மயிலாஞ்சி
அத்தியாயம்-6

தேஜஸ்வினியை அங்கு பார்த்ததும் அதியன் லேசாக முறைத்துவிட்டு, “உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு தானே வந்தேன்” என அவள் காதில் கிசு கிசுத்தான்.
“ஜி.. நான் காலையில எழுந்ததும் சார் கிட்ட பேசிட்டேன்” என அவளும் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறினாள்.
“என்ன நீ டிஎஸ்பி சார் கிட்ட பேசுனியா” என்று அதிர்ந்து சத்தமாக கேட்டுவிட்டான்.
வெற்றிவேந்தன் டிஎஸ்பி சிரித்தபடி,
“ஆமா அதியன்.. தேஜஸ்வினி விடியற்காலையில ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி அழுதா. அதான் நானே நேர்ல வந்தேன். ஒடிசாவுல இருந்து நீங்க வரும் முன்னாடியே தேஜஸ்வினி கிட்ட என் ஃபோன் நம்பர் கொடுத்து இருந்தேன். எதாச்சும்னா எனக்கு சொல்ல சொல்லி. நீதான் மறந்துட்ட அவ சரியான நேத்துல எனக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிட்டா” என்றார்.
“இத நானே ஹேண்டில் பண்ணி இருப்பேன் சார்..!” என அதியன் சொல்ல, வெற்றிவேந்தன் சிறு புன்னகையோடு தேஜஸ்வினியைப் பார்த்துவிட்டு,
“ஆனா தேஜஸ்வினி உன்னையும் உன் குடும்பத்தையும் பத்தி ரொம்ப கவலைப்பட்டா. அதான் நானே நேர்ல வந்தேன்.” என வெற்றிவேந்தன் சொல்ல, அதியனும், அவன் தாத்தாவும், அப்பாவும் தேஜஸ்வினியை பெருமையோடு பார்த்தனர்.
“சரி.. அதியன் நான் கிளம்புறேன் சீக்கிரம் வந்து டியூட்டில ஜாயின் பண்ணுங்க” என்று கூறி, அதியன் தோள் தட்டி, ஜீப்பில் ஏறி புறப்பட்டார்.
பஞ்சாயத்து முடிந்து, மக்கள் முணுமுணுத்தபடி கலைந்துச் சென்றனர். கருணாகரன் அதியனை முறைத்துக் கொண்டே சென்றான். ரத்னாவும் அவள் அம்மாவும் வெறுப்புடன் வீட்டிற்கு சென்றனர்.
அதியன் தேஜஸ்வினி கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அதைப் பார்த்துட்டு பரமசிவம் தாத்தாவும், ராஜனும் லேசாகச் சிரித்துவிட்டு, “சரி அதியா.. மருமகள கூட்டிட்டு பொறுமையா வீட்டுக்கு போ.. நானும் தாத்தாவும் வயலுக்கு போறோம். உங்கம்மா கிட்ட மதியம் சாப்பாடு கொண்டு வர சொல்லு” என்று கூறி அவர்கள் வேறு பாதையில் வயலுக்கு சென்றனர். அதைப் பார்த்த தேஜஸ்வினி,
“ஜி.. தாத்தாவும், மாமாவும் எங்க போறாங்க?” என்று அதியனிடம் கேட்க,
“வயலுக்கு போறாங்க..!”
“நானும் போகவா ஆசையா இருக்கு”
“நீயா அங்க போய் என்ன பண்ணுவ”
“ஜி.. நான் எங்க ஊர்ல நிறைய வேலை செய்வேன். நாற்று நடுவேன், ம்ம்.. களைபறிப்பேன்.. இன்னும் நிறைய..” என தேஜஸ்வினி ஆர்வமாக கையை விரித்துச் சொல்ல, அதியன் அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தான்.
“சரி, மதியம் சாப்பாடு கொண்டு போகும் போது போலாம்” என்றான்.
“ஜி.. என் மேல கோவமா?”
திடீரென்று அவள் அப்படி கேட்டதும், இரவு அவன் நடந்துக் கொண்டதை மறந்து,
“இல்லையே!” என்றான்.
“அப்புறம் ஏன் நேத்து குடிச்சிட்டு வந்தீங்க.. எனக்கு பயம் இருந்துச்சு” தேஜஸ்வினி பாவமாகச் சொன்னாள்.
“சாரி.. தேஜூ”
“ஜி.. நீங்க சாரி சொல்லனும்னு கேட்கல.. எனக்கு பயமா இருந்துச்சு.. அதோட நீங்க தூக்கதுல என்னை கட்டிபிடிச்சிட்டு தூங்குனீங்க. ரொம்ப அழுத்திட்டிங்க”
“வலிக்கிதா.. எங்க வலிக்கிது” அவன் குறும்பாக கேட்க,
“போங்க ஜி இதெல்லாம் இங்கேயேவா சொல்லு வாங்க.” என வெட்கப்பட்டாள்.
“சரி.. இனி குடிக்க மாட்டேன் சரியா”
“ம்ம் சரி” என இருவரும் பேசிக்கொண்டே வீடுவந்து சேர்ந்தனர். செண்பகம் திண்ணையில் அமர்ந்து, திருகையில் உளுந்து உடைத்துக் கொண்டிருந்தார். அதியன் தேஜஸ்வினியுடன் கை கோர்த்து, நடந்து வருவதைப் பார்த்து உதட்டை வளைத்து.
“வந்து முழுசா ஒரு நாள் ஆகல இப்பவே புருஷன கைகுள்ள போட்டுக்கிட்டா. எவ்வளவு தைரியமா போலீச வர வச்சுருக்கா. அங்க அவ ஊருல என் பையன என்னலாம் பண்ணாலே சிறுக்கி!” என செண்பகம் முணுமுணுத்தபடி திருகையை சுழற்றிக் கொண்டிருந்தார்.
“அம்மா.. அப்பா மதிய சாப்பாடு கொடுத்துவிடச் சொன்னாரு.” என்றான் அதியன்.
“இன்னும் சமைக்கலடா” என்றதும்,
“சரி தேஜூ நீ சமைக்கிறியா” அவளிடம் கேட்க, அதற்காகவே காத்திருந்தது போல,
“அரை மணி நேரத்துல பண்ணிடுறேன் ஜி” என்றவள், சமையலறை நுழைந்தாள். அங்கு ஆர்த்தி அப்போது தான், சமையலுக்கு தேவையான காய்கறி, அரிசி, பருப்பு, எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். தேஜஸ்வினி அவளுடன் சேரந்து சமைத்தாள்.
“வந்துடீங்களா…! ஏய் அதி என்னடா ஆச்சு”
“வெற்றிவேந்தன் சார் வந்து பேசி முடிச்சிட்டாரு. தேஜூவுக்கும் நம்ம குடும்பம்த்துக்கும் எதுவும் பிரச்சினை வராது” என அதியன் நிம்மதியாகப் போய் படுத்தான். தேஜஸ்வினியும் ஒரு நிம்மதியுடன் வேலைகளைச் செய்தாள்.
தேஜஸ்வினி சமையல் செய்யும் நேர்த்தியைப் பார்த்து ஆர்த்தியே வியப்பில் இருந்தாள். அவளை பாராட்ட நினைத்தாள். மொழி புரியாதவளிடம் எதைச் சொல்வது, என்று அவளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தபடி இருந்தாள். தேஜஸ்வினி சமையல் முடித்துவிட்டு, வயலுக்கு எடுத்துச் செல்ல தயாராக எடுத்து வைத்துவிட்டு, ஆர்த்தியைப் பார்த்தாள். அவள் மெய்மறந்து நின்று இருந்தாள்.
“திதி.. என்னாச்சு” என தேஜஸ்வினி அழைக்க, ஆர்த்தி அவள் முகம் வழித்து நெட்டி முறித்து.
“எங்க அப்பத்தாவையே மீஞ்சிட்ட.. சூப்பர்” என்று செல்லி சைகை செய்தால். ஆர்த்தியின் அந்த செய்கையில் ஆர்த்தி சந்தோஷப்பட்டாள்.
தேஜஸ்வினி அதினை அழைக்க போனாள். அவன் மெத்தையில் கால் மீது கால் போட்டு படுத்துக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.
“ஜி போலாமா..!” என்றாள். அவள் குரலுக்கு பட்டென எழுந்து சட்டையை போட்டுக் கொண்டு புறப்பட்டான். இருவரும் சாப்பாடு எடுத்துக் கொண்டு பைக்கில் சென்றனர். தேஜஸவினி அவன் தோளைப் பற்றிக் கொண்டு, பின்னால் அமர்ந்து கண்ணாடி வழியாக, அவன் முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பார்வை சாலையில் தான் இருந்தது. இருவரும் பைக்கில் செல்லும் காட்சி பார்ப்பவர்கள் கண்படும், அழகு காட்சியாக இருந்தது.
அப்போது சாலை ஓரமாக ரத்னா நடந்தும் போய்க் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் பைக்கில் செல்லும் காட்சியைப் பார்த்த ரத்னாவுக்கு, வயிறு பற்றிக்கொண்டு வந்தது. பைத்தியம் போல சாலையில் கிடந்த கற்களை எடுத்து வீசினாள். ஆனால் அதியன் அவள் கண்ணைவிட்டு மறைந்திருந்தான்.
ரத்னா அந்த இடந்திலேயே நின்றுவிட, கருணாகரன் அவளை கவனித்துவிட்டு அவள் அருகில் வந்தான்.
“என்ன ரத்னா பயங்கர கோவத்துல இருக்குற போல!” என்றான்.
“அதனால உனக்கு என்ன.. வந்த வேலைய பார்த்துட்டு போ” என காட்டமாகப் பேசினாள்.
“போறேன்.. ஆனா நீ.. கடைசி வரைக்கும் உன் மாமன பார்த்து வயிறு எரிஞ்சிட்டு இருக்க போறியா?”
“வேற! என் தலையெழுத்து அதானே!”
“ஏன் நித்தியன் உனக்கு முறை இல்லையா? உனக்கு நடந்தது அநியாயம்.. அந்த பொண்ணை விட.. நீ எந்த விதத்துல குறைஞ்சி போயிட்ட, அவ எப்படி பெரிய வீட்டு மருமகளா ஆக முடியும். அவ உன் இடத்தை பிடிக்க நீயே வழி விட்டுட்ட. யோசி ரத்னா! இதை இப்படியே விட்டுட்டியின்னா, பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ. அப்புறம் வெளியூர்ல எவனுக்காவது வாக்கப்பட்டு போயி உனக்கு கிடைக்க வேண்டிய செத்த இழந்து நிற்க போறியா?” என கருணாகரன், ரத்னாவின் மூளையை சலவை செய்துக் கொண்டிருந்தான்.
“அதெல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் சோலிய பார்த்துட்டு போ” என ரத்னா அப்போதைக்குச் சொல்லிவிட்டுச் சென்றாலும், வீட்டிற்கு வந்தவள் பேய் போல் மொட்டை வெய்யிலில், மாடியில் அமர்ந்து நகத்தை கடித்துக் கொண்டு, யோசனை செய்துக் கொண்டிருந்தாள்.
‘அவள இந்த ஊரை விட்டும்.. என் மாமா வீட்டை விட்டும் துரத்தணும். அவளுக்கு இந்த ரத்னா யாருன்னு தெரியனும். அதுக்கு நான் அந்த வீட்டுக்கு மருமகளா போகணும். அவள நான் நிம்மதியாவே வாழ விட மாட்டேன். வரேண்டி தேஜூ நீ எப்படி நிம்மதியா இருக்குறன்னு பார்க்குறேன்.’ என வன்மத்தோடு மனதில் கறுவினாள்.
“என்னண்ணோ அதியன பழி வாங்குவீங்கன்னு பார்த்தா, ரத்னாவ அந்த வீட்டுக்கு மருமகளா போக சொல்லி ஐடியா சொல்றீங்க” என கருணாகரன், உடனிருப்பவன் கேட்க,
“நம்ம சாதிக்க முடியாததை ரத்னா செய்வா.. பொண்ணுங்கள அவ்ளோ ஈசியா எடை போடாதடா, சின்னதா தீப்பொறி தட்டிவிட்டு இருக்கேன். அந்த தீப்பொறி கொழுந்துவிட்டு எரிஞ்சு, பெரிய வீட்டு கௌரவம் காத்துல பறக்கும் பார்த்துட்டே இரு” என்றவன் சத்தமாகச் சிரித்து சாராயம் குடித்தான்.
இங்கு அதியன் தேஜஸ்வினியுடன் வயலில் வந்திறங்க, “இவள எதுக்கு இங்க கூட்டியாறான்..!” என்றபடி பூங்கோதை பாட்டி நெற்றியில் கையை வைத்துக் கொண்டு பார்த்தார்.
தேஜஸ்வினி சாப்பாடு கொண்டு வந்து கயிற்றுக்கட்டில் மீது வைத்துவிட்டு, “ஜி.. தாத்தா, அப்பாவ.. கூப்பிடுங்க சாப்டுட்டு வேலை பார்க்கலாம்” என்றாள்.
“அப்பா… சாப்பிட வாங்க” என அதியன் கத்த, ராஜன் அவர் அப்பாவையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
“ஏன் அதியா அம்மா என்ன பண்றா! நீங்க வந்து இருக்கீங்க?” என ராஜன் கேட்க,
“அவங்க வேலையா இருக்காங்க… நீங்க வாங்க பாட்டி வா” என அதியன் அழைக்க,
“எனக்கு பசிக்கல போடா” என பாட்டி வீம்புக்குச் சொல்ல,
“அட வா பாட்டி.” என அதியன் பாட்டியின் கையை பிடித்து இழுத்து வந்து குடிசையில் அமர்த்தினான். தேஜஸ்வினி வாழை இலை வைத்து சாப்பாடு பரிமாறினாள். அவளுக்கு தெரிந்தது போல சமைத்து கொண்டு வந்திருந்தாள். அத்தனையும் அவள் கை வண்ணத்தில் சுவையாகத் தான் இருந்தது. பூங்கோதை பாட்டி மட்டும் சாப்பிட பிடிக்காமல் சாப்பிட்டார். எல்லோருக்கும் தேஜஸ்வினி மீது ஒரு நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தாலும், பாட்டிக்கும், செண்பகத்திற்கும் தேஜஸ்வினியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவில்லை.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும் தேஜஸ்வினி அதியனை சாப்பிடச் சொன்னாள். அவனும் சாப்பிட அமர்ந்தான். தேஜஸ்வினி சாப்பாடு பரிமாறிவிட்டு, அவன் எதிரில் அமர்ந்து, ஒரு கால் மடக்கி முகத்தை சாய்த்துக் கொண்டு, கணவன் சாப்பிடுவதை ரசித்துப் பார்த்தாள்.
அதியன் அவளுக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு அவள் இதழின் ஓரம் சோற்றுப்பருக்கையை துடைக்க முகத்தை நெருங்கினான். அவன் நெருக்கம் வரவும் அவள் உதடுகள் துடித்தது. கண்களை மூடி முகத்தை திருப்பிக் கொள்ள,
“தேஜூ…!” என அதியன் குரல் கேட்டதும், அவள் நினைத்தது, கனவு என்று புரிந்தது. தேஜஸ்வினி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
“என்ன பார்த்துட்டு இருக்க.. நீயும் சாப்பிடு..!” என்றான் அதியன்,
“ம்ம் சரிங்க ஜி…!” என்றவள் அவன் சாப்பிட்ட இலையிலயே சாப்பிட்டாள். அதியன் அவளை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் வரப்பில் நடத்து சென்றான்.
பச்சை நிற நெற்பயிர்கள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. கத்தரிக்காய் செடிகள் மிளகாய் செடிகள். பூச்செடிகள், தென்னை மரங்கள் வண்ணமயமான காட்சியாக இருந்தது. அதியன் அவற்றை ரசித்துக் கொண்டு வயலை சுற்றி வந்தான்.
நித்தியன் அங்கு கத்தரிக்காய் செடிகளுக்கு, மண் அணைத்து பாத்தி கட்டிக் கொண்டிருந்தான். அதியன் வருவதைப் பார்த்துவிட்டு,
“என்னண்ணே இங்க வந்திருக்க!” என்றான்.
“சாப்பாடு கொண்டு வந்தோம்.. நீ போய் சாப்பிடு நான் இங்க பார்த்துக்குறேன்.” என்றான் அதியன்.
“அண்ணியுமா… பாவம் விடிய காலையில இருந்து எம்புட்டு வேலை.. அதுக்கு நடுவுல நாலு மணிக்கு என்னைய வேற எழுப்பி, ஃபோன் கேட்டுச்சு. யாருக்கோ ஃபோன் பண்ணி பேசுச்சு எனக்கு தான் ஒண்ணுமே புரியல.” என்றான் நித்தியன் அப்போது தான் தேஜஸ்வினிக்கு ஃபோன் இல்லாததை நினைத்தான்.
“ஓஹோ.. நீ தான் ஃபோன் கொடுத்தியா!”
“ஆமா.. ஏன் என்னாச்சு”
“ஒண்ணும் ஆகல.. பிரச்சனை முடிஞ்சுது இனி நிம்மதியா இருக்கலாம்.”
“ஏண்ணே ஊரு வாய அடக்கியாச்சு. அம்மாவும், அப்பத்தாவும் மூஞ்சியா தூக்கி வச்சிட்டு இருக்கே!”
“கொஞ்ச நாள் போனா சரி ஆகிடும். நீ போய் சாப்பிடு நேரமாகுது” என அதியன், நித்தியன் கையில் இருந்த மண்வெட்டியை வாங்கிக் கொண்டு, அதியன் வேலையை ஆரம்பித்தான். தேஜஸ்வினி சாப்பிட்டு முடித்துவிட்டு அதியனை தேடினாள். நித்தியன் எதிரில் வரும் போதே அவளின் பார்வை தேடலைப் புரிந்துக் கொண்டு,
“அண்ணே அங்க இருக்கான் போங்க” என்றான்.
“நீங்க சாப்பிட்டீங்களா!”
“நான் சாப்பிட தான் போறேன். நீங்க போங்க” என்றான். அவளும் அவன் கை காட்டிய திசையில் நடந்தாள். அத்தனை தூரம் அழகாக நடந்து வந்தாள். அதியன் நிமிர்ந்து ஒரு சிறு புன்னகை தான் செய்தான். அவள் பாதம் அன்னநடை பழகுவது போல் மெல்ல நடந்து அவன் அருகில் போனாள். வரப்பில் கால் இடறி விழ போனாள். அதியன் எட்டி அவளை இழுக்க, அவன் மார்பில் ஒட்டிக் கொண்டாள். இருவரும் சேர்ந்தே விழுந்து அவள் இதழில் அவன் இதழும் ஒட்டிக் கொண்டது. இருவரின் காதலுக்கான முதல் பிள்ளையார்சூழி போட்டது போல, இருவரின் முதல் முத்தம் இனிமையாக அமைந்தது.
தொடரும் மயிலாஞ்சி ✍️
