சிறகை விரி… பற… 2.

சிறகை விரி… பற…

அத்தியாயம் 2: இருளின் முடிவில் ஒரு விடியல்…

“டாக்டர்… இவங்க உயிரோட இருக்காங்களா?”

யாரோ அழுதுகொண்டே கேட்பது போல ஒரு குரல்,  கிணற்றுக்குள்  இருந்து கேட்பது போல் கேட்டது, சினேகாவுக்கு.

சிநேகாவுக்கு கீழே விழுந்ததால் உடம்பெல்லாம் பயங்கரமாக யாரோ அடித்து போட்டது போல வலித்தது.

அவள் தன் கண்களைத் திறக்க முயன்றாள். மங்கலான வெளிச்சம். டெட்டால் மற்றும் மருந்து வாசனை அவள்  ஏதோ ஒரு தனியார் மருத்துவமனையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது.

“அம்மா…!” என்று மித்ரனின் கூப்பிடும் குரல் அவள் காதருகே கேட்டது.

சிநேகா மெதுவாகக் கண்களைத் திறந்தாள். மருத்துவமனையின் குளிர்சாதன  அறை. எமர்ஜென்சி வார்டு அது.

அவள் படுக்கையின் பக்கத்தில் பாப்பாத்தி கண்ணீருடன் நின்றிருந்தாள். அவள் எதுவும் சொல்லவில்லை.

அவள் மகன் மித்ரன், அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தான், விவரம் புரியாமல்.

அவள் மகள்  மித்ரா,  பாப்பாத்தியின் மடியில் பயந்து,  உறைந்து போயிருந்தாள்.

அப்போது, வெள்ளைக் கோட் அணிந்த ஒரு பெண் டாக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார். சிநேகா அவரைப் பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்து போனாள்.

“நீங்க… டாக்டர் தேவிகா தானே?” என்று சிநேகா மெலிந்த குரலில் கேட்டாள்.

டாக்டர் தேவிகா அவளைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டார். “ஆமாம். ஏழு வருஷத்துக்கு முன்னாடி, உன் வயித்துல இருந்த, பிறக்காத உன் குழந்தையைக் காப்பாத்த நீ போராடின.

அந்தக் குழந்தையைக்  கூட, இப்ப  நீ நினைத்து பார்க்கலையே. நல்ல வேளையாக, இன்று அந்தக் காரை நான்  ஓட்டிட்டு வந்தேன்.

நான் நல்ல  நேரத்துல ‘சடன்  பிரேக்’ போட்டதால தான் உன் உயிர் பிழைச்சுது.  நீ சாகறதுக்கு என் கார் தானா உனக்கு  கிடைச்சது ?

நீ  கீழே விழுந்ததாலே ஏற்பட்ட  சிராய்ப்பு காயம் தான் உனக்கு.  ரத்தக் காயம் அதிகமா எதுவும் இல்ல. அதுக்கு ஒரு  T.T.Injection  போட்டிருக்கேன். வலிக்குத் தனியா  மருந்து‌ வேற  கொடுத்திருக்கிறேன்.

பயப்படற மாதிரி எதுவும் இல்லை. ஆனா அதிர்ச்சியில மயங்கிட்ட.” என்றார் விவரமாக.

சிநேகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நான்… நான் என்ன செய்றேன்னு எனக்கே தெரியல டாக்டர்…

என் கணவன் வேறு, திடீரென்று என்னை விட்டுட்டு, எங்கோ போயிட்டார் டாக்டர். 

வீட்டுக்காரர்,  வேற காலையிலேயே வந்து,  அந்த  வீட்டைக் காலி பண்ணச் சொல்லிட்டார்.

எனக்கு இந்த பரந்த  உலகத்துல வாழ  எந்த இடமும் இல்ல டாக்டர்…” என்று அவள் கதறினாள்.

டாக்டர் தேவிகா அமைதியாகச் சொன்னார்: ” உன் கணவன் உன்னை விட்டுட்டுப் போய் இருக்கலாம்.

மேலும், உனக்கு வாழ்க்கை யில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கலாம்.  நான் இல்லை என்று சொல்ல வில்லை.

அதற்காக நீ தற்கொலை  செய்து கொண்டால், பிரச்சினையெல்லாம் தீர்ந்து விடுமா ?

இந்த உலகத்தில்   வாழற  யாருக்குத் தான்   பிரச்சினை இல்லை, சொல்லு பார்க்கலாம். ?

எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை,  இருக்கத் தானே இருக்கிறது ?.  அதனுடன் தானே, இங்கு  எல்லோரும்  வாழ்ந்திட்டு  இருக்காங்க ?

அதுக்காக  தற்கொலை செய்து கொள்வது  தான் தீர்வு  என்றால், இதற்குள் , நூற்றுக்கு தொண்ணூறு பேர் தற்கொலை செய்து கொண்டு இருக்க வேண்டும் .

இந்த உலகத்தில யார் இருந்தாலும், யார் போனாலும்,  நீ வாழ்ந்து தானே ஆக வேண்டும், இந்த உலகத்தில.

அட்லீஸ்ட்  நீ பெத்த இந்த ரெண்டு குழந்தைகள்  உன்னை விட்டுட்டுப் போகல தானே ?.  அவர்களுக்காவது நீ உயிரோடு  இருக்க வேண்டும்.

அவங்களுக்காகவாவது நீ வாழணும்  தானே ? .  இந்த உலகத்தில் பிறக்கற  யாரும், யாரை  நம்பியும்  பிறக்கலை , சிநேகா. மொதல்ல நீ  அதை,  அந்த  உண்மை புரிஞ்சுக்கோ .

அதேமாதிரி, நீயும்  யாரையும் நம்பி இல்ல. அப்படி  இனி இருக்கவும் கூடாது. சரியா ?

கடைசி வரைக்கும் யாரும்,  உன் கூட வரமாட்டாங்க .  வரவும் முடியாது.

இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்லும் போது, இன்று உள்ள உன் கஷ்டங்களும்  நிரந்தரமில்லை என்பது , உனக்குத் தெரியுமா. ?.”

**********************************

அதன் பிறகு டாக்டர் தேவிகா தன் மனதில் ஏதோ நினைத்துக் கொண்டு, அங்கிருந்த நர்ஸுடம், ஏதோ சொன்னார் .

அதன் பிறகு சிநேகா விடம், ” இந்த டிரிப் முடிந்தவுடன்,  நீ வீட்டுக்குப் போகலாம்.

இன்னும் மூன்று நாட்களுக்கு, வலி மருந்து எழுதி கொடுத்துள்ளேன்.

அதை நீ எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த  டியூட்டி நர்ஸூ உனக்குச் சொல்வார். 

சிநேகா அந்த ரூமை பார்த்தாள். அது ஒரு  எமர்ஜென்சி வார்டு,  போலத் தெரிந்தது. 

அவளுடைய கட்டிலுக்கு பக்கத்தில் யாரும் இல்லை. காரணம் எமர்ஜென்சி வார்டு என்பதால், இன்ஃபெக்ஷன் ஆகி விடும் என்பதால், பொதுவாக யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.

தேவை என்றால், பேஷண்ட் உடன் வந்தவர்களை, ( அடெண்டர்களை ) கூப்பிடுவார்கள், மருந்து வாங்கி வர.

இவள் டாக்டர் தேவிகா பேஷண்ட் என்பதால், தேவையான மருந்துகளை அவர்களே வாங்கி வந்து, அவளுக்கு போட்டார்கள்.

பில் டாக்டர் தேவிகா கணக்கிற்கு போய்விடும். இதெல்லாம், இந்த  விஷயமெல்லாம் சினேகாவுக்குத் தெரியாது . 

காரணம், இவ்வளவு நேரம் அவள் மயக்கத்தில் தான் இருந்ததாள். இப்போது தான் மயக்கம் சற்று தெளிந்திருக்கிறது அவளுக்கு. 

அவளுடைய உடம்பு முழுவதும் முறுக்கி, முறுக்கி வலித்தது, கீழே விழுந்ததால்.  டிரிப் வேறு இறங்கிக் கொண்டு இருந்தது.

அதில் வலி மருந்தை செலுத்தி இருப்பதாக டாக்டர் சொன்னார்.

அதனால், அந்த  மருந்து அவளின் நரம்பு வழியாக உள்ளே போனதும் வலி குறைந்துவிடும் என்று, நர்ஸ் சொன்னார்.

சிநேகா எதைப் பற்றியும் நினைக்காமல், தன் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாள், மயக்கத்தில்.

**********************************

ரவுண்ட்ஸ் முடித்து விட்டு, வெளிநோயாளிகளைப் பார்க்க தன் ரூமுக்கு சென்ற டாக்டர் தேவிகா, ஏதோ நினைத்துக் கொண்டு, தன் உயிர் தோழி காயத்ரி தேவி க்கு ஃபோன் செய்தார்.

” தேவி உனக்கு ஒரு  விஷயம் தெரியுமா? இன்று நான் என் காரில் ஆஸ்பத்திரி வரும் போது, திடீரென்று ஒரு பெண், என் காரின் முன் பாய்ந்து விட்டாள்.

அவள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அவ்வாறு செய்திருக்கிறாள் என்று நினைக்கிறேன்.

நல்ல வேளையாக நான் அதைப் பார்த்து, உடனே ‘சடன் பிரேக்’ போட்டதால், ஒரு பெரிய விபத்து நடக்காமல்  தவிர்க்க பட்டது.

அவளுக்கு கீழே விழுந்ததால், உடலில், கைகளில்  எல்லாம் சிராய்ப்பு காயம் தான். ‘

” நல்லவேளையாக அடி எதுவும் அதிகமாகப் படவில்லை. உனக்கு உன்னொரு விஷயம் தெரியுமா?

அவள், அந்த பெண் யார் என்று தெரிந்தால், நீ கவலைப் படுவாய். அவள் வேறு யாரும் இல்லை. அவள் உனக்குத் தெரிந்த பெண் தான். அவள் பெயர் சிநேகா . “

எதிர் புறம் சிறிது நேரம் மவுனம். பிறகு அவர் ஏதோ கேள்வி கேட்டார்.

அதற்கு டாக்டர் தேவிகா, ” நீ எதுக்கும் கவலைப் படாதே.

எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்.

உனக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பதால் தான் உனக்கு ஃபோன் செய்து, இந்த  விஷயத்தைக்  கூட  சொல்கிறேன் ” என்றார் .

” பிரச்சினை என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நானும் அவளைக் கேள்வி கேட்க வில்லை.

குடும்ப பிரச்சினை அல்லது கணவன் மனைவி பிரச்சினை யாக இருக்கும் போலத் தெரிகிறது.

மேலும்,  இப்பொழுது  அவள் மருந்து மயக்கத்தில் இருக்கிறாள். 

இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து அவளை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று நினைத்துள்ளேன் மருந்து மாத்திரை களை கொடுத்து “. என்றார்.

மேலும், ” நீ எப்படி சொல்கிறாயோ… அப்படியோ  செய்கிறேன் . இப்போது நான் என்ன செய்வது என்று சொல்?.   அந்த பெண்ணை பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது. “

” மேலும் அவளுக்கு செய்த மருத்துவ சிகிச்சை செலவை நான் கொடுத்து விட்டேன்  என் கணக்கில் இருந்து.

நான் அவளுக்கு வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று மட்டும் சொல் .

மேலும்  உன்னால் இங்கு, இப்போது வரமுடியுமா? 

உன்னால் வரமுடியாது என்றாலும் பிரச்சினை இல்லை. “

” என்ன… வெளியூரில் இருக்கிறாயா? சரி . நீ மெதுவாகவே  வா. பிரச்சினை எதுவும் இல்லை.

நீ சொல்லச் சொன்னால், உன்னைப் பற்றி சொல்கிறேன்.

இல்லை என்றால்,  உன்னைப் பற்றிய விஷயங்களை எதுவும் சொல்ல மாட்டேன். சரியா…? ‘

” நீ சொன்ன மாதிரி,  அவளுக்கு நான் பணம் கொடுத்து அனுப்பி விடுகிறேன் செலவுக்கு என்று.

அவள், ஒரு  ஏழைப் பெண் என்றாலும்  அவளுக்கு ‘தன்மானம்’ மிகவும் அதிகம், தேவி. 

பணத்தை  இலவசமாக கொடுத்தால், வாங்கிக் கொள்ள மாட்டாள்.  நான் கடன் கொடுப்பதாக சொல்லிக் கொடுக்கிறேன், சரியா ?.

அதனால், அவளைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம். பிறகு உன்னை தொடர்பு கொள்ள கிறேன் ” என்று சொல்லி ஃபோனை வைத்தார் அவர்.

**********************************

மணி சுமார் மதியம் 2 மணி இருக்கும். டாக்டர் தேவிகா,  நர்ஸை கூப்பிட்டு, சிநேகாவை டிஸ்சார்ஜ் செய்ய செல்லி விட்டு, அந்த செலவைத்  தன் கணக்கில் எடுத்துக் கொள்ள சொன்னார்.  பிறகு சிநேகா வை தன் ரூமுக்கு அழைத்து வரச் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து வந்த சிநேகா கையில், டாக்டர் தேவிகா,  ஒரு கவரை‌ எடுத்துக் கொடுத்தார்.

“இதுல உன் சிகிச்சைக்கு நான்  பணம்  கட்டின பில் , அதோட மீதி கொஞ்சம் பணமும் இருக்கு.

அதை வைச்சுக்க ,  உன் பசங்களுக்கு ஏதாவது வாங்கி கொடு. உனக்கும்,  செலவுக்குப்   பயன்படுத்திக் கொள் .”

“இல்லை டாக்டர்… நான் இதை வாங்க முடியாது…” என்று சிநேகா தயங்கிக் கொண்டே சொன்னாள்.

“இதை  நான் உனக்கு இலவசமா கொடுக்கல சிநேகா. இது ஒரு கடன் தான்.  இதை நான் உனக்கு கடனாத் தான் கொடுக்கிறேன்.

நீ உன் சொந்த கால்ல நின்னு, நல்லா உழைச்சு, உன் புள்ளைங்களை நல்ல படியா வளர்த்து, ஆளாக்கு . 

அதன் பிறகு இந்த பணத்தை எனக்குத் திருப்பிக் கொடு, வட்டியும் முதலுமா. அதன் பிறகு நான் வாங்கிக் கறேன்.

அது தான் எனக்கு நீ செய்யும் நன்றிக்கடன்,” என்றார் டாக்டர் தேவிகா புன்னகையுடன்.

” உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை டாக்டர்… “

” நீ எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். தற்கொலை எண்ணத்தை எல்லாம் கைவிட்டு,  விட்டு உன் சொந்தக் காலில் வாழும்  வழியைப் பார்.

இனிமேல்,  ஏதாவது உதவி வேண்டும் ன்னா எங்கிட்ட தயங்காமக்   கேள். சரியா!? ” என்றார் அந்த டாக்டர்.

இந்த உலகில் டாக்டர் தேவிகா வைப் போல,  நல்லவர்களும் இருக்கிறார் கள் என்ற  நம்பிக்கை வந்தது, அவளுக்கு.

அவளுக்கு தெரியாத ஒரு  விஷயம், உண்மை யில் அவளுக்கு இந்த உதவியை யெல்லாம் , மறைமுகமாக செய்ய சொன்ன காயத்ரி தேவி பற்றி தான். 

காயத்ரி தேவி உண்மையேலேயே யார்? அவர் ஏன் டாக்டர் தேவிகா மூலம், முறைமுகமாக சினேகாவுக்கு உதவி செய்ய வேண்டும்?  அந்த இரகசியம் என்ன? அதைப் பற்றி எல்லாம்  இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

(V R K)

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top