கட்டுப்பாடுகள்
கட்டிய குடும்பத்தின் கோட்டையில்
காதலுக்காகக் காத்து
கண்ணீரை மறைக்க....
காதலியைப் பிரித்து
கல்யாணம் செய்தால்
காலம்காரணமின்றி
காதலுக்கு பழி சுமத்திடுமே....
காதலிக்கும் உள்ளம்
காயம் அடைந்தாலும்
காதலுக்கும் துரோகம் செய்யாமல்
காத்திருக்க.....
கைப்பிடிக்கத் துடிக்கும்
கைகள் நடுங்கினாலும்
கண்முன்னே நிற்கும்
கனவுகள்
கரையவில்லை....
காதலர்கள் நம்பிக்கை காத்திருக்கும் வரை
காதல் கரைந்து போகாது… காப்பாற்றப்படுமே....