நூலிழை பந்தம் ❤️ 8

அன்று இரவு ஒருவரின் ஒருவர் அருகாமையில் நன்றாக ஹரியும் பவியும் உறங்கி இருக்க அடுத்த நாள் அவன் எழுவதற்கு முன்பே எழுந்து இருந்தாள்… ஆதியும் மித்ரனும் வந்து இருக்க ஹரியின் நண்பனை “அண்ணா இன்னிக்கு ரெஸ்ட் எடுங்க.. அது தான் ஹரி அண்ணா எழுந்துட்டாருல… நாளைக்கு தானே டிஸ்சார்ஜ்…. இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்க” என்று அனுப்பி வைத்தனர்…

ஆதி மருத்துவமனையில் இருக்க மித்ரன் அவளை திவியின் அறையில் விட்டவன் அலுவலகத்தில் வேலை என கிளம்பி இருந்தான்.. திவ்யா இன்று விடுமுறை எடுத்து இருந்தவள் அவளை சாப்பிட வைத்து மிரட்டி உறங்க வைத்து இருந்தாள்…

ஆதியிடம் தான் கோவிந்தனுக்கு என்ன ஆனது என விசாரித்து கொண்டு இருந்தான்.. அவனும் நடந்ததை கூறி கொண்டு இருந்தான்..

அதே வேளையில் புவனா லட்சுமியிடம் அழுது கொண்டு இருந்தார்… ஹரியின் மேல் பயங்கர கோவத்தில் இருந்த அவர் “அண்ணி அந்த பையனுக்கு என்ன திமிரு… அத்தனை பேர் அத்தனை போன் பண்ணி இருக்கோம்.. ஒரு வார்த்தை என்னனு கேட்டானா.. எல்லாம் நான் வாங்கி வந்த வரம் போல அண்ணி.. என் பொண்ணு என்ன விட்டு போனா.. இவனும் உயிரோட இருந்தும் எங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டான்.. நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியல அண்ணி” என்று அழுது கொண்டே கூறிக்கொண்டு இருந்தார்…

இதற்கு மேல் மறைக்க முடியாது என எண்ணி லட்சுமி மெதுவாக புவனவிடம் ஹரியின் விபத்து பற்றி கூறி பவி சென்னையில் தான் உள்ளாள் என கூறி கொண்டு இருந்தார்.. அதை கேட்டு மேலும் அழுத புவனா உடனடியாக ஹரியை பார்க்க வேண்டும் என அழ லட்சுமி என்ன சொல்வது என தெரியாமல் அவரை சமாதானம் செய்ய முயன்றார்..

“அண்ணி நான் சொல்றதை கேளுங்க.. அண்ணா கண்ணு முளிக்குற அப்ப நீங்க இங்க இருக்க வேண்டாமா.. அண்ணா கிட்ட இந்த மாதிரி விஷயம் எல்லாம் சொல்ல கூடாது… அழுகாதீங்க… ஹரி எப்படி இருக்கான்னு பவி கிட்ட வேணும்னா கேட்கலாம்” என கூறி பவிக்கு அழைத்தார்..

அவள் நன்றாக உறங்கி கொண்டு இருக்க திவ்யா தான் அழைப்பை ஏற்றாள்… ஹலோ பவிம்மா என்று லட்சுமி கூற.. “அம்மா நான் திவி பேசுறேன்… பவி ரெண்டு நாளா தூங்கவே இல்ல.. இன்னிக்கு தான் தூங்குறா… அண்ணா நல்லா இருக்காங்க.. நேத்து சாயந்திரம் கண்ணு முழிச்சு இருக்காங்க… நேத்து நைட் கண்ணு முழிச்சு பேசி இருகாங்க.. பயப்பட தேவையில்லை.. அண்ணாவை நாளைக்கு காலைல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.. மதியத்துக்கு மேல அண்ணாவை இளம்பிள்ளை கூட்டிட்டு வந்துருவாங்க.. எதை பத்தியும் கவலை படாம கோவிந்தன் அப்பாவை பாருங்க” என்று கூறி வைத்து இருந்தாள்…

கோவிந்தன் கண் விழித்து இருக்க புவனா மட்டும் பார்க்க அனுமதிக்க பட்டர்.. அவரும் எதுவும் பேசவில்லை.. போய் பார்த்து விட்டு வந்துவிட்டார்.. அவர் சென்ற பின் அவரின் கண்கள் யாரையோ தேடியது யாரை தேடியதோ அது அவருக்கு தான் வெளிச்சம்…

மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு ஒரு நாள் ஐசியூவில் இருக்கட்டும் என கூறி விட்டு கிளம்பி இருந்தார்… கோவிந்தன் மீண்டும் உறங்கி இருக்க அனைவரும் அவர் கண் விழித்ததில் நிம்மதியாக உணர்ந்தனர்….

அந்த நாள் அப்படியே முடிய அடுத்த நாள் காலையில் ஹரி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்… மித்ரனும் திவ்யாவும் தாங்களும் வருகிறோம் என கூற எத்தனை நாள் விடுமுறை எடுப்பீர்கள் என கூறி பவி அவர்களை வர வேண்டாம் என கூறிவிட்டாள்… ஹரியின் நண்பன் கேட்கவில்லை அவர் தானும் வருவேன் என்று கூறி கிளம்பிவிட்டார்.. கொஞ்சம் பெரிய கார் தான் ஆதி கார் ஓட்ட பவி முதலில் காரில் ஏறி கொண்டாள்.. மித்ரனும் ஹரியின் நண்பனும் ஹரி காரில் ஏற உதவினர்…

நீண்ட நேரம் காரில் அமர்ந்துகொண்டு வர முடியாது என எண்ணி மித்ரனின் உதவியுடன் ஏற்கனவே அவன் சவுகரியமாய் அமர ஆதி ஏற்பாடு செய்து இருந்தான்.. எனவே அவ்வளவு பிரச்சனை இல்லை அவன் அமர…

ஹரி இருப்பதால் கொஞ்சம் மெதுவாக தான் கார் சென்றது.. ஹரியின் நண்பன் ஆதி என இருவரும் மாற்றி மாற்றி தான் கார் ஓட்டினர்… ஏழு மணி நேரத்தில் இளம்பிள்ளை வந்து இருக்க லட்சுமி தான் அவனுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றார்… ஊருக்கு வந்த பின் தான் ஹரிக்கும் சரி பவிக்கும் சரி நிம்மதியாய் இருந்தது…

பவி தன் வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டாள்… ஹரியின் நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்… ராமன் அவனை நலம் விசாரித்து விட்டு மருத்துவமனை கிளம்பி இருக்க லட்சுமி அவனுக்கு சாப்பிட தயார் செய்தார்… சென்னையில் இருந்து வந்த நண்பர் தன் வீட்டிற்கு கிளம்பி விட மற்ற நண்பர்கள் தான் இருந்தனர்…

அந்த நாள் அப்படியே முடிய ஹரியின் நண்பன் ஒருவன் மட்டும் ஹரியுடன் இருந்து விட மற்றவர்கள் கிளம்பிவிட்டனர்… ஹரிக்கு உதவியாய் அவன் இருந்தான்…

அடுத்த நாள் ஹரி கோவிந்தனை பார்க்க வேண்டும் என அடம் செய்ய யாரும் அதற்கு அனுமதிக்கவில்லை… அந்த நாள் இறுதியில் கோவிந்தனை நார்மல் வார்டிற்கு மாற்றினர்… புவனா லட்சுமி இருவருக்கும் அவனுக்கு ஆக்சிடென்ட் என்று மட்டுமே தெரியும்.. கரிஷ்மாவை பற்றி எதுவும் தெரியாது…

பவி தான் ஹரியை பார்த்துக்கொள்ள வந்து இருந்தாள்.. ஆதி கோவை கிளம்பி இருக்க ஹரியின் சென்னை நண்பர் சென்னை கிளம்பி இருந்தார்… இங்கிருப்போர் அவ்வபோது வந்து அவனுக்கு உதவி செய்து கொண்டு இருந்தனர்..

ஹரியுடன் சேர்த்து நால்வர் தான் நண்பர்கள்.. ஹரியும் மற்றொருவனும் சென்னையில் வேலைக்கு சேர்ந்து விட மற்ற இருவரும் தங்கள் அப்பாவின் தொழிலை பார்த்து கொண்டு இருந்தனர்.. அவர்களும் புடவை வியாபாரம் தான் செய்து கொண்டு இருந்தனர் சிறிது அளவில்.. பக்கத்தில் தான் வீடு என்பதால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து பார்த்து கொண்டனர் அவனை…

பவி எதுவும் பேசவில்லை… அவளின் புடவை வியாபாரம் செய்யும் வெப்சைட்டில் வந்து இருக்கும் ஆர்டர் பற்றி தன் டேபில் பார்த்து கொண்டு இருந்தாள்… லட்சுமிக்கு உதவியாய் இருந்தாள்.. ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை…

ஒரு ஒரு விஷயத்திலும் ஒருவர் உதவியாய் இருப்பது அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. ஏற்கனவே அவன் ஒரு கிறுக்கன்.. எதை எதையோ யோசித்து கொண்டு எதையோ பேசி விடுவான்.. ஒரு நாளிற்கே அவனால் தாங்க முடியவில்லை.. கால் சரியாகி நடக்கும் வரை எவ்வாறு சமாளிப்பான் என்று கடவுளுக்கே வெளிச்சம்…

இரவு உணவை பவி தான் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. ஹரியும் மருத்துவமனையில் அவளிடம் பேச முயற்சித்தது தான்… அதன் பின் பேச முயற்சிக்கவில்லை.. அதில் ஒரு கசங்கிய புன்னகையை மட்டும் வெளிப்படுத்தினாள் பவி.. அவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்…

தனிமையில் இருக்கும் போது தான் நேற்று அவனின் அலுவலக நண்பர்கள் வந்து சென்றது ஞாபகம் வந்தது…தனக்கு ப்ரோமோசன் வர வேண்டும் என்று தான் வேண்டுமென்றே ஹரியிடம் இருந்து உழைப்பை வாங்கி அவள் பெயரிட்டு நற்பெயர் வாங்கி இருந்தாள்…

அவனை காதலித்தது எல்லாம் உண்மை தான்.. ஆனால் பதவி உயர்விற்காக வேறு ஒருவரை காதலிக்க ஆரம்பித்து இருந்தாள்.. அந்த மீட்டிங்கில் அவளுக்கு அந்த ப்ராஜெக்ட் பற்றி எதுவும் தெரியவில்லை… ஹரியின் நண்பர்கள் தான் இது ஹரியின் ப்ராஜெக்ட் என கூற கரிஷ்மாவின் பதவி உயர்வை மீண்டும் வாங்கி கொண்டு அவளை டீபிரோமசன் செய்து இருந்தனர்… அவள் செய்த வேலைக்கு வேறு கம்பெனியில் சேர கூடாது என அவளிடம் அக்ரீமெண்ட்டில் கை எழுத்து வாங்கி தண்டனை கொடுத்து இருந்தனர்..

பின் ஹரிக்கு பதவி உயர்வு தருவதாக கூறி அவனிடம் பேச கூற அவன் மறுத்து விட்டான்.. இந்த ஆக்சிடெண்டால் தான் அவன் வேலையை ரிசைன் செய்து விட்டதாக மட்டும் செய்ய கூறி இருந்தான்… கரிஷ்மா அவனை பார்க்க கூட வரவில்லை… அவளின் பெற்றோர் தான் நேற்று வந்து மன்னிப்பு கேட்டு விட்டு கல்யாணத்தை நிறுத்த வேண்டாம் என கூற ஹரி அதற்கு மறுத்துவிட்டான்.. அவர்களும் தங்கள் மகள் மேல் தான் தப்பு என எண்ணி அமைதியாய் சென்றுவிட்டனர்…

இது ஆதிக்கு மட்டும் தான் தெரியும்.. அவன் தான் பவியிடம் கூறினான்.. அவள் அமைதியாய் கேட்டு கொண்டாள்… அந்த யோசனையில் தான் அவன் பவியிடம் பேசவில்லை.. ஆனால் பவியோ வழக்கம் போல் கோவம் கொண்டு தான் பேசவில்லை என எண்ணி கொண்டாள்…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top