அத்தியாயம் 12
“தேவையா உனக்கு இது…?”
வழுக்கி விழுந்ததில் காலில் சுளுக்கு ஏற்பட்டு தாங்கி தாங்கி நடந்து வந்த தன் தங்கையை பார்த்து கேட்டாள் கனிமொழி.
“நானும் அதே தான்க்கா சொன்னேன்… ஆனா இவ எங்க என் சொல்லு பேச்சு கேக்குறா…!” என்றவாரே இவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் சுமித்ரா.
“நான் என்னக்கா பண்ணட்டும்… என் கையில எழுதி முடிச்சு வச்சுருந்த ரெக்கார்ட் நோட்டை கொண்டு போய் எப்படியாவது அங்க வச்சுரலாம்னு நினைச்சேன்… அது தப்பா…”
“ஏ லூசு… அதுக்கு நீ டைரக்ட்டாவே அவர்கிட்ட போய்.. சார் தெரியாம நோட்டை மாத்தி வச்சுட்டேன்னு சொன்னா அவர் என்ன உன்னை கடிச்சா திங்க போறாரு…?”
“அட ஆமால்ல….! இப்படி ஒரு விஷயம் இருக்குறதை நான் யோசிக்கவே இல்லையே…!”
“ஆமா… அதை இப்ப யோசிச்சு மட்டும் என்ன ஆகப்போகுது… இப்பிடியே நொண்டி அடிச்சுட்டு வீட்டுக்கு போனா… எப்பிடி ஆச்சுன்னு என்ன ஏதுன்னு அம்மா கேள்வி கேட்பாங்களே… என்னனு பதில் சொல்ல போற…?”
“அட போக்கா அதெல்லாம் ஒரு விஷயமா… அந்த டைம்ல என்ன தோணுதோ அதை சொல்லி சமாளிச்சுக்குவோம்… நம்மளுக்கு ஐடியாவா வராது… நீ பேசாம வா நான் பாத்துக்குறேன்…”
இவர்கள் மூவரும் பேசிக் கொண்டே கிரௌண்டில் நடந்து சென்றிருக்க , ருத்ரன் ரித்விக் இருவரும் ருத்ரனின் கேபின் வாசலில் நின்றிருக்க, அதிசயத்திலும் அதிசயமாக தன்னுடைய அடுக்கி வைத்த வெண் பற்கள் அனைத்தும் அழகாக தெரிய வாயை அகல திறந்து புன்னகைத்தவாரே ரித்துவுடன் பேசிக் கொண்டிருந்தான் ருத்ரன்.
தான் பல நாட்களாக ஏங்கி காத்திருந்த தன் நண்பனின் புன்னகையை பார்த்து முகம் மலர்ச்சியோடு, எங்கே விழி மூடி திறந்தால் மறைந்து விடுமோ என்று அவனேயே விழி சிமிட்டாமல் பார்த்திருந்தான் ரித்விக்.
ஏதோ ஒரு உந்துதலில் அந்த புறமாக தனது பார்வையை திருப்பிய பனி, மகிழ்ச்சி ததும்பும் புன்னகை முகமாக ரித்துவிடம் பேசிக்கொண்டிருந்த ருத்ரனையே, அதிசயமாகவும், இதுவரையில் பார்த்திராத புதுவிதமாகவும் கண்களின் நட்சத்திரமும் அதனோடு கூடிய சிறிய இதயமும் பிரதிபலிக்க பார்த்தாள்.
அவளின் அந்த பார்வைக்கான காரணம் என்னவென்றால்,
பனி நான் தான் இந்த வாழைப்பழ தோல்களை இங்கு போட்டேன் என்று கூறியதை கேட்டவன்,
“எதுக்கு போட்ட…? இப்போ நீ வழுக்கி விழுந்த மாதிரியே நானும் வழுக்கி விழுகணும் அதானே உன் திட்டம்…”என்று மிரட்டும் குரலில் கேட்டான் ருத்ரன்.
அதற்கு பனிவிழியின் மனதிற்குள்ளோ ‘அட ஆமாய்யா அப்படித்தான் நெனச்சு போட்டேன்…” என்று கொக்கரித்தது.
ஆனால் அதனை வெளியில் தான் சொல்லி விட முடியுமா…? அதனால் எதுவும் பதில் பேசாது அமைதியாக தலை தாழ்ந்தவாறு நின்றிருந்தாள்.
சில கணம் அவளையே கோபம் விழிகளோடு பார்த்தவன், “என்னதான் உன்னோட பிஹேவியர் சென்ஸோ… நீயெல்லாம் எதுக்கு காலேஜுக்கு வர்ற…? படிக்கிற வேலைய தவிர மத்த எல்லாம் பண்ணிட்டு இருக்க… இப்படியே போச்சுன்னா நானே பிரின்சிபால் கிட்ட சொல்லி உன்னை இந்த காலேஜ் விட்டு தொரத்த வைக்கிறதுக்கும் அதிக வாய்ப்பு இருக்கு… சோ இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ…”
“சரிங்க சார்..” என்று உள்ளிழுத்த குரலில் கூறினாள் பனி.
அவளையும் அவளின் பதிலையும் பார்த்திருந்தவன், கீழே விழுந்ததன் வாயிலாக அவளின் காலில் பலமாக அடிபட்டிருந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் நிலையாக நிற்க முடியாமல், வலியில் முகம் சுணங்குவதை கவனித்து,
“என்னாச்சு கீழே விழுந்ததுல கால்ல எதுவும் அடிபட்டுருச்சா…? ரொம்ப வலிக்குதா…?”
இத்தனை நேரம் இருந்த அந்த கண்டிப்பும் மிரட்டலும் சென்று, என்றுமில்லாத ஒருவித கரிசனத்தில் அக்கறையாக கேட்டான் ருத்ரன்.
கடந்த சில தினங்களாக அவனிடம் பார்க்காத புதுவித மாற்றத்தை அவனின் குரலில் கவனித்த பனியோ மெல்ல நிமிர்ந்து, அவனின் முகம் பார்க்க, அவனோ அவளின் கால்களை ஆராய்ந்தவாரே நின்றிருந்தான்.
“சொல்லு வலிக்குதா…?”
“ஆமா சார்… லைட்டா வலிக்குது…”
“க்ளாசுக்கு பத்திரமா போயிடுவியா…? இல்ல ஸ்டூடண்ட்ஸ் யாரையாவது வர சொல்லவா..?”
“இல்ல சார்… நானே போய்க்கிறேன்..” இத்தனை நேரம் அவளிடம் தொற்றிக் கொண்டிருந்த குறும்புத்தனம் அனைத்தையும் துறந்து, அவன் தன்னிடம் கேட்ட அக்கறை கலந்த கேள்வியில் அனைத்தும் மறந்துவளாக, அவன் மீது தோன்றிய வேறு ஒரு புதுமையான உணர்வுடன் அங்கிருந்து செல்வதற்காக ஒரு அடி எடுத்து வைத்தாள்.
ஆனால் மறுகணமே, “ஆ… அம்மா..!” என்ற சத்தத்துடன் தனது காலை பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள்.
அதனைப் பார்த்து பதறி, அவளின் அருகில் சென்று ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவனோ, “என்ன ஆச்சு கால் ரொம்ப வலிக்குதா…?” என்று அவளின் கெண்டை காலுக்கு கீழே உள்ள பாதங்களை ஆராய்ந்தவாறு கேட்டான்.
“ஆமா சார் பயங்கரமா வலிக்குது… என்னால அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியுமான்னு தெரியல…” என்று வலியில் முகம் சுணங்கி பேசினாள் பனி.
“லூசு லூசு…அறிவுகெட்டத்தனமா எதையாவது பண்ணி தொலைக்க வேண்டியது… இப்ப அது உனக்கே திருப்பி அடிச்சுச்சா… தேவையான உனக்கு இந்த வேண்டாத வேலை…”
அவளின் காலில் அடிபட்டு இருப்பதால் தனக்குள் தோன்றிய உணர்வுகளில் உரிமையாய் அவளை கடிந்து கொண்டவன் பொறுமையாக அவளின் கையைப் பிடித்து தூக்கி நிறுத்தினான்.
“மெடிக்கல் ரூம்க்கு போனா அங்க டாக்டர் இருப்பாங்க… அங்க வரைக்கும் உன்னால் நடந்து வர முடியுமா..?”
“இல்ல சார்… என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியல… அவ்வளவு தூரம் எல்லாம் என்னால வர முடியாது…”
“ஓகே இதுல உட்காரு…” என்று தன்னுடைய நாற்காலியை எடுத்து வந்து அவள் இருக்கும் இடத்தின் அருகில் போட்டவன் அதில் அவளை அமரக் கூறினான்.
அதனை பார்த்தவளோ, “சார் உங்களோட சேர்ல நான் எப்பிடி உட்கார முடியும்…?”
“உட்காருன்னு சொன்னா உட்காரு விழி…” என்று அவனையும் அறியாமல் அவளை விழி என்று உச்சரித்து அக்கறையாக அமரக் கூறியவன் அவளின் வலியில் சிவந்திருந்த மேல் பாதங்களை தனது இரு விரல்கள் கொண்டு அழுத்தியவன் “சரியா எந்த இடத்துல வலிக்குது..?” என்று கேட்டான்.
அதில் பதறி தனது கால்களை பின்னிழுத்தவள் “சார் நீங்க போய்… என் காலை…”
“ப்ச்… எந்த இடத்துல வலிக்குதுன்னு கேட்டேன்…!”
“இங்க சார்…” என்று உள்ளிழுத்த காலை வெளியில் கொண்டு வந்து அந்த பாதத்தின் மேற்பகுதியை சுட்டிக்காட்டினாள்.
அதனை மெல்ல ஒற்றை விரல் கொண்டு தடவி பார்த்தவன், அதில் ஒரு இடத்தில் நரம்பு நன்றாக சுருக்கி இருப்பதை கவனித்து, “நரம்பு நல்லாவே சுளுக்கிருச்சு..”என்றான்.
“அய்யய்யோ…! என்ன சார் சொல்றீங்க…? இப்போ என்ன பண்றது…?”
“ஆங்.. அதை எனக்காக இந்த வாழைப்பழ திட்டத்தை போட்டல்ல அப்பவே யோசிச்சு இருக்கணும்…” என்றவன் தனது போனை எடுத்து மெடிக்கல் ரூமிற்கு அழைத்து விவரம் கூறி சுளுக்கிற்கு வேண்டிய வலி நிவாரணியை யாரிடமாவது குடுத்து விடுமாறு கூறியவன் அழைப்பை துண்டித்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு வந்த ஒரு மாணவன் ருத்ரனிடம் ஒரு களிம்பை குடுத்துவிட்டு சென்றிருந்தான்.
அதனை வாங்கிய ருத்ரன் அவள் ஒரு மாணவி தானே என்கின்ற உதாசினமோ அல்லது தான் ஒரு பேராசிரியன் என்கின்ற கர்வமோ சிறிதும் இல்லாமல், பனியின் அருகில் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன், அவளின் சுளுக்கு ஏற்பட்டிருந்த இடத்தில் மெல்ல அந்த களிம்பை போட்டு பொறுமையாக நீவி விட்டான்.
அதில் அவள் வலியில் முகம் சுணங்கும் நேரத்தில் “கொஞ்சம் வலிக்கும் தான்… கொஞ்ச நேரம் மட்டும் பொறுத்துக்கோ…இதை அப்ளை பண்ணா தான் கொஞ்சமாவது வலி குறையும்…”
ஒரு தாய் தன் குழந்தைக்கு மருந்திடும் பொழுது எத்தனை அன்போடும் அக்கறையோடும் தன் குழந்தையின் வலியை உணர்ந்து கூறுவாளோ அதேபோன்று கூறினான் ருத்ரன்.
அவனின் இந்த செயலில் மனம் இலகி கனிந்து தன்னிலை மொத்தமும் மறந்தவளாக, அவனின் அந்த அழகு முகத்தையே விழி அசைக்காமல் பார்த்திருந்தவளுக்கு, அவனின் அக்கறையில் சுளுக்கால் உண்டான கால் வலி எல்லாம் எங்கோ மறைந்து போயிருந்தது.
சிறிது நேரத்தில் அவளின் பாதத்திற்கு மறந்திட்டு அந்த மருந்தை மிதமாக நன்றாக தேய்த்து முடித்தவன் எழுந்து நின்று,
“இப்போ உனக்கு வலி ஓகே வா பாரு… பொறுமையா எழுந்து நில்லு…” என்று கூறினான்.
அதில் தனியாக எழுந்து நிற்க முயற்சித்தவள் காலை தரையில் வைத்ததும், மீண்டும் கால் வலி எடுக்கவே,
“சார் ரொம்ப வலிக்குது சார்..” என்று கூறி திடமாக நிற்க முடியாமல் தடுமாறியவள் பிடிமானத்திற்காக அவனின் தோளை பற்றினாள்.
தானும் தன் தோளை பற்றி இருந்த அவளின் கையை பொறுமையாக பிடித்தவன், “ஒன்னுல்ல… ஒன்னுல்ல கொஞ்ச நேரம் அப்படி தான் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா நடந்து குடுத்தா சரியா போயிடும்…” என்றவன் அந்த வழியாக சென்ற ஒரு மாணவியை அழைத்து சுமித்ராவை அழைத்து வருமாறு கூறியிருந்தான்.
‘அய்யய்யோ… ருத்ரன் சார் எதுக்கு கூப்பிடுறார்ன்னு தெரியலையே…! இந்த வானரம் நம்மளை எதுவும் மாட்டி விட்டுருச்சோ… அய்யய்யோ அப்படி மட்டும் மாட்டி விட்டிருந்தா நம்ம என்ன சொல்றது…? எப்பிடி சமாளிக்கிறது…? கடவுளே இவ கூட பழக்கம் வச்சதுக்கு இன்னும் என்னையே என்னென்ன பண்ண போறாளோ…!’
புலம்பிக்கொண்டே ருத்ரனின் கேபினுக்கு வந்தவள் அங்கு தான் கண்ட காட்சியில் அதிர்ந்து உறைந்து நின்றாள்.
அங்கே பனிவிழியோ குழந்தை போல் மெல்ல நடையிட்டு கொண்டிருந்தாள். ருத்ரன் அவளின் கையை பற்றிக் கொண்டு குழந்தைக்கு நடை பயிற்றுவிப்பது போல் அவளை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
‘என்னடா நடக்குது இங்க…!!?’ என்ற ரீதியில் அவர்களை பார்த்திருந்தவளை கவனித்த ருத்ரன்,
“சுமித்ரா இங்க வா…” என்றான்.
“சார்… என்ன ஆச்சு சார் இவளுக்கு…?”
“அவளுக்கு கால்ல அடிபட்டுருக்கு…. கை தாங்களா கூட்டிட்டு போய் க்ளாஸ்ல உக்காரவை… இப்போ தான் ஆயின்மெண்ட் அப்ளை பண்ணிருக்கு பெயின் குறையிறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும்… அதுவரைக்கும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ… கேண்டீனுக்கெல்லாம் போயிட்டு இருக்க வேண்டாம்… அவளுக்கு ஏதாவது வேணும்னா நீயே வாங்கிட்டு வந்து குடுத்திரு…”
ருத்ரவர்மன் சிடுமூஞ்சி வாத்தி என்கின்ற இடத்திலிருந்து மாறி, இப்பொழுது வேறு ஒரு பரிமாணமாக தன் கண்களுக்கு தெரிந்த ருத்ரனை பார்த்த சுமித்ரா மேலும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க,
“சுமித்ரா… சுமித்ரா… நான் சொல்றது உனக்கு கேக்குதா.. இல்லையா…?” என்று அவளின் முன்பு கையசைத்து கேட்டான் ருத்ரன்.
“ஆங்…நல்லாவே… நல்லாவே கேட்குது சார்…” என்றவள் ருத்ரனின் தோள்பற்றி நின்றிருந்த பனியை தன்னுடைய தோள்களுக்கு மாற்றியவள் அங்கிருந்து வெளியில் செல்ல போக,
“சுமித்ரா ஒரு நிமிஷம்…” என்றவன் அங்கிருந்த களிம்பை எடுத்து அவளிடம் குடுத்தவன் “வலி அதிகமாக இருக்கும் போது இந்த ஆயின்மெண்டை அவளோட பாதத்துல அப்ளை பண்ணிக்க சொல்லு…” என்று கூறி தன் கையில் இருந்த களிம்பை அவளின் கைகளில் குடுத்தனுப்பினான்.
இப்பொழுது,
பனி கேபின் வாசலில் திட்டம் போட்டு வாழைப்பழ தோலை வைத்தது, பின் அவளறியாமல் அவளே அதில் கால் வைத்து வழுக்கி விழுந்தது… பற்றி தான் ரித்துவிடம் கூறிக் கொண்டிருந்தான் ருத்ரன்.
அதன் பால் தான் அவனின் முகத்தில் அத்தனை புன்னகையும் மகிழ்ச்சியும் இழையோடியது.
இன்றைய தினம் ருத்ரனிடம் தான் கண்ட இந்த புது விதமான மாற்றத்தில், சிறிதும் கர்வமின்றி அவன் தனக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தது…. தன் பாதம் பற்றி மருந்திட்டது, தடுக்கி விழச் சென்ற சமயத்தில் தான் விழாமல் இருக்க தோள் குடுத்தது… என அனைத்திலும் தெரிந்த அவனின் அந்த அக்கறையால் இவளுக்குள்ளும் ஒரு மாற்றம் உருவானது. அதன் பால் தான் ருத்ரனையே விழி வெட்டாமல் பார்த்த அந்த கண்களில் நட்சத்திரத்தை தாண்டி சிறிய இதயமும் மின்னி மிளிர்ந்தது.
(பனித்தீ தொடரும் 💝💝💝)
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
