அத்தியாயம் 6
பனிவிழி கேண்டீனுக்கு சென்று சாப்பிட அமர்ந்த வேலையில் அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ருத்ரனை பார்த்தவள், அவனை இங்கு எதிர்ப்பாராத அதிர்ச்சியில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பருக்கை தொண்டை குழியில் சிக்கி புறையேறத் துவங்கியது.
புறையேறியதும் தனது தலையில் தட்டி, பின் அருகில் இருந்த தண்ணீரை குடித்து தன்னை சமன் செய்து கொண்டாள் பனி.
அவற்றையெல்லாம் வெறுமனே இருக்கும் வெள்ளை சுவற்றை வெறித்து பார்ப்பது போல் விழிகளில் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காது அவளை வெறுமனே பார்த்திருந்தான் ருத்ரன்.
அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் சுமித்ரா.
சுமித்ரா தனக்கு வேண்டிய உணவை வாங்கிக் கொண்டு அங்கே அமர்ந்திருந்த பனியை பார்த்ததும் அவளின் அருகில் சென்று அமர்ந்தாள்.
சுமித்ராவை பார்த்தாலும் கூட அவளை கண்டு கொள்ளாமல் வேக வேகமாக தனது உணவை உண்பதில் கவனமாக இருந்தாள் பனி.
“ஏய் பனி… பொறுமையா சாப்பிடுடி… இப்ப உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்…? நான் ஒன்னும் உன் சாப்பாட்டை பங்கு கேட்க மாட்டேன்…” அவளை பார்த்து கூறியவள் தன்னுடைய உணவில் கவனமானாள்.
“ஏய் சுமி… அங்க பாருடி சிடு மூஞ்சி வாத்தி உட்கார்ந்துருக்கு…”
அவள் கூறியதை கேட்டு தாழ்த்தி இருந்த விழிகளை உயர்த்தி பார்த்தவள், “நீ ருத்ரவர்மன் சாரை சொல்றியா…?” என்றாள்.
“ஆமா… அவரே தான்… அந்த ஆள் எதுக்குடி இந்நேரத்துல இங்க உட்கார்ந்து சாப்பிட்றாரு… அவருக்கு தான் தனியா கேபின் இருக்குமே அங்க போய் சாப்பிட வேண்டியது தானே? லஞ்ச் டைம்ல கூட நம்ம ஃப்ரீயா பேசி ரிலாக்ஸா உட்கார்ந்து சாப்பிட கூடாதுன்னு நம்மளை கண்காணிக்கிறதுக்கே கேண்டீன்ல வந்து உட்கார்ந்து சாப்பிடுதா இந்த சிடு மூஞ்சி…”
“ஏய் லூசு… வாய மூடிட்டு சும்மா இருடி… நீ பேசுறது ஏதாவது அவரு காதுல விழுந்துற போகுது…”
‘இவ சொல்ற மாதிரி நம்ம பேசுனது அவர் காதுல விழுந்துருக்குமோ…!’ ஒரு நொடி மனதில் எண்ணிக் கொண்டவள்,
“நா…. நான் ஒன்னும் தப்பா கேட்கலையே… விழுந்தாலும் கூட இதை காரணமா வச்செல்லாம் எனக்கு பனிஷ்மெண்ட் குடுக்க முடியாது…” கெத்தாக சுமியிடம் கூறுவதை போல் தன் மனதிற்கும் ஆறுதல் கூறிக்கொண்டாள்.
“நீ இப்போ பேசுனத்துக்கு பனிஷ்மெண்ட் இருக்காது தான் ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்து வச்சியே ஒரு வேலை… அதுக்கு உனக்கு ஹெவியான பனிஷ்மெண்ட் தருவாரோ என்னமோ தெரியல…. ஆனா உன்னை கொஞ்சம் கொஞ்சமா வச்சு செய்வாரு… அது மட்டும் என்னால கரெக்டா சொல்ல முடியும்…!”
“என்னடி இப்படி சொல்லி என்னை பயமுறுத்துற…?!”
“பின்ன.. நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருந்திருக்கலாம்ல…நீ எதுக்கு அந்த சொட்டை தலையன் வைஸ் பிரின்சிபல் கிட்ட போய் தேவை இல்லாம என்ன என்னமோ பேசி வச்ச…?”
“ஆமாண்டி அதை நினைச்சா தான் எனக்கும் வயித்துக்குள்ள பகீர்ன்னு இருக்கு… பெருசா எதுவும் ப்ளான் பண்றாரோ…? அதனால் தான் இவ்வளவு சைலண்டா இருக்காரோ…?”
“தெரியலயே…!”என்ற தோளை குலுக்கிக் கொண்டு கூறிய சுமித்ரா பின் தனது உணவில் கவனமானாள்.
அவளை பார்த்துவிட்டு அவள் கூறியதை நினைவுபடுத்தியவாரே பொறுமையாக தனது விழிகளை திருப்பி ருத்ரனை பார்த்தாள் பனிவிழி.
ருத்ரனும் கூட அவளை அர்த்தமாக இல்லாமல் மேலோட்டமாக ஒரு பார்வை பார்ப்பதும் பின் தன் உணவில் கவனம் வைப்பதுமாக இருந்தான்.
அவனின் இந்த செயலை பார்த்தவளுக்கு சற்று நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு நினைவில் வந்தது. நிகழ்ந்தது என்னவென்றால்,
ருத்ரனிடம் மாட்டி அவனின் கோபத்தை அதிகரித்து அவனின் உறுமலினால் லேபிலிருந்து வெளியே வந்திருந்தாள் பனி. லேப் வாசலில் நின்றவள் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அந்த வழியாக விசிட்டிங் சென்று கொண்டிருந்த வைஸ் பிரின்ஸிபல் லோகநாதன் லேப் வாசலில் நின்றிருந்த பனியை பார்த்தவர் அவளின் அருகில் சென்று,
“நீ எதுக்கு லேப் வசல்ல நினைக்கிற…? உள்ள போகலையா..?” என்று கேட்டார்.
அதனை கேட்ட பனியோ, லேப் உள்ளே எட்டி பார்த்துவிட்டு ருத்ரனை லோகநாதனிடம் மாட்டி விடுவதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு என்று நினைத்தவள்,
“சார் நீங்களே கேளுங்க சார் இந்த அநியாயத்தை… நான் உள்ள எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டு இருந்தேன்… அப்போ தெரியாம கைத்தவறி டெஸ்டிங் டியூப் கீழ விழுந்துருச்சு… அதுக்காக போயி ருத்ரவர்மன் சார் என்னை லேபை விட்டு வெளிய அனுப்பிட்டாரு சார்…”
முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு அவன் கூறியதை கேட்டுக்கொண்டு லேபினுள் சென்ற லோகநாதன் ருத்ரனிடம் பனி கூறிய விஷயம் குறித்து கூறியவர் நிகந்தது என்னவென்று விசாரித்தார்.
அதற்கு ருத்ரனோ, ‘பன்றதையும் பண்ணிட்டு இப்போ என்ன வேலை பாத்துட்டு இருக்கு பாரு இந்த அராத்து…!’ என்றென்ணிக் கொண்டவன் பனிவிழி செய்த வேலையை எடுத்துக் கூறினான். இருவரும் பேசியவாறு லேபில் இருந்து வெளியில் வந்திருந்தனர்.
லோகநாதன் ருத்ரனிடம் கேள்வி கேட்பதையும், அதற்கு அவன் வைஸ் ப்ரின்ஸிபல் என்னும் அந்த பதவிக்கு தகுந்த மரியாதையை குடுக்கும் விதமாக சற்று பணிவாக பேசுவதையும் கவனித்த பனியோ,
‘சிடு மூஞ்சி வாத்தி… எப்படி உன்னை கணக் கச்சிதமா மாட்டி விட்டேனா…?’ என்று எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டு அவர்களை பார்த்திருந்தாள்.
லேபிலிருந்து வெளியில் வந்த லோகநாதனோ பனிவிழியிடம் “உன் பேர் என்னம்மா…?” என்று கேட்டார்.
“ பனிவிழி சார்..”
“உனக்கு இது செகண்ட் இயர் தானே…?”
“ஆமா சார் நான் செகண்ட் இயர் தான்…!”
“இதுக்கு முன்னாடி உன்னை இந்த காலேஜ்ல பார்த்ததில்லையே ஃபர்ஸ்ட் இயர் இந்த காலேஜ்ல தான் படிச்சியா…?”
“இல்ல சார் ஃபர்ஸ்ட் இயர் நாம் கோயமுத்தூர் காலேஜ்ல படிச்சேன்… அந்த காலேஜ்ல இந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட் இல்ல சார்… நாங்க எல்லாரும் ரொம்பவே ஜாலியா இருந்தோம்… ஆனா இந்த காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார்…. அதுலையும் குறிப்பா இவரு… ரொம்ப தான் ஸ்ட்ரிக்ட்டா இருக்காரு சார்… சின்ன விஷயம்னாலும் உடனே பனிஷ்மெண்ட் குடுக்குறாரு சார்….!” நேரம் பார்த்து ருத்ரவர்மனை பற்றி அதிகமாக போட்டுக் குடுத்தாள் பனி.
அதனை எல்லாம் காதில் வாங்கிக் கொண்ட லோகநாதனோ “சரி பனிவிழி… எனக்கு ஒரு சந்தேகம்…! லாஸ்ட் இயர் நீ இதே கெமிஸ்ட்ரி சப்ஜெக்ட் படிச்சிருக்க…. உனக்கு பேசிக் ஆஃப் கெமிஸ்ட்ரி தெரிஞ்சிருக்க அதிக வாய்ப்பு இருக்கே… அப்படி எல்லாம் தெரிஞ்சிருந்தும் கூட, எதுக்காக நீ ஏதேதோ கலர்ஸ் பத்தி டவுட் கேட்டியாம்…? ஏன் எந்த கலர்ல எந்த ஆசிட் இருக்கணும்னு உனக்கு தெரியாதா…? இல்லன்னா உன்னோட விளையாட்டுத்தனத்தால அப்படி பண்ணியா…?”
முகத்தில் கடுமையை தேக்கி லோகநாதன் கேட்ட கேள்வியில் சற்றே மிரண்டு போனாள் பனிவிழி.
“சொல்லு… இவ்வளவு பொறுப்பான ஒரு ப்ரொஃபசர் கிட்ட இந்த மாதிரி எல்லாம் விளையாடுறதுக்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்துச்சு…? கெமிஸ்ட்ரி லேப்குள்ள வந்துட்டு சின்ன குழந்தை மாதிரி இந்த கலர்ல எந்த கலர் மிக்ஸ் பண்ணலாம்னு கேட்டு விளையாடிட்டு இருந்தது மட்டும் இல்லாம, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம டெஸ்டிங் ட்யூப்பை கீழ போட்டு ஒடைச்சுருக்க…” என்று பனியை கண்டிக்கும் குரலில் கேட்டார் அவர்.
அதனைக் கேட்ட பனியோ ‘அய்யய்யோ…!! என்ன இது வம்பா போச்சு… பிரின்சி கிட்ட இந்த சிடு மூஞ்சிய மாட்டி குடுக்கலாம்ன்னு பார்த்தா இந்த சிடு மூஞ்சி நம்மளை வாசமா மாட்டி குடுத்துடுச்சு போலவே…!’
மனதிற்குள் நினைத்து கொண்டே விழிகளை சுழற்றி திருதிருவென விழித்தவள் இந்த சூழலை எவ்வாறு சமாளிக்கலாம் என்று சில நொடிகளிலேயே தீவிரமாக யோசித்து அவர் கேள்விக்கான பதிலை கூற ஆரம்பித்தாள்.
“அதுதான் சொன்னேனே சார்… இதுக்கு முன்னாடி நான் படிச்ச காலேஜ் அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட் இல்ல… இன்னும் சொல்லப்போனா அங்க ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க, இங்க மாதிரி ஒரு சப்ஜெக்ட்க்கு ஒரு தடவைன்னு எடுக்க மாட்டாங்க… நம்மளுக்கு விருப்பம் இருந்தா க்ளாஸ் அட்டெண்ட் பண்ணலாம்… இல்லன்னா கிரௌண்ட்லயே கூட இருந்துக்கலாம்… ஏன் நீ க்ளாஸ்க்கு வரல அப்படின்னு யாருமே கேக்க மாட்டாங்க… ப்ராக்டிகல்ஸ் பண்ணலன்னாலும் கண்டுக்க மாட்டாங்க…
அதனால தான் சார் என்னோட படிப்புல நான் கவனக்குறைவானேன்… என்னோட கவன குறைவுக்கு காரணம் நான் படிச்ச அந்த காலேஜ் தான் அப்படின்னு கண்டுபிடிச்சதுனால தான் எங்க அப்பாவே என்னை அந்த காலேஜ்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணி இந்த காலேஜ்ல வந்து சேர்த்து விட்டாரு சார்…
அதே மாதிரி அந்த காலேஜ்ல தப்பு பண்ணாலும் பனிஷ்மெண்ட் அப்பிடிங்குற ஒன்னு கிடையவே கிடையாது… ஆனால் இந்த காலேஜ்ல நம்ம ருத்ரவர்மன் சார் மாதிரி ஒரு ஸ்ட்ரிக்ட்டான லெக்சரர் இருக்கிற வரைக்கும் பனிஷ்மென்ட்க்கும் பஞ்சம் இருக்காது… நம்ம ஸ்டூடண்ட்ஸ் எதாவது ஒரு இடத்துல தப்பு பண்ணனும் நினைச்சா கூட சார் ஹெவியா பனிஷ்மெண்ட் குடுப்பாருன்னு நினைச்சு பயந்தே அந்த தப்ப செய்ய யோசிப்பாங்க சார்…. அதனால தான் ருத்ரவர்மன் சார் ரொம்பவே நல்லவர்ன்னு நான் உங்ககிட்ட சொன்னேன்…!” என்று கூறி அப்படியே அந்தர் பல்டி அடித்திருந்தாள் பனிவிழி.
லோகநாதன் பனியிடம் கேட்ட கேள்விக்கு, அவள் சிலகனம் திருதிருவென விழித்ததையும் பின் நொடியில் யோசித்து தான் குறையாக கூறிய விஷயத்தை அப்படியே மிகையாக மாற்றி அதுவும் ப்ரின்ஸிபல் நம்பும் வகையில் கூறி அந்தர் பல்டி அடித்ததையும் கவனித்த ருத்ரவர்மனோ, அவளின் இந்த சாமர்த்தியமான திறமையை எண்ணியவனுக்கு உள்ளுக்குள் சிறு மெச்சுதல் தோன்றினாலும், அதனை வெளிப்படுத்தாது முதலில் அவளை அர்த்தமாக அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து பின் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
பனி விழி கூறியதை கேட்ட லோகநாதனோ, “ஆமா… இந்த காலேஜுக்கு ருத்ரவர்மன் ரொம்பவே ஸ்பெஷல் தான்… ருத்ரவர்மன் எப்போ இந்த காலேஜ்ல ஜாயின் பண்ணாரோ அப்போ இருந்தே ஸ்டூடண்ட்ஸ்க்கு மத்தியில அவ்வளவு அமைதி ஒழுக்கம் எல்லாம் வந்துருச்சு… அவருடைய முறையான கண்டிப்பு தான் ஸ்டுடெண்ட்ஸை கரெக்டா வழி நடத்தி கொண்டுட்டு போறதுக்கு எங்களுக்கு ரொம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கு…” என்று தானும் ருத்ர வர்மன் குறித்து மெச்சுதலாக பேசினார்.
‘ஆமா.. ஆமா… இந்த சிடு மூஞ்சி வாத்தி வந்ததுக்கு அப்புறம் தான் எல்லாம் மாறி இருக்கும்… முறைச்சு பார்த்தே ஆளுங்களை எல்லாம் அலறி ஓட விட்டுருப்பாரு…’ மனதிற்குள் எண்ணி முணுமுணுத்துக் கொண்டு லோகநாதனை பார்த்து இழித்து வைத்தாள் பனி.
அதன்பின் லோகநாதன் அங்கிருந்து கிளம்பியதும், மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு பனியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த ருத்ரனோ அவளிடம் எதுவும் கேட்காது சிறு முறைப்புடன் அமைதியாக லேபிற்கும் சென்று விட்டான்.
அதனை இப்பொழுது நினைத்து பார்த்தவளுக்கு ‘நம்ம இந்த சிடு மூஞ்சிய மாட்டி விட பார்த்தோம்னு அவருக்கு தெரிஞ்சுருக்குமோ…? அதனாலதான் அப்பவும் நம்மளை அப்படி ஒரு பார்வை பார்த்துச்சு, இப்பவும் நம்மளை அதே பார்வை பார்க்குதே…! ஏய் பனி இதெல்லாம் தேவையா டி உனக்கு…!’
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் அடைமொழிக்கு இணங்க அவனின் மேலோட்டமான பார்வை கூட இவளுக்குள் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க, அதனை நினைத்து தன்னையே நொந்து கொண்டவள்,
“சுமி நான் வேற என்னடி பண்ணட்டும்…? எனக்கு அதெல்லாம் பெருசா தெரியாதுடி… எங்க காலேஜ்ல இதெல்லாம் சொல்லி குடுத்துருப்பாங்க போல..”
“என்னது… சொல்லி… குடுத்துருப்பாங்க… போலையா…! அப்போ நீ அதெல்லாம் கவனிக்க மாட்டியா…?”
“இல்லடி..நான் தான் க்ளாஸுக்குள்ளயே இருக்க மாட்டேனே… மோஸ்ட் ஆஃப் தி டே ஏதாவது காரணம் சொல்லி காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்துற வேலை தான் நம்மளோடது… அப்படி இருக்கும் போது இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்…?”
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க தன்னுடைய இடத்திலிருந்து பட்டென எழுந்து இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தான் ருத்ரன்.
“ஏய் சுமி… சிடு முஞ்சி நம்ம கிட்ட தான் வருதோன்னு எனக்கு பயமா இருக்குடி…” என்றாள் பனி.
“நீ பேசாம இருடி.. அப்பிடியே சார் உன்கிட்ட வந்து என்ன கேட்டாலும் நீ வாய்க்கு வாய் பேசாம இருந்தாலே சார் பனிஷ்மெண்ட் எதுவும் குடுக்க மாட்டாரு… ஆனா அதுக்கு நீ உன் திருவாய திறக்காம இருக்கணும்…”
இருவரும் உணவை பிசைந்து கொண்டு தலை கவிழ்ந்தவாறு கிசுகிசுவென பேசிக் கொண்டிருக்க, இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தவன், இவர்களை கடந்து சென்று இவர்களுக்கு அருகில் இருந்த குழாயில் கைகளை கழுவி கர்சிப்பால் தனது வாயைத் துடைத்துக் கொண்டு கேண்டீனிலிருந்து வெளியேறி இருந்தான்.
அவன் அங்கிருந்து சென்றதை பார்த்து இத்தனை நேரம் அடக்கி இருந்த மூச்சினை உதடு குவித்து ஊதி வெளியிட்டாள் பனிவிழி. 🤣🤣🤣🤣🤣
(பனித்தீ தொடரும் 💝💝💝)
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
