இவருக்கு பசிக்கவே பசிக்காதா?
“நமக்கு வேற பசி வயித்த
கிள்ளுதே!” என தனக்குள் புலம்பியவள் அடிக்கடி தேவ்வை பார்வையிட்டாள்.
அவளின் பார்வையில் எதை உணர்ந்தானோ குந்தவி நீங்க லன்ச்சுக்கு போகலாம் என்றான்.
“நீங்க சாப்பிடலையா சார்?”
என்ற குந்தவியிடம்
அஷ்வாவோடு சேர்ந்து
சாப்பிடுவேன்.
நீ சீக்கிரம் போ இல்லனா
கேண்டீன்ல எல்லாம் காலியாகிவிடும்
என்று கூறியதுதான் தாமதம்
அவள் அங்கிருந்து மறைந்து
விட்டாள்.
அவளுக்காகவே காத்திருந்த மஞ்சுவுடன் கேண்டீனுக்கு சென்றாள்.
அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த ஐவர் பட்டாளம் இவர்களுக்கும் சேர்த்து டோக்கன் வாங்கி வைத்திருந்தனர்.
அவர்களிடம் அழைத்துச் சென்ற மஞ்சு இவ என்னோட ஃப்ரெண்ட் குந்தவி இன்னிக்கு இங்க தான் மீட் பண்ணேன் என்று அவர்களிடமும் இவன் சஞ்சய் இவன் சரண் இவங்க ரேவதி மோகன் இவங்க ரெண்டு பேரும் ஸ்வேதா & சுவாதி என்று இவளிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
புது நண்பர்கள் அனைவரும் இவளைப் பார்த்து,
ஹாய் குந்தவி!!!
“வெல்கம் டு அவர் வெட்டி கேங்க்” என்றனர்.
பதிலுக்கு இவளும் ஹாய் அண்ணாஸ் &அக்காஸ்
என்ற அழைப்பில் பெண்கள் அனைவரும் சிரிக்க சரணும் சஞ்சயும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துகொண்டனர்.
சஞ்சய்யை பார்த்த மஞ்சு ,”இது போதும் எனக்கு இது போதுமே” என்று பாடவும் அங்கு ஒரே சிரிப்பலை பரவியது.
மதிய உணவு முடிந்ததும் அவரவர் அவர்களின் கேபினுக்கு செல்ல குந்தவி, மஞ்சுவை மட்டும் பிடித்து வைத்து,” இப்ப நீ எங்க தங்கியிருக்க?” என்று வினவினாள்.
என்ன உனக்கு ஹாஸ்டல் பாக்கணுமா?
ஒன்னும் பிரச்சினை இல்ல தவி.
என்னோட ஹாஸ்டல்ல என்னோட ரூம்லயே தங்கிக்கலாம் நான் வார்டன் கிட்ட பேசறேன்.
“ரொம்ப தேங்க்ஸ் டீ மஞ்சு” என அணைத்துக் கொண்டவளிடம் “சாயந்திரம் ரெடியாயிரு” என்றாள் மஞ்சு.
இப்ப போய் வேலையை பார்த்தா தான் சாயங்காலம் சீக்கிரமா கிளம்ப முடியும் என்ற மஞ்சு தவியை அனுப்பி விட்டு தன்னுடைய கேபினுக்கு வந்தாள்.
அவளைப் பார்த்த சஞ்சய்,” என்ன மேடம் என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்க வேற என்ன!
” மேடம் காலைல வாங்குன பாராட்டு மாதிரி தினமும் எப்படி வாங்கறதுனு தான் யோசிப்பாங்க” என்றான் சரண்.
டேய் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் உங்க திரு வாய திறக்காம இருங்க.
எனக்குத் தலை வலிக்குது என்றவள் காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
தேவ்விடம் விடை பெற்று
வந்தவள் அஷ்வாவின்
அறையினுள்
நுழைந்தாள்.
அறையை பார்த்தவள் அங்கு டேபிளின் கீழ் குனிந்திருந்த அஷ்வாவை கவனிக்காமல், இந்த மாதிரி ரிச்சான அறை இருந்தா வேலையா பாக்க தோணும்!!!
“கதைபேச, தூங்கத்தான் தோணும்” என்று கூறிக்கொண்டே திரும்பியவள் அங்கு உக்கிர மூர்த்தியாக நின்றிருந்தவனை பார்த்ததும் சிறு புன்னகையுடன்,
” ஹாய் சார்!”
“ஐ அம் மஞ்சரி” என்று கையை நீட்டினாள்
ஏற்கனவே தன்னுடைய கார் சாவி தொலைந்த கோபத்தில்
இருந்தவன்
அவளின் துடுக்குத்தனமான
பேச்சில்
மிஸ் மஞ்சரி, இங்க வேலை பார்க்கிறவங்களுக்கு மட்டும் தான்
சம்பளம் தருவோம்.
தூங்கறவங்களுக்கு, கதை பேசுறவங்களுக்கு இல்ல.
புரிஞ்சுதா? என்றான்.
அவனிடம் தலையை மட்டும் ஆட்டியவளை அழைத்து சென்று
அவர்களின் டீமில் இருந்த மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.
இவளின் வளவள பேச்சால் கவரப்பட்டு அனைவரும் அவரிடம்
நன்றாக பேசினர்.
காலையில் நடந்ததை நினைத்துகொண்டே அமர்ந்திருந்த மஞ்சுவிற்கு தன்னை அஷ்வாவிற்கு
பிடிக்கவில்லை என்று புரிந்தது.
விஷ்வாவிற்குமே அவளை சமாளிப்பது பெரும் சவாலாக
இருக்கும் என்று தோன்றியது.
மாலை அலுவலகம் முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பிய மஞ்சுவை பார்த்தவன் மனதுக்குள்,”மவளே! நாளையில் இருந்து நீ தான் கடைசியாக போகப் போற! என்று கருவிக் கொண்டான்.
குந்தவி தேவ்விடம் விடைபெற்று செல்வதற்காக
அவனுடைய அறைக்கு
சென்றாள்.
சார்! நான் கிளம்பனும்.
“சரி கிளம்புங்க” என முகம் பார்க்காமல் சொல்லி விட்டு
அவனுடைய வேலையில் மூழ்கி விட்டான்.
அவன் வேறு எதாவது கேட்பான் என்று சில வினாடி
காத்திருந்தவள்
அவனின் அலட்சியத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அவளுக்காக காத்திருந்த மஞ்சு அவளை தன்னுடைய விடுதிக்கு அழைத்து வந்தாள்.
குந்தவியை வார்டனிடம் அறிமுகப்படுத்தி விட்டு வார்டன் போட்ட மொக்கை எல்லாம் தாங்கிக்கொண்டு நான் அனைத்து விதிமுறைகளையும் மதித்து நடப்பேன் என்ற உறுதி மொழியை சொல்லிவிட்டு அவளைத் தன் அறை தோழியாக ஏற்றுக்கொண்டாள் மஞ்சு.
என்ன தவி அமைதியாக இருக்க?
ஒன்னும் இல்லடி கொஞ்சம்
பொருள் வாங்கனும்.
அதான் எப்போ வெளில
போகலாம்னு யோசிச்சிட்டிருந்தேன்.
முதல்ல கொஞ்சம் ரெஸ்ட்
எடுக்கலாம்.
அப்றமா போய்ட்டு வரலாம்.
அலுவலக வேலைகள்
அனைத்தும் முடிந்து வீட்டிற்கு
கிளம்பும் போதுதான் தேவ்விற்கு குந்தவியின் நினைவே வந்தது.
அவள் வந்து சென்றதும் ஏதோ சொன்னது மட்டும் நினைவில்
இருந்தது.
ஆனால் என்ன சொன்னாள் என்பது அவன் மூளையில் பதியவில்லை.
கடவுளே! எங்க போனானு தெரியலையே!
என்கிட்ட அவ போன் நம்பர் கூட இல்ல
என்று புலம்பியவனிடம் அவனின் மனசாட்சி
அவளுடைய ரெசியூம்ல செல் நம்பர் இருக்குமே என்று நினைவுபடுத்தியது.
அட! ஆமாம்ல என மனசாட்சியை பாராட்டி விட்டு அவசரமாக ரெசியூமை தேடி எடுத்து அதில் இருந்த செல் நம்பருக்கு அழைத்தான்.
ஹலோ என்ற தவியின் குரலை கேட்டும் கூட
அவனுள் இருந்த பதட்டம்
மறைந்தபாடில்லை.
ஹலோ” என்ற
அவன் குரலில்,” சொல்லுங்க
தேவ் சார்” என்றாள் குந்தவி.
குந்தவி எங்க இருக்க?
சார், நான் மஞ்சு கூட ஸ்டே பண்ணிருக்கேன்.
ஓகே என்றவன் இதற்கு மேல் பேசினால்
தன்னை மீறி தன் உணர்வுகளை வெளிப்படுத்தி விடும் அபாயம்
உள்ளதால்
அழைப்பை துண்டித்து விட்டான்.
இருந்தும் கூட தேவ்வின் பதட்டமான மனநிலையை தவியால்
உணரமுடிந்தது.
சொல்ல வந்தப்ப காது கொடுத்து கேட்காம இப்ப எதற்கு
இவ்வளவு பதட்டப்படனும்.
பாவம் மனுசன்!
என்ன நனச்சி ரொம்ப பயந்துட்டார் போல.
இனிமே இந்த மாதிரி நடந்துக்க கூடாது என மனதில் உறுதி எடுத்தவளை ஷாப்பிங் அழைத்து சென்றாள் மஞ்சு.
மறுநாள் காலையில் அஷ்வா
அவனது கேபினுக்கு வெளியில் நின்று கொண்டிருப்பதைக்
கண்ட தேவ்
அவனின் அருகில் சென்று,” என்ன பாஸ்! லேட்டா வந்தாலும்
வெளிய நிக்க வச்சுட்டாங்களா?”
என்று மாற்று குரலில் கேட்கவும் கோபமாய் திரும்பியவன் அங்கு நின்றிருந்த தேவ்வை கண்டு
“ஹாய் மச்சி! நீ என்னடா பண்ற இங்க?” என்றான்
அதையேத்தான் நானும் கேட்கிறேன் அஷ்வா
நீ இங்க என்ன பண்ற?
ஒன்னும் இல்லடா.
உள்ள ஒரு டிஸ்கவரி சேனல் லைவ்வா போயிட்டு இருக்கு.
அதை தான் பார்த்துட்டு இருந்தேன்.
நீயும் உள்ள வாடா என்று தேவ்வையும்
இழுத்துக்கொண்டு புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான்.
அஷ்வாவையும் தேவ்வையும்
ஒன்றாக பார்த்ததும் அனைவரும் பயத்தில் உறைந்து நிற்க மஞ்சு
மட்டும் அப்போதுதான் டேபிள்
மீது இருந்து கீழே இறங்கி
நின்றாள்.
அந்த நேரம் பார்த்து தேவ்வுக்கு அழைப்பு வரவும் அவன் வெளியில் சென்று விட்டான்.
அஸ்வா அனைவரையும் அவர்களது வேலைகளை தொடரும்படி கூறிவிட்டு மஞ்சுவை மட்டும் தன்னுடன் வருமாறு அழைத்து சென்றான்.
சஞ்சய் ஏதோ சொல்ல வரவும் சிரித்துக்கொண்டே நான் சமாளிச்சுக்குவேன்
என்று கூறி விட்டு மனதில் பயம் பீதியுடன் அஷ்வாவை காண சென்றாள்.
அவள் உள்ளே வந்ததும் அவளை அமர சொன்னவன் அவளிடம் மஞ்சரி நான் உங்களை ஏற்கனவே வார்ன் பண்ணியிருக்கேன்.
இருந்தாலும் நீங்க அதே தப்ப
இன்னிக்கும் பண்ணியிருக்கீங்க.
உங்களால இதுக்கு முன்னாடி
சின்சியரா இருந்தவங்க கூட இப்ப சோம்பேறி ஆகிட்டாங்க.
இனியும் நீங்க இந்த மாதிரி பண்ணீங்கனா, உங்களுக்கு மட்டுமில்ல உங்க கூட இருக்கிறவங்களுக்கும் சேர்த்து வேலை போகும்.
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றான்.
அவன் சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் சொல்லி முடித்தவுடன் அவனிடம்
சாரி சார்.
இனிமேல் இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்
என்று கூறினாள்.
இனிமேல் இங்க என்னோட கேபின்ல இருந்தே
உங்க வேலைய பாருங்க.
உங்களுக்கான சிஸ்டம் இங்கயே இருக்கும்
என்றான்.
அவனிடம் விடை பெற்று வெளியில் வந்தவள் முகத்தில் ஒரு ரெடிமேட் புன்னகையுடன் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.
