இருள் நிழலாய் நானே 19
சமர் முன்னே செல்ல அனுமதியாது, மகி தான் சமர் மற்றும் சீனுவுக்கு அரணாக முன் சென்றாள்.
“என்ன சமர் இது டீப்பா போகப்போக வெளிச்சம் கம்மியாகிட்டு இருக்கு.” சீனுவின் யோசனை தான் சமருக்கும்.
சூரிய ஒளி உள்ளே விழாதவாறு மரங்கள் அந்தளவிற்கு அடர்ந்து இருளாக இருந்தது.
“பல வருசமா மனித நடமாட்டமே இருந்திருக்காது போல” என்றான் சமர். அதனை சீனு அமோதிக்க, மகிக்கும் மதிய வேளையில் கூட இத்தனை இருட்டா என்று தான் தோன்றியது.
“இதுக்கு மேல நீ முன்னவே வந்திருக்கலாமே மகி. நீ ஆவி தானே?” எனக் கேட்டான் சீனு.
மகி திரும்பி பார்த்திட, சமர் அவனது மூக்கிலே குத்தியிருந்தான்.
“அடேய் இப்போ எதுக்குடா குத்துன?”
“அவளை அப்படி சொன்னதுக்குத்தான்” என்றான் சமர்.
“சாரி ரெண்டு பேருக்கும்” என்ற சீனு, “உனக்கு காற்றாய் இங்கு வர வாய்ப்பிருந்தும் வரலையே! வந்திருந்தால் உனக்கு எப்பவோ எல்லாம் தெரிஞ்சிருக்கும். அதான் எப்படி கேட்கணும் தெரியாம கேட்டுட்டேன்” என்றான் சீனு.
“தும்பை அப்படி நினைச்சு வந்து தான் அவங்க கட்டுக்குள் மாட்டிக்கிட்டாள். நானும் மாட்டிக்கக் கூடாதுன்னு அவள் என்னை தடுத்துட்டாள்” என்ற மகி ஆச்சரியம் கொண்டவளாக நின்று விட்டாள்.
மகி சட்டென்று நின்றதில் தூக்கி வைக்க முனைந்த பாதத்தை சட்டென்று பின்னிழுக்க முடியாது, அவளை ஊடுருவி முன் வந்திருந்தான் சமர்.
“லட்டு…” சீனு சொல்லிய போது உணராத நிதர்சனம் அப்போது விளங்கியது சமருக்கு.
சமரின் கண்களில் சட்டென்று நீர் திரண்டது.
“அத்து பிளீஸ்… எமோஷனல் ஆகாத. நான் உன்னோட இருக்கேன். அதை மட்டும் மனசில் வச்சுக்கோ” என்ற மகி, “நீ என்னை நினைச்சு ஃபீல் பண்ணாம அடுத்து என்னன்னு யோசி. நீங்க ரெண்டு பேராவது இங்கிருந்து உயிரோடு போகனும்” என்று சொன்னாள்.
“நீயும் உயிரோடு தான் இருக்க மகி” என்று தும்பையின் குரல் மட்டும் ஒலித்தது.
“அவள் சொல்றான்னு புதுசா எந்த நம்பிக்கையும் வளர்த்துக்காத அத்து. நான் செத்துட்…”
“லட்டு பிளீஸ்” என்றவன் பனிப் புகையாய் தன் முன் நின்றிருப்பவளை தாவி அணைத்திட முயல, காற்றாய் இருப்பவளை பிடிக்க முடியாது தடுமாறியவனை சீனு பிடித்து நிலையாக நிற்க வைத்தான்.
“அத்து…” என்ற கரகரத்த மகி, அவனின் கை பிடித்திட சில்லென்று உணர்ந்தான்.
“இப்போ ஹக் பண்ணு அத்து” என்று மகி சொல்ல… இருவரும் ஓருயிராகக் கட்டுண்டு நின்ற நொடி, பார்த்துக் கொண்டிருந்த சீனுவுக்கு அத்தனை வேதனையாக இருந்தது.
“மகி… லட்டு” என்று அரற்றியபடி இருந்த சமர் முகியின் குளிர் தாங்காது மெல்ல மெல்ல பனிக் கட்டியாக உறைந்தான்.
மகியின் ஆன்மாவும் தன்னை மறந்து நெகிழ்ந்திருக்க, சமரின் நிலை உணராது தன் அணைப்பின் அழுத்தத்தைக் கூட்டியது.
சமரின் உடலில் வெண் பனித்துகள்கள் படிய, சீனு அப்போது தான் சூழலின் தன்மை அறிந்து பதறினான்.
“சமர்… மகி…
“மகி அவனை விடு.
“உன் குளிர் தாங்காது சமர் உறைஞ்சி நிக்கிறான் மகி.”
சீனுவின் கத்தல் இருவரையும் சேரவே இல்லை.
“ஹேய் தும்பை… எங்கிருக்க நீ?”
சீனுவின் அழைப்புக்கு சம்மந்தமே இல்லாத காற்று சுற்றி சுழன்று வீசியதே தவிர தும்பையின் இருப்பு அங்கில்லை.
“ஏய் பேயே வந்து அவனை காப்பாத்து. உனக்காகத்தானே வந்தான். பேய்க்கு மனசாட்சி இருக்காதுன்னு நிருப்பிக்கிறல நீ” என்று கத்திய சீனு, சமரை பிடித்து இழுக்க அவனால் முடியவில்லை.
மகியின் ஆன்மாவை அவனால் தீண்டவே முடியல.
“தும்பை பிளீஸ் உன் நெருப்பு வச்சு எதும் பண்ணு” என்று சீனு தன் நண்பனுக்காகத் துடித்தான்.
“பேய்க்கு மனசாட்சி இல்லையே சீனு. நான் என்ன பண்ண முடியும்” என்ற தும்பை… “மகியும் இப்போ சுயத்தில் இல்லை” என்றாள்.
“உன்னால முடியும்… நீயும் மகி மாதிரி ஆன்மா தானே. எதும் பண்ணு பிளீஸ்” என்றான்.
“இங்க என்னால் அரூபமாக வர முடியாது சீனு. என் குரல் மட்டும் தான் நுழைய முடியும்” என்ற தும்பை, “காதலில் கட்டுண்டு இருப்பவர்களை என்னால் எப்படி பிரிக்க முடியும்” என்றது.
“ஏய் இடியட்… மகியே பேய், அவன் மனுஷன்… இப்போ இந்த காவியக் காதல் தேவையா?” என்ற சீனு,
“எதும் வழியிருந்தா சொல்லு” என்றான்.
“நீ சமர் சமர்ன்னு கத்தாம மகி மகின்னு கத்து” என்றது.
“மகிக்கும் என் குரல் கேட்கல” என்ற சீனு, உன் குரல் மட்டும் நுழையற மாதிரி உன் நெருப்பு நுழையாதா?” எனக் கேட்டான்.
“தெரியல” என்ற தும்பை நெருப்பை இருவரினுள்ளும் ஊடுருவ, பனித்துகள்களாக வெடித்து சிதறி புகையாய் ஒன்று கூடியது மகியின் ஆன்மா.
சில்லென்று விறைத்து மூச்சின்றி நிலத்தில் விழுந்த சமர் நிலை கண்டு மகி பரிதவித்தாள்.
“அண்ணா அத்து” என்ற மகி, “உடம்பை நல்லா தேய்ச்சு விடுங்க” என்றது.
“இங்கே நேரம் போகுது. இருட்டுச்சு அவ்வளவு தான்” என்ற மகி, “காமிரா எதுவும் வேலை செய்யல தெரிஞ்சாலே உங்களை கண்டுப்பிடுச்சிடுவாங்க. சீக்கிரம்” என்ற தும்பை சமரைச் சுற்றி நெருப்பினை பற்ற வைத்தது.
“சீனு நீ தள்ளிப்போ” என்ற தும்பையின் குரலுக்கு சீனு சமரின் உடலை விட்டு விலகி நிற்க, நெருப்பின் வெப்பம் கூடியது.
நீண்ட நேரம் இருளுக்குள்ளே இருப்பதால், நேரத்தை அவர்களால் கணக்கிட முடியவில்லை.
உடலில் அனல் கூட… சமர் மெல்ல விழி திறந்தான்.
அப்போதுதான் சீனுவுக்கு மூச்சே வந்தது.
கண் திறந்துவிட்டாலும், சமரால் அசைய கூட முடியவில்லை. குளிரின் தாக்கம் இன்னும் அவனது உடலில் இருந்தது.
“சமர் கை காலை தேய்த்து விடு சீனு” என்று மகி கண்ணீரோடு சொல்ல, சீனு பரபரவென தேய்த்து தன் சூட்டை அவனுக்கு கடத்தினான்.
சில நிமிடங்களில் சமர் மெல்ல எழுந்து அமர்ந்தான்.
“அப்பாடா” என்று தரையில் அமர்ந்த சீனு, “கொஞ்ச நேரத்துக்கு உங்க லவ்வை தள்ளி வையுங்கடா. வந்த வேலையை பார்ப்போம்” என்று எழுந்து, சமர் எழ உதவி செய்தான்.
அப்போது தான் முதல் முறை வித்தியாசமான சலங்கை ஒலியை இருவரும் கேட்டனர்.
“இனி என்ன வேணாலும் நடக்கலாம்” என்ற தும்பை, “மகி காற்றாய் இருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரியக் கூடாது. தெரிஞ்சா, மகி அவளோட உடலோடு சேர முடியாது” என்றாள்.
“நீ எங்கப் போற?” சமர் கேட்டிட, “இனி என்னால் இங்கு இருக்க முடியாது. என்னுடைய இந்த ஒலியும் நீங்க உள்ளே செல்ல செல்லக் கேட்காது” என்ற தும்பையின் சத்தம் மெல்லத் தேய்ந்தது. தும்பையின் இருப்பு மகிக்கும் காணாமல் போனது.
சலங்கையின் சத்தம் அதிகரித்தது.
உடன் குதிரை கணைக்கும் சத்தம்.
“இருட்டிடுச்சு” என்ற மகி மரங்களுக்கு மேல் உயர சென்று வந்து வெளிப்பரப்பை கண்டு வந்து உரைத்தது.
“இப்போ இந்த பள்ளத்தாக்கை தாண்டி எப்படி போறது மகி?” சமர் சுற்றி பார்த்துகொண்டு வினவினான். பகலுக்கே இருளாய் தெரிந்த இடம், தற்போது அனைத்தும் வரி வடிவமாய் ஒரு அனுமானத்தில் தான் கண்டுகொள்ள முடிந்தது.
“அங்கு ஒரு பாறை இருக்கு அது மேல ஏறி பார்ப்போம்” என்று சீனு சொல்ல இருவரும் பாறையை நோக்கிச் சென்றனர்.
சட்டென்று பெரும் காற்று சுழன்று அடித்தது.
அவர்களால் அடி எடுத்து வைத்திட முடியவில்லை. காற்றின் திசைக்கு இழுபட்டுச் சென்றவர்களை இழுத்து தன் சுழலால் பிடித்து வைத்தது மகியின் புகை வடிவம்.
வந்த தடமின்று வீசிய காற்றின் வேகம் மெல்ல நின்று, அவ்விடம் முழுக்க நிசப்தம். இரவு பூச்சிகளின் ரீங்காரம்.
காட்டு ஓநாயின் சப்தத்தை தொடர்ந்து குதிரை குளம்பின் ஒலி.
“குதிரை சவுண்ட் மச்சி” என்ற சமர், ஓசை வந்த திசை பக்கம் அடிகள் எடுத்து வைக்க, முன் வைத்த கால் உள்ளே இழுபட்டது. சடுதியில் தனக்கு பக்கவாட்டில் வந்த சீனு கை பிடித்து சுதாரித்து நின்றான்.
“பார்த்து அடி வை சீனு” என்ற சமர், பெரும் கல் ஒன்றை எடுத்து தன் கால் சருக்கிய இடத்தில் போட அது சருகுகளால் மூடப்பட்ட பெரும் குழியென்று தெரிந்தது.
சந்தேகம் கொண்டு இன்னொரு கல்லைத் தூக்கி சில அடிகள் முன் போட அங்கும் பெரும் குழி.
“இங்கு நாலடிக்கு ஒரு குழி இருக்கும் போல சமர்” என்றான் சீனு.
“ம்ம்… யாரும் வந்திடக் கூடாதுன்னு. அப்படியே வந்தாலும் குழிக்குள் விழுந்திடுவாங்க. அப்படி சிக்கிறவங்க இந்த கிராம மக்கள் தவிர்த்து வேறு யாரும் என்றால், பாலத்துக்கு அடியில் கோணியில் சுற்றி போட்டுப் போயிடுறாங்க” என்ற சமர், “தினேஷ் இந்த கிராமம் இல்லை. அவன் இறந்துட்டான்னு நம்பியதால் கொண்டு வந்து போட்டிருக்கானுங்க” என்றான்.
“பாலத்துக்கு கீழ் கிடக்கும் பிணங்களுக்கும் இங்க நடக்கிறதுக்கும் எப்படி ரிலேட்?”
“தினேஷை கோணியில் சுற்றி போட்டப்பவே உனக்கு புரியலையா?” என்ற சமர், “மேல என்ன நடக்குது தெரிஞ்சால்… எதுக்கு இத்தனை கொலைகள் தெரிஞ்சிக்கலாம்” என்றதோடு… “இதுக்கு முன்னாடி பாலத்துக்கு கீழ் கிடந்த மூன்று பேரில் இரண்டு பேர் நியூஸ் ரிப்போர்ட்டர்ஸ்… இங்க என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்க வந்தவங்க… இது அவங்க இறப்பால் சேனலுக்கு எதும் ஆபத்து வந்திடும்ன்னு அவங்களே மறைச்ச விஷயம். தினேஷ் கிடைச்ச அப்புறம் இதை தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.
“ஒரே சஸ்பென்ஸா இருக்குடா சமர்” என்ற சீனு, “இப்படியே ஒரே இடத்தில் எவ்வளவு நேரம் டா நிக்கிறது?” எனக் கேட்டான்.
“என் பின்னால் வாங்க” என்ற மகி, “என்ன சவுண்ட் கேட்டாலும் திரும்பாத அத்து” என்றாள்.
“அண்ணா நீங்களும்” என்ற மகி, “உங்க முதுகுக்கு பின்னால் அனல் சுடும் உணர்வு தெரியலாம். தாங்க முடியாது எரிச்சல் ஏற்படலாம். திரும்பிடாதீங்க” என்றது.
“திரும்பினா தும்பை மாதிரி நாங்களும் எரிஞ்சிடுவோம் அதானே” என்றான் சீனு.
“இல்லை… உங்களை கொல்லனும் முடிவு பண்ணிட்டால் நீங்க திரும்பலானாலும் கொன்னுடுவாங்க” என்ற மகி, “இப்பவும் ஒண்ணுமில்லை அத்து. திரும்பிப் போயிடு. என் விதி இதுதான்னா இப்படியே போகட்டும்” என்ற மகியின் கண்ணில் கண்ணீர். தரை விழுந்த துளி பனியாய் அவ்விடம் உறைய வைத்தது.
அந்த மலை வனமே பனியால் மூடியது.
“சமர் எதோ பனிப் பிரதேசத்துக்கு வந்த மாதிரி இருக்குடா” என்ற சீனு குழிகள் இருந்த இடங்களை ஆராய அங்கும் பனியால் மூடி சமமாக தெரிந்தது.
“இது எத்தனை நேரம் இப்படி இருக்கும் தெரியல. வேகமா ஓடு சீனு. அந்த பாறை மேல் ஏறி நில்லு” என்று சமர் ஓட, சீனு பின் தொடர்ந்தான்.
இருவரும் ஓடுவதை புரியாது பார்த்த மகி… தன் அழுகையை நிறுத்திட, பனி யாவும் கரைந்து மறைந்தது.
பனி உருகும் முன் சமர் பாறையில் ஏறியிருக்க, பாறைக்கு கீழாகவே இருந்த குழியில் பனிப் பாதை விலகியதில் சீனு விழுந்திட இமைக்கும் நொடியில் அவனது கையை பற்றி இழுத்து பாறை மீது தள்ளியிருந்தான் சமர்.
“சாரி… நானும் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்குறேன்” என்று மகி தழுதழுப்பாய் கூற,
“லட்டு… பிளீஸ். அழாத. திரும்ப இடம் பனியாகப் போகுது” என்ற சமர், “எனக்கு நீ வேணும். உன்னை மீட்காம நான் திரும்ப மாட்டேன். திரும்பத்திரும்ப சொன்னதே சொல்லிட்டு இருக்காதே” என்று திரும்ப, இவர்கள் இருக்கும் இடம் உயரமான பகுதி என்பதால் கீழே கிராமம் அதை தாண்டி அந்த ஆலமரம் என அனைத்தும் நிலவு வெளிச்சத்தில் தெளிவாக பார்க்கப் முடிந்தது.
சட்டென்று ஆலமரத்தில் பிணம் எரிய சீனு சமரின் பின்னால் மறைந்தான்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
