எனை மீட்கும் காதலே-4

 

அங்கு தேவ்வின் அறையில்

தனியாக புலம்பி கொண்டிருந்தாள் குந்தவி.

 

சாப்பாடு இருக்கு.

சாப்பிடற

நேரமுமாச்சு.

ஆனா சாப்பிட முடியல.

 

என்ன கொடுமைடா சாமி!

 

என்று புலம்பியவாறு மேசை மீது தலைசாய்த்தவள்

அப்படியே உறங்கியும் விட்டாள்.

 

அவளுக்காக காத்திருந்த மஞ்சு

அவள் வராததால்

மற்றவர்களை சாப்பிட  அனுப்பிவிட்டு அவளைப் பார்க்கச்

சென்றாள்.

 

 

அதேநேரம் அவளைப் பார்த்த

அஷ்வா அவளிடம் வேறு

வேலை கொடுத்ததால்

அவளும் வந்த வேலையை

மறந்து விட்டாள்.

 

 

தன்னறைக்கு வந்த தேவ் மிகவும் சோர்வாக உணர்ந்தான்.

 

அஷ்வாவுக்கு அழைத்தவன்

 

கொஞ்ச நேரத்துக்கு

யாரையும் என்ன பார்க்க

விடாதே.

 

எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோடா என்று கூறி வைத்து

விட்டான்.

 

 

 

அவனைப் பற்றி நன்கு

தெரிந்தவன் என்பதால்

அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல்

தன் வேலையை தொடர்ந்தான்

அஷ்வா.

 

 

ஆனால் அவன் மனதில்

“இப்போ இவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே”

 

என்று எண்ணியவாறே

 

தன் வேலையை தொடர்ந்தான்.

 

 

 

 

மேசை மீது உறங்கிக்கொண்டிருந்த

 

குந்தவியை கண்டதும்

மேடம் என்ன பண்றாங்க!

 

உடம்பு சரியில்லையா?

என்னனு தெரியலையே!

என்றெண்ணியவன்

 

அவளது மேசையை மெதுவாகத் தட்டினான்.

 

அரைத்தூக்கத்தில் கண்களைத் திறந்த தவி

 

தேவ்வை  கண்டதும்

 

மலங்க விழித்தாள்.

 

லீவ் வேணுமா குந்தவி?

ரொம்ப டயர்டா தெரியற!

 

அதெல்லாம் வேணாம் சார்.

 

பசி மயக்கத்தில் தூங்கிட்டேன்.

 

லன்ச் டைமே முடிய போகுது.

முதல்ல   போய் சாப்பிடு.

 

 

இனிமே லன்ச் டைம் ஆனா  நீ

சாப்ட போயிடு.

 

நீங்க சாப்டீங்களா  சார்?

 

சாப்பிட்டனே!

 

உங்கள பாத்தா சாப்பிட்ட

மாதிரியே தெரியல சார்.

 

அதுக்காக இன்னொரு தடவையா சாப்பிட முடியும்!

 

எல்லாரும் சாப்பிட்டு போயிருப்பாங்க.

 

எனக்கு தனியா சாப்பிட

 

ஒரு மாதிரியா இருக்கு சார்.

 

நீங்களும் என்னோட சாப்பிடுங்க

 

என்றவளிடம் மறுக்கத்

தோன்றாமல்

சரியென

அவளுடன்

உண்ணத் தொடங்கினான்.

 

டிபன் பாக்சில்  தயிர் சாதம், உருளைக்கிழங்கு வருவல் மாவடுடன் ஸ்பூன்

 

வைத்து  அவனிடம் கொடுத்துவிட்டு

 

தனக்கு அதில்

 

கொஞ்சம் எடுத்து கொண்டு

 

சாப்பிட ஆரம்பித்தாள்.

 

அவள் செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டு மெதுவாய்

சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

அவள் முதலில் சாப்பிட்டு முடித்தபோதும் அவனுக்காக

காத்திருந்தாள்.

 

 

தேவ்வின் மனம்

 

முழுவதும் அலையடித்தது.

 

எந்த அன்புக்காக அவன்

 

இத்தனை நாட்களாக

ஏங்கினானோ

 

அந்த அன்பினை அவளில்

கண்டவனின் நெஞ்சம்

விம்மியது.

 

அவன் சாப்பிட்டதும் அவனிடமிருந்து பாக்சை வாங்கியவள்

அவனை அழைத்து

தன்னிலைக்கு திருப்பினாள்.

 

சார் ரொம்ப நேரமா உங்க போஃன் வைபரேட் ஆகுது.

 

ம்ம்ம்

என அவன் போனை எடுக்கவும்

 

அவனை தேடி வந்தான் அஷ்வா.

 

ஏன்டா போன் எடுக்கல?

என கேட்டவன்

 

தேவ்வின்

 

குழப்பமான முகத்தை பார்த்து

 

அவனின் மனதை மாற்ற

எண்ணி

 

தேவ்,” எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்குடா!.

ஆனா, “நான் இன்னும் அந்த பொண்ணு கிட்ட பேசல!”என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவனின் முதுகில் ஒரு குத்துவிட்டான் தேவ்.

 

 

இத ஏண்டா முன்னாடியே

சொல்லல!

 

அம்மா எங்க இருக்காங்க

சொல்லு?

 

நான் பேசறேன்

 

என்றவனை அதை தட்டிக்

கொடுத்து

 

சும்மா சொன்னேன்டா.

 

நைட் டின்னர் நம்ம வீட்ல தான்.

மறக்காம வந்துடு என்று கூறி

விடைபெற்றான்.

 

அலுவலகம் முடியும் தருவாயில் தவியின் செல்லுக்கு அவளை கிளம்புமாறு செய்தி அனுப்பிவிட்டு அருகில் இருந்த பார்க்கிற்கு

சென்றான் தேவ்.

 

அஸ்வா கொடுத்த வேலைகளை வேகமாக செய்து

கொண்டிருந்தாள் மஞ்சு.

 

அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அவளைப் போட்டு

படுத்துக்கொண்டிருந்தான் சரண்.

 

சுவாதியும் சுவேதாவும் இரண்டு வாரம் மெடிக்கல் லீவில்

இருந்தனர்.

சஞ்சய் வேலை விஷயமாக

வெளியூர் சென்றிருந்தான்.

 

ரேவதி அக்காவும் கிளம்பிவிட்டதால் சரணுக்கு மஞ்சுவை

கலாய்க்க வசதியாய் போயிற்று.

 

மஞ்சுவை தேடி வந்த குந்தவி

அவள் இன்னும் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து,

ஏம்ப்பா இங்க மஞ்சுனு ஒருத்தி

இருந்தாளே,

அவளை நீ பார்த்த? என்று

சரணிடம் கேட்டாள்.

 

யானைக்கு கரும்பு தின்ன கூலி வேண்டுமா?

 

ஏற்கனவே அவளை

படுத்திக்கொண்டிருந்த சரண்

 

அவளிடம்,” ஆமா தவி!

 

“நானும் அவளைத்தான் தேடிட்டு இருக்கேன்”

 

இவங்கள கிட்ட கேட்டாலும் சொல்ல மாட்றாங்க என்று மஞ்சுவை  கை காட்டினான்.

 

 

அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்திருந்த மஞ்சு வேலையை முடித்து விட்டதால் இருவரையும் துரத்த ஆரம்பித்தாள்.

 

இருவரும் அவளிடம் சிக்காமல்

 

தப்பித்துக் கொண்டே இருந்தனர்.

 

ஒரு கட்டத்தில் மஞ்சு தன்னுடைய வாட்டர் பாட்டிலை சரணை நோக்கி வீசவும்

 

அந்த நேரம் பார்த்து அஷ்வா

அவனது அறைக்கு வரவும்

 

வாட்டர் பாட்டல் அவனின்

நெற்றியை பதம் பார்த்தது.

 

அஷ்வாவை பார்த்ததும் தவிக்கு பயத்தில் கால்கள் நடுங்க

ஆரம்பித்தது.

 

அவளை வெளியே செல்லுமாறு சைகை செய்தான் சரண்.

 

ஆனால் அவளோ அங்கிருந்து

நகராமல் நின்றிருந்தாள்.

 

அஷ்வா அனைவரையும்

வெளியே செல்லும்படி கூறினான்.

 

அதனால் சரண் தவியை

அழைத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டான்.

 

ஆனால் மஞ்சு அஷ்வாவிடம்

சென்று அவனிடம்

 

ரொம்ப சாரி சார்,

தெரியாம பண்ணிட்டேன் என்று கூறினாள்.

 

அவள் அப்படி கூறியதும்

 

கோபமாய் அவள் புறம் திரும்பியவன்

 

ஏய், நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்கே?

 

இது என்ன ஆபிசா  இல்லை

 

ஆயா பள்ளிக்கூடமா?

 

எப்ப பாத்தாலும் விளையாட்டு தானா உனக்கு?

 

 

ஏற்கனவே ரோட்ல போகும் போது துப்பட்டாவ பின்

 

பண்ணாமல் போட்டுட்டு வந்து

 

என்னோட மூஞ்சில பறக்கவிட்ட.

 

கொஞ்சம் கூட சீரியஸ்னஸ்

கிடையாது உனக்கு

 

என்று திட்டிக்கொண்டே

 

அவள் முகத்தை பார்த்தவன் அப்படியே நின்று விட்டான்.

 

கண்ணீர்  வழிவதை கூட

தடுக்காமல்

 

அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் மஞ்சு.

 

ஹே சாரி எதுக்கு அழற!

கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்.

 

 

சாரி என்றதும்

 

தன்னிலை அடைந்தவள்

 

அவனிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பை வேண்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

 

மஞ்சுவை

பார்த்துக்கொள்ளுமாறு

தவியிடம்

கூறி விட்டு

சரண் கிளம்பிவிட்டான்.

 

 

விடுதியை சென்றடைந்ததும்

மஞ்சுவை தொந்தரவு செய்யாமல்

 

தன்னுடைய

 

மொபைலில்

 

ஐக்கியமானாள் தவி.

 

ஹாஸ்டல் -விடுதி

 

இந்த வார்த்தை என்னவோ

ஒன்றுதான் ஆனால்

 

அதற்கான அர்த்தம்

 

ஒவ்வொரு இடத்துக்கும்

வெவ்வேறாக இருக்கும்

 

என்பதை  தன்னுடைய

அனுபவத்தில் உணர்ந்தவள்.

 

தன்னுடைய பள்ளி மற்றும்

கல்லூரி ஹாஸ்டல் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.

 

அவளை  தட்டி டீயை

கொடுத்தாள் மஞ்சு.

 

என்னடி! நீ ரெஸ்ட் எடுக்கலையா???

 

அழுதது டயார்டா இருக்குமே

என்றவளிடம் ,”நான்

 

சொல்லாமல் எப்படி டீ

 

 

கண்டுபிடிச்ச?” என்றாள்.

 

அதெல்லாம் அப்படித்தான்!!

 

அது சரி,” நீ எப்ப இந்த

மாதிரிலாம் பீல் பண்ண

ஆரம்பிச்ச?

 

அதுவும் இந்த அளவுக்கு?

என்றவளிடம்

இப்போ இந்த  பேச்சு வேண்டாம் என்றாள்.

 

 

நாளைக்கு சண்டே எங்கயாச்சும் வெளியில போலாமா?

 

போய்ட்டு  வந்து சாயந்திரம்

நல்லா தூங்குங்கனும் தவி

 

அதை நாளைக்கு பாத்துக்கலாம்.

 

 

இப்போ போய் சாப்பிட்டு

தூங்கலாம் மஞ்சு என்று

அழைத்துக் கொண்டு சென்றாள் தவி.

 

இதோடு மூன்றாவது முறையாக அழைத்து விட்டான் அஷ்வா.

 

அவனின் அழைப்பை ஏற்ற தேவ்விடம்,” என்னடா! எங்க வர?

 

நீ வராம அம்மா எனக்கு சாப்பாட்ட கண்ணுல கூட காட்ட

மாட்டாங்க”

 

மவனே! மரியாதையா சீக்கிரம்

வந்து சேரு .

 

கண்ணு முன்னாடி பிரியாணி இருந்தும் சாப்பிட முடியாம

கம்முனு இருக்கற  கொடுமை

இருக்கே!

 

இதோ வந்துட்டேன்டா வாசல்ல

வந்து பார்.

 

தேவ்வின் கார் வீட்டினுள் நுழைவதை கண்ட அஷ்வா

 

தன் அன்னையிடம்,” அம்மா!

தேவ் வந்தாச்சு” என குரல்

கொடுத்தான்.

 

அவனின் அழைப்பில்

வெளியில் வந்த அஞ்சலை

தேவ்வை கண்டதும்,

 

என்னடா கண்ணா! இந்த அம்மாவை பாக்க வந்தாச்சா?”

 

போன்ல கூட பேசி எவ்வளவு

நாள் ஆகுது என்று அவனை

உச்சி முகர்ந்தார்.

 

சாரிமா கொஞ்சம் வேலை

அதிகம் அதான் வர முடியல.

 

இனிமேல் அடிக்கடி வருவேன் மா.

 

அட போடா!!!

 

நானே நாளைக்கு US போகப்போறேன்.

 

இவன் அண்ணி மாசமா

இருக்காளாம் அதனால என்ன

வர சொல்லி இருக்காங்க.

 

கார்த்தி அண்ணா- அண்ணி கிட்ட என்னோட வாழ்த்தை சொல்லிடுங்க மா.

 

டேய் டேய் போதும்டா. உன்னோட பாசம்!!!

முதல்ல வீட்ல  உள்ள வந்து

உங்க பாசத்தை பொழியுங்க.

 

அம்மா அவனுக்கு முதல்ல

சாப்பாடு போட்டுட்டு அப்புறம்

பேசுங்க.

 

ரொம்ப நேரமா  சிக்கன்

பிரியாணி சிணுங்கிட்டிருக்கு.

 

இவனுக்கு பசிக்கறத எப்டிலாம் சொல்றான் பாரு தேவ் என்றவர்,

 

சிக்கன் பிரியாணி கத்திரிக்காய் தொக்கு ப்ரெட் அல்வா  தயிர்

பச்சடி என தேவ்விற்கு

பிடித்தவற்றை பரிமாறினார்.

 

அவர் பரிமாறி முடித்ததும்,

” அம்மா! உங்க சீரியல் போட்டுட்டாங்க என்று அவரை

அங்கிருந்து கிளப்பினான்.

 

அஸ்வாவின் குரலில், நீங்க சாப்பிட்டுட்டு இருங்க.

 

இதோ வந்துடறேன் என்று டிவியின் முன்பு ஆஜரானவரை  கண்டு புன்னகைத்தான் தேவ்.

 

அம்மா இன்னுமா இந்த சீரியல்

பாக்கறத விடலயாடா!

 

அதையேன்டா கேக்கற!

 

சரி, கேக்கல விடு என்ற தேவ்வை முறைத்தான் அஷ்வா.

 

இல்லடா அவங்களுக்கு புத்தகம் படிக்க பிடிக்கும்ல அதல

அவங்கள டைவர்ட்

பண்ணலாம்ல.

 

தேவ் இவங்க சீரியல சீரியசாலாம் பாக்க மாட்டாங்கடா.

 

சொல்ல போனா இவங்க தான்

சீரியல கலாய்ச்சி விடுவாங்க.

 

சீக்கிரமா சாப்பிடு.

சீரியல் முடிஞ்சதும் அம்மா உனக்கு சொற்பொழிவு ஆற்ற ஆரம்பிச்சிடுவாங்க. நாம தோட்டம் பக்கம் போயிடலாம்.

 

இருவரும் சாப்பிட்டு முடித்து

தோட்டத்துப் பக்கம்  நடந்து

சென்றனர்.

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top