சிறகை விரி… பற…
அத்தியாயம்: 4- மலரும் நினைவுகள்..

வீட்டிற்கு சென்ற பாப்பாத்தி, சிறிது நேரம் கழித்து, சிநேகா வீட்டிற்கு, மீண்டும் திரும்பி வந்து விட்டாள்.
அவள் வந்து பார்க்க, குழந்தை கள் இன்னும் பக்கத்து வீட்டில் இருந்து திரும்பவில்லை என்பது, வீடு அமைதியாக இருந்த இருந்ததி லிருந்தே தெரிந்தது.
சிறிது நேரம் கழித்து, குழந்தை கள் இரண்டு பேரும் திரும்பி வந்தார்கள், அழுது கொண்டே.
காரணம் என்ன என்று பாப்பாத்தி கேட்க, அவர்களை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார் கள் என்று அழுதுகொண்டே சொன்னான் மித்ரன்.
அதைக் கேட்ட பாப்பாத்தி, விவரம் எதுவும் கேட்காமல், ” நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க கண்ணுகளா… அவங்க சேத்துக் களைன் னா என்ன , நாம எல்லாம் சேர்ந்து விளையாடலாம் ” என்று அவர்களுக்கு சமாதானம் சொன்னாள்.
“சரி நீங்க சொல்லுங்க, நாம என்ன விளையாட்டு, விளையாடலாம் ? ” என்று அவள் கேள்வி கேட்டாள்.
அதற்கு அவன், மித்ரன், ” நாம ஒளிச்சி வெச்சு விளையாடலாம். அது ரொம்ப நல்லா இருக்கும் ” என்றான் மித்ரன் மகிழ்ச்சி யாக, தன் அழுகையை நிறுத்தி விட்டு.
அதைக் கேட்ட பாப்பாத்தி, உடனே தன் சுருக்கு பையிலிருந்து, ஒரு நாலணா காசை எடுத்து மித்ரன் கையில் கொடுத்தாள்.
அதை அவன் ஒரு இடத்தில் ஒளித்து வைக்க, அவன் அப்படி ஒளித்து வைக்கும் இடத்தை, மித்ரா பார்த்து விட்டு, அவனை அவுட் ஆகிவிட்டாள்.
இப்போது அவள் முறை. பசங்கள் ஓடிப் பிடித்து, காசை துலாவ, வீட்டில் கலகலப்பு திரும்பியது.
அதன் பிறகு மித்ரன், பாப்பாத்தி இடம், ” பாப்பாத்தி, இப்ப காசை நான் ஒளித்து வைக்க ப் போறேன். நீ கண்ணை மூடிக் கோ ” என்று சொல்லி விட்டு, அங்கிருக்கும் ஒரு ரூமிற்குள் ஓடினான், காசை அங்கு ஒளித்து வைக்க.
இப்படி, அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார் கள்.
பாப்பாத்தி, அடுத்தது ஏதாவது ஒரு வேலையை செய்யலாம் என்று நினைத்து அழுக்கு துணிகளை எடுத்துக் கொண்டு போனாள், அதை ஊற வைத்து தோய்க்க.
அதில் இருந்த ஒரு ஸ்கை புளூ கலர் டெர்லீன் சட்டையை எடுத்து, ” அம்மா இதையும் தோய்த்து போடவா ” என்று சிநேகா விடம் கேட்டாள்.
சிநேகா இந்த உலகத்திலேயே இல்லை. அவள் பாப்பாத்தி ஏதோ கேட்க மாதிரி இருக்க, ” என்ன கேட்டே ? ” என்றாள்.
அதற்கு பாப்பாத்தி, ” அது ஒன்னும் இல்லைம்மா. நான் அழுக்கு துணிகளை தோய்க்கப் போறேன்.
இந்த நீலக் கலர் டெர்லீன் சட்டையை இங்க அழுக்கில் இருந்தது. அதையும் தோய்க்க வேண்டுமா என்று கேட்டேன் ? ” என்றாள்.
பாப்பாத்தி , அப்படிச் சொன்னவுடன் அவளுடைய நினைவுகள் பழைய காலத்திற்கு அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டது.
அவள் அந்த ஸ்கை ப்ளூ டெர்லீன் சட்டையை தன் கைகளில் வாங்கிக் கொண்டு, அதையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அது, அந்த ஸ்கை ப்ளூ டெர்லீன் சட்டை , அவளை கடந்த காலத்துக்கு அழைத்து சென்றது.
சேலத்தில் மேபிளவர் Trends ‘s Fashion Shop, மிகவும் பிரபலம், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆஃபீஸ் போபவர்கள் மத்தியில்.
அன்று சாயங்காலம் இருக்கும். நாளைந்து கல்லூரி மாணவர்கள் அந்த கடைக்கு வந்திருந்தார் கள், துணி எடுக்க.
அவர்களைப் பார்க்க, பணக்கார வீட்டு பையன் கள் போல் இருந்தார் கள்.
அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் வந்தவர்கள். அந்த கடையில் சேல்ஸ் கேர்ளாக இருந்த சிநேகா இருக்கும் ,துணி பகுதிக்கு வந்தார் கள்.
அவளுடைய அழகைப் பார்த்து வந்தார்களோ அல்லது அங்கிருந்த துணியை எடுக்க வந்தார்களோ என்று தெரியவில்லை, அவளுக்கு.
அவளின் பகுதிக்கு வந்தவர்களிடம், சிநேகா சிரித்துக் கொண்டே, ” உங்களுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டாள் வழக்கம் போல.
அதற்கு ராம், ” நாங்க என்ன கேட்டாலும், எங்களுக்கு எது வேண்டுமென்றாலும் தருவாயா? என்று இரட்டை அர்த்தத்தில் சிரித்துக் கொண்டே கேட்டான்.
அதற்கு அவள், ” நீங்க… கேட்பதை கொடுக்கத்தானே… நாங்க, இங்க இருக்கோம்” என்றாள்.
அவளுடைய செக்ஷனில் ஆண்களுக்கான, டீ சர்ட், டெர்லீன், டெரிக்காடன் ஷர்ட், பேண்ட் மற்றும் உள்ளாடைகள் எல்லாம் இருந்தது.
” இந்த டீ ஷர்ட் பார்க்கிறீர்களா ” என்று சிலவற்றை எடுத்து டேபிள் மேல் போட்டாள், அவர்களைப் பார்க்காமல்.
அதற்கு அவன், ” எனக்கு இது எதுவும் வேண்டாம். எனக்கு டெரிகாட்டன் ஷர்ட் தான் வேண்டும் ” என்றான்.
அவள் டெர்லீன் ஷர்ட் டை எடுத்து போட்டாள்; அதற்கு அவன், ” எனக்கு டெரிக்காட்டன் ஷர்ட் தான் வேண்டும்” என்றான் மீண்டும்.
அதை எடுத்து போட்டதும், அந்த ஷர்ட் டை எடு. இதை எடு. அது இல்லை அந்த பக்கத்தில் உள்ள ஸ்கை ப்ளூ டெரிக்காட்டன் ஷர்ட் என்று சொல்ல, சிநேகா அதை எடுத்து கொடுத்தாள்.
அதைப் பார்த்த அவன் அவனுடைய நண்பர்களிடம், ” இந்தக் கலர் ஷர்ட் தான் என்னிடம் இல்லை. இது எனக்கு நன்றாக இருக்கும் தானே ” என்று அவனுடைய நண்பர்களிடம் கேட்பது மாதிரி கேள்வி கேட்க, அதற்கு அவள், ” இது புது சரக்கு. ( ஸ்டாக்) நேற்று தான் எங்களுக்கு வந்தது என்றாள்.
அதைக் கேட்ட அவன், ” எல்லோரிடமும் இப்படித் தானே நீ சொல்வாய் ” என்று சொல்லி விட்டு, அரைமணி நேரத்திற்கு மேல் அவளிடம் அரட்டை அடித்து விட்டு, கடைசியில் அந்த ஷர்ட்டை எடுத்துக் கொள்ள வதாக அவளிடம் சொன்னான்.
அவன் அவளிடம் கடலை போட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்த அவனுடைய நண்பர்கள், ” பார்றா… நம்ம ராம்… அந்த பெண் கிட்ட ரொம்பவே வழியறான் ” என்று சொல்லி அவனை கிண்டல் செய்தார்கள்.
ஒரு வழியாக, சிநேகா அந்த ஷர்ட் டை எடுத்து பாக்ஸில் வைத்து பில் போட்டு விட்டு, அந்த பில் காப்பியை அவனிடம் கொடுத்து விட்டு, அதை கீழ் தளத்தில் வாங்கிக் கொள்ளச் சொன்னாள், லேசாக சிரித்துக் கொண்டே.
அவளுடைய அழகிய முகம் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது போலத்தான் தெரிந்தது.
அவன் போவதற்கு முன் அவளிடம், ” உன்னுடைய பெயர் என்ன ? ” என்று கேட்டான்.
அதற்கு அவள் உடனே பதில் சொல்லாமல், ” என் பேர் உங்களுக்கு எதுக்கு? ” என்று பதில் கேள்வி கேட்டாள்.
அவன் அந்த கேள்வியை அவளிடம் எதிர்பார்காததால், ” ஒரு அழகான பெண்ணின் பெயரை தெரிந்து கொள்ள லாமே என்று தான் உன் பேரைக் கேட்டான் ” என்றான், சிரித்துக் கொண்டே.
இந்த பதிலை எதிர்பார்க்காத அவள், உடனே நாணத்தில் சிரித்து விட்டு, ” சிநேகா ” என்றாள் கூச்சத்துடன்.
காரணம், அவள் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்திற்கு கீழே உள்ள ஏழைப் பெண். இதுவரை அவளை இப்படி யாரும், இவ்வளவு வெளிப் படையாக அழகிய பெண் என்று சொன்னதில்லை.
அவனிடம் ‘எதுக்கு’ என்ற கேள்வி யை, அவள் கேட்டதற்கு காரணம் கூட, அவளுடைய பெயரை எதற்கு கேட்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினால் தான்.
அவளுக்கு பக்கத்தில் இருந்த அஞ்சலி கூட, ” என்னடி ? இங்க என்ன நடக்குது ? ” என்று அவளை கேலி செய்தாள்.
மேலும், ” நடக்கட்டும். நடக்கட்டும். உனக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரிதான் சிநேகா ” என்று சொன்னாள்.
சிநேகாவுக்கு அவளுடைய நடவடிக்கையை நினைத்து மிகவும் வெக்கமாகப் போய்விட்டது.
இன்று எனக்கு என்ன ஆயிற்று? நான் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன் ?.
தினசரி இதைப் போல் எத்தனையோ வாடிக்கையாளர்களைக் பார்க்கிறாள்.
அவளுடைய இந்த ஒரு வருட அனுபவத்தில், கடைக்குள் ஒருவர் நுழையும் போதே , அவர் வருவதைப் பார்த்தே, அவர் துணி வாங்குவாறா இல்லை யா என்பதை அவளால் துல்லியமாக சொல்லி விடமுடியும்.
அப்படி இருக்கும் போது, இவர்களைப் பார்த்தால், பணக்கார வீட்டு பையன் கள் போலத் தெரிகிறது.
அவர்கள் பேசும் போது எல்லாம், அனாவசியமாக, தேவையில்லாமல் சிரித்துக் கொண்டே, பேச்சிக் கொண்டு இருந்தார் கள்.
அவர்கள் எல்லாம் ராஜா வீட்டு கன்னுக்குட்டி களாக இருக்கும். பணக்காரர்களாக இருக்கும் . அதனால் தான் இப்படியெல்லாம் துள்ளுகிறார்கள்.
அதனால் தான் இப்படி கவலையில்லாமல், சிரித்துக் கொண்டு, சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஒரு மூக்கிணாங் கயிறு போடும், வரை இப்படி சிரித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
நான் தான் சந்தோஷமாக இல்லை. அவர்களாவது, இப்படியே சிரித்து, சந்தோஷமாக இருக்கட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
ஒருவரைப் பார்த்த, ஒரு பத்து நிமிடத்தில் ஒருவரை இப்படி பிடித்து போதுமா என்று கேள்வி எழுந்தது அவளுள்.
அவள் நினைத்தாள், இன்னும் சிறிது நேரத்தில் அவன் மறந்து போய் விடுவான் என்று.
ஆனால் நடந்ததோ வேறு. அவன், அவளுடைய மனதில் ஆழமாக இறங்கி, அவளுடைய இதயத்தில், சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டான் என்பது பிறகு தான் தெரிந்தது அவளுக்கு.
அவள் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால், அவள் இந்த உலகத்திலேயே இல்லை.
திடீரென்று, கடையில், அவளுடைய பக்கத்து டேபிளில், இருந்த அஞ்சலி, ” சிநேகா, அந்த கஸ்டமர், ஏதோ ஒரு உள்ளாடை கேட்கிறார் பார்; அதைப் போய் எடுத்துக் கொடு ” என்று சொன்ன பிறகு தான், அவள் இந்த உலகத்துக்கே வந்தாள்.
அவரிடம், எந்த கம்பெனி உள்ளாடை வேண்டும் என்று பெயரைக் கேட்டு, அவருடைய அளவை கேட்டு, அதைப் போய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து பில் போட்டு, அவரை அனுப்பி வைத்தாள்.
துணியை ஊறவைத்து விட்டு வந்த பாப்பாத்தி, சிநேகாவைப் பார்க்க,
அவள் இன்னும் தரையில் தான் படுத்து இருந்தாள் .
மயக்கமா அல்லது கலக்கமா என்று தெரியவில்லை. அவளைப் பார்க்க இன்னும் சாப்பிட்ட மாதிரியே தெரியவில்லை.
அதனால், பாப்பாத்தி, அவளருகில் சென்று, ” அம்மா நான் வீட்டுக்கு போன போது எப்படி இருந்ததோ, வீடு அப்படித் தான் இருக்கு.
நீங்க எதுவும் சாப்பிட்ட மாதிரி யே தெரியவில்லை. மொதல்ல எழுந்து ஏதாவது கொஞ்சமாவது சாப்பாடு சாப்பிடுங்க ” என்றாள்.
அதற்கு அவள், ” எனக்கு பசிக்கலை பாப்பாத்தி… பசிச்சா சாப்பிடுவேன் ” என்றாள்.
அப்போது மித்ரன் அவளையே குறு, குறு வென்று பார்த்துக் கொண்டு இருந்தான்; பிறகு தலையை குனிந்து கொண்டான். அதுமாதிரி தொடர்ந்து இரண்டு மூன்று முறை செய்ய, சிநேகா அவனைப் பார்த்து, ” என்னடா … என்ன அப்படி பாக்கறே…? என்கிட்ட எதாவது கேட்கணுமா? ” என்றாள்.
அதற்கு அவன், ” இல்லை… அப்பா இனிமே, நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்களா ? ” என்ற கேள்வியை கேட்டான்.
” உனக்கு யார் அப்படி சொன்னாங்க?
” இல்லை… நம்ம பக்கத்து வீட்டு மாமி தான் சொன்னாங்க… ”
” வேற என்ன சொன்னாங்க? ”
” மித்ரா… இனிமே நீ எப்படி ஸ்கூலுக்கு போவே ? உன்னை யாரு படிக்க வைப்பாங்க ன்னு கேட்டாங்க? ”
“அதுக்கு நீ என்ன பதில் சொன்னே ?
“
” நா எதுவும் சொல்லலே… “
சிநேகா, மித்ரனின் தலையை வருடிக்கொண்டே, அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் சொன்னாள்:
” இனிமேல் உன்னை யாராவது கேள்வி கேட்டால், தைரியமா சொல்…
‘என் அம்மா உயிரோடு தான் இருக்காங்க.
அவங்க எங்களை கட்டாயம், படிக்க வைப்பாங்க’ என்று. சரியா…?”
மித்ரன் அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒரு புதிய தெம்புடன் தலையை ஆட்டினான்.
தன் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
சிநேகாவின் கண்களில் கண்ணீர் இருந்தாலும், அந்தக் கண்ணீரில் இப்போது ஒரு புதிய ‘தீ’ இருந்தது.
தன் பிள்ளைகளுக்காக, இனி எந்தக் கஷ்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தாள், அவள். ✨📖
(V R K )
