அத்தியாயம் 4
காலையில் எழுந்து தன்னுடைய அன்றாட வேலைகளை முடித்துக் கொண்ட ருத்ரன் தன்னுடைய வீட்டிலிருந்து காலேஜிற்கு கிளம்பி இருந்தான்.
பனிவிழியும் கனிமொழியும் கூட தங்களது வீட்டிலிருந்து கால் டாக்ஸி மூலம் பயணம் செய்து காலேஜிற்கு சற்று முன்னதாக தான் வந்திருந்தனர்.
இடுப்பை பெண்டிங் பொஷிஷனிலேயே வைத்துக்கொண்டு கனிமொழியின் தோள் மீது கை போட்டவாறு நடந்து வந்தாள் பனி.
பனியின் பொஷிஷனை பார்த்த கனியோ, “கொஞ்சம் நிமிர்ந்து தான் வாயேண்டி… எல்லாரும் ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க…”
“பாத்தா பாத்துட்டு போகட்டும் போடி…”
இவர்கள் இருவரும் கேம்பஸின் உள்ளே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, நேற்றைய பொழுது பனிவிழி மிரட்டிய அந்தப் சீனியர் பையன் இவர்களை பார்த்து நக்கலாக சிரித்தவாரே கடந்து சென்றான்.
அதனை கவனித்த கனிமொழியோ “ஏய் பனி நேத்து நீ ஒருத்தனை மிரட்டுனல்ல… அவன் நம்மளை பார்த்து நக்கலா சிரிச்சுட்டு போறாண்டி கொஞ்சம் பொஷிஷனை மாத்துடி…”
“அக்கா…நீ பேசாம வாய மூடிட்டு போ… நான் ஏதாவது சொல்லிட போறேன்… எனக்கு மட்டும் என்ன உன் தோள்ல கை போட்டுக்கிட்டு பைசா கோபுரம் மாதிரி இப்படி சாஞ்சுக்கிட்டு வரணும்னு ஆசையா… என்னால நேரா நடக்க முடியலக்கா…”
“சரிடி இப்போ நான் க்ளாஸ்க்கு போகணும் டைம் ஆச்சு…உன்னை உன்னோட க்ளாஸ்க்கு கூட்டிட்டு போய் விட்டுட்டவா..?”
“மணி எத்தனை…?”
“மணி எட்டே காலு…”
“க்ளாஸ்க்கு போக இன்னும் எத்தனை நேரம் இருக்கு…?”
“இன்னும் கால் மணி நேரம் தாண்டி இருக்கு…”
“என்ன.. இன்னும் கால் மணி நேரம் இருக்கா… அப்போ இப்பவே நீ க்ளாஸ்க்கு போய் என்ன பண்ண போற…? வா இருக்கவே இருக்கு கிரௌண்ட்ல இத்தனை பெஞ்ஜூ… ஏதாவது ஒரு பெஞ்ல உட்கார்ந்துட்டு அப்புறம் போய்க்கலாம்…”
“ஏய் பனி… இங்க இருக்குற ரூல்ஸ் என்னன்னு தெரியுமா..? யாருமே தேவையில்லாம க்ரௌண்ட்டுக்குள்ள சுத்த கூடாதாம்… அப்படி தேவை இல்லாம சுத்தி அது ருத்ரன் சார் பார்வையில பட்டுச்சுன்னா அவ்வளவுதானாம்… பனிஷ்மெண்ட் ரொம்ப ஹெவியா இருக்குமாம்… ருத்ரவர்மன் சாரோட பனிஷ்மெண்ட்டை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்ல.. ஏன்னா உனக்கு தான் அதுல அனுபவம் அதிகம்….”
அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்து கனி கூறியதைக் கேட்டு அவளை தீயென முறைத்த பனியோ,
“என்னையே குத்திக் காட்டி பேசிட்டல்ல… இதுக்கப்பறம் இந்த காலேஜ்ல நீ யாரோ… நான் யாரோ… உனக்கு வேணும்னா நீ சீக்கிரம் உன் க்ளாஸ்க்கு போய்க்கோ… ஆனா நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே உக்காந்துட்டு தான் போவேன்…” என்று திடமாகக் கூறியவள் கனி எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
“சரிடி நீ உட்காந்துட்டு போ… ஆனா எனக்கு ஒரு முக்கியமான டெஸ்ட் இருக்கு.. நான் க்ளாஸ்க்கு போய் ப்ரிப்பர் பண்ணனும் நான் கிளம்புறேன்…” கூறியவள் ஒரு கட்டத்திற்கு மேல் அவளிடம் கெஞ்ச முடியாமல் தன்னுடைய வகுப்பறை நோக்கி சென்று விட்டாள்.
அந்த பெஞ்சில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தோரணையாக அமர்ந்து அங்கு பேசி சிரித்து அரட்டை அடித்துக் கொண்டு செல்லும் மாணவர்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பனிவிழி.
அந்த நேரம் கேட்டிற்குள்ளே நுழைந்து எப்பொழுதும் தான் வண்டியை நிறுத்தும் இடத்திற்கு சென்று தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் ருத்ரன்.
இத்தனை நேரம் மெதுவாகவும் அசட்டையாகவும் அரட்டை அடித்துக் கொண்டும் சென்ற மாணவர்கள் அனைவரும் ருத்ரனின் வருகையை பார்த்துவிட்டு வேக எட்டுக்களுடன் தங்களுடைய வகுப்பறை நோக்கி படையெடுத்தனர்.
அதனை கவனித்த பனிவிழியோ ‘என்ன … இத்தனை நேரம் ஆமை மாதிரி போனவனுங்க.. இப்ப முயல் வேகத்துக்கு ஓடுறானுங்க…!’ என்று நினைத்தவளாக ஒன்றும் புரியாமல் அதே தோரணையில் அந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்திலேயே அந்த க்ரௌண்டில் இருந்த கூட்டம் அனைத்தும் காலியாகி விட, தன்னுடைய பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு பனிவிழியின் முன்னே வந்து நின்றான் ருத்ரவர்மன்.
இத்தனை நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவள் அவனைப் பார்த்து நொடி பட்டென தனது காலை கீழே போட்டு, அட்டேண்ஷன் மோடில் எழுந்து நின்றாள்.
“நீ இங்க என்ன பண்ற…? க்ளாஸ்க்கு போகலையா…?”
“அது.. அது… வந்து சார் இப்போதான் நான் காலேஜ்க்குள்ள வந்தனா… அதுதான் இந்த காலேஜ் அப்பறம் இந்த க்ரௌண்ட் எல்லாம் எப்படி இருக்கு….? எல்லாரும் கரெக்டா இருக்காங்களா…? அப்படின்னு பாக்குறதுக்காக கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்து இருந்தேன்…”
“இந்த காலேஜ் கேம்பஸ் எப்படி இருக்குனு இங்க இருக்கிற 2000 ஸ்டூடண்ட்ஸை தவிர உனக்கு தானே ரொம்ப நல்லா தெரிஞ்சிருக்கும்… அப்படி இருந்தும் கூட, நீ க்ரௌண்ட் அனலைஸ் பண்றதுக்கு இங்க வேற என்ன இருக்கு…?”
நேற்று அவள் இந்த கேம்பஸ் முழுவதையும் சுத்தம் செய்ததை அவளுக்கு நினைவூட்டும் வகையில் ருத்ரன் பேச, அதனை கேட்டு உள்ளுக்குள் ஆத்திரம் கிளர்ந்தாலும் அதனை வெளிக்காட்ட முடியாமல்,
“அது இல்ல சார்… நேத்து ஃபுல்லா இங்க க்ளீன் பண்ண சொல்லி பனிஷ்மெண்ட் குடுத்துட்டீங்க… அந்த வேலையை முடிக்கும் போது தான் நான் ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன்…” மிக தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள் அவள்.
“அப்பிடி என்னத்த கண்டுபிடிச்சீங்கலாம் மேடம்…?” என்று தன்னுடைய இரு கைகளையும் மார்பிற்கு குறுக்காக கட்டியவாறு கேட்டான் ருத்ரன்.
“அதுவா சார்… அது வந்து… நேத்து ஃபுல்லா குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சதால என் இடுப்பு கழண்டு போச்சு சார்… அதுதான் கண்டுபிடிச்சேன்…”
இடுப்பில் ஒரு கை வைத்து அழுவதை போல் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கூறியதை கேட்டு தனக்குள் பீறிட்டு கிளம்பிய சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக் கொண்ட ருத்ரனோ,
“செட் அப் இடியட்… கோ டு யுவர் க்ளாஸ்.. அண்ட் டோன்ட் வேஸ்ட் மை டைம்… இல்லைன்னா இதுக்கும் சேர்த்து வச்சு பனிஷ்மெண்ட் குடுக்க வேண்டியதா இருக்கும்…”
இறுகி இருந்த முகத்தை மேலும் இறுக்கி கடுமையான குரலில் கட்டளையாக கூறியவன் அங்கிருந்து தன்னுடைய கேபின் நோக்கிச் சென்றான்.
போகும் அவனை பார்த்து வாய்க்குள் அவனை முணுமுணுத்தபடியே திட்டி விட்டு தன்னுடைய பேக்கை எடுத்து தோளில் மாட்டி இரண்டடி எடுத்து வைத்தவள்,
“அய்யோ… அம்மா… என் இடுப்பு… அப்பவே கனி சொன்னா… வாடி கொண்டு போய் க்ளாஸ்ல விடுறேன்னு… கேட்டனா நானு… கொஞ்ச நேரம் இருக்கேன்னு அக்கா பேச்சை கூட மதிக்காம வம்படியா இங்க உட்கார்ந்தேன்…. இப்போ எப்பிடி நான் க்ளாஸ்க்கு போய் சேர போறேன்… கடவுளே…!” நொந்து கொண்டவளாக பொறுமையாக அடி எடுத்து வைத்து தன்னுடைய வகுப்பறைக்கு வந்து சேர்ந்தாள் பனிவிழி.
வகுப்பறைக்குள் நுழைந்தவள் அங்கு கடைசி பெஞ்சில் காலியாக இருந்த இடத்தில் சென்று ஒரு பக்கமாக இடுப்பை தூக்கினார் அமர்ந்தாள்.
அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி அவள் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்து “உனக்கு என்ன ஆச்சு..? உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என்று அக்கறையாக வினவினாள்.
அவளின் குரலில் அவள் புறம் திரும்பிய பனியோ “ஆமா லைட்டா உடம்புக்கு முடியல தான்…”
“உடம்புக்கு முடியலன்னா லீவு போட்டு வீட்லையே ரெஸ்ட் எடுத்துருக்கலாம் தானே…”
‘நீ சொல்றதும் வாஸ்தம் தான்… இதைத்தான் நானும் சொன்னேன்… ஆனா யார கேக்குறா…!’ மனதிற்குள் நினைத்து தன்னையே நொந்து கொண்டவள், முகத்தில் புன்னகையை வரவழைத்து,
“ஹாய் மை செல்ஃப் பனிவிழி…!” என்று தன்னை அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டாள்.
“ஹாய் பனி…நான் சுமித்ரா…! இதே காலேஜ்ல தான் ஸ்டார்டிங்ல இருந்து படிக்கிறேன்…. ஆனா இதுக்கு முன்னாடி நான் உன்னை இந்த க்ளாஸ்ல பாத்ததே இல்லையே…நீ நியூ அட்மிஷனா…?”
“ஆமா… இதுக்கு முன்னாடி நான் படிச்சு காலேஜ் செம்மையா இருக்கும்… எத்தனை நாள் வேணாலும் லீவு போடலாம்… எதுக்குமே பனிஷ்மெண்ட் அப்படிங்குற ஒரு தொல்லையே இல்ல… ஆனா இங்க வந்த இரண்டாவது நாள்லையே எனக்கு பனிஷ்மெண்ட்டுனா என்ன அப்படின்னு தெளிவா காட்டிட்டாரு உங்க காலேஜ் சிடு மூஞ்சி வாத்தியாரு…”
“ஓஹோ… நேத்து ஃபுல்லா ஒரு பொண்ணு பனிஷ்மெண்ட் அப்பிடின்ற பேர்ல கேம்பஸ் ஃபுல்லா கிளீன் பண்ணான்னு கேள்விப்பட்டேன்… அது நீ தானா…?”
“ஆமா தாயி… அது தானே தான்” முகத்தை அழுவது போல் வைத்துக்கொண்டு பனிவிழி கூற அதனைக் கேட்டு சத்தமிட்டு சிரித்தாள் சுமித்ரா.
அந்த நேரம் ஆங்காங்கே பெஞ்சின் மீது ஏறி அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் தங்களுடைய இருக்கையில் அமர்ந்து கட்சிப்பென்று அமைதியாகி பட்டென எழுந்து நின்றனர்.
“இவ்வளவு நேரம் குரங்கு மாதிரி பெஞ்சு மேல உட்காந்து அரட்டை அடிச்சிட்டு… இப்ப எதுக்கு எல்லாரும் ஸ்டாண்டிங் போஸ்ல நிக்கிறானுங்க…?” வாய் விட்டு கூறியவாறு தானும் மெல்ல எழுந்து என்னவென்று பார்த்தாள் பனிவிழி.
அங்கோ நிமிர்வான தோற்றத்தோடு, கம்பீரமான தோரணையான நடையோடு அந்த வகுப்பறையினுள் நுழைந்தான் ருத்ரவர்மன்.
அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் விழிகள் விரித்த பனியோ “ஏய் சுமித்ரா இந்தாளு எதுக்கு இங்க வர்றாரு…?”
அதிர்ந்து விரிந்த விழிகள் ருத்ரன் புறம் நிலைத்திருக்க, சுமித்ராவிடம் கேள்வியை கேட்டிருந்தாள்.
“நீ என்னடி லூசு தனமா கேள்வி கேக்குற…? இவர்தானே நமக்கு கெமிஸ்ட்ரி லெக்ஜர்…”
“என்னது…!! இந்த ஆளுதான் நம்மளுக்கு கெமிஸ்ட்ரி வாத்தியாரா…!!! போச்சா…”
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் வெடவெடத்துப் போன உடல் அதிர்வுகளோடு பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள் பனி.
“குட் மார்னிங் காய்ஸ்… சிட் டவுன்…” ருத்ரன் மாணவர்களை அமரக்கூறியதும் அனைவரும் தாம் தம் இருக்கையில் அமர்ந்தனர்.
அதன் பிறகு அங்கு இருந்த வருகை பதிவேட்டை எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் ரோல் நம்பரை வாசித்து அவர்களின் வருகையை பதிவாக குறிப்பிட்டுக் கொண்டே வந்தவன் ரோல் நம்பர் 30 என்று பனியின் எண்ணை அழைக்கவும், பட்டென்று எழுந்து நின்று “ப்ரசெண்ட் சார்..” என்றாள் பனி.
அவளை பார்த்ததும் ‘ஓ…நீ இந்த க்ளாஸ் தானா…!’ என்று நினைத்தவன் ரோல் நம்பருக்கு அருகில் இருந்த அவளின் பெயரை பார்த்து அதனை ஒருமுறை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டான். பின் அவள் அமராமல் நிற்பதை பார்த்து,
“அதான் ப்ரசண்ட் சொல்லிட்டல்ல அப்பறம் ஏன் தேவையில்லாம நிக்கிற உட்காரு…” என்றான்.
‘எந்திரிச்ச உடனே உட்கார முடிஞ்சா நான் எதுக்குடா உனக்கு மரியாதை குடுத்து நிக்க போறேன்…!’ மனதிற்குள் எண்ணி நொந்து கொண்டவளாக பொறுமையாக இருக்கையில் அமர்ந்தாள் பனி.
வருகை பதிவேட்டில் மாணவர்களின் வருகையை கணக்கிட்டு முடித்தவன், “ஹலோ ஸ்டூடண்ட்ஸ்… இந்த ரெண்டு நாளா நம்ம ஃபர்ஸ்ட் யூனிட் தியரி முடுச்சுட்டோம்…
நம்ம கத்துக்கிட்ட தியரிய இன்னைக்கு ப்ராக்டிக்கலஸ் செஞ்சு பாக்குறதுக்கான டைம்… சோ எல்லாரும் உங்களுடைய நோட் புக்ஸ் எடுத்துட்டு கெமிஸ்ட்ரி லேப்க்கு வந்துருங்க…” மாணவர்களிடம் கூறியவன் தன்னுடைய குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு முன்னே சென்றான்.
“சுமித்ரா.. என்னடி லேப்க்கு வர சொல்றாரு…! அங்க போனா பிராக்டிகலா டெஸ்ட் வப்பாரே…!”
“பின்ன அதுக்குத்தான கூப்பிட்றாரு டெஸ்ட் வைக்காமலா இருப்பாரு…”
“ஏய் எனக்கு எதுவுமே தெரியாதுடி… இன்னும் சொல்லப்போனா அந்த சப்ஜெக்ட் புக்கோட ஃப்ரண்ட் பேஜ்ல என் பெயரை எழுதுறதுக்காக மட்டும் தான் அந்த புக்கையே நான் ஓபன் பண்ணேன்…மத்தபடி அந்த புக்ல என்ன இருக்குன்னு கூட எனக்கு தெரியாதுடி…!”
(பனியின் நிலை அந்தோ பரிதாபம் 🤣🤣🤣🤣)
(பனித்தீ தொடரும் 💝💝💝)
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
