New member
- Joined
- Oct 31, 2026
- Messages
- 10
- Thread Author
- #1
சிற்பி படைத்த சிலைகளுக்கும்
சாதிச்சாயம் பூசிவிட்டோம்
ஊருக்கு உள்ளே வெளியேயென
வினோதங்கள் நிரப்பி!!
எல்லைக்காக்கும் தெய்வம்
ஏனையோர் வணங்கும் தெய்வம் - என
சாதிப்பால் அபிஷேகத்தில்
வேற்றுமை ஊற்றுகிறோம்!!
ஐம்பெரும் பூதங்களால்
ஆக்கப்பட்ட உடல் ஒன்றே
ஓதும் வேதங்கள்
உரக்கச் சொல்கிறது
வந்த வழியும் ஒன்றே
போகும் வழியும் ஒன்றே
இடைப்பட்ட மயக்கத்தில்
'சாதி' என்றே சாதித்தல் நன்றா?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
(https://www.facebook.com/groups/1428761022791249/)
முள்ளிடை மலரிதுவே-3
சாதிச்சாயம் பூசிவிட்டோம்
ஊருக்கு உள்ளே வெளியேயென
வினோதங்கள் நிரப்பி!!
எல்லைக்காக்கும் தெய்வம்
ஏனையோர் வணங்கும் தெய்வம் - என
சாதிப்பால் அபிஷேகத்தில்
வேற்றுமை ஊற்றுகிறோம்!!
ஐம்பெரும் பூதங்களால்
ஆக்கப்பட்ட உடல் ஒன்றே
ஓதும் வேதங்கள்
உரக்கச் சொல்கிறது
வந்த வழியும் ஒன்றே
போகும் வழியும் ஒன்றே
இடைப்பட்ட மயக்கத்தில்
'சாதி' என்றே சாதித்தல் நன்றா?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
(https://www.facebook.com/groups/1428761022791249/)
முள்ளிடை மலரிதுவே-3