- Joined
- Mar 16, 2026
- Messages
- 373
- Thread Author
- #1
Wow.... Wow ... Beautiful ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞உள்ளுக்குள் மலர்ந்த காதல்
உறவுகளின் நிழலில் மறைய
உணர்வுகள் சொல்லாத சொற்களாய்
உள்ளத்தின் ஆழத்தில் ஒளிந்தது.....
உடைந்த நெஞ்சங்கள் இரண்டிலும்
உறைந்த வலிகள்
உருகத் தொடங்க...
உறவுகள் இணைந்த தருணத்தில்
உள்ளங்கள் மீண்டும்
உயிர் பெற்றது....
உறைந்த கண்ணீரின் துளிகள்
உண்மையான நேசமாக மாறி
உள்ளம் மட்டும் ஒன்றானது....
உறவுகள் சேர்த்த நொடி
உயிர் முழுதும் காதலாய்
உள்ளம் நிறைந்தது...