட் வித் யுவர் பனிஷ்மெண்ட் வித் இன் ஒன் மினிட்…!” அவளின் விழிகளை நேருக்கு நேராக பார்த்து கட்டளையாக கூறியவன் அங்கிருந்து செல்ல, போகும் அவனின் அகன்று விரிந்து படர்ந்திருக்கும் முதுகை பார்த்து பற்பல நல்ல வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு நின்றிருந்தாள் பனிவிழி.
அதன் பின்னான நேரங்களில் அவன் கூறிய பனிஷ்மெண்ட்டை தவிர்க்க முடியாமல், அந்த காலேஜ் கேம்பஸ் முழுவதிலும் குனிந்து நிமிர்ந்து மரத்திலிருந்து உதிர்ந்து கிடந்த இலைகள் அனைத்தையும் தானே கூட்டி சுத்தம் செய்து என அன்றைய பொழுது முழுவதும் பனிவிழியின் பெண்டு கழன்று போனது.
அந்த நிகழ்வினை இப்பொழுது தன் அக்கா கனியிடம் கூற, இத்தனை நேரம் சிரித்ததை காட்டிலும் இப்பொழுது மேலும் சத்தமிட்டு பேய் சிரிப்பு சிரித்தாள் கனிமொழி.
அதனைப் பார்த்த மேலும் ஆத்திரமடைந்த பனிவிழியோ, “எல்லாம் உன்னால தாண்டி…” என்று கூறி அவளின் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டியவள்,
“இன்னைக்கு ஃபுல்லா என்னை பனிஷ்மெண்ட்டுன்ற பேர்ல வேலை வாங்குன அந்த வாத்தியோட டைரில குறிச்சு வச்சுக்க சொல்லு… இனிமே அந்த ஆளுக்கு என்னோட ட்ரீட்மெண்ட் பக்காவா இருக்கும்…”
கோபமாக கனிமொழியிடம் சபதமிடுவது போல் கூறியவள் நாளை கல்லூரிக்கு எடுத்து செல்லும் தன்னுடைய பேக்கில் இருந்து ஸ்னாக்ஸ் முழுவதையும் கீழே கொட்டிவிட்டு தேவையான புத்தகம் மற்றும் ஐடியை மறவாமல் எடுத்து வைத்துக் கொண்டாள்.
(பனித்தீ தொடரும் 💝💝💝)
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
