மயிலாஞ்சி
அத்தியாயம்-2

ஊரைத் தாண்டி வந்த அதியன் ஜீப்பை நிறுத்தினான். கோபமாக ரத்னாவைப் பார்த்தான்.
ரத்னா ஒற்றை கண்ணை திறந்து பார்த்துவிட்டு,
‘கண்டுபிடிச்சிடுச்சோ’ என அவள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம்,
அதியன் தண்ணீர் பாட்டிலைத் தேடினான். பின் சீட்டின் இடுக்கில் உருண்டு கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ரத்னா மீது ஊற்றிவிட. அவள் அலறி எழுந்தாள். அவளை கீழே இறக்கி கன்னம் வீங்கும் அளவுக்கு அறைந்தான். அவள் கன்னத்தைப் பிடித்தபடி முழியை பெரியதாக்கி அவனை பார்த்தாள்.
“உனக்கு எதுல விளையடனும்னு அறிவில்லையாடி?” என்று முகம் நிரம்பிய கோபத்தோடு கேட்டான்.
‘எப்படி கண்டுபிடிச்சான்’ என ரத்னா விழ்த்ததும்,
“என்னடி முழிக்கிற எப்படி தெரியும்னா..! அதான் நான் தூக்கும் போதே சிரிச்சு வச்சியே. உனக்கு நடிக்கவும் வராது.. ஒழுங்கா ஒரு வேலையும் செய்ய தெரியாது.. எதுக்கு இப்படி நாடகம் பண்ணிட்டு இருக்க?” என்று கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய் வெடித்தான்.
“ஏன் மாமா என் கிட்ட என்ன குறை.. வயச காரணம் சொல்லி சின்ன பொண்ணு சின்ன பொண்ணுன்னு என்னை ஒதுக்கி வச்ச.. எப்பவும் எரிஞ்சு எரிச்சு விழுற! இருந்தும் ஒருநாள் நீ மனசு மாறி என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு தானே நம்பிக்கையோட இருந்தேன். ஆனா நீ..” என ரத்னா சொல்ல வந்த வார்த்தையை விழுங்கி, கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.
“என் சூழ்நிலை அப்படி.. அங்க போன இடத்துல பிரச்சனைய பெருசு பண்ண வேண்டாம்னு தான் அந்த நேரத்துல அந்த பொண்ணுக்கு தாலி கட்ட வேண்டியதா போச்சி. யாரு தலையில என்னவோ அது தான் நடக்கும். என்னை மறந்துட்டு வீட்டுல பார்க்குற பையன கல்யாணம் பண்ணிக்க” என்று கராராகவே கூறினான். ஆனால் ரத்னா மண்டையில் தான் ஏற மட்டேன் என்று அடம் பிடித்தது.
“ஓ… அந்த அளவுக்கு வந்துடியா.. அந்த பொண்ணு உனக்கு அவ்வளவு முக்கியமா? இங்க பாருயா… இந்த ரத்னா கழுத்துல தூக்கு கயிறு ஏறுமே தவிற.. அடுத்தவன் கையால என் கழுத்துல தாலி ஏறாது.. நான் இப்படிய இருந்து சாகுறத உன் கண்ணால பார்த்து ரசிச்சுக்க” என்றவள் அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டு விறுவிறுவென நடந்தாள்.
அதியன் அங்கேயே நின்று கோபத்தில் தரையை உதைத்தான். “ச்சே இவள என்ன தான் பண்றது” என்று கோபத்தில் நெஞ்சு விடைக்க வாய் விட்டு கத்தினான். அந்த நேரம் எல்கேஜி படிக்கும் பெண் குழந்தையை முன்னால் அமரத்திக் கொண்டு பைக்கில் வந்தான் ஆர்த்தியின் கணவன் எழிலன்.
“என்ன மச்சான் இங்க நிற்கிறீரு!” என்றான்.
“மாமா..!” என குழந்தை அவனிடம் தாவிக் கொண்டது.
“ஒண்ணும் இல்ல நீங்க வீட்டுக்கு போங்க நான் வரேன்.” என அதியன் சொல்ல,
“மாமா சாக்லேட் வாங்கியாந்தியா.. அம்மச்சி சொல்லுச்சி.. நீ வரும் போது வாங்கிட்டு வருவன்னு” என மழலையாய் கேட்டாள் பவிஷா,
“நிறைய இருக்கு.. நீங்க வீட்டுக்கு போங்க நான் வந்து எடுத்து தரேன்” என்றான் அதியன். குழந்தையிடம் அத்தனை மென்மையாகப் பேசினான்.
“ப்ராமிஸ்” என குழந்தை கை நீட்ட, அவன் மெல்ல சிரித்து,
“சத்தியமா.. ஓகேவா..டீல்”
“டீல்..!”
“சரி.. நீங்க வீட்டுக்கு போங்க நான் ஒரு வேலைய முடிச்சிட்டு வரேன்” என அதியன், குழந்தையை எழிலனிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றான்.
இங்கு அதியன் வீட்டில் ரத்னா விஷம் குடித்ததாக நம்பி பதற்றத்தில் மருத்துவமனைக்குச் செல்ல புறப்பட்டு வெளியே வந்தனர். வாசலில் நடந்து வரும் ரத்னாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
“என்னடி ஜீப்புல போனவ.. ஜிங்கு ஜிங்குன்னு நடந்து வரா” என செண்பகம் கேட்க,
“எனக்கு என்ன தெரியும்.. இந்த கோட்டிகாரி உன் பையன பதற வைக்க பொய் கூட சொல்லுவா.” என்றாள் ஆர்த்தி.
ரத்னா வரும் போதே வாயில் வந்ததை பேசியபடி நடந்து வந்தாள்.
“எங்க அந்த வட நாட்டுகாரி!” என்றவள் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு. வெளியே அடுப்பு எரிக்க அடுக்கி வைத்திருந்த விறகு கட்டையில் ஒன்றை எடுத்துக் கொண்டு. உள்ளே நுழைய போக,
“ரத்னா எதுக்கு இப்படி பண்ற.. விடுடி நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு விடுடி” என ஆரத்தி தடுத்தாள்.
“ஆர்த்தி வழிய விடு.. அவள கொன்னுட்டு ஜெயிலுக்கு கூட போவேன்.. என் மாமன் கூட அவள வாழ விட மாட்டேன்.” என ரத்னா ஆர்த்தியை தள்ளிவிட்டு உள்ளே போக,
அப்போது தான் எழிலன் வண்டி உள்ளே நுழைந்தது. ஆர்த்தி ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு. “ஏங்க உங்க தங்கச்சிய கூட்டிட்டு வாங்க வீட்டுக்கு போலாம்!” என்க,
“என்னாச்சு ஆர்த்தி..!” என்று எழிலன் கேட்க ஆர்த்தி நடந்ததை சொல்லி முடிக்க, உள்ளே சென்ற ரத்னா தேஸ்வினியை முடியை பிடித்து இழுத்து வர பார்த்தாள். எழிலன் ஓடி வந்து ரத்னாவை இழுத்து அவன் பங்குக்கு அவள் கன்னத்தில் கொடுத்தான். அப்போதும் அசராமல் ஆவேசமாக,
“டேய்.. போய்டு அண்ணன்னு உன் மேல எனக்கு மரியாதை இருக்கு. அதை கெடுத்துக்காத” என அவனிடமும் எட்டிக்கு போட்டியாக நின்றாள்.
“பிசாசு.. எதுக்குடி இப்படி பண்ற. அதி என்ன உன்னை காதலிச்சு புள்ள கொடுத்தாடி ஏமாத்திட்டான். போன இடத்துல தவிர்க்க முடியாத சூழ்நிலையில அவள கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுக்காக இப்படி தான் நடந்துப்பியா அறிவு இல்லையாடி உனக்கு. வா வீட்டுக்கு போலாம் முதல்ல என் அப்பன சொல்லனும் போன வருஷமே உனக்கு மாப்ள பார்க்க சொன்னே. என் பேச்சை கேட்டானா” எழிலன் புலம்பியபடியே, ரத்னாவை இழுத்து,
“ஏய்.. வாடி.. வாடின்னா..” என எழிலன் அவளை இழுத்துக் கொண்டு. வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டிறக்கு போனான்.
இங்கு நடந்த கலவரத்தை நித்தியன் அதியனுக்கு ஃபோன் போட்டு கூறினான்.
“டேய்.. அண்ணா.. வீட்டுக்குள்ள சக்களத்தி சண்டை நடக்குதுடா. சீக்கிரம் வாடா.. ரத்னா வந்து அண்ணிய அடிக்க போயிட்டா.. நல்ல வேலையா மாமா வந்து ரெண்டு போட்டு இழுத்துட்டு போயிட்டாரு. என்ற அணாணியாரு அழுவுதுடா சீக்கிரம் வா” என்று ஃபோனில் கத்தினான்.
“அவள..!” என்றவன் போன வேலையை பாதியில் விட்டுவிட்டு வீடு வந்தான். வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு விறுவிறுவென அவன் அறையில் நுழைந்தான்.
தேஜஸ்வினி பயந்து நடுங்கி ஒரு மூலையில் கோழிகுஞ்சு போல ஒடுங்கி இருந்தாள். தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே. பயத்தில் அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
“தேஜு..!” என்று மெதுவாக அழைத்ததும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். இமை தாழ்த்தி இதழ் வளைத்து, அழுகை இன்னு பீரிட்டு வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் நெற்றியை தேய்த்தான்.
“அம்மா கிட்ட போகணும்.. அம்மா கிட்ட போகணும்..!” என்று அவள் மொழியில் சொல்லி, விக்கி விக்கி அழுதாள். அதியன் கதவை அடைத்துவிட்டு, அவள் அருகில் செல்ல அவள் இன்னும் கத்தி அழுதாள்.
“அழாத தேஜு நான் எதுவும் பண்ண மாட்டேன்.” என்று அதியன் அவள் மொழியில் கூறி, அவளைத் தூக்கி நிறுத்தி கண்களைத் துடைத்துவிட, அவன் தொடுதலும், அவள் அழுததாலும், சாப்பிடாமலும் இருந்ததாலும், ரத்னாவின் செயலாலும், பயந்துக் கொண்டிருந்தவளின் இதயம் வேகமாக துடிக்க, மயங்கி அவன் மீது சரிந்தாள்.
“தேஜு… தேஜு… என்னாச்சு..?” என்று அவள் கன்னம் தட்டினான். அவளை மெத்தையில் கிடத்திவிட்டு, ஃபேன் போட்டுவிட்டு கதவு சன்னல்களை திறந்துவிட்டான்.
“அக்கா தண்ணி கொண்டுவா..! நித்தி கடைக்கு போய் சோடா வாங்கிட்டு வாடா” என்று அதியன் பரபரத்தான். ஆர்த்தி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதியன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்க அவள் கண்கள் மட்டும் தான் அசைந்தது.
“அதி அவ எதுவுமே சாப்பிடலடா.. உனக்காக தான் காத்துட்டு இருந்தா.. அதுக்குள்ள ரத்னா வந்து பேயாட்டம் போட்டதுல பயந்துட்டாடா” என்றாள் ஆர்த்தி.
“சரி சாப்பாடு எடுத்துட்டுவா போ..!” என அதியன் அவளை விரட்ட, அந்த நேரத்திலும் ஆர்த்தி
“ஊட்டி விட போறியா டா..!” என்று விளையாட்டாக கேட்க. அவன் தலையில் அடித்துக் கொண்டு,
“ஏய் போடி..! எரிச்சல் கிளப்பிட்டு” என்று திட்டினான்.
“ம்க்கும் ரொம்ப தான்” என்று சலித்துக் கொண்டு ஆர்த்தி போக, நித்தியன் சோடா வாங்கிட்டு வந்தான்.
“இந்தாடா..!” என்க அதியன் அவனை முறைத்துவிட்டு, சோடாவை வாங்கி அவள் முகத்தில் தெளித்து அவளை எழுப்பினான். அவள் மெல்ல கண்கள் திறந்தாள். அதியன் சோடாவை கொடுத்து குடிக்க சொன்னான். அவளோ மாட்டேன் என்றாள்.
“ஏன் வேண்டாம் சொல்ற கொஞ்சம் குடி சாப்பிடாம எதுக்கு உட்கார்ந்து இருந்த?” என அதியன் அவள் மொழியில் கேட்க,
“புருஷன்… சாப்பிட்ட பிறகு தான் பொண்டாட்டி சாப்பிடணுமாம்! அம்மா சொல்லி இருக்காங்க” என்றாள், அவள் மழலை போல திக்கி திக்கி சொல்ல, அதியனுக்கு இருந்த வெறுப்பும் கோபமும் போய் சிரிப்பு வந்தது.
“எம்மா ஆர்த்தி குடிக்க தண்ணி கொண்டா..!” என்றபடி ராஜன் உள்ளே வந்து மர ஊஞ்சலில் அமர்ந்தார்.
“இந்தாப்பா”
“ஷப்பாாஆ… இந்த ரத்னா கொஞ்ச நேரத்துல எவ்வளவு கலவரம் பண்ணிட்டா”
“இங்கேயும் வந்தாப்பா.. பாவம் அந்த புள்ள பயத்துல மயங்கிருச்சி” என்றாள் ஆர்த்தி.
“ஐய்யயோ என்னாச்சு,”
“அதியன்.. தட்டி கிட்டி எழுப்பிவிட்டான்.. அப்போ கூட அவன் சாப்பிட்ட அப்புறம் தான் சாப்பிடுவேன்னு சொல்றா ப்பா.” என்று ஆர்த்தி சொல்லி சிரித்தாள்.
“அது சரி சாப்பாடு ஆச்சா..!”
“ஆச்சுப்பா.. ரசம் தான் வைக்கல.. அதுக்குள்ள என் நாத்தனாகாரி விஷம் குடிச்சதா ஊரையே ரெண்டாக்கி வச்சிட்டா” என்றாள் வெறுப்புடன்.
“சரி இருக்குறத போடு..! முதல்ல அந்த புள்ளைய சாப்பிட வைங்க” என்றார் ராஜன்.
“அதெல்லாம் சாப்பாடு போட்டு அதி கிட்ட கொடுத்துட்டேன் ப்பா” என்றபடி ஆர்த்தி சாப்பாடு கொண்டு வந்து தரையில் வைத்தாள்.
“தாத்தா… பாட்டி… நித்தி எம்மா வா சாப்பிடுங்க” என்று அழைத்தாள். எல்லோரும் வந்து அமர்ந்தனர். மனதில் குறையும், வேதனையும் இருந்தால் பசியும் அரை குறையாக தான் இருந்தது ராஜனுக்கு. சமைத்ததை வீணாக்க கூடாது என்று ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தனர்.
அசதிக்கு அமர்ந்துக் கொண்டிருந்த ராஜன் ஆர்த்தியிடம்,
“எம்மா ஆர்த்தி… நீயும் மாப்ளையும் போயி புது விளக்கு ஒண்ணு வாங்கிட்டு வாங்க. வந்தவ வீட்டுல விளக்கு ஏத்தட்டும்.” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. அவ விளக்கு ஏத்தி தான் வீடு வெளிச்சமாகுமா. இங்க பாருங்க அவன் ஒண்ணும் நம்ம முறைப்படி கல்யாணம் பண்ணிட்டு வரல.. விளக்கு ஏத்தவும் வெளிச்சம் கொடுக்கவும். அவ அப்டியே இருக்கட்டும்.” என செண்பகம் கோபமாகச் சொன்னார்.
“என்ன பேசுற செம்பகம்.. எப்படி எந்த முறையில கல்யாணம் நாடந்து இருந்தாலும்.. நம்ம புள்ள தாலி கட்டி இருக்கான். அதுக்கு உண்டான சடங்கு நம்ம செய்து தான் ஆகணும்.” என்று கூறிவிட்டு, அவரது தாயையும் தந்தையையும் பார்த்தார்.
பூங்கோதை பாட்டி “ம்க்கும்” என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டு, வெத்தலை இடித்துக் கொண்டிருந்தது. பரமசிவம் தாத்தா புத்தகத்தை முடி வைத்துவிட்டு எழுந்தார்.
“ராஜா என் பேரன் பேத்திய.. சாயங்காலம் குலதெய்வம் கோவிலுக்கு கூட்டிட்டு போய்.. ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து, பிறகு விளக்கு ஏத்துங்க. ஏய் ஆர்த்தி..!” என்க,
“சொல்லுங்க தாத்தா..!” என்று பணிவோடு நின்றாள்.
“பொண்ணு சார்பா நீ கூட இருந்து எல்லாம் பார்த்துக்க.!” என்றார். அவரின் பேச்சுக்கு பிறகு யாரு வாய் திறக்கவில்லை.
“சரிங்க தாத்தா” என ஆர்த்தி தாத்தாவின் சொல்லுக் கட்டுப்பட்டாள். செண்பகம் முகம் சுளித்துக் கொண்டு வெளியே சென்றார்.
இங்கு அதியன் அறையில், தேஜஸ்வினி மூக்கை இழுத்து இழுத்து உறிந்தபடி மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அருகில் அதியன் அமர்ந்து இருந்தான். ஒவ்வொரு வாய் சாப்பாடு வாயில் வைக்கும் போதெல்லாம் அவனையே பார்த்தாள்.
“என்னைய பார்க்காத சாப்பிடு” என்றான் அவள் மொழியில்,
“நீங்க சாப்பிடலையா!”
“சாப்பிடுவேன் நீ சாப்பிடு முதல்ல”
“போதும்..!” என அவள் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு சொல்ல,
“சாப்பாடு வீணாக்க கூடாது முழுசா சாப்பிடு” என அதியன் கண்களை உருட்டி நாக்கை துருத்திட, அவள் வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை அவளே கொண்டு போய் கழுவி விட்டு வைத்துவிட்டு வந்தாள்.
“சரி நீ தூங்கு நான் வெளிய போயிட்டு வரேன் எனக்கு வேலை இருக்கு.” என்றான்.
“எனக்கு தூக்கம் வரல.. இன்னைக்கு மட்டும் என் கூட இருங்க.ப்ளீஸ்” என தேஜஸ்வினி அவன் கையை பிடித்துக் கொண்டாள். அவள் கை நடுங்குவதில் அதியன் புரிந்துக் கொண்டான். அவள் மிகவும் பயந்து போய் இருக்கிறாள் என்று.
“சரி வா..!” என்றவன், அவளை அழைத்துச் சென்று வீட்டை சுற்றி காட்டினான்.
பூஜை அறை, சமயலறை, அது போக தனி தனியாக ஐந்து அறைகள் இருந்தது விருந்தினர் தங்குவதற்கும், நெல் மூட்டைகள், தானியங்களை சேமித்து வைக்கும் அறையாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. எல்லாவற்றையும் பார்த்து வியப்பில் இருந்தாள் தேஜஸ்வினி. ஆனால் முக்கியமான ஒன்று காணவில்லை என்பது போல தேடினாள்.
குளியலறை அது வீட்டின் பின் புறம் இருந்தது. அருகில் கிணறும் இருந்தது. அதற்கு அருகில் மாட்டு தொழுவம், வைக்கோல் போர் மலை போல குவிந்து இருந்தது. சற்று தள்ளி பூச்செடிகள், மரங்கள் தனியாக அழகான காற்றோட்டமான இடம்.
“பஹுத் சுந்தர் அச்சி” என்று வியந்தாள்.
‘ஆமா அழகா தான் இருக்கு’ என அதியன் மனதில் நினைத்தபடி, அவளைப் பார்த்துச் சிரித்து சிலையாக நின்று கொண்டிருந்தான்.
தேஜஸ்வினி அவன் புஜத்தை பிடித்து உலுக்கிட, “என்னாச்சு..!” என்றான் அதியன்.
“கண்ணுகுட்டி.” என்று கை காட்டினாள். ஓடி அதனை கட்டிக் கொண்டு வருடி முத்தம் கொடுத்து விளையாடினாள். ரத்னாவின் செயலை அப்போதைக்கு மறந்து சந்தோஷமாக இருந்தாள் தேஜஸ்வினி. அவளை பார்த்துக் கொண்டே அதியன் படியில் அமர்ந்துக் கொண்டான்.
“என்னண்ணே அண்ணியாரை சைட் அடிக்கிறியோ.?” என்றபடி வந்து அவன் அருகே அமர்ந்தான் நித்தியன்.
“ஆமா சைட் அடிக்கிறேன்.. நீ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே வெட்டியா சுத்திட்டு இருக்க போற. ஜாப் அப்ளை பண்ணி மூனு வருஷம் ஆகுது ரிசல்ட் என்னாச்சு” என்றான் படித்த பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரியாக,
“வேலைக்குலாம் எதுக்குண்ணே.. அதான் நம்ம தாத்தா கொடுத்துட்டு போன சொத்து இருக்குல்ல.. விவசாயம் பண்ணி சொந்த மண்ணுல நிம்மதியா வாழ்ந்துட்டு போறேன்.” என்று தலை நிமிர்ந்து சொன்னான்.
ஆம் அது உண்மை தானே என் நிலம் என் உழைப்பு நானே ராஜா என்னை கேட்க யார், நெல் கேழ்வரகு கம்பு மக்காச்சோளம் காய்கறிகள் என்று வித விதமாக பயிர் செய்து வாழ ஏக்கர் கணக்கில் சொந்த பூமி இருக்க அவன் ஏன் இன்னொருவரிடம் கை கட்டி நிற்க வேண்டும் என்ற திமிரும் கர்வமும் நித்தியன் நெஞ்சில் பதிந்தது போன ஒன்று.
அதியன் கனவுக்காக படித்து போலீஸ் வேலைக்கு போனாலும்.. அவனுக்கும் விவசாயத்தின் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. நித்தியன் கூறியதைக் கேட்டு,
“டேய்.. நல்ல வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சா தான்டா பொண்ணு கொடுப்பாங்க” என்றான்.
“நாலு காசு எதுக்கு.. நாலாயிரம் பேருக்கு சோறு போடுற விவசாயி நான்.. அதுவே நாலாயிரம் கோடிக்கு சமம்.” என்றான் பெருமையாக.
“நல்லா பேச கத்துக்கிட்ட” என்று அவன் தோள் தட்டினான்.
“சரிண்ணே நீ சைட் அடிக்கிறத கண்டினியூ பண்ணு. நான் ஜீப் எடுத்துட்டு போறேன். உர மூட்டை எடுத்துட்டு போய் ஷெட்டுல போட்டுட்டு வரேன்.. நாளைக்கு பயிறுக்கு உரம் போடணும்” என்று கூறிவிட்டு அதியனிடம் இருந்து ஜீப் சாவியை வாங்கிக் கொண்டு நித்தியன் ஓடினான். போகும் அவனை சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தான். அதியனும் நித்தியனும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தேஜஸ்வினி வெள்ளை நிற பூ ஒன்றை பறித்து வந்து அதியனிடம் நீட்டினாள்.
அந்த பூ தூய்மையான வெள்ளை நிறத்திலும், நடு பகுதியில் மஞ்சள் நிறத்திலும் அழகாய் இருந்தது. அதியன் அதை கையில் வாங்கிக் கொண்டு, மெல்லியதாக இதழ் விரித்தான். அவள் அந்த பூவை தலையில் வைத்துவிட சொல்ல நினைத்தாள். ஆனால் அவள் தயங்கி தயங்கி நின்றாள்.
“அதி.. இந்த கேழ்வரகு கொஞ்சம் இடிச்சு கொடு டா” என செண்பகம் அடுப்படியில் இருந்து கூப்பிட,
“ஆங் தோ வரேன்” என்றவன் பூவை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட, தேஜஸ்வினிக்கு ஏதோ போல் ஆனது.
தேஜூவின் சொல் தெரியாத இந்த காதல் என்னவாகும்?
தொரும் மயிலாஞ்சி ✍️
மறக்காமல் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே 💐🙏
