அத்தியாயம் 3.,
கையில் வைத்திருக்கும் கடிகாரம் சிரிக்க, நண்பர்கள் நால்வரும் விக்கித்துப் போய் நின்றனர். ராகவ் ஒரு படி மேலாக, “பேய்”, எனக் கத்தி அந்த அலாரத்தை தூக்கி ஏறிய,
“ஐயோ… டேய் மாட்டுப்பல் காரா, ஏன் டா என் இடுப்பை ஒடைச்ச”, எனக் கேட்டுக் கொண்டு எலிக்குட்டி போல நடந்த வந்தது அலாரக் கடிகாரம்.
“அம்மா… என்னை யாராச்சும் காப்பாத்துங்க. பேய்… பேய்”, எனக் கதறினான்.
“யாரை டா பேயின்னு சொன்ன… நீ பேய், உன் ஆள் பேய், உன் கூட இருக்கிற எல்லாரும் பேய்”, என்றது அலாரம் கோவமாக.
“வாங்கடா ஓடிர்லாம்”, என திரு சொல்ல,
“வா போலாம். எனக்கும் இங்கேயே இருந்து போர் அடிக்குது”, என அலாரம் சொல்ல.
“பேய் ஒட்டுற சாமியார் கூட்டிட்டு வரணும் டா. எனக்கு பயமா இருக்கு டா”, என விஷ்வா சொல்ல.
“லிசா இல்லனா உஷான்னு போற நாய், எனக்கு பேய் ஓட்ட போறியா?”, என நான்கு பேரையும் லெஃப்ட் ரைட் வாங்கியது அலாரம்.
அது எதிர்த்து எதிர்த்து பதில் சொல்லவும் நண்பர்கள் நால்வரும் மேலும் மேலும் பயந்து போய் தான் நின்றனர்.
அவர்களின் அடக்க ஒடுக்கத்தைக் கண்ட அலாரம், ” நான் ஒன்னும் பேய் இல்ல. என்னோடது ரொம்ப சோகமான கதை”, என வருத்தத்துடன் தலை குனிந்தவாறு நின்றது.
(பிகு: கை, கால், கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் இருக்கு அந்த அலாரத்துக்கு)
“யாரை ஏமாத்தப் பாக்குற. நீ பேய் தான். உன் பேர் என்ன, என்ன ஆசைல செத்து போய் பேயா இதுக்குள்ள போன”, என அர்ஜுன் சாமியார் போல வினவினான்.
“நிஜமா நான் பேய் இல்லை. உயிரோட இந்த அலாரத்துல மாட்டிக்கிட்டேன்”, என்ற அலாரத்தை விழி பிதுங்கி போய் பார்த்தனர் நால்வரும்.
” ஹே… நீ என்ன ஜீ பூம்பா கதை எல்லாம் சொல்ற”, என மேலும் பயந்து போனான் ராகவ்.
“உண்மையைத் தான் சொல்றேன். நான் ஒரு சயின்டிஸ்ட். இந்த ப்ராஜெக்ட் செய்யும் போது, ஒரு சின்ன மிஸ்டேக். இது என்னை உள்ள இழுத்திருச்சு”, என்றது அலாரம்.
“இதை எங்கள நம்ப சொல்றியா. நீ எங்களை யாரையோ பிடிச்சுக்க தான் இப்படி பேசற. நான் போறேன்”, என திரு வெளியில் செல்லப் போக,
“பிளீஸ் என்னை இதுல இருந்து வெளிய கொண்டு வர ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு உங்களை போல வாழ ஆசையா இருக்கு”, என்றது அலாரம்.
அது சொல்வது நம்ப முடியாத விஷயம். ஆனால் ஏனோ இரக்க குணம் கொண்ட நண்பர்கள் அதனைப் பயம் விலகி ஆதரவாகப் பார்த்தனர்.
“நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும், எனக்கு ஒன்னும் புரியல. முதல் ல நீ யாரு அதை சொல்லு”, என்றான் விஷ்வா.
“இந்த ஹவுஸ் ஓனர் பையன்”, என்றது அலாரம்.
“அடேய் அந்த இன்ட்ரோவேர்ட் நீதானா” என அர்ஜுன் கேட்க,
“அப்டியெல்லாம் இல்லை. ப்ராஜெக்ட் பிசில யார் கூடயும் பேச நேரம் இருக்காது”, என்றது அலாரம்.
“அப்படி என்ன கண்டு பிடிக்க போய் இப்படி குட்டியாகி இருக்க நீ”, எனக் கேட்டான் திரு.
“டைம் டிராவல் மெசின்”, என்றது அலாரம்.
அதிர்ந்து போய் நின்றனர் நண்பர்கள். அலாரம் தான் அவர்களை சோகமாக பார்த்து நின்றது.
“இப்போ என்ன பண்ணனும். உன்னை தூக்கிப் போட்டு ஒரே உடை. வெளிய வந்துரு. பிராப்ளம் சால்வ்”, என அர்ஜுன் அலாரத்துக்கு உதவி செய்வதாக நினைத்து இப்படி ஐடியா சொன்னான்.
“நான் உடைய மாட்டேன். எவ்ளோ தூரம், எவ்ளோ ஹைட் ல இருந்து வீசினாலும் உடைய மாட்டேன்”, என்றது அலாரம்.
“ஆஹான். அதையும் தான் பாப்போம்”, என விஷ்வா. வேகமாக அலாரத்தை தூக்கி எறிய, தூரம் சென்று அப்டியே எழுந்து நின்றது அது.
“வலிக்குது டா. நான் தான் சொல்றேன் ல அவரசக்குடுக்கை”, என அலாரம் திட்ட, அது நடந்து வருவதை பே’ வென பார்த்து நின்றான் விஷ்வா.
“சரி. உன்னை எப்படி தான் வெளிய கொண்டு வரது. வாட்ச் கடைக்காரன் அண்ணன்ட சொல்லி உன்னை வெளிய எடுக்க சொல்லவா? “, எனக் கேட்டான் ராகவ்.
தலையில் அடுத்துக் கொண்டது அலாரம்.
” அது வேற மாதிரி ப்ரோசெஸ்.
என் முதுகுல பட்டன்ஸ் இருக்கில்ல அதுல ஒரு பட்டன் தான் என்னோட ரிலீஸ் பட்டன். அதை கண்டு பிடிச்சு அழுத்தினா நான் வெளிய வந்துருவேன். அதை டெஸ்ட் பண்ணும் போது தான், கை தவறி வேற பட்டன் ல பிரெஸ் ஆகி, நான் இதுல மாட்டிக்கிட்டேன்”, என அலாரம் சொன்னது.
“இப்போ நான் அழுத்தி பட்டன் மாறி போனா, நாங்களும் இதுக்குள்ள மாட்டிப்போமே”, என அறிவாகக் கேட்டான் அர்ஜுன்.
“இல்ல. ஒருத்தரை அரெஸ்ட் பண்ணினா அவங்க ரிலீஸ் ஆனா தான் இன்னொருத்தரை அரெஸ்ட் பண்ண முடியும். அதோட இன்புட் அப்படிதான்”, என அலாரம் சொல்ல,
“டைம் மெசின்னா… டிராவல் பண்ண வச்சமா, திருப்பி ஆஃப் ஆனோமானு இல்லாம, என்னத்துக்கு பெரிய அறிவாளி மாதிரி கண்ட கண்ட இன்புட் ஆப்ஷன்ஸ் குடுத்து வச்சிருக்க”, என்றான் ராகவ் கோவமாக.
“திருட்டு பயம் தான்”, என்றது நால்வரையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே,
“போனா போகுது. ஹெல்ப் பண்லாம்னு பார்த்தா, ரொம்ப ஓவரா பண்ற. அதிலேயே கிட”, என அர்ஜுன் சொல்ல,
“நான் நினைச்கா உன்னை டைம் டிராவல் பண்ண வச்சு எங்காவது கொண்டு போய் விட்டுடுவேன். ஓவரா பேசாத “, என அலாரம் சொல்ல,
நிஜமாகவே பயந்து போனான் அர்ஜுன்.
உண்மை என்னவெனில், அதன் பின்னால் இருக்கும் பட்டன்களை அழுத்தினால் மட்டுமே அதன் இயக்கம் தொடங்கும்.
“இப்போ என்ன தான் பண்ணனும். எங்களுக்கு பிரச்சனை வாராத மாதிரி இருக்கணும். எங்களையும் உள்ள இழுத்து விட்டு வேடிக்கை பார்க்க நினைக்காத”, என்றான் ராகவ்.
“உங்களை இழுத்து விடனும்னு எல்லாம் இல்லை. எனக்கு உதவ யாருமே இல்லை. மூணு வருஷமா இந்த வீட்டுக்குள்ள அடஞ்சு கிடக்கிறேன்”, என மிகவும் வருத்தமானது அலாரம்.
“உன்னை நம்புறோம். இனி நீயும் எங்கள்ல ஒருத்தன்”, என்றான் விஷ்வா.
“ரொம்ப தேங்க்ஸ்”, என்றது அலாரம்.
“சரி எந்த பட்டன் சொல்லு. சீக்கிரம் வெளிய கொண்டு வந்துட்டு, அடுத்த வேலையைப் பார்ப்போம்”, என பட்டன் அழுத்த ஆர்வமாக நின்றான் அர்ஜுன்.
“அது எனக்கு தெரியலை. எந்த பட்டன் ல கைப் பட்டுச்சுன்னு எனக்கு தெரியாது. அதை தான் கண்டு பிடிக்கணும்”, என அலாரம் சொன்னது.
“ஃப்ரெண்ட்னு பாக்குறேன். ஆப்படிச்சு உன்னை ரெண்டா பிளந்துருவேன். டோரா புஜ்ஜி கதை மாதிரி சொல்லிட்டு இருக்க”, என அர்ஜுன் திட்டினான்.
“நிஜமா அதான் உண்மை”, என்றது அலாரம்.
நான்கு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ’ இங்கி பிங்கி இல் இருந்து, அக்கோ புக்கோ அமரா’ வரை போட்டு பார்த்து இறுதியாக ஒரு பட்டனைத் தேர்ந்தெடுத்து அதை அழுத்தி விட்டு கண்களை இறுக்கி மூடிக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து…
பயத்துடன் கண்களைத் திறந்து பார்க்க, அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தது அலாரம்.
” டேய் விஷ்வா… அவனுக்கு பதிலா நீ உள்ள போயிட்டியா டா”, என அர்ஜுன் அலாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்க,
“எடுபட்ட எரும மாடே… பக்கத்துல தான டா இருக்கேன். பட்டன் அமுத்துனது நீ. நான் ஏன் டா உள்ள போகணும் பரதேசி”, என பயத்துடன் திட்டினான் விஷ்வா.
“நான் இன்னும் வெளிய வரல”, என சோகமா டீபாயில் அமர்ந்து காலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தது.
“பட்டன் அழுத்தினா வெளிய வர முடியும்னு சொன்ன, அப்புறம் ஏன் வரல”, என ராகவ் கேட்க,
“நீ அழுத்துனது எல்லாம் கரெக்டா இருக்குமா என்ன?, நான் தான் சொன்னேனே… பட்டனை கரெக்டா ப்ரெஸ் பண்ணனும்”, என்றது அலாரம்.
“சரி வா இன்னொருக்கா டிரை பண்ணுவோம்”, என அர்ஜுன் சொல்ல,
“இல்ல… இப்போ ப்ரெஸ் பண்ணுன பட்டன் இன்னும் ஒர்க் ஆகலை”, என அலாரம் யோசித்தது.
“அதுக்கு”, என விஷ்வா கேட்டான்.
“அதோட ஒர்க் முடிஞ்சா தான், இன்னொரு பட்டன் அழுத்த முடியும்”, என்றது அலாரம்.
“எப்பா சாமி. மெசினா இது?, எவ்ளோ கடுப்பாகுது”, என எரிச்சலுடன் சகித்துக் கொண்டான் திரு.
“நான் இதுக்குள்ள போய், இது ஆபரேட் ஆன டைம்4.04am. சோ அப்போதான் இது ஒர்க் ஆகும்னு நினைக்கிறேன்”, என அலாரம் சொல்ல,
“என்னது நாலாஆஆஆ…”, என நண்பர்கள் அதிர்ந்தனர்.
“ஏன்”, எல்லாம் அவர்களை விசித்திரமாக பார்த்தது.
“தலை விதி… உன்னை நாங்க பாக்க வேண்டிய லுக்கை நீ எங்களை பாத்து விடுற. எல்லாம் நேரம்”, என்றான் அர்ஜுன்.
“ஆசை ஆசையா 4 மணிக்கு பால் காய்ச்சினோம் புது வீட்ல. ஆனா அந்த நாலு மணியே எங்களுக்கு பால் ஊத்த பாக்கும்னு நினைக்கல டா. அலார மண்டையா”, என்றான் விஷ்வா.
“பாத்தியா… அது கூட என்னை காப்பாத்த தான் உங்களை அனுப்பிருக்கு”, என்றது அலாரம்.
“க்கும். நீ அதிகபிரசங்கி வேலை பண்ணி அதுக்குள்ள போய் சிக்கிட்டு நேரத்து மேல பழியைப் போடுறியா?”, என ராகவ் கேட்க,
” எது எப்படியோ… என்னை காப்பாத்த நீங்க வந்துட்டீங்க”, என துள்ளிக் குதித்தது அலாரம்.
அதன் கொண்டாட்டத்தைப் பார்த்து நண்பர்கள் நால்வருக்கும் அடிவயிறே கலங்கியது.
என்னதான் அதற்கு உதவலாம் என மனம் வந்து ஒப்புக் கொண்டாலும், மீண்டும் தங்களில் யாராவது உள்ளே மாட்டிக் கொண்டால் என்ன செய்வது.
எலி பிடிக்கச் சென்று எலி வலையில் தாம் மாட்டிக் கொண்ட கதையாகி விடுமோ என்ற பயமே அவர்களுக்குள் அதிகமாக இருந்தது.
இப்போது அழுத்திய பட்டனின் வேலை என்னவென்று தெரியாமல், வேறு விஷயத்தை எண்ணி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களைப் பாவமாகப் பார்த்தது அலாரம்.
நண்பர்கள் அலாரத்தின் முழியைப் பார்த்து மேலும் பீதியாகி நின்று இருக்க, ” ஆல் இஸ் வெல் சொல்லுங்க”, என அவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்த அலாரத்தை முறைத்தனர் அவர்கள்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
