நேச நெஞ்சங்கள்

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
330
@Mrs Beena loganathan

நேச நெஞ்சங்கள் கதைக்காக ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அளித்த கவிதைகள்.

கவிதைகளின் ஒவ்வொரு வரிகளும் அழகும் அர்த்தமும் நிறைந்தவை.

மனமார்ந்த நன்றி அக்கா 🫶🏻❤️

கவிதைகள் யாவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
330
அத்தியாயம் 1

நேச உள்ளங்கள்

கண்ணியம் கொண்ட
காவலன்
கவிதையில் மயங்க
கவிதை எழுதிய கைகள் யாரோ..... 🤩🤩

அத்தியாயம் 2

கடிதம் மூலம்
காதலும் நன்றியும்
கை மாறிக் கொள்கிறது....

அத்தியாயம் 3

கனல் பார்வை அவனிடம்
காதல் பார்வை அவளிடம்.....

அத்தியாயம் 4

ஆணின்
பைத்தியகாரத்தனம்
காதலாக பார்க்கப்படுகிறது
பெண்ணின் காதல் பைத்தியக்காரத்தனம் ஆக பார்க்கப்படுகிறது ...

இருவருக்கும் தெரிவதில்லை
காதலே பைத்தியக்காரத்தனம் தான்.....புரிந்து கொள்ளும் வரை....

அத்தியாயம் 5

முகம் அறியாமலே
மங்கையின்
மனதில் பதிந்து
மறைந்தும் விட்டானா...
மர்மமாக இருக்குமா???

அத்தியாயம் 6

இருக்கும் போது தெரியாத
இன்மை
இல்லாத போது உனர்த்தும் தனிமை.....

இருந்தும்
இல்லாது போன இனிமை....
இடைவெளி
இருந்தும் தொடரும்
இதமான நட்பு

அத்தியாயம் 7

நாட்கள் கடந்தால் என்ன?
நட்புக்கு இடைவேளை
இல்ல...
நலம் விரும்பும்
நட்பு கிடைப்பது வரம்....
நண்பன்
நடுக் கடலில்....

அத்தியாயம் 8

வினோ...
வசியாக உருமாறி
வந்திருக்கானோ ....
விடை தேடுதல் தான்
வாழ்க்கையே...

அத்தியாயம் 9

வினோவின்
வடிவமாக வந்திருக்கும்
வசீ....
வஞ்சி மனம்
வருந்தி நிற்க
விடையாக தெரிய
வருமோ காதல்.....

அத்தியாயம் 10

மனதிற்கு பிடிக்காத
மறைமுக வேலை
மர்மம் இருக்கு...
முத்துவுக்கு
முடிவு வசி தான் .....

மனதுக்குள் காதல்

முளைத்து விட்டது
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
330
அத்தியாயம் 11

தன்னை மறைத்து திடமாக இருந்தாலும்
தவறின் புறம்
தள்ளி வைத்த விதி
தான் விடை தரும்....

வசி மேல் சந்தேகம்
வந்திருக்கு பாலாவிற்கு...

அத்தியாயம் 12

திட்டம் போட்டு
திருடி மறைத்துவிட்டு
தெரியாது போல
வசி
விளையாட்டு ஆரம்பம்.....

வினோவை மறக்க நினைத்து
வசியை நெருங்க தவித்து
வாடி துடித்து நிற்கும் தர்ஷி

அத்தியாயம் 13

திதி கொடுக்க நினைக்கும்
தர்ஷி _ ஆனால் இயற்கை
தடுத்து நிறுத்த....
தடைகள் கூட நல்லது தான்...
இல்லாதவருக்கு கொடுக்கலாம் இருப்பவருக்கு கொடுக்க இயற்கை சம்மதிக்குமா????

அத்தியாயம் 14

யார் கூட பேச்சு
யது கூடவா பாசில் கூடவா
யாராக இருந்தாலும்
யாகம் தொடங்கி விட்டது....

அத்தியாயம் 15

வாழ்க்கையை பணயம் வைத்து
வஞ்சகர்களின் வலையில் விழாமல் விழித்திருக்க....

வசீயிடம் பாலா
வலை விரித்தாலும்
வார்த்தைகளில் விழாமல்
விலகிக் கொள்ள
வாசுவிடம்
வழுக்கி விட்டான் ...

விசாரணை மனதில் விதை போட்டு வளர
வஞ்சி மேல் காதலும்..

வெளிச்சம் தேடி
வழி நோக்கி
வசி தவிக்க...

அத்தியாயம் 16

தவறுக்கு என்றும்
துணை செல்லாத
தர்ஷி _ பெற்ற
தந்தையை கூட
தள்ளி வைக்க....
தப்பு செய்யும் பாலாவை மட்டும்
துணை கொள்வாளா???

அத்தியாயம் 17

பாப்பா என்று
பாசம் பொழிந்த பாலாவே,
பின்னால் நிழல் போல
பழி வாங்க
பதுங்க....

பாசத்தின் பெயரில் பாய்ந்த வார்த்தைகள்
பழிவாங்கும் தீயாய்
பாலா மனதில்
பரவி வர
பாவம் தர்ஷி....

பார்வையில் தேடலும்
பார்த்தும் தவிர்த்தும்
பாவை தனக்குள்ளே
புண்பட்டாள்....

அத்தியாயம் 20

வசி வருடம் பல காத்து
விரித்த வலை
வச்ச குறி தாப்பாது...

கலவரத்தலும்
காரியத்தில் கண்ணாக
காதல் யாசகம் கேட்டு
கண்ணீர் விட்டு
கல்யாணம் செய்து
குதூகலமாக இருக்கும்

தர்ஷி 🤩🤩🤩
 
Top