சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை டவுன்… தமிழகத்தின் சில்க் சாரீஸ் சிட்டி என்று அழைக்க படும்… அந்த ஊரில் உள்ள அனைத்து தெருவிலும் சிறியது பெரியதாக பத்து பதினைந்து கடைகள் இருக்கும்… எப்போதும் இரண்டு மூன்று பேர் அந்த கடைகளில் புடவை வாங்க இருந்து கொண்டே இருப்பர்… வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் நிறைய பேர் இங்கு வாங்க வருவார்கள்… பண்டிகை நேரங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கூட புடவைகள் எடுக்க வருவார்கள்…
தற்போது இங்கு இருக்கும் மக்கள் ஜிஎஸ்டி(gst) வந்த பின் வெளி மாநிலங்களுக்கு இங்கு இருந்தே விற்க ஆரம்பித்து இருந்தனர்…
இங்கிருக்கும் மக்களுக்கு இது தான் வாழ்வாதாரம்… ஒரு சிலர் கூலிக்கு புடவைவைகள் ஓட்டி தருவர்… ஒரு சிலர் தங்கள் சொந்த பாவில் ஆட்கள் வைத்து ஓட்டி விற்பர்…. இன்னும் ஒரு சிலர் புடவைகள் வாங்கி ரீடைலில் விற்பர்….
ஹோல்சேல் (wholesale) ரீடைல் (retail) என அனைத்து வகைகளில் புடவைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று கொண்டு இருக்கும்…
புடவைகள் விற்பது மட்டும் அல்ல… இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றி உள்ள ஊரில் உள்ளவர்களுக்கு அந்த கடைகள் தான் வாழ்வாதராம்… அங்கிற்கும் கடையில் வேலை செய்வோர் அதிகம் உள்ளனர்… பெண்கள் கூட புடவைகளை மடிக்க வேலைக்கு வருவர்… நெசவு என்று ஒன்று இல்லை என்றால் அங்கு இருக்கும் மக்கள் முக்கால்வாசி பேருக்கு வேலை இல்லை…. அந்த அளவுக்கு நெசவு என்பது அங்கு முக்கியம்…
இளம்பிள்ளையின் ஊருக்கு நடுவில் அளவான அழகான ஒரு மாடி கொண்ட வீடு… முதலில் நுழைந்ததும் ஒரு வரவேற்பற அதன் பின் சமையலறை பூஜையறை இரு பெட்ரூம்… அட்டாச் பாத்ரூம் உடன்… மேலே ஒரு ரூம்.. அதிலும் அட்டாச் பாத்ரூம்.. அங்கிருக்கும் மீதி இடத்தில் மாடி தோட்டமும் அழகாக பராமரிக்கப்பட்டு இருந்தது… அந்த வீட்டை ஒட்டியே ஒரு பெரிய அறை… அதில் பத்து தறிகள் இருந்தது…
இரண்டு தறிக்கு ஒரு ஆள் என எட்டு தறிக்கு நான்கு பேர் இருக்க இரண்டு தறி அந்த வீட்டு ஆட்கள் தான் ஓட்டுவர்… அதே போல் வெளியில் ஒரு நாற்பத்திற்கும் மேற்பட்ட தறிகளுக்கு ரகம் நெசவு செய்யக் கொடுக்கின்றனர்…
“பவி பவி” என்று தன் மகளை அழைத்து கொண்டே தறி கொட்டகைக்கு நுழைந்தார் லட்சுமி…
“அம்மா இங்க இருக்கேன்” என்று குரல் மட்டும் கேட்டது… ஆனால் ஆளை காணவில்லை.. கீழே பார்த்து விட்டு அவள் ஓட்டும் தறிக்கு மேலே பார்க்க அங்கு மெஷினில் எதையோ சரி செய்து கொண்டு இருந்தாள்…
அதை பார்த்து பதறிவிட்டது…. “அடியே பவி உன்கிட்ட என்னசொன்னேன்… இந்த மாதிரி மெஷின் வேல எல்லாம் நீ செய்யாத.. ஆளுங்க இருக்காங்க அவங்களை வெச்சு பாருனு சொன்னேன்ல….. கீழ விழுந்துட்டா என்ன ஆகும்… பொம்பளை புள்ள இந்த வேலை எல்லாம் செய்யலாமா..?” என்று கோவமாக அவர் கேட்டார்…
“ம்மா பசங்க மட்டும் தான் இது செய்யனுமா… பொண்ணுங்களும் செய்யலாம்… எனக்கு ஒன்னுமாகது… நீ வீட்டுக்கு போ பத்து நிமிஷத்துல வரேன்…” என்று கூறி படபடவென தறியில் இருந்து கீழே இறங்கினாள் நம் கதையின் நாயகி பவ்யா…
சிறு வயது முதலே தறியின் மீது அத்தனை ஆர்வம்… இப்போது ஐந்து வருடமாக தான் இத்தனை தறிகள் வெளியில் ரகம் கொடுப்பது எல்லாம்… அதற்கு முன் வெளியில் இவர்களும் ரகம் எடுத்து தான் தறி ஓட்டி கொண்டு இருந்தனர்… வீட்டின் உள்ளேயே தான் இரண்டு தறி இருந்தது…
முன்பு எல்லாம் ஓட்டு வீடு தான்… அந்த இரண்டு தறிகளையும் பாவ்யாவின் அப்பா ராமன் தான் ஓட்டுவார்… சிறுவயது முதலே அந்த தறியின் சத்தம் என்றால் பவிக்கு விருப்பம்… ஒரு சிலருக்கு ஒருசின்ன சத்தம் கேட்டாலும் தூக்கம் ஓடி விடும்… ஆனால் பவிக்கு அந்த தறியின் சத்தத்தில் ஆழ்ந்து உறங்குவாள்… அந்த சத்தம் அவளுக்கி தாலாட்டுப் போல் இருக்கும்…
சிறு வயதாக இருக்கும் போது அவள் அப்பா நான்கரை மணிக்கு எழுந்து ஐந்து மணிக்கு எல்லாம் தறி ஓட்ட ஆரம்பித்து விடுவார்… அந்த சத்தத்தை கேட்டு இன்னும் நன்றாக உறங்குவாள்..
வயது ஏற ஏற தறியின் மீது பவிக்கு ஆர்வம் அதிகரித்து இருந்தது… தன் தந்தையுடன் எழுந்து இவளும் தறி ஓட்ட செல்வாள்… காலையில் பள்ளி மாலை வீட்டுப்பாடம் என அனைத்தையும் முடித்து விட்டு தன் தந்தையிடம் ஓடி விடுவாள்… முதலில் கொஞ்ச கொஞ்ச நேரம் ஓட்டியவள் விடுமுறை நாட்களில் முழு நேரமும் தறி ஓட்ட ஆரம்பித்து இருந்தாள்…
படி படியாக தறியில் எந்த பிரச்சனை என்றாலும் அதை சரி செய்ய கற்று இருந்தாள்… அவள் பள்ளி படிப்பை முடிக்கும் சமயத்தில் தான் அவள் அப்பா பக்கத்தில் இருக்கும் தங்கள் நிலத்தில் ஒரு ஷெட் மாதிரி அமைப்பை ஏற்படுத்தி நான்கு தறி போட்டு இருந்தார்… ஒரு ஆளை வேலைக்கும் எடுத்து இருந்தார்…
கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் ஏற ஏற சொந்தமாக வார்ப்புகள் வாங்கி புடவைகளை நெய்து விற்க ஆரம்பித்து இருந்தார்… இரண்டு வருடம் முன்பு தான் ஓட்டு வீட்டை இடித்து மாடி விடு கட்டி இருந்தனர்…
ஆண்களே மேலே ஏறும் போது கொஞ்சம் தடுமாறும்… அதனால் தான் பவியின் அம்மா பயப்படுகிறார்… தற்போதும் அதனால் தான் திட்டு… என்ன தான் திட்டினாலும் தன் மகள் மீது அத்தனை பாசம்.. ஒரே மகள் வேறு செல்லமும் கூட… படித்த வேலைக்கு செல்லாமல் தங்களுக்கு உதவி செய்யும் மகளை அத்தனை பிடிக்கும்… தந்தைக்கும் செல்ல பிள்ளை… ஆண் பிள்ளைகளே எடுத்து செய்ய தயங்கும் இந்த ஊரில் தந்தையின் தொழிலை மகள் எடுத்து செய்கிறாள் என்ற பெருமை…
அப்போது “என்ன லட்சுமி ம்மா” என் மருமகளை திட்டுற என்று கேட்டு கொண்டே வந்தார் கோவிந்தன்… லட்சுமியின் அண்ணன் மற்றும் ராமனின் உயிர் தோழன்…
சலுகையாய் “மாமா ஒரு கம்பி அறுந்து கிழ விழுந்திருச்சு அது சரி செய்ய மேல ஏறுனேன்… அதுக்கு தான் உங்க தங்கச்சி திட்டுறாங்க…” என்று புகார் கூறினாள் பவ்யா…
இவ ஏறுவா ண்ணா… ஆனா எனக்கும் பயமா இருக்குல… போன மாசம் கூட பக்கத்து ஊருல ஒரு தம்பி மேல இருந்து கீழ விழுந்து உயிரே போய்டுச்சு… இதே கேட்டவுடனே எவளோ கஷ்டமா இருந்தது… நான் ஏறவே வேண்டாம்னு சொல்லல ண்ணா… நமக்கு அது தான் பொழப்பே… ஆனா பொறுமையா செய்னு சொன்னா கேட்குறதே இல்லை… படபடனு மேல ஏறுறது கீழ இறங்குறது.. பொறுமையே இல்ல இந்த பொண்ணுக்கு… என்று தாயிற்கே உண்டான ஆதங்கத்தில் கூறினார்…
இதை கேட்ட கோவிந்தன் எது செஞ்சாலும் பொறுமையா செய்யனும் பாப்பா… என்று கூறி ராமன் எங்க லட்சுமி என்று கேட்டார்…
கடைக்கு போய் இருக்காரு ண்ணா… நீங்க வீட்டுக்கு வாங்க… பவிமா சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வா என்று கூறி கோவிந்தனை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்…
மீண்டும் கோவிந்தன் “பொறுமை வேணும் பாப்பா.. அம்மா பயப்படுறாங்கல பொறுமையா செய் யாரு கேட்க போறா…” என்று கூறி தலையை கலைத்து விட்டு சென்றார்…
பவியும் அனைத்தும் சரி செய்து விட்டு ஒரு முறை தறியை ஓட்டி பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றாள்…
அங்கு வீட்டில் அண்ணா சாப்பிடுங்க.. என்று லட்சுமி கூற இல்ல ம்மா எட்டு மணிக்கே சாப்பிட்டுட்டேன்… நீங்க சாப்பிடுங்க என்று அவர் கூறினார்…
லட்சுமியும் “நாங்க சாப்பிட்டாச்சு ண்ணா.. பவி மட்டும் இன்னும் சாப்பிடல… என்று கூறிவிட்டு விட்டு அண்ணி என்ன பண்றாங்க.. என்னால நேத்து அங்க வீட்டுக்கு வர முடியல… அண்ணி வருவாங்க பார்த்தா அண்ணியை காணோம்” என்று கேட்டார்…
“அவ பையன் போன் பண்ணான் அவன் கிட்ட பேசுனா உலகமே மறந்து போய்டுமே உன் அண்ணிக்கு… பேசிட்டே மறந்துட்டா…” என்று கூறினார்…
“என்ன அண்ணா… இன்னும் ஹரி மேல கோவம் போகலையா” என்று கேட்டார்..
“லட்சுமி அவனை பத்தி பேசாத… ராமன் வந்தா கோவிலுக்கு வர சொல்லு… நான் கிளம்புறேன்…” என்று கூறி கிளம்பிவிட்டார்…
லட்சுமி தான் போகும் அவரை பாவமாக பார்த்து நின்றார்…
தன் சொந்த பையன் மீது கோவிந்தனுக்கு என்ன கோவம்…?!?!?…